ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியின் காதலை சொல்லும் ‘போகாதே…’

ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியின் காதலை சொல்லும் ‘போகாதே…’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அனிமல்’ படத்திலிருந்து வெளியான ‘நீ வாடி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தமிழ் ரசிகர்கள் கொண்டாட மீண்டும் ஒரு அருமையான பாடல் தற்போது அனிமல் படத்திலிருந்து வெளியாகியுள்ளது.

இந்த ‘போகாதே…’ பாடல் திருமணத்திற்கு பிறகான உறவின் சிக்கல்களை அழுத்தமாகப் பிரதிபலிக்கிறது.

பாடகர் கார்த்திக் குரலில் வெளிவந்திருக்கும் ‘போகாதே’ பாடல், அனிமல் படத்தில் நடித்திருக்கும் அட்டகாசமான ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியின் காதலை, அதன் வலியை, சிக்கல்களை ஆழமாக வெளிப்படுத்துகிறது.

ஸ்ரேயாஸ் பூரணிக் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள ‘போகாதே’, காதலின் சிக்கலான அம்சங்களை அழகாக வெளிப்படுத்துகிறது.

அனிமல்

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘அனிமல்’ ஒரு க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ளது.

பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து அனிமல் படத்தைத் தயாரிக்கின்றன.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் அனிமல் திரைப்படம் 1 டிசம்பர் 2023 அன்று வெளியாகிறது.

Animals hard hitting Tamil track Pogaadhe is out now

INDIAN 2 UPDATE – Received copy சேனாபதி..; அறிவிப்பு வெளியிட்ட படக்குழு

INDIAN 2 UPDATE – Received copy சேனாபதி..; அறிவிப்பு வெளியிட்ட படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1996 இல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த ‘இந்தியன்’ படம் வெளியானது.

தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன் 2’ படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்திலும் ஷங்கர் மற்றும் கமல் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

லைகா தயாரிக்க அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தில் கமலுடன் சித்தார்த், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மேலும் விவேக், நெடுமுடி வேணு, மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆனால் கடந்த சில வருடங்களில் இந்த மூவரும் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில ‘இந்தியன் 2’ படத்தின் புதிய அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

அந்த போஸ்டரில் ‘Received copy சேனாபதி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியன் 2

Kamal starrer Indian 2 movie updates

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா & தம்பி ராமையா மகன் உமாபதி திருமண நிச்சயதார்த்தம்

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா & தம்பி ராமையா மகன் உமாபதி திருமண நிச்சயதார்த்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆக்ஷன் என்றால் பல நடிகர்களை நம் நினைவிற்கு கொண்டுவரும். ஆனால் ஆக்ஷன் கிங் என்று சொன்னால் அது நடிகர் அர்ஜுனை மட்டுமே நினைவுப்படுத்தும்.

நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நாயகன் அர்ஜுன் தற்போது முன்னணி நடிகரின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

அஜித்தின் ‘மங்காத்தா’, விஷாலின் ‘இரும்புத்திரை’, மற்றும் விஜய் ‘லியோ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் அர்ஜுன்.

இவரது மகள் ஐஸ்வர்யாவும் தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா.

இந்த நிலையில் பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதியை ஐஸ்வர்யா காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க தற்போது உமாபதி மற்றும் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ராஜகிளி’ என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா-உமாபதி

Arjun daughter Aishwarya and Thambi Ramaiya son Umapathi got engaged

சென்னையில் ‘ஜப்பான்’ இசை விழா.; 24 படங்களின் கலைஞர்களை அழைத்த கார்த்தி

சென்னையில் ‘ஜப்பான்’ இசை விழா.; 24 படங்களின் கலைஞர்களை அழைத்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமீர் இயக்கிய ‘பருத்திவீரன்’ படத்தில் அறிமுகமானார் நடிகர் கார்த்தி. இவரது முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் முதல் படத்திலேயே அசத்தலான சிறந்த நடிப்பை கொடுத்திருந்தார் கார்த்தி.

அதன்பின்னர் பல படங்களில் பல வேடங்களை ஏற்று இன்று முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. தற்போது இவரது நடிப்பில் 25வது படமாக உருவாகி உள்ளது ‘ஜப்பான்’ படம்.

ராஜூமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. அனு இமானுவேல் நாயகியாக நடிக்க இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை அக்டோபர் 28ஆம் தேதி மாலை 6 மணி அளவில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமான தன்னுடைய முந்தைய 24 படங்களில் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை அழைத்து கௌரவிக்க இருக்கிறாராம் நடிகர் கார்த்தி.

ஜப்பான்

Karthi starrer Japan audio launch in grand level

ஸ்டாலின் – திருமாவளவன் வரிசையில் நடிகரான அரசியல்வாதி முத்தரசன்

ஸ்டாலின் – திருமாவளவன் வரிசையில் நடிகரான அரசியல்வாதி முத்தரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் எப்போதுமே அரசியலுக்கும் சினிமாவுக்கும் தொடர்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

சினிமாவில் ஜொலித்த பல நட்சத்திரங்கள் அரசியலில் நுழைந்து சாதனை செய்திருக்கின்றனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களும் அரசியல் களத்தில் ஜொலித்தனர். அதுபோல அரசியலில் பிரபலமான சிலர் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வந்துள்ளனர்.

தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நாயகனாக நடித்தவர் தான். அதுபோல விடுதலைச் சிறுத்தை கட்சி திருமாவளவன் சினிமாவில் நடித்துள்ளார்.

இந்த வரிசையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசனும் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

விஜயகுமார் என்பவர் இயக்கத்தில் உருவாகும் ‘அரிசி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Politician Mutharasan debut movie Arisi

OFFICIAL இந்தியர்களுக்கான திருநாளில் விக்ரமின் ‘தங்கலான்’ படம் ரிலீஸாகிறது

OFFICIAL இந்தியர்களுக்கான திருநாளில் விக்ரமின் ‘தங்கலான்’ படம் ரிலீஸாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கு ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார் பா ரஞ்சித்.

நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க முக்கிய வேடத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.

ஸ்டூடியோ கீரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படம் கேஜிஎஃப் பாணியில் கோலார் தங்கவயல் பற்றிய கதைக்களம் ஆகும்.

‘தங்கலான்’ பட டீசர் நவம்பர் 1ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளார் நடிகர் விக்ரம். அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 26 குடியரசு தினத்தில் படம் வெளியாகும் என அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Thangalaan release date 26th January 2024

More Articles
Follows