அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்… அடுத்த நைனா சொல்லிட்டாரு..!

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்… அடுத்த நைனா சொல்லிட்டாரு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash Calls Vijay as the Undoubted Next Superstar of Tamil Cinemaசூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பல மாநிலங்களில் பலரும் பங்கு போட்டு கொண்டாலும், தமிழத்தில் அது ரஜினிக்கு மட்டுமே உரியதாக இருந்து வருகிறது.

லிட்டில் சூப்பர் ஸ்டார், இளைய சூப்பர் ஸ்டார் என்று சிலருக்கு பலர் சூட்டி வந்தாலும் ரஜினிக்கு நிகராக யாரும் அந்த இடத்திற்கு வரவில்லை.

இந்நிலையில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் அடுத்த நைனாவாக கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவர்கள் விஜய்க்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில்… “சந்தேகமே இல்லை. தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான். விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

விஜய் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் தரும் விருந்து..!

விஜய் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் தரும் விருந்து..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RemoFL and Title Track at 5pm Todayஇன்று இளைய தளபதி விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவர் தமிழகத்தில் இல்லாவிட்டாலும், அவரது ரசிகர்கள் சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்து தளபதி தரிசனத்தில் திளைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயனும் தன் ரசிகர்களுக்கு விருந்து வைக்கிறார்.

ரெமோ பர்ஸ்ட் லுக் மற்றும் ரெமோ நீ காதலன் என்ற டைட்டில் பாடல் ட்ராக் பற்றிய வீடியோ ஒன்றை இன்று மாலை 5 மணியளவில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த வீடியோ பதிவை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.

இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமாக 24ஏஎம் ஸ்டூடியோ நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ரஜினி-கமல்-விஜய்யை தொடர்ந்து உதயநிதி..!

ரஜினி-கமல்-விஜய்யை தொடர்ந்து உதயநிதி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyca to Produce Udhayanidhi's Next Movieபிரபல மொபைல் நிறுவனமான லைகா தற்போது இந்திய சினிமாவில் பல மொழி படங்களை தயாரித்து வருகிறது.

ரஜினி நடிக்கும் 2.0 மற்றும் கமல் இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

சிரஞ்சீவி நடிக்க கத்தி ரீமேக்கையும் தெலுங்கில் தயாரிக்கின்றனர்.

மேலும் கத்தியை தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உதயநிதி நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாம்.

இப்படத்தை ‘தூங்கா நகரம்’ மற்றும் ‘சிகரம் தொடு’ படங்களின் இயக்குநர் கெளரவ் இயக்கவிருக்கிறார். நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.

இப்படத்தை முடித்துவிட்டு சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம், ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்திற்கு ஒரு படம் என்ற முடிவில் இருக்கிறாராம் உதயநிதி.

கபாலி சீக்ரெட்ஸ்: மணிரத்னம் படக் கலவை.. தாணு நட்புக்கு மகுடம்..!

கபாலி சீக்ரெட்ஸ்: மணிரத்னம் படக் கலவை.. தாணு நட்புக்கு மகுடம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalaipuli S.Thanu Exclusive Interview About Kabaliரஜினியின் கபாலி பாடல்கள் நெருப்புடா என்று தீ வேகத்தில் இணையங்களில் பரவி கொண்டிருக்கிறது.

இப்படம் ரிலீஸ் தேதியை கபாலி நெருங்கி கொண்டிருப்பதால், படத்தின் தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக கசிந்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்த மேலும் தகவல்களை தயாரிப்பாளர் தாணுவே சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது….

தமிழகத்தில் இருந்து மலேசியா சென்ற ஒரு கேரக்டரை பற்றியதுதான் இந்த கபாலி. எனவேதான் பெரும்பாலான காட்சிகளை மலேசியாவில் படமாக்கினோம்.

இது ஒரு டான் கதை தான். இதில் தளபதிசாயலும் இருக்கும். ‘நாயகன்சாயலும் இருக்கும். இந்த இரண்டின் கலவைதான் கபாலி‘.

டீசரில் ஒரு இளமையான ரஜினி தோன்றியிருப்பார். அன்றைய தினம் ரஜினிக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது.

ஆனால் அதனைப் பொருப்படுத்தாமல் ரஜினிக்கே உரித்தான அதே வேகத்துடன் நடித்து கொடுத்தார்.

தாய்லாந்து நாட்டில் கிளப்புகள் நிறைந்த தெரு ஒன்று உள்ளது. ரஜினி சார் அங்கே சென்றால் படப்பிடிப்பே நடத்த முடியாது என்பதால் சென்னையில் அதே போன்று செட்போட்டு படமாக்கினோம்.

எனவே அக்காட்சிக்காக வெளிநாட்டு பெண்கள் சுமார் 500 பேரை  நடிக்க வைத்தோம். அவர்களுடன் சமமாக ரஜினி சார் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார் என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

கபாலி ரிலீஸ் ஆகி 2 மாதங்களுக்கு பிறகு சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளோம்.

ரஜினிக்கும் எனக்கும் 35 வருட கால நட்பு உள்ளது. அந்த நட்புக்கு அடையாளமாக வி கிரியேஷன்ஸ்நிறுவனத்துக்கு ஒரு மகுடமாக கபாலிபடம் நிச்சயம் இருக்கும் என்று ரஜினி சார் சொன்னார்

இவ்வாறு தாணு தெரிவித்துள்ளார்.

தீபாவளி ரேஸில் கமல்… அஜித் இடத்தில் கார்த்தி..!

தீபாவளி ரேஸில் கமல்… அஜித் இடத்தில் கார்த்தி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal's Vishwaroopam 2 Vs Karthi's Kaashmora During this Diwaliதங்கள் அபிமான நடிகரின் படம் வந்தாலே அன்றைய தினம் ரசிகர்களுக்கு தீபாவளிதான்.

அதிலும் தீபாவளி அன்று படம் ரிலீசானால் இவர்கள் உற்சாகத்திற்கு அளவே இருக்காது.

கடந்தாண்டு (2015) வேதாளம் படம் வெளியான போது அதை தல தீபாவளியாக கொண்டாடினர் அஜித் ரசிகர்கள்.

அதே நாளில் ரிலீசான கமலின் தூங்காவனம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

இந்தாண்டும் தீபாவளி அன்று கமலின் படம் வெளியாகவுள்ளது.

விஸ்வரூபம் 2 திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக கமல் அறிவித்துள்ளார்.

முதல் பாகத்தை போலவே இப்படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் கார்த்தி 4 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ள காஷ்மோரா படமும் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

இப்படம் சுமார் ரூ. 45 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் வழியில் ‘ராஜா மந்திரி’ வைஷாலி..!

சிவகார்த்திகேயன் வழியில் ‘ராஜா மந்திரி’ வைஷாலி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raja Manthiri from June 24thஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‛ராஜா மந்திரி’.

சுசீந்திரனுடன் ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கலையரசன் மற்றும் ஸோயா ஒரு ஜோடியாகவும் காளி வெங்கட் மற்றும் வைஷாலி மற்றொரு ஜோடியாக நடித்துள்ளனர்.

இதில் வைஷாலி, சிவாகார்த்திகேயனைப் போல் ஒரு தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நுழைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் முக்கிய கேரக்டரில் பாலசரவணன் நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசைமைத்துள்ளார்.

இதில் இடம்பெற்ற “எதிர்த்த வீட்டு காலி ப்ளவரே… என்னை காதலிக்க பொறந்த என் லவ்வரே…” பாடல் ஏற்கெனவே பெரும் ஹிட்டடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வருகிற ஜுன் 24ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

More Articles
Follows