100 படத்திற்காக அதர்வா-ஹன்சிகாவை இணைக்கும் டார்லிங் டைரக்டர்

100 படத்திற்காக அதர்வா-ஹன்சிகாவை இணைக்கும் டார்லிங் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hansika and atharvaaஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘டார்லிங்’, எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கிவர் சாம் ஆண்டன்.

இவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் முதன்முறையாக அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.

இவர்களுடன் ‘எரும சாணி’ புகழ் ஹரிஜா மற்றும் ‘யோகி’ பாபு ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘ஆரா சினிமாஸ்’ தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா போலீஸ் ஆக நடிக்கிறார்.

போலீஸுக்கும் 100 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்பது தாங்கள் அறிந்த விஷயமே.

ஒரு குப்பைக் கதையை மாற்ற சொல்லி அசிங்கப்பட்ட அமீர்

ஒரு குப்பைக் கதையை மாற்ற சொல்லி அசிங்கப்பட்ட அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Ameerபல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’.

கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார் இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி..

மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர்.

இயக்குனர் அமீர் பேசும்போது, “இந்தப்படத்தின் கதை தயாரிப்பாளர் அஸ்லம் மூலம் என்னிடம் முதலில் வந்தது. கதைகேட்ட பின் இயக்குனர் காளி ரங்கசாமியிடம் சில மாற்றங்கள் செய்தால் நடிக்கலாம் என சொன்னேன்.

ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக அஸ்லம் சொன்னார்..

ஆனால் ஒரு இயக்குனராக அவரது உறுதியான முடிவை பாராட்டுகிறேன். ” என்றார்.

பணம் இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ வழி சொல்லும் திருப்பதிசாமி குடும்பம்

பணம் இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ வழி சொல்லும் திருப்பதிசாமி குடும்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thirupathi samy kudumbamஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம்.G , ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா இணைந்து வழங்கும் படம் “திருப்பதிசாமி குடும்பம்“

இந்த படத்தில் ஜே.கே, ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறியதாவது…

ஒரு குடும்பத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப் பட்ட திரைக்கதை இது. நிறைய பணம் இருந்தால் மட்டும் வாழ்க்கை நிம்மதியா வாழலாம் என்று நினைகிறார்கள். அனால் பணம் இல்லா விட்டாலும் நேர்மையாக வாழ்ந்தாலும் குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்ற கருத்தை உள்ளடக்கிய கதை.

அப்படி வாழும் ஒரு குடும்பத்திற்கு சில சமூக விரோதிகளால் நிறைய பிரச்னைகள் உருவாகிறது. அந்த குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் புத்திசாலி தனமாக பிரச்னைகளை சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை.

காக்கா முட்டை, பசங்க, கோலிசோடா வரிசையில் திருப்பதி சாமி குடும்பமும் வெற்றி பெற்று பாராட்டை பெரும் என்று நம்பிக்கையுடம் கூறினார் படத்தின் தயாரிப்பாளர் பாபுராஜா.

படம் இம்மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

ஒளிப்பதிவு – Y.M.முரளி / இசை – சாம் டி.ராஜ்

எடிட்டிங் – ராஜா முகமது / நடனம் – தினேஷ், ஹபீப் / ஸ்டன்ட் – பயர் கார்த்திக்

இணை தயாரிப்பு – திருப்பூர் K L K.மோகன்

தயாரிப்பு – பாபுராஜா, B.ஜாஃபர் அஷ்ரப்

இயக்கம் – சுரேஷ்சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செயல் பட ஹீரோவின் அடுத்த படம் குமாரு வேலைக்கு போறான்

செயல் பட ஹீரோவின் அடுத்த படம் குமாரு வேலைக்கு போறான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajan Tejeshwarவிஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர் ரவி.

இவர் பல வருடங்கள் இடைவேளைக்கு பின்னர் 2வது இயக்கியுள்ள படம் செயல்.

இப்படம் நாளை மே 18ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதில் நாயகனாக ராஜன் தேஜேஸ்வர் என்பவர் அறிமுகம் ஆகிறார். இவரின் தந்தை சி.ஆர்.ராஜன் தான் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் வருவதற்குள் அடுத்த படத்திலும் கமிட்டாகிவிட்டார் இந்த நாயகன்.

இந்த படத்தையும் அவரது தந்தையே தயாரிக்கிறாராம்.

சமுத்திரகனியின் உதவியாளர் சாய் சங்கர் இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘குமாரு வேலைக்கு போறான்’ என தலைப்பிட்டுள்ளனர்.

தனுஷ் படத்தில் பாட்ஷா ஸ்டைலில் அசத்தும் சாய்பல்லவி

தனுஷ் படத்தில் பாட்ஷா ஸ்டைலில் அசத்தும் சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress sai pallaviபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் `மாரி-2′

இப்படத்தில் சாய்பல்லவி நாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் கிருஷ்ணா, வரலட்சுமி, டோவினோ தாமஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடிக்கிறாராம்.

அதற்காக சில நாட்கள் ஆட்டோ ஓட்டி சிறப்பு பயிற்சியும் எடுத்து இருக்கிறார் சாய்பல்லவி.

ஜூலை மாதத்திற்குள் சூட்டிங்கை முடித்து நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஆட்டோ டிரைவர் என்றாலே ரஜினியின் பாட்ஷா படம்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இனி சாய் பல்லவியும் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகையர் திலகம் படத்தை எதிர்க்கும் ஜெமினிகணேசனின் முதல் மனைவி குடும்பத்தார்

நடிகையர் திலகம் படத்தை எதிர்க்கும் ஜெமினிகணேசனின் முதல் மனைவி குடும்பத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nadigaiyar thilagam posterநடிகை சாவித்ரியின் வாழ்க்கை படமான ‘நடிகையர் திலகம்’ என்ற படம் அண்மையில் வெளியானது.

இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ்ம், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்திருந்தனர்.

இப்படத்தில் சாவித்ரிக்கு ஜெமினி கணேசன் திடீர் தாலி கட்டுவது, சாவித்ரிக்கு அதிக படங்கள் குவிந்ததால் ஜெமினி கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு குடிக்க தொடங்குவது உள்ளிட்ட காட்சிகள் உள்ளன.

மேலும் சாவித்ரியையும் மது குடிக்கும்படி தூண்டி அவரையும் குடிகாரர் ஆக்குவது போன்றும் கிட்டதட்ட ஜெமினியை வில்ல்ன் போல சித்தரித்து இருந்தனர்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இப்படம் பெற்றாலும் ஜெமினி கணேசனின் குடும்பத்தாரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

அவர் கூறும்போது, “சாவித்ரிக்கு அப்பாதான் மது குடிக்க கற்றுக்கொடுத்தார் என்று படத்தில் காட்சி வைத்து இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டேன்.

அவரால் எந்த பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தன்னை விரும்பிய பெண்களைத்தான் திருமணம் செய்துகொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த எதிர்ப்பு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

More Articles
Follows