‘பிக்பாஸ்’ ஷாரிக் ஹாசன் உடன் இணைந்த டபுள் ஹீரோயின்ஸ்

‘பிக்பாஸ்’ ஷாரிக் ஹாசன் உடன் இணைந்த டபுள் ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் படம் “நேற்று இந்த நேரம்”.

பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

நேற்று இந்த நேரம்

இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா & சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர்.

பார்ட்டி கொண்டாட போன இடத்தில் நண்பர்கள் மர்மமான முறையில் காணாமல் போக, அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களை கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது.

கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த்.என் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று இந்த நேரம்

நேற்று இந்த நேரம் படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது. படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இது ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் ஜனவரி 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

*டிரைலர்* – https://youtu.be/aR38JOp5C24

நேற்று இந்த நேரம்

Netru indha neram movie starring Sharikhhassan

ரொம்ப நல்லவன்.. ரொம்ப கெட்டவன் இல்லை.; உண்மை சொல்லும் ‘ஈரப்பதம் காற்று மழை’

ரொம்ப நல்லவன்.. ரொம்ப கெட்டவன் இல்லை.; உண்மை சொல்லும் ‘ஈரப்பதம் காற்று மழை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்தியாசமான பல ஜானர்களில் படம் எடுத்து வெற்றிக் கொடுத்தவர் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன். ‘ஜீவி’ படப்புகழ் வெற்றி, ’முதல் நீ முடிவும் நீ’ படத்தின் கிஷன் தாஸ் மற்றும் தீப்தி ஓரண்டேலு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ஈரப்பதம் காற்று மழை’ என்ற புதிய படம் இப்போது தயாராகி உள்ளது.

படத்தை அறிமுக இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா இயக்கியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா கூறும்போது…

”’ஈரப்பதம் காற்று மழை’ திரைப்படம், மூன்று வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்த வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம். வழக்கமான கதை சொல்லும் முறை இந்தப் படத்தில் இருக்காது.

இப்படம், மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் உணர்ச்சி விலகல்கள் ஆகியவற்றில் இந்தக் கதை கவனம் செலுத்துகிறது. இதன் பொருட்டு வரும் நிகழ்வுகள் படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.

மேலும், வாழ்க்கை ஒருவர் மீது எந்த அளவுக்கு கொடூரமாகவும் அதேசமயம் எப்படி கனிவாகவும் இருக்கிறது என்ற வாழ்வின் நிலையற்ற தன்மையை இந்த படம் உணர்த்தும்.

முற்றிலும் நல்லவர் என்றோ முற்றிலும் தீயவர் என்றோ மனிதர் யாரும் இல்லை, அது தனி நபரின் உணர்வைப் பற்றியது என்ற எண்ணத்தையும், அவர்கள் ஒருவரையொருவர் எப்படி எதிர்கொள்கிறார்கள் மற்றும் அதன் விளைவுகளை பெறுத்ததே வாழ்க்கை என்பதை இந்தப் படம் நமக்குத் தருகிறது.

படத்தின் ஒவ்வொரு விவரமும் தனி கவனத்துடன் படமாக்கப்பட்டுள்ளது. சென்னையின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இந்தக் கதை நடைபெறுவதால், முடிந்த அளவுக்கு லைவ் லொகேஷனில் அதன் உண்மைத்தன்மையுடன் படம் பிடித்து இருக்கிறோம்.

இந்தப் படத்தில் நடிகர்கள் வெற்றி, கிஷன் தாஸ், தீப்தி ஆகிய மூவரும் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களையும் அவற்றின் ஆழமான உணர்ச்சிகளை புரிந்து கொண்டு திறமையாக நடித்துள்ளனர்.

தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் கதையின் தரமும் படைப்பின் உண்மை உணர்வும் மாறாது வரவேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வரக்கூடிய பிக் பிரிண்ட் பிக்சர்ஸுடன் நாங்கள் இணைந்தது பெருமைக்குரிய ஒன்று.

வர்த்தக வட்டார நாயகனாக வலம் வரக்கூடிய நடிகர் வெற்றி தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைத்தேர்வின் மூலம் தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார். திரையுலகில் நுழைவதற்கு முன்பே பிரபலமான நடிகர் கிஷன் தாஸ் ‘முதல் நீ முடிவும் நீ’ மற்றும் இன்னும் சில திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இவர்களுடன் திறமையான தியேட்டர் ஆர்டிஸ்ட்டான தீப்தியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். படத்தில் உள்ள நடிகர்களின் திறமையான நடிப்பால், நிச்சயம் சினிமா ஆர்வலர்களுக்கு இந்தப் படம் ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.

அறிமுக இயக்குநர் சலீம் ‘மயக்கம் அது மாயம்’ போன்ற குறும்படங்களை இயக்கியுள்ளார். இது வலுவான கதைகளம் மற்றும் அற்புதமான மேக்கிங் ஸ்டைலுக்கு வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரத்யேக கதைகளை திரைப்படங்களாக உருவாக்குவதை எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் ஐ.பி.கார்த்திகேயன் இயக்குநர் சலீமின் திறமையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

’ஈரப்பதம் காற்று மழை’ படத்தை சலீம் ஆர் பாட்ஷா எழுதி இயக்கியுள்ளார். மேலும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன் தயாரித்துள்ளார். படத்திற்கு ஸ்ரீராம் வெங்கடேஷ் இசையமைத்திருக்க, அமல் டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பாளராகவும், அந்தோணி மரியா கெர்லி எல் கலை இயக்குநராகவும், நூர் முகமது ஸ்டண்ட் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

Eerapadham Kaatru Mazhai movie starring Vettri and Kishandass

கைவிடப்பட்ட இளைஞனின் வாழ்வியலை சொல்ல வரும் சீனு ராமசாமி

கைவிடப்பட்ட இளைஞனின் வாழ்வியலை சொல்ல வரும் சீனு ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“ஜோ” பட வெற்றியை தொடர்ந்து “VISION CINEMA HOUSE” டாக்டர் டி.அருளானந்து அவர்கள் தயாரிக்கும் “கோழிப்பண்ணை செல்லதுரை” திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற வெற்றி மற்றும் விருதுகள் பெற்ற படங்களை எழுதி இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கும் “கோழிப்பண்ணை செல்லதுரை” திரைப்படம் கிராமத்து மண்சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல், காதல் சித்திரமாய் விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாராகும் அதிரடி உணர்ச்சி வாழ்வியல் திரைப்படம்.

முக்கிய கதாபாத்திரத்தில் “யோகி பாபு”

கதையின் நாயகனாக அறிமுகமாகும் ஏகன்,
பிரிகிடா,
ஐஸ்வர்யா தத்தா,
தினேஷ் முத்தையா (அறிமுகம்),
லியோ சிவகுமார்,
திருச் செந்தூர் ஶ்ரீ ராம் (அறிமுகம்)
சத்யா (அறிமுகம்)
மானஸ்வி,
பவா செல்லதுரை,
மற்றும் பலர்..

எழுத்து இயக்கம் :
சீனு ராமசாமி

தயாரிப்பு :
டாக்டர் டி. அருளானந்து
மேத்யூ அருளானந்து

இசை : N.R. ரகுநந்தன்

ஒளிப்பதிவு: அசோக்ராஜ்

வசனம் :
பிரபாகர்,
சீனு ராமசாமி

படத் தொகுப்பு:
ஶ்ரீகர் பிரசாத்

கலை இயக்குனர்:
R.சரவண அபிராமன்

ஆடை வடிவமைப்பு :
v. மூர்த்தி

நடனம்: நோபல்

சண்டைபயிற்சி :
ஸ்டன்னர் ஷாம்

பாடல்கள்:
“கவிப்பேரரசு” வைரமுத்து,
கங்கை அமரன்,
பா.விஜய்,
ஏகாதேசி.

நிர்வாக தயாரிப்பு:
வீர சங்கர்

டிசைனர் :
சிந்து கிராஃபிக்ஸ் பவன் குமார்

மக்கள் தொடர்பு :
நிகில் முருகன்

மேக் அப்: A. பிச்சுமணி

ஸ்டில்ஸ்:
மஞ்சு ஆதித்யா

Yogibabu starrer Kozhippannai Chelladurai Seenu ramasamy directorial

BUY 1 GET 2 ஆயிரம் பொற்காசுகள்.; KR-க்கு கமல் பாராட்டு

BUY 1 GET 2 ஆயிரம் பொற்காசுகள்.; KR-க்கு கமல் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் இயக்குநர் கே ஆர் தனது ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான ‘ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்’ திட்டத்திற்கு உலகநாயகன் கமல் ஹாசன் பாராட்டு

தயாரிப்பாளர் கே ஆர் அவர்களின் கடிதம்…

உயர்திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு….

வணக்கம்… வருகிற 22 ஆம் தேதி “ஆயிரம் பொற்காசுகள்” என்ற நகைச்சுவை படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறேன். விதார்த், சரவணன், அருந்ததி நாயர் உட்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகின்றனர். மற்ற நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் வருவதில்லை.

அதனால் பல தியேட்டரில் காட்சிகள் ரத்து (show break) ஆகிவிடுகிறது. இதனால் ஒன்று இரண்டு நாட்களிலேயே அந்த படம் தூக்கப்பட்டு விடுகிறது.

சில படங்கள் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் மூலம் தெரிய வந்தாலும் ரசிகர்கள் படம் பார்க்க வரும்போது படம் இருப்பதில்லை. இத்தகைய கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறேன்.

அதாவது அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டும் “ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறேன்.

ஆயிரம் பொற்காசுகள்

இது ரசிகர்கள் மத்தியிலும் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

எப்போதுமே திரையுலகில் புதுமைகளை புகுத்தி புரட்சி செய்வதில் முன்னணியில் நிற்பது நீங்கள் தான். திரைத் தொழிலை காப்பாற்றத் துடிக்கும் தங்களுக்கு இதன் அவசியம் கண்டிப்பாக புரியும் என்று நம்புகிறேன்.

எனவே இந்த முயற்சி ரசிகர்களை சென்றடைந்து முதல் நாள் முதல் காட்சிக்கு கூட்டம் வருமானால் அது மற்ற சிறிய படங்களுக்கும் பேருதவியாக இருக்கும். எனவே இந்த முயற்சிக்கு தாங்கள் ஆதரவு தெரிவித்தால் நிச்சயமாக இந்தப் படம் வெற்றி பெறும். இந்த கான்செப்ட் வெற்றி பெற்றால் அது ஒட்டுமொத்த திரையுலகின் வெற்றியாக உருவெடுக்கும் என்பது உறுதி.

நன்றி நன்றி..

இப்படிக்கு,

கே ஆர்

**

*உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டு செய்தி:*

சிறப்பான முயற்சி… தடைகளை உடைத்து வெளிவரும் சிறிய படங்களுக்கு நான் எப்போதுமே ஆதரவாளன் தான். நானும் அப்படி வந்தவன் தான். எதிர்கால நட்சத்திரங்கள் சிறிய படங்களில் இருந்தோ அல்லது பெரிய பட்ஜெட் படங்களில் சிறிய வேடங்களில் நடிப்பதன் மூலமாகவோ தான் உருவாகிறார்கள். சிறியது என்பது அழகானது மட்டுமல்ல நிச்சயமாக ஒருநாள் பெரியதாக வளரக்கூடியது. ஆனால் பெரியது மேலும் பெரியதாகி ஒரு புள்ளியில் நின்று விடும். வாழ்த்துக்கள்.

– கமல்ஹாசன்

All the very best . I am always in favour of small but path breaking films . That is how I got my break . The future stars will rise from smaller films only or at least from smaller roles in bigger films . Small is not only beautiful but will one day definitely will grow to be big. Big will get bigger and will stop at a particular point. Congrats

**
ஆயிரம் பொற்காசுகள்

Kamalhassan appreciates Aayiram porkaasugal prouucer KR

பணம் மட்டும்தான் வாழ்க்கையா? இளையராஜா இசையில் உருவான ‘தினசரி’

பணம் மட்டும்தான் வாழ்க்கையா? இளையராஜா இசையில் உருவான ‘தினசரி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீகாந்த்- சிந்தியா லெளர் டே ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் ” தினசரி “.

மேலும் இதில் எம்.எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா, இன்னும் பலர் நடிக்கின்றனர்.

இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கும் இதற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவையும், ஜான் பிரிட்டோ கலையையும், சாம் சண்டை பயிற்சியையும், தினேஷ் நடன பயிற்சியையும் , பாலமுருகன்– சண்முகம் இருவரும் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல் படமாக இயக்கி வரும் சங்கர் பாரதி படத்தை பற்றி கூறியதாவது…

” மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எப்படி கையாள்வது.? குறிப்பாக இளைஞர்கள் பணம் இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

தினசரி

அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை நகைச்சுவையுடன் ஆக்சனையும் கலந்து விறு விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன்.

நாயகனாக நடிக்கும் ஸ்ரீகாந்த் ஜோடியாக அமெரிக்காவில் வாழும் சிந்தியா லெளர் டேவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளேன். பிரேம்ஜி, எம்.எஸ். பாஸ்கர் , மீரா கிருஷ்ணன், வினோதினி, முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்கள்.

இளையராஜா இசையில் முதல் பட இயக்குனர்களின் படங்கள் வெற்றி படங்களாகவே இருந்து வரும் சென்டிமெண்டில் இப்பொழுது நானும் இணைகிறேன். எனக்கு இது தான் முதல் படம்- இளையராஜா என்ற மாபெரும் சாதனையாளர் என்படத்திற்கு இசையமைப்பது நான் செய்த பாக்கியம்.” என்று கூறினார்.

500 படங்களுக்கு மேல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி உள்ளவரும், ஆறு நேரடி தமிழ் திரைப்படங்களை தயாரித்தவருமான என். விஜயமுரளி தமது மகா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ” தினசரி ” திரைப்படத்தை தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ள “தினசரி ” படத்தில் இரண்டு பாடல்களுக்கு மாபெரும் அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர்.
விரைவில் திரைக்கு வர உள்ளது ” தினசரி ” திரைப்படம்.

தினசரி

Thinasari movie starring Srikanth in ilaiyaraaja musical

பிராங் ஷோ ஃபிராடுகள்.: இனி யார் உதவி செய்வா.? மஹானாவை அடித்த விஜய் விஷ்வா

பிராங் ஷோ ஃபிராடுகள்.: இனி யார் உதவி செய்வா.? மஹானாவை அடித்த விஜய் விஷ்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.

காதலையும் நட்பையும் பற்றிப் பேசும் காமெடி ஆக்ஷன் படம் ‘கும்பாரி’

நெய்தல் நிலப் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘கும்பாரி’.

இந்த படத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா, மஹானா சஞ்சீவி , ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி குமாரி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் கெவின் ஜோசப்.

ஒளிப்பதிவாளராக பிரசாத் ஆறுமுகம், இசை அமைப்பாளர்களாக ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்திவி ஆகியோர், படத்தொகுப்பாளராக டி.எஸ்.ஜெய், நடன இயக்குநராக ராஜுமுருகன், சண்டை இயக்குநராக மிராக்கல் மைக்கேல், கலை இயக்குநராக சந்தோஷ் பாப்பனாங்காடு, பாடல் ஆசிரியர்களாக வினோதன், அருண் பாரதி, சீர்காழி சிற்பி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஆதரவற்ற ஒருவனும் அனாதைச் சிறுவனும் சிறு வயதிலிருந்து நட்பு கொள்கிறார்கள். பிறகு அது இறுகி உறுதியான பிணைப்பாக மாறுகிறது.மீன்பிடிக்கும் தொழிலைச் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

ஒரு நாள் வேறு ஊரைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை ஒரு ரவுடிக் கும்பல் துரத்துகிறது. அவள் கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் உதவி கேட்கிறாள்.
இதைப் பார்த்து மனம் பதைபதைத்துப் பரிதவித்தாலும் உதவ வராமல் தயங்கி நிற்கிறார்கள்.

கும்பாரி

என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா என்று கதறுகிறாள் அவள்.ஆனால் யாரும் வரவில்லை.
அனைவரும் தயங்கி நிற்கிறார்கள்.

இது நாயகனுக்குத் தெரிகிறது அவளும் நாயகனிடம் முறையிடுகிறாள். அவன் அவளைத் துரத்தி வந்த அந்தக் கும்பலை அடித்து துவம்சம் செய்கிறான்.

அடி வாங்கிய அவர்களோ பதில் விளைவு காட்டாமல் சிரிக்கிறார்கள்.நாயகன் புரியாமல் நிற்கிறான்.

இதில் என்ன கொடுமை என்றால் அந்த, துரத்தப்பட்ட இளம் பெண்ணும் சிரிக்கிறாள்.காரணம் அது ஒரு பிராங்க் ஷோவாம். இப்படி பொதுமக்கள் உணர்ச்சிகளோடு விளையாடும் அவர்களின் வியாபார நோக்கமறிந்து கொதிக்கிற நாயகன்,இப்படிப் போலியாக நடிக்கும் செயல்களால் உண்மையான ஆபத்து வரும்போது யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள் என்று நாயகியை ஓங்கி அறைந்து விடுகிறான்.

இப்படிப்பட்ட வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற வெளிப்படையான குணம் கொண்ட நாயகன் மீது காதலில் விழுகிறாள்.

அவள்காதலுக்கு அண்ணன் எதிர்ப்பு தெரிவிக்க காதல் ஜோடி ஊரை விட்டு ஓட… அதன்பிறகு அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் ‘ கும்பாரி’ படத்தின் கதை.

படம் பற்றித் தயாரிப்பாளர் குமாரதாஸ் பேசும்போது,…

“இது ஒரு பயணத்தில் செல்லும் காதல் கதை. சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்திப் பறவை ‘போல் காதலர்கள் செய்யும் பயணம் தான் இப்படம்.. காதல், நட்பு, நகைச்சுவை, ஆக்சன் என அனைத்தும் கலந்த முழு நீள எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி உள்ளது என்கிறார்.

கும்பாரி

கும்பாரி என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருளாம்.

இந்தப் படம் ஒரு காதல் கதை தான் என்றாலும் நட்பை பற்றியும் இப்படம் பேசுகிறது.

நட்பைப் பற்றி இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் ஒரு நட்பதிகாரமே படைக்கும் வகையில் உள்ளது.

குமரி மண்ணின் அழகும், மண்மணம் மணக்கும் மொழியும், பாடல்களும் படத்திற்கு வேறு நிறம் காட்டுகின்றன.

இப்படத்தில் காதல், நகைச்சுவை, நட்புடன் கலந்து சமகாலச் சமூகப் போக்கையும் பிரதிபலித்துக் கதை உருவாகியுள்ளது.

‘ கும்பாரி’ படத்தின் படப்பிடிப்பு கடலும் கடல் சார்ந்த இடங்களான கன்னியாகுமரி, நாகர்கோவில், முட்டம் ஆகிய கடற்கரைப் பகுதிகளிலும் கேரளாவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

ஒரே கட்டமாக 30 நாட்களில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள் என்பது இவர்களின் திட்டமிடுதலுக்கு ஒரு சாட்சியாக விளங்குகிறது. கும்பாரி’ படத்தை ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரித்துள்ளார்.

‘கும்பாரி ‘திரைப்படம் 2024 ஜனவரி 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.. இப்படத்தினை 9V ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

கும்பாரி

Kumbaari movie deals with prank show frauds

More Articles
Follows