ஜி.வி. பிரகாஷுக்கு வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்..!

ஜி.வி. பிரகாஷுக்கு வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush's 'Amma Kanakku' postponed to June 24அடுத்த வாரம் ஜூன் 17ஆம் தேதி மூன்று முக்கிய படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டன.

  • தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்துள்ள அம்மா கணக்கு.
  • சுந்தர் சி தயாரித்து பூனம் பஜ்வாவுடன் நடித்துள்ள முத்தின கத்திரிக்கா
  • லைகா தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’

இவை மூன்றும் வெவ்வேறு விதமான கதைக்களத்தை கொண்ட படங்கள் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தன.

ஆனால் இந்த ரேஸில் இருந்து தற்போது தனுஷ் விலகிவிட்டாராம்.

அம்மா கணக்கு படத்தை ஜூன் 24ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அட… கீர்த்தி சுரேஷ் கைவசம் இப்படி ஒரு தொழில் இருக்கே…!

அட… கீர்த்தி சுரேஷ் கைவசம் இப்படி ஒரு தொழில் இருக்கே…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh Designs her Dress Ownமார்க்கெட் இருக்கும்போதே நடிகைகள் மற்ற துறைகளிலும் கவனம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதற்கு காரணம், சினிமா மார்கெட்டை இழந்துவிட்டால் மற்ற துறையாவது கைகொடுக்குமே என்பதுதான்.

பல நடிகைகள், ரியல் எஸ்டேட், நட்சத்திர ஹோட்டல் போன்றவற்றில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதுப்போல் சிலர் பேஷன் டிசைன் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தொடரி படத்தின் பாடல்கள் வெளியீட்டின் போது கீர்த்தி சுரேஷ் அழகான வெள்ளை நிறை ஆடை உடுத்தி தேவதை போல காட்சியளித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் கீர்த்தி கூறியுள்ளதாவது…

“நானே இந்த ஆடையை டிசைன் மற்றும் ஸ்டைலிங் செய்துள்ளேன். எனக்கு மிகவும் சந்தோஷமாகவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அட… கீர்த்திக்கு பேஷன் டிசைனிங்கும் கைகொடுக்கும் போலவே…

தல கொடுக்காததை முருகதாசுக்கு கேப்டன்தான் கொடுத்தாராம்..!

தல கொடுக்காததை முருகதாசுக்கு கேப்டன்தான் கொடுத்தாராம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Murugadoss About Dheenaஅஜித்தை இன்று அனைவரும் தல என்று அழைப்பதற்கு காரணமாக அமைந்தவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.

இவரின் இயக்கத்தில் உருவான தீனா இருவருக்கும் நிறைய வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

எனவே, இவர்கள் இருவரும் மீண்டும் இணையமாட்டார்களா? என திரையுலகம் எதிர்பார்த்து வருகின்றது.

இந்நிலையில், தீனா பற்றி முருகதாஸ் மனம் திறந்து ஒன்றை தெரிவித்துள்ளர்.

‘தீனா படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. ஆனால் அதில் அஜித்துக்கு கிடைத்த பெயர் கூட எனக்கு கிடைக்கவில்லை.

அதன்பின்னர் விஜயகாந்த்தை வைத்து இயக்கிய ரமணா தான் எனக்கு பெரும் பேரை பெற்றுக் கொடுத்தது.

என் பெயரும் ரசிகப்பெருமக்களுக்கு நன்றாக தெரிந்தது’ என தெரிவித்துள்ளார்.

ஜூன் 23-ஜூலை 1 வரை… சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

ஜூன் 23-ஜூலை 1 வரை… சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan’s Next to be Revealed at SIIMA 2016பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ரெமோ.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை 24AM Studios சார்பாக ஆர் டி ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் தீம் மியூசிக்கை ஜூன் 23ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இதனையடுத்து, ஜூலை 1ஆம் தேதி செஞ்சிட்டாளே என்ற சிங்கிள் ட்ராக்கை வெளியிடவிருக்கிறார்களாம்.

ஜூலை 1 சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சைமா (SIIMA) அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் இதை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை முன்னிட்டு ஒரு வார கொண்டாட்டத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர்.

வேந்தர் மூவிஸ் மதன்… போலீஸ் சுற்றி வளைத்தும் எஸ்கேப்..!

வேந்தர் மூவிஸ் மதன்… போலீஸ் சுற்றி வளைத்தும் எஸ்கேப்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madhan spotted at Varanasi Airport, escapes police netஇரண்டு வாரங்களுக்கு முன்பு, தான் கங்கையில் சமாதி ஆக போகிறேன் என கூறி மாயமானவர் வேந்தர் மூவிஸ் மதன்.

இந்த விவகாரத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஆர்எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் கூறியிருந்தார்.

இதனையடுத்து, மதன் தாயார் மற்றும் மதனின் இரு மனைவிகளும் சரமாரியாக புகார்களைக் கூறி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் வாரணாசியில் (காசி) பகுதியில் மதனை தேடி வந்தனர்.

அப்போது உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பாபத்பூர் விமான நிலையத்திற்கு மதன் வரவிருப்பதை அறிந்த போலீசார் விமான நிலையத்தை சுற்றி வளைத்தனர்.

இதனையறிந்த மதன் விமான நிலையத்தின் வேறு வாயில் வழியாக தப்பிச்சென்று விட்டாராம்.

மாயமான மதனை பிடித்துவிட்டால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

காணாமல் போன ‘கான்’… மீண்டும் இணையும் சிம்பு-செல்வராகவன்..!

காணாமல் போன ‘கான்’… மீண்டும் இணையும் சிம்பு-செல்வராகவன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Selvaraghavan and STR to Resume Kaan Soonசிம்பு என்றாலே அது வம்பாய் முடியும் என்பது போல சர்ச்சைகள் எப்பொழுதும் இருந்துக் கொண்டாய் இருக்கின்றன.

அவர் நடித்து முடித்த படங்கள் என்றாலும், நடித்து வரும் படங்கள் என்றாலும் அது பிரச்சினையாகவே முடிகின்றன.

இதனிடையில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படம் சிம்புவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

எனவே நிறுத்தி வைக்கப்பட்ட கான் படத்தை முடித்துக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சிம்பு.

செல்வராகவன் தற்போது கௌதம் மேனன் தயாரிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் எஸ். ஜே. சூர்யா, ரெஜினி, நந்திதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

எனவே ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை முடித்துவிட்டு மறக்காமல் கான் படத்தை இருவரும் கையில் எடுப்பார்கள் என கூறப்படுகிறது.

More Articles
Follows