ஜிவி. பிரகாஷ் பட இயக்குனருடன் இணையும் அதர்வா

ஜிவி. பிரகாஷ் பட இயக்குனருடன் இணையும் அதர்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atharvaa stillகடந்த 2015ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான ஈட்டி படத்தை குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பாக மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார்.

தற்போது இதே நிறுவனம் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடித்து வரும் AAA படம் மற்றும் ஜீவா, நிக்கி கல்ராணி நடித்து வரும் கீ படத்தையும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் மீண்டும் அதர்வா நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளது.

இப்படத்தை ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங், எனக்கு இன்னொரு பேரு இருக்கு ஆகிய இரண்டு படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கவிருக்கிறாராம்.

இதன் சூட்டிங் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கவுள்ளது.

Atharvaas next with Director Sam Anton

sam anton‏ @samanton21

Happy to b associated with @Atharvaamurali brother and @MLAmichael sir for an Action thriller.. glory to god ..

???????????????????????????????????????????????????????????????

பிரியா ஆனந்துடன் காதல்…? என்ன சொல்கிறார் கௌதம் கார்த்திக்.?

பிரியா ஆனந்துடன் காதல்…? என்ன சொல்கிறார் கௌதம் கார்த்திக்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Karthik stillsமணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானார் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்.

இதனை தொடர்ந்து வை ராஜா வை மற்றும் முத்துராமலிங்கம் படங்களில் பிரியா ஆனந்துடன் ஜோடியாக நடித்தார்.

எனவே பிரியா ஆனந்துடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் ரங்கூன் படத்தின் வெற்றி தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் கௌதம் கார்த்திக்.

அப்போது அவர் பேசியதாவது…

நான் சிப்பாய் , இவன் தந்திரன் , ஹரஹர மகா தேவகி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன்.

இப்போது “ நல்ல நாள் பார்த்து சொல்றேன் “ என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறேன்.

அப்பா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ அக்னி நட்சத்திரம் “ ஒரு தரம்வாய்ந்த படைப்பாகும். நிச்சயம் அப்படத்தின் ரீமேக்கில் நான் நடிக்க மாட்டேன்.

எனக்கு நடிப்பின் மேல் மிகப்பெரிய ஆசையை தூண்டிய திரைப்படம் கடல். ரங்கூன் என்னுடைய முதல் வெற்றி படமாகும். நல்ல கதையும், நல்ல இயக்குனரும் அமையும் பட்சத்தில் என்னுடைய கேரியர் இன்னும் சிறப்பாக அமையும்.

எப்போதெல்லாம் நான் சோர்வாக உள்ளேனோ அப்போதெல்லாம் எனக்கு சக்தி கொடுப்பவர் என்னுடைய அம்மா தான்.

 தற்போது அப்பா , மற்றும் தாத்தா நடித்த படங்களை பார்த்து வருகிறேன். என்னை பொறத்தவரை அப்பா மிகப்பெரிய லெஜன்ட்.

அவர் நடித்ததில் எனக்கு கோகுலத்தில் ஒரு சீதை திரைப்படத்தில் வரும் “ கிரெடிட் கார்ட் “ கொடுக்கும் காட்சி மிகவும் பிடிக்கும்.

சினிமாவில் அப்பாவுக்கு மிகச்சிறந்த ஜோடி என்றால் நக்மா மேடம் மற்றும் ரேவதி மேடம் என்று சொல்லுவேன்.

அப்போது ப்ரியா ஆனந்த் காதல் குறித்து கேட்கப்பட்டது.

கடல் படத்தில் நடிப்பதற்கு முன்பே ப்ரியா ஆனந்தை நன்றாக தெரியும். அவருடன் தற்போது வரை உள்ளது நட்பு மட்டுமே.

நாளை என்ன நடப்பது என்பது தெரியாது. ஆனால் என் திருமணம் நிச்சயம் காதல் திருமணம்தான். 30 வயதுக்கு மேல் திருமணம் செய்வேன்.

அது நடிகையாக இருக்கலாம். அல்லது வேறு ஒரு துறை சார்ந்த பெண்ணாக கூட இருக்கலாம்” என்றார்.

Gautham Karthik clarifies his love rumour with Priya Anand

இந்தியில் மட்டும் ரூ. 200 கோடியை அள்ளிய 2.0 படம்

இந்தியில் மட்டும் ரூ. 200 கோடியை அள்ளிய 2.0 படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 movie bagged nearly 200Crs from Hindi versionஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள படம் 2.0

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ரூ. 400 கோடியில் தயாரித்துள்ளது லைக்கா நிறுவனம்.

இப்படத்திற்காக இரண்டு பாடல்களை மட்டுமே ஏஆர். ரஹ்மான் கம்போஸ் செய்துள்ளதாகவும், படத்தின் நீளத்தை குறைக்க ஒரு பாடலை மட்டும் ஷங்கர் பயன்படுத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் தெலுங்கு வெளியீட்டு உரிமை மட்டும் ரூ. 65 கோடியை எட்டியுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இதன் இந்தி தியேட்டர் உரிமை மட்டும் ரூ. 85 கோடிக்கும், இந்தி சாட்டிலைட் உரிமை மட்டும் ரூ 120 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆக மொத்தம் ஹிந்தி உரிமை மட்டும் ரூ. 200 கோடியை தாண்டிவிட்டதாம்.

2point0 movie bagged nearly 200Crs from Hindi version

ராஜமௌலியின் அடுத்த லக்கி ஹீரோ இவர்தான்

ராஜமௌலியின் அடுத்த லக்கி ஹீரோ இவர்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

junior ntr with rajamouliஉலகளவில் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்த படம் பாகுபலி2.

எனவே இதன் இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் நடிக்க பல ஹீரோக்களும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் ராஜமௌலி.

இப்படத்தையும் வழக்கம் போல தமிழ், தெலுங்கு, இந்தியில் இயக்க உள்ளாராம்.

ஆனால் இதில் ஒரு சதவிகிதம் கூட கிராபிக்ஸை பயன்படுத்த கூடாது என முடிவு எடுத்துள்ளார்.

அதெல்லாம் சரிதான். ஹீரோ யார் என்கிறீர்களா?

ஜூனியர் என்.டி.ஆர்தான் ராஜமவுலியின் அடுத்த ஹீரோ.

தற்போது திரைக்கதையின் இறுதிவடிவத்தை ரோமானியாவில் இருந்து எழுதி வருகிறாராம் இந்த பாகுபலி இயக்குனர்.

Baahubali fame Rajamoulis will direct Junior NTR is his next movie

காலாவால் 2.0 படத்திற்கு ஆபத்து.? தனுஷ்-ரஞ்சித்திடம் ஷங்கர் கோரிக்கை

காலாவால் 2.0 படத்திற்கு ஆபத்து.? தனுஷ்-ரஞ்சித்திடம் ஷங்கர் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kaala ranjith30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒரு வருடத்திற்கு அரை டஜன் படங்களில் வரை ரஜினி நடித்துக் கொண்டிருப்பார்.

அந்த எண்ணிக்கையை படிப்படியாக குறைத்துக் கொண்டு வருடத்திற்கு ஒன்று. இரண்டு வருடத்திற்கு ஒன்று என நடித்தார்.

ஆனால் 2.0 படத்தில் நடிக்கும் போதே கபாலி படத்திலும், அதன்பின்னர் காலா படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டார்.

2.0 படத்தை அடுத்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியில் வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் தற்போது காலா படத்தின் செய்திகள் மற்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனால் 2.0 படத்தின் புரமோசன் பாதிக்கப்படும் என கருதிய 2.ஓ பட இயக்குநர் ஷங்கர், காலா படத்தின் விளம்பரங்களை குறைத்துக் கொள்ள கூறினாராம்.

இது தொடர்பாக காலா பட தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் இயக்குனர் ரஞ்சித்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Director Shankar request Kaala team to stop their Promotions

‘சிறந்த தந்தையும்-விமர்சகரும் அவரே…’ கமல் பற்றி ஸ்ருதி

‘சிறந்த தந்தையும்-விமர்சகரும் அவரே…’ கமல் பற்றி ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and shrutiநடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் ‘பெஹன் ஹோகி தேரி’.

இந்த படத்தின் சிறப்பு காட்சியை தன்னுடைய தந்தைக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதி.

படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன்,‘ இந்த படத்தை என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

படத்தைப் பார்த்த பின்னர் படத்தைப் பற்றி என்னிடம் நிறைய பேசினார் அப்பா. அவர் எனக்கு தந்தை மட்டுமல்ல, சிறந்த விமர்சகரும் கூட.

அவருடைய அறிவுரை எனக்கு திரையுலகிலும், சொந்த வாழ்க்கையிலும் பேருதவியாக இருக்கும். படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டியது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது’ என்றார்.

More Articles
Follows