பாகுபலி கதாசிரியர் கைவண்ணத்தில் ‘முதல்வன் 2’!

பாகுபலி கதாசிரியர் கைவண்ணத்தில் ‘முதல்வன் 2’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KV Vijayendra Prasad to write for Mudhalvan sequel in Hindi, Nayak 2தமிழ் சினிமாவிலும் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்திய படம் முதல்வன்.

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், ரகுவரன் நடித்த இப்படம் கடந்த 1999ம் ஆண்டு வெளியானது.

இந்த வெற்றியை தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் அனில் கபூர் நடிக்க ‘நாயக்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது ‘நாயக் 2’ பாகத்திற்கான கதையை ராஜேந்திர பிரசாத் எழுதி வருகிறாராம்.

இவர் பிரபல இயக்குனர் ராஜமௌலியின் தந்தை என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர்தான் ’நான் ஈ’, ’மகதீரா’, ’பாகுபலி’, ’பஜ்ரங்கி பைஜான்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்ளின் கதாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ரீமேக் உரிமையை ஏ.எம்.ரத்னத்திடம் இருந்து பெற்று இருக்கிறாராம் தீபக் முகுட்.

விஜய் பிறந்தநாள்: ‘வெற்றி’ கிடைக்காத அதிருப்தியில் ரசிகர்கள்..!

விஜய் பிறந்தநாள்: ‘வெற்றி’ கிடைக்காத அதிருப்தியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaththi In Rakki Cinemas Tomorrow 9Am !!நாளை நடிகர் விஜய் தனது 42வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.

எனவே அவரது ரசிகர்கள் கொடி, போஸ்டர், பேனர் என தங்கள் உற்சாக கொண்டாட்டங்களை முன்பே ஆரம்பித்து விட்டனர்.

மேலும் இரத்ததானம், அன்னதானம், கல்வி சார்ந்த உதவிகள் உள்ளிட்ட நற்பணிகளையும் செய்யவிருக்கின்றனர்.

இந்நிலையில் இவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் தமிழகத்தில் பல திரையரங்குகளில் விஜய்யின் ஹிட்டடித்த படங்களை திரையிட உள்ளனர்.

சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி தியேட்டரில் நாளை காலை 9 மணிக்கு கத்தி படம் ஸ்பெஷல் காட்சி நடைபெறுகிறது.

ஆனால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னையிலுள்ள வெற்றி திரையரங்கில் திரையிட முடியாத சூழ்நிலை என கூறிவிட்டார்களாம்.

எனவே அந்தப் பகுதி விஜய் ரசிகர்கள் வருத்தத்துடன் இருக்கிறார்கள்.

‘கபாலி’ தம்பியாக உருவெடுத்த விவேக்…!

‘கபாலி’ தம்பியாக உருவெடுத்த விவேக்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivek Ready to watch Kabali on FDFSகபாலி டீசர் மற்றும் பாடல்கள் பட்டைய கிளப்பி வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி அனைவரும் காத்திருக்கின்றனர்.

இப்படம் விரைவில் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளது.

இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களை மட்டுமல்ல திரையுலக நட்சத்திரங்களையும் விட்டு வைக்கவில்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

நானும் வந்துட்டேன்னு சொல்லு.. தலைவர் படம் முதல் நாள் முதல் காட்சி (FDFS) பாக்க ரெடியா இருக்கேன்னு சொல்லு! கபாலி தம்பிடா!

என ரஜினி மகள் ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துள்ளார் விவேக்.

லிங்கா பிறந்த நாளை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்..!

லிங்கா பிறந்த நாளை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Fans Celebrate LingaDhanush Birthdayலிங்கா என்றாலே நம் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த் நடித்த படம்தான்.

ஆனால் தனுஷ் ரசிகர்களுக்கோ மற்றொரு லிங்காவும் ஞாபகத்திற்கு வருகிறாராம்.

அவர் வேறு யாருமல்ல. தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் ஆவார்.

இன்று லிங்கா ராஜா தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே தனுஷ் ரசிகர்களும் இவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

லிங்கா, ரஜினியின் மூத்த பேரன் என்பதால் ரஜினி ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கார்த்தி-நயன்தாரா-ஸ்ரீதிவ்யா தரும் தீபாவளி விருந்து..!

கார்த்தி-நயன்தாரா-ஸ்ரீதிவ்யா தரும் தீபாவளி விருந்து..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kashmora Movie Release Scheduled For Diwaliதோழா படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகி வரும் காஷ்மோரா.

இதில் கார்த்தியுடன் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக், மனீஷா யாதவ், சித்தார்த் விபின், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கோகுல் இயக்கிவந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.

எனவே, இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிட இருக்கின்றனர்.

இப்படத்தை 2016 தீபாவளிக்கு வெளியிட திட்டமிள்ளதாகவும் கூறப்படுகிறது.

குஷி 2 படத்தை இயக்க எஸ் ஜே சூர்யா மறுப்பு..!

குஷி 2 படத்தை இயக்க எஸ் ஜே சூர்யா மறுப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SJSurya drops out of Directing PawanKalyan Filmஅஜித் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ் ஜே சூர்யா.

இதனைத் தொடர்ந்து அவரே நாயகனாகவும் படங்களில் நடித்து வந்தார்.

அண்மையில் வெளியான இறைவி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.

எனவே இனி நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தலாம் என முடிவு செய்துள்ளாராம்.

இதன் விளைவாக, பவன்கல்யாண் நடிக்கவிருந்த குஷி 2 படத்தை இயக்க முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பவன்கல்யானுடன் பேசி, குஷி 2 படத்தின் இயக்கத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இப்படத்தை டோலி இயக்கவுள்ளதாகவும் தயாரிப்பாளர் சரத் மர்ரார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

More Articles
Follows