தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகி தற்போது தனி ஹீரோவாக பல படங்களில் கலக்கி வருகிறார் ஜெய்.
இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து, எனக்கு வாய்த்த அடிமைகள் என்ற படத்தில் நடிக்கிறார்.
இதில் இவருடன் முதன்முறையாக இணைகிறார் ப்ரணித்தா. இவர் சூர்யாவுடன் மாஸ், கார்த்தியுடன் சகுனி ஆகிய படங்களில் நடித்தவர்.
தேவதாஸ் என்ற கேரக்டரில் ஜெய்யும் காந்தா கேரக்டரில் ப்ரணித்தாவும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் கருணாகரன், காளி வெங்கட், நவீன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மகேந்திரன் ராஜாமணி இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.
ஷான் சுதர்சன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.