ரஜினிக்கு பேரனாக நடிக்கும் அதிர்ஷ்டசாலி இவர்தான்

ரஜினிக்கு பேரனாக நடிக்கும் அதிர்ஷ்டசாலி இவர்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala rajini stillsபா ரஞ்சித் இயக்கிவரும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

தனுஷ் தயாரிக்கும் இதன் சூட்டிங் தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் சூட்டிங் ஸ்டில்கள் இணையத்தை கலக்கி வருவது நாம் அறிந்ததே.

இந்நிலையில் ரஜினியின் பேரனாக மான்யூ என்ற ஒரு பையன் நடிக்கிறார்.

இந்த பையன் பிரபல டான்ஸ் மாஸ்டர் காதல் கந்தாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மான்யூ நடிக்கும் முதல் படம் இதுதானாம்.

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைத்துவிடும்.

அப்போ இந்த குழந்தை அதிர்ஷ்டசாலிதானே…

Manyu son of Dance Master kadhal kandhas to play Rajini grandson in Kaala

rajini grand son kaala movie

பிரபல தயாரிப்பாளர் தசரி நாராயண ராவ் மரணம்

பிரபல தயாரிப்பாளர் தசரி நாராயண ராவ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Veteran Telugu filmmaker Dasari Narayana Rao dies at 75பிரபல தெலுங்கு தயாரிப்பாளராரும் டைரக்டருமான தசரி நாராயண ராவ் அவர்கள் சற்றுமுன் மரணமடைந்தார்.

இவர் ஆந்திராவில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

தெலுங்கில் 140 படங்களை இயக்கியுள்ள இவர், தமிழ் மற்றும் இந்தியில் படங்களை இயக்கியுள்ளார்.

50 படங்களை தயாரித்து இருக்கிறார்.

மேலும் நடனம், கதாசிரியர் ஆகிய துறைகளிலும் இவர் பணி புரிந்துள்ளார்.

டிவி சீரியல்களையும் இவர் தயாரித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படத்தை தயாரிக்க இருந்தார் இவர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் சற்றுமுன் மரணமடைந்தார்.

இவரது மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Veteran Telugu filmmaker Dasari Narayana Rao dies at 75

‘சுவாதி கொலை வழக்கு’ படத்தில் இயக்குனர் சொல்வது என்ன..?

‘சுவாதி கொலை வழக்கு’ படத்தில் இயக்குனர் சொல்வது என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Movie based on Swathi murder caseதமிழகத்தை கலக்கும் ஒரு சில சம்பவங்கள் செய்திகளாக மட்டுமே முடிந்துவிடும்.

ஆனால் ஒரு சில உண்மைச் சம்பவங்கள் மட்டுமே படங்களாக வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் முக்கியமானது சுவாதி கொலை.

தற்போது இதுவும் ஒரு படமாக வளர்ந்துள்ளது.

‘உளவுத்துறை’, ‘வஜ்ரம்’ படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன், தான் இயக்கிய அடுத்த படத்திற்கு சுவாதி கொலை வழக்கு என பெயரிட்டுள்ளார்.

இன்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இப்படம் பற்றி கதையாசிரியர் ரவி கூறியதாவது…

“இந்தப் படத்தை ரியலா பண்றதா, இல்லை கற்பனையுடன் வேறு கதையா பண்றதானுதான் முதல்ல யோசிச்சோம்.

சுவாதி கொலை செய்யப்பட்டு, ராம்குமார் கைதாகி, இறுதியில் ராம்குமார் மின் ஒயர் கடித்து இறந்து போனதாக இறுதி தகவல் வெளியானது.

நாங்களும் கிட்டதட்ட போலீஸ் மாதிரியே விசாரணை நடத்தினோம்.

இந்த கொலை வழக்கில் ஜாதி, மதம்னு இரண்டு பெரிய சக்தி தலையிட்டிருக்கு. ஒரு மாத தேடலுக்குப் பிறகு சுவாதி கொலை வழக்கில் நமக்கு ஏற்பட்டிருக்கும் பல கேள்விகளுக்கு விடையா இந்தப் படத்தைச் சொல்லியிருக்கோம்”. என்றார் ரவி.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

ஒரு சர்ச்சையையும் உருவாக்க வேண்டும்ம்னு இந்த படத்த எடுக்கல.

ஒரு சமூகத்துக்கு இந்தப் படம் மூலமா ஒரு விஷயம் சொல்லனும்.

இன்னொரு சுவாதியும், இன்னொரு ராம்குமாரும் இறந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன்”. என்றார் இயக்குநர் ரமேஷ் செல்வன்.

Movie based on Swathi murder case

நிஜ சுவாதி-ராம்குமார் போட்டோ இதுதான்…

swathi murder case ram kumar

கபாலி-புலிமுருகன்-வேதாளம் வரிசையில் சிம்புவின் ‘AAA’ படம்

கபாலி-புலிமுருகன்-வேதாளம் வரிசையில் சிம்புவின் ‘AAA’ படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus AAA movie trade news updatesமோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் உருவாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘புலிமுருகன்’.

இதன் தமிழ் டப்பிங் 3டி படம் வருகிற ஜூன் 16ஆம் தேதி வெளியாகிறது.

இதன் தமிழக விநியோக உரிமையை ‘செந்தூர் சினிமாஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது.

இப்போது சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் திருச்சி ஏரியா விநியோக உரிமையையும் இதே நிறுவனம் வாங்கியுள்ளதாம்.

இப்படத்தின் சென்னை விநியோக உரிமையை ஜாஸ் சினிமாஸும், மதுரை ஏரியா விநியோக உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸும் கைபற்றியுள்ளதாம்.

ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் அஜித் நடித்த வேதாளம் ஆகிய படங்களின் விநியோக உரிமையையும் ஜாஸ் சினிமாஸ் கைப்பற்றி இருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Simbus AAA movie trade news updates

‘சினிமாவுக்கு விநியோகஸ்தரே தேவையில்லை…’ விஷால் பரபரப்பு பேச்சு

‘சினிமாவுக்கு விநியோகஸ்தரே தேவையில்லை…’ விஷால் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal speech at Swathi Kolai vazhakku movie audio launch‘உளவுத்துறை’, ‘வஜ்ரம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் அடுத்து இயக்கியுள்ள படம் சுவாதி கொலை வழக்கு.

இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

“மக்களுக்கு எதாவது சொல்லணும், அவங்களை சிந்திக்க வைக்கிற மாதிரியான படங்கள் எடுக்கிறதுக்கு ஒரு தைரியம் வேண்டும்.

சுவாதி கொலை வழக்கை பற்றிப் யாரும் பேசக்கூட முடியவில்லை.

உண்மைகள் தெரிஞ்சாகூட வெளியே சொல்ல மாட்டோம்.

ஆனால் இவர் இந்தப் படத்தில் சொல்லவிருக்கிற விஷயத்தைப் பார்க்க நான் காத்திருக்க தொடங்கிவிட்டேன்.

பட ரிலீஸ் தேதியை முன்னாடியே சொல்லிடுங்க. உங்க கூட இருந்து நானே பிஸினஸ் செய்து கொடுக்குறேன்.

விநியோகஸ்தரிடம் கமிஷனுக்குக் கொடுத்து ஏமாற வேண்டாம். அவர்கள் தேவையற்றவர்கள்.

தியேட்டரில் சினிமா திரையிடுவது மட்டுமே வருமானம் கிடையாது.

சினிமாவில் சம்பாதிக்க நிறைய இருக்கு. நாங்க எப்போதும் உங்க கூட இருப்போம்.” என்று பேசினார் விஷால்.

Vishal speech at Swathi Kolai vazhakku movie audio launch

‘காலா’ டைட்டிலுக்கும் ஸ்டோரிக்கும் வந்த சோதனை

‘காலா’ டைட்டிலுக்கும் ஸ்டோரிக்கும் வந்த சோதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala title police caseசென்னை, போரூர், காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் ராஜசேகரன். இவர், இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காலா படக்குழுவினர் மீது புகார் ஒன்றைக் கொடுத்தார்.

இதுகுறித்து ராஜசேகரன் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…

” ‘கரிகாலன்’ தலைப்பு, கதையின் மூலக்கரு, பாடல்கள் ஆகியவை நீதி வழுவாத தமிழ்அரசர் கரிகால் சோழனின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்டது.

அவர், அந்தக் காலத்தில் நாட்டு மக்களுக்குச் செய்த அறச்செயல், வீரச்செயல் போன்றவற்றை மையப்படுத்தியதாகும். இந்தக் கதையில், நாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து வெளியிடுவதே என்னுடைய லட்சியம்.

இதற்காக, கடந்த 1995, 1996ல் அன்றைய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்திய நாராயணனிடம் ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்துக்குச் சென்று, கரிகாலன் தலைப்பு, கதை பற்றி கூறினேன்.

மேலும், அவரின் உதவியுடன் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, ‘பிறகு பேசலாம்’ எனச் சொல்லி என்னை புகைப்படம் மட்டும் எடுக்க அனுமதித்தனர்.

ஏப்ரல் 1996ல் பிஆர்ஓ. நெல்லை சுந்தரராஜன் ஏற்பாட்டில், என்னுடைய படைப்பின் ‘மயிலே.. குயிலே’ என்ற ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடந்தது.

அதில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தலைமையில் ஆடியோ வெளியிட, நடிகை மோகினி அதைப் பெற்றுக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில், ஜி.எஸ்.ஆர். விண்மீன் கிரியேஷன் மூலமாக வெளியிடயிருக்கும் திரைப்படம், ‘கரிகாலன்’, ‘உடன்பிறவா தங்கச்சி’ ஆகிய படத் தலைப்புகளை வெளியிட்டேன். அது, பத்திரிகைகளிலும் வெளியானது. ‘கரிகாலன்’ என்ற தலைப்பு, கதையின் மூலக்கரு முழுவதும் என்னுடையதே.

கரிகாலன் தலைப்பு மற்றும் கதையை, சில்வர் லைன் ஃபிலிம் ஃபேக்டரிமூலம் நடிகர் விக்ரமை வைத்து படத்தைத் தொடங்கி, காட்சிகள் வெளியானதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் 2011ல் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.

அந்தப் படத்தை எடுக்க, நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து, என்னுடைய கரிகாலன் திரைக்கதையைப் பல சினிமா நிறுவனங்களின் தயாரிப்பாளர்களிடம் சொல்லிவந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ்மூலம் இயக்குநர் ரஞ்சித் இயக்கவுள்ளதாகத் தகவல் எனக்குத் தெரிந்தது.

அந்தப் படத்தின் பெயர், ‘காலா’, கரிகாலன் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்.

என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும் கதையையும் கதையின் மூலக்கருவையும் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் திருடி, ‘கரிகாலன்’ என்ற தலைப்பை காலா, கரிகாலன் என்றும் மறுவடிவமைப்புச் செய்துள்ளனர்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.

Police case filed about Kaala Title and Story

police case kaala story

 

More Articles
Follows