அஜித்-நயன்தாரா ரூட்டில் ஜெய் செல்வது சரியா?

அஜித்-நயன்தாரா ரூட்டில் ஜெய் செல்வது சரியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Nayanthara Jaiபொது நிகழ்ச்சிகள் என்றாலும், தங்கள் படங்களின் நிகழ்ச்சி என்றாலும் அஜித், நயன்தாரா ஆகியோர் விழாக்களில் கலந்து கொள்வதில்லை.

சில தயாரிப்பாளர்கள் இச்செயலை கண்டித்தும் இது தொடர்கதையாகி வருகிறது.

தற்போது இவர்களின் வரிசையில் ஜெய்யும் இணைந்து வருவதால், அவரின் செயலும் விமர்சித்துக்குள்ளாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சென்னை-28-2 படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஜெய் கலந்துக் கொள்ளவில்லை.

அதுபோல் நேற்று நடைபெற்ற எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தின் ஆடியோ விழாவிலும் ஜெய் கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் லண்டனில் இருப்பதால், கலந்து கொள்ளவில்லை என அப்பட இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி தெரிவித்தார்.

தமிழ் சினிமாவுக்கு பெருமைத் தேடித் தரும் கபாலி-பைரவா

தமிழ் சினிமாவுக்கு பெருமைத் தேடித் தரும் கபாலி-பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali bairavaaஉலக நாடுகளில் இந்தி சினிமாக்களே இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தன.

ஆனால் சமீப காலமாக தமிழ் சினிமாக்களும் இந்த வரிசையில் இடம் பிடித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன், ரஜினி நடித்த கபாலி படம் முதன்முறையாக பாரிஸில் உள்ள தி கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் திரையிடப்பட்டது.

தற்போது விஜய் நடித்த பைரவா படமும் ஐரோப்பாவிலுள்ள லாட்வியாவில் உள்ள தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் ரசிகர் மன்ற தலைவராக பொறுப்பேற்கும் ஆர்.கே. சுரேஷ்

அஜித் ரசிகர் மன்ற தலைவராக பொறுப்பேற்கும் ஆர்.கே. சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

R K Sureshஇந்தாண்டில் வெளியான ‘தாரை தப்பட்டை’ மற்றும் மருது படங்களில் டெரர் வில்லனாக நடிப்பில் மிரட்டியவர் ஆர். கே. சுரேஷ்.

இவர் தர்மதுரை உள்ளிட்ட படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் நடித்துவரும் ‘பில்லா பாண்டி என்ற படத்தில் அஜித் ரசிகர் மன்ற தலைவராக நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்காக அஜித்தின் உருவத்தை தனது உடம்பில் டாட்டூவாகவும் வரைய இருக்கிறார்.

இதன் சூட்டிங் 2017 பொங்கல் முதல் துவங்கவிருக்கிறது.

ஆஸ்கர் நாயகனை அசர வைத்த ரஜினிகாந்த்

ஆஸ்கர் நாயகனை அசர வைத்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthஷங்கர் இயக்கி வரும் ‘2.0’ படத்தின் சூட்டிங் ஒரு பக்கம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மறுப்பக்கம் இதன் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இதன் டப்பிங் பணிகளை சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கிவிட்டார்.

நேற்று மட்டும் ஒரே நாளில் மூன்று ரீல்களின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டாராம்.

ரஜினியின் விறுவிறுப்பான டப்பிங்கால் ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி அசந்தேவிட்டார் என தெரிவித்துள்ளார்.

resul pookutty ‏@resulp
The commitment&virtuosity our thalaivar @superstarrajini has is unparallel.Finished three reels in one day,I’m amazed at the way he works!

அரசியல் ஆட்டத்தில் அஜித்… சசிகலாவை சந்தித்தாரா தல..?

அரசியல் ஆட்டத்தில் அஜித்… சசிகலாவை சந்தித்தாரா தல..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajithஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி அதிமுகவில் வர்தா புயலை விட பெரும் மடங்கு புயல் வீசி வருகிறது.

சசிகலாவை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது.

இந்நிலையில் அண்மையில் பல்கேரியாவில் இருந்து திரும்பிய அஜித், சசிகலாவை சந்தித்தாக தகவல்கள் பரவியது.

ஆனால் இது தொடர்பாக ஒரு படம் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அது முற்றிலும் வதந்தி என்றே தகவல்கள் வந்துள்ளன.

ஆனாலும் அஜித்தை வைத்து சில நாட்களாகவே அரசியல் ஆட்டம் ஆரம்பித்துள்ளது எனலாம்.

Did Ajith meet Sasikala

அட்லி படத்தில் விஜய்-ஜோதிகா..? குஷியாகும் ரசிகர்கள்

அட்லி படத்தில் விஜய்-ஜோதிகா..? குஷியாகும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Jyothikaபைரவா படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

இப்படத்தில் சமந்தா மற்றும் காஜல் நடிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.

மேலும் இதில் மற்றொரு முக்கிய பெண் வேடம் ஒன்றும் உள்ளதாம்.

இதில் ஜோதிகா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஷி மற்றும் திருமலை படங்களில் விஜய்யுடன் ஜோதிகா இணைந்து நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

எனவே இந்த ஜோடி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

More Articles
Follows