தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.
அதன் பிறகு, தற்போது ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
‘லால் சலாம்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறி படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மும்பைக்கு சென்றார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சந்தித்துள்ளார்.
‘லால் சலாம்’ படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வருவதும் இதில் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினி நடித்து வருவதும் நாம் அறிந்த ஒன்றுதான்.
எனவே இந்த படத்தில் கபில்தேவ் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், 1983-ல் உலக கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர் கபில்தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.
Legendary Cricketer Kapil Dev joining Rajinikanth’s Lal salaam