திருட்டு டிவிடி வாங்குபவர்களை தண்டிக்கும் லைகா நிறுவனம்..!

திருட்டு டிவிடி வாங்குபவர்களை தண்டிக்கும் லைகா நிறுவனம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyca Gets New Strategy To Kill Piracyலைகா நிறுவனம் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி இணைந்துள்ள படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’.

சாம் ஆண்டன் இயக்கியுள்ள இப்படம் நாளை (ஜூன் 17) ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு திருட்டு டிவிடி வெளியாகும் பட்சத்தில், அதனை தடுக்கும் வகையில் ஒரு புதிய யுக்தியை எடுத்திருக்கிறது லைகா.

இதுகுறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது…

“இப்படத்திற்கு வர்த்தக ரீதியான டிரேட்மார்க் பதிவு ஒப்புதல் எண்ணை அறிவுசார் காப்புரிமை மையத்திலிருந்து பெற்றுள்ளோம். அந்த எண்: O-0000780028.

இந்த எண் பதிவு செய்யப்பட்டதன் மூலம் சட்டவிரோதமாக இப்படத்தின் டிவிடி விற்கப்பட்டாலோ, டிவிடி பார்த்தாலோ, டவுன்லோட் செய்தாலோ அதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

மேலும் அவர்களுக்கு தண்டனையும் பெற்றுத் தர முடியும்” என தெரிவித்துள்ளது.

‘கபாலி 22 மில்லியன்; ரஜினி 3 மில்லியன்…; அதிசயிக்கும் திரையுலகம்..!

‘கபாலி 22 மில்லியன்; ரஜினி 3 மில்லியன்…; அதிசயிக்கும் திரையுலகம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Teaser Reached 22M Viewsகடந்த மே மாதம் 1ஆம் காலை 11 மணியளவில் கபாலி டீசர் வெளியானது.

இதுநாள் வரை இதை டியூடிப் தளத்தில் 22 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இன்று வரை 22,084,018 பேர் பார்வையிட்டுள்ளனர்.

ஒரு தமிழ் படத்திற்கு இப்படியொரு பெருமை கிடைத்துள்ளதை திரையுலகினர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் ட்விட்டரில் தன் கணக்கை தொடங்கினார் ரஜினி.

தற்போது இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 3 மில்லியனை தொட்டுள்ளது.

எனவே, இவை இரண்டையும் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

எம்ஜிஆர்-சிவாஜி-ஜெயலலிதாவை  இயக்கிய ஏ.சி. திருலோகச்சந்தர் மரணம்.!

எம்ஜிஆர்-சிவாஜி-ஜெயலலிதாவை  இயக்கிய ஏ.சி. திருலோகச்சந்தர் மரணம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Veteran Tamil Film Director AC Thirulokachander Passed awayமக்கள் திலகம் எம்ஜிஆரின் அன்பே வா மற்றும் ஜெயலலிதாவின் தர்மம் எங்கே? நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தெய்வமகன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்ஏ.சி.திருலோகச்சந்தர்.

மேலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நிறைய படங்களை இயக்கியுள்ளார்.

1960 முதல் 1980 வரையிலும் இவர் படங்களை இயக்கி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டு வந்தார்.

இன்று (15 ஜூன் 2016) மாலை திடீரென அவரது உயிர் பிரிந்தது.

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சென்னை, கானத்தூரில் மாயாஜாலுக்கு எதிரில்  உள்ள  வீட்டில் நாளை மாலை இவரது இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

ஏழை மாணவர்களுக்காக மராத்தான் ஓடிய ‘சிங்கம்’ சூர்யா..!

ஏழை மாணவர்களுக்காக மராத்தான் ஓடிய ‘சிங்கம்’ சூர்யா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Participated in Chennai Marathon for Poor Children Educationசிறந்த நடிகராகவும் நல்ல மனிதராகவும் வெற்றி வாகை சூடி வருகிறார் சூர்யா.

தன் அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்காக பல உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் இயற்கை பசுமையை போற்றும் வகையில் மாத இதழையும் நடத்தி வருகிறார்.

தற்போது ஹரி இயக்கி வரும் சிங்கம்-3 படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், சென்னை தீவுக்கடலில் நடைபெற்ற இரவு நேர மராத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இதில் கிட்டதட்ட 5 கிலோ மீட்டர் வரை சூர்யா ஓடியுள்ளார்.

ஏழை குழந்தைகளின் படிப்பு செலவுக்காக இந்த போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலி விளம்பரங்களில் ஏன் ரித்விகா இல்லை தெரியுமா?

கபாலி விளம்பரங்களில் ஏன் ரித்விகா இல்லை தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rithvika's Character in Kabali will be a Surprise!கபாலி ரிலீஸ் தேதியை நெருங்கி வருவதால், விளம்பரப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது படக்குழு.

இதுவரை விளம்பரம் மற்றும் இதர போஸ்டர்களில் ரஜினியுடன் வில்லன்கள், ராதிகா ஆப்தே, ஜான் விஜய், நாசர், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்டோரின் படங்கள் இடம் பெற்று இருந்தன.

ஆனால் இப்படத்தில் முக்கியமான கேரக்டர் ஏற்றுள்ளதாக கூறப்படும் ரித்விகாவின் படங்களே இடம் பெறவில்லை.

இதுகுறித்து படக்குழு தெரிவித்துள்ளதாவது…

“கபாலியை திரையில் பார்க்கும் போது ரித்விகா கேரக்டர் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும்.

படப்பிடிப்பின் போதே ரஞ்சித்திடம் “என்னப்பா.. இந்தப் பொண்ணு இந்தளவு சூப்பரா பெர்மான்ஸ் பன்னுது” என்று ரஜினியே ஆச்சர்யப்பட்டாராம்.

அந்த சஸ்பென்ஸை உடைக்க வேண்டாம் என்பதால்தான் விளம்பரங்களில் ரித்விகாவின் படங்கள் இடம் பெறவில்லையாம்.

ரசிகர்களிடம் இருந்து எஸ்கேப் ஆக விஜய் போட்ட ப்ளான்..?

ரசிகர்களிடம் இருந்து எஸ்கேப் ஆக விஜய் போட்ட ப்ளான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Where will Vijay Spend his Birthday this year?வருகிற ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வருகிறது.

இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போதே அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

ஆனால் பிறந்த நாள் அன்று, விஜய் சென்னையில் இருக்கமாட்டார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

பிறந்த நாள் கொண்டாட்டங்களால் ஏற்படும் சில அரசியல் சலசலப்புக்கு விஜய் இடம் கொடுக்க விரும்பவில்லையாம்.

எனவே அன்றைய தினம் ரசிகர்களை சந்திக்காமல், விஜய் 60 படத்தின் சூட்டிங்கில் இருந்துவிடலாமா? என யோசிக்கிறாராம்.

அன்றைய தினத்தில் படக்குழுவினருக்கு மட்டும் ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்து முடித்து கொள்ளலாம் என திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

More Articles
Follows