KGF பாணியில் உருவாகும் விக்ரம் – ரஞ்சித் இணையும் படம்.; கமல் படம் எப்போது.?

KGF பாணியில் உருவாகும் விக்ரம் – ரஞ்சித் இணையும் படம்.; கமல் படம் எப்போது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘காலா’ & ‘சார்பட்டா பரம்பரை’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

காளிதாஸ், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஜூலை / ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

இந்த படத்தைத் தொடர்ந்து முன்னணி நடிகரான விக்ரமை வைத்து ‘சீயான் 61’ படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தை ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷஷன் மற்றும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. (முன்பு ஞானவேல் மட்டுமே தயாரிப்பதாக இருந்தது)

இந்த படங்களை அடுத்து ‘வேட்டுவம்’ ‘பிர்சா முண்டா’ உள்ளிட்ட படங்களை இயக்கவுள்ளார் ரஞ்சித்

இதன் பின்னர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை இயக்குவார் ரஞ்சித்.

2025-க்குள் இயக்க ஒப்புக் கொண்ட இந்த படங்களை முடித்துவிடுவார் ரஞ்சித் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சீயான் 61 படம் கோலார் தங்க வயலை (KGF) மையமாக கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

19-ஆம் நூற்றாண்டில் முதன்முறையாக தங்கத்தை தோண்டி எடுக்கும் சுரங்கத் தொழிலாளர்களை வாழ்க்கை பற்றிய கதைக்களம் இது எனவும் தெரிகிறது.

KGF style movie for Vikram-Ranjith new film; When is the Kamal movie?

குறை சொல்றவங்க சொல்லிட்டே இருப்பாங்க..; அஜித் பெயரில் அவரது மேனேஜர் கருத்து

குறை சொல்றவங்க சொல்லிட்டே இருப்பாங்க..; அஜித் பெயரில் அவரது மேனேஜர் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித்குமாரின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா.

அஜித் தொடர்பான செய்திகளையோ அறிக்கைகளையோ இவர்தான் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார்.

இந்த நிலையில், தற்போது அஜித்தின் பெயரில் சுரேஷ் சந்திரா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகிறது.

அந்த படத்தில்… ஒரு கழுதையுடன் சில மூட்டைகளை தங்கள் கைகளில் சுமந்து ஒரு தம்பதி செல்கின்றனர்.

சிலர் அந்த தம்பதியை கழுதை மேலே ஏற சொல்கின்றனர்.

சிலர் கழுதை பாவம் இறங்கி நடக்க சொல்கின்றனர். அதன் பின்னர் சிலர் அந்த தம்பதியை கழுதை மேலே ஏற சொல்கின்றனர்..

அதாவது ‘நாம் எதை செய்தாலும், அதை விமர்சிப்பவர்கள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். அதனால் அவர்களைப் பற்றி கவலைப்படாமல் நம் விருப்பத்துக்கு ஏற்ப வாழவேண்டும்’ என்ற நீதியை உணர்த்துகிறது அந்த புகைப்படம்.

இதற்கு கேப்ஷனாக, ‘இந்த குட்டி கதை, யாருக்கு தேவைப்படுகிறதோ, அவர்களுக்காக.. அன்புடன் அஜித்’ என பதிவிட்டுள்ளார்.

Comment on social media by his manager on Ajith’s name

ஜெயலலிதா வேடத்தை தொடர்ந்து இந்திரா காந்தி வேடமேற்கும் கங்கனா.; எல்லாம் இவரே.!

ஜெயலலிதா வேடத்தை தொடர்ந்து இந்திரா காந்தி வேடமேற்கும் கங்கனா.; எல்லாம் இவரே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் இயக்கிய ‘தலைவி’ படத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருந்தார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.

இந்த படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இவர் நடித்து அண்மையில் வெளியான ‘தாகத்’ படம் கடந்த மே 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மோசமான விமர்சனங்களை சந்தித்தார்.

அர்ஜுன் ராம்பால் நடித்த இப்படத்தை ரஜ்னீஷ் கய் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்கவிருக்கிறாராம் நடிகை கங்கனா.

‘எமர்ஜென்சி’ என்று பெயலிடப்பட்ட இந்த படத்தை கங்கனாவே தயாரித்து இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது இந்திரா காந்தியின் ‘பயோபிக்’ படமாக இல்லாமல் இந்திரா காலத்தில் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம்.

Kangana Ranaut to play Indira Gandhi following Jayalalithaa

புல்லட் வேகத்தில் சீறி வரும் லிங்குசாமியின் ‘தி வாரியர்’

புல்லட் வேகத்தில் சீறி வரும் லிங்குசாமியின் ‘தி வாரியர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வந்த ‘தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இப்படத்தில் சிம்பு குரலில் இடம்பெற்றுள்ள “புல்லட்” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் மிகப்பெரிய சாதனை படைத்த நிலையில், படத்தின் டீஸரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

லிங்குசாமி – தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணியில் இணைந்த சிம்பு

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த இறுதிக் கட்ட படப்பிடிப்பில், இயக்குநர் என்.லிங்குசாமி நடிகர் ராம் பொதினேனி திரையில் அறிமுகமாகும் மாஸ் காட்சி ஒன்றை படம்பிடித்துள்ளார்.

ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் ’தி வாரியர்’ படத்தை பார்க்கக் காத்திருக்கும் பார்வையாளர்களுக்கு, இந்த பேக் டு பேக் அப்டேட்கள் பெரும் விருந்தாக அமைந்துள்ளது.

இந்த படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக பல விளம்பர நிகழ்வுகளை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஆதி பினிசெட்டி இதுவரை திரையில் கண்டிராத வகையில் வலுவான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் லிங்குசாமி தனது அசத்தலான மாஸ், கமர்ஷியல் படங்களுக்காக பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிங்குசாமி-யின் ‘தி வாரியர்’ படத்தில் இணைந்தது ஆதித்யா மியூசிக்

மேலும் ராம் மற்றும் ஆதி இருவரும் சிறந்த நடிப்பை வழங்குவதில் வல்லவர்கள்.

இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உடன் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சிட்தூரி தயாரிக்க, பவன்குமார் வழங்கும் ‘தி வாரியர்’ வரும் ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Lingusamy’s ‘The Warrior’ rages at bullet speed

13 படத்திற்காக மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ் & கௌதம் மேனன்

13 படத்திற்காக மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ் & கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர்.

இந்த வெற்றி கூட்டணி இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர் S நந்த கோபால், Madras Studios நிறுவனம் சார்பில், Anshu Prabhakar Films உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக, உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் K விவேக் இயக்குகிறார்.

நடிகர்கள் குழுவில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா, ஆதித்யா கதிர் உடன் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

சித்து குமார் இசையமைக்க, CM மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். JF காஸ்ட்ரோ எடிட்டராகவும், PS ராபர்ட் கலை இயக்குனராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறரகள்.

தொழில் நுட்பக் குழுவில்…

ஆடை வடிவமைப்பாளர்- ஹினா (கொலைகாரன், பாக்ஸர், முன்னறிவாளன், கோட்டேஷன் கேங் புகழ்), ஸ்டண்ட் மாஸ்டர் – ரக்கர் ராம் (மரகத நாணயம், சிக்சர், ஓ மை கடவுளே, பிசாசு 2, சட்டம் என் கயில், பீட்சா 3), நடன இயக்குனர் – சந்தோஷ் (மேயாத மான், நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், நட்பே துணை, சிறை) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

GV Prakash & Gautam Menon reunite for Tamil movie 13

ஹரி பேட்டர்னில் இருந்து மாறி எடுத்த படம் ‘யானை’.; ஆனந்தத்தில் அருண் விஜய்

ஹரி பேட்டர்னில் இருந்து மாறி எடுத்த படம் ‘யானை’.; ஆனந்தத்தில் அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரை உலகில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வினில்…

இயக்குனர் ஹரி பேசியதாவது….

நானும், அருண்விஜய் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்த கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது.

இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் அவர்கள்தான். இந்த படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை.

கடந்த 3 வருடங்கள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. படத்தை கொஞ்சம் வேற மாதிரி எடுக்க விரும்பினேன். பல மொழி இயக்குநர்களிடம் பல விஷயத்தை கற்றுகொண்டேன், பின்னர் இந்த படத்தை இயக்கியுள்ளேன். சேவல் படத்திற்கு பிறகு ஜிவியுடன் பணி புரிந்துள்ளேன்.

தன் படத்திலிருந்து விலகிய சூர்யாவை எதிர்க்க அருண் விஜய்யை மோதவிடும் ஹரி.?

படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். படத்தில் நிறைய ரிஸ்க்கான காட்சிகள் இருந்தது. எல்லோரும் இணைந்து ஒத்துழைத்து பணியாற்ற வேண்டிய காட்சிகள் இருந்தது, அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். நான் தாமிரபரணி, ஐயா படம் எடுத்த போது பின்பற்றிய வழிமுறைகளை பின்பற்றி இப்படம் எடுத்துள்ளேன்.

சமுத்திரகனி சார் ஒரு உதவி இயக்குனர் போல் வேலை பார்த்தார். அது எனக்கு மிக உதவியாக இருந்தது. எனது ஆரம்பகால கட்ட படங்கள் போல் இப்படம் இருக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் அருண் விஜய் பேசியதாவது….

நானும், இயக்குனர் ஹரியும் ரொம்ப நாளாக பணியாற்ற விரும்பினோம். இவ்வளவு பெரிய பொருட்செலவில், பலமான தொழில்நுட்ப கலைஞர்களுடன் படத்தை உருவாக்க பெரிய தயாரிப்பாளர் தேவைப்பட்டார்.

அப்போது நாங்கள் அணுகிய நபர் சக்தி சார். அவருக்கு நன்றி. இந்த படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். சுற்றியுள்ளவரை பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான், எனது கதாபாத்திரம். இந்த படத்தில் நிறைய சவால்கள் இருந்தது.

ரொம்ப நாள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். ஹரி சார் எனக்கு பெரிய உதவியாக இருந்தார். படத்தின் ஆக்‌சன் பெரிய சவாலாக இருந்தது. எனக்கு அடிபட்டது, அதையும் மீறி படத்தை எடுத்து முடித்தோம். கண்டிப்பாக படம் பேசப்படும் என நம்புகிறோம்.

இது ஹரி சார் பேட்டர்னில் இருந்து மாறி எடுத்தபடம். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த படம் அனைவரையும் எளிதாக ஈர்க்கும் படமாக இருக்கும். படத்தில் பல காட்சிகளை நான் உணர்ந்து அந்த பாத்திரமாக மாறி நடித்தேன். இந்த படம் காமெடி நிறைந்த, பொழுதுபோக்கு திரைப்படம். ஹரி சார் கண்டிப்பான மாஸ்டர், அவருடைய அர்ப்பணிப்பு அபாரமானது. அவருடைய வேகம் எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தது.

பல இடங்களில் இப்படத்தை எடுத்துள்ளோம். படத்தை அட்டகாசமாக எடுத்துள்ள ஒளிப்பதிவாளருக்கு நன்றி. ஜிவி உடன் இது எனக்கு முதல் படம். படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். எல்லோருக்கும் நன்றி.

நடிகை பிரியா பவானி சங்கர் பேசியதாவது….

இவ்வளவு பெரிய படத்தை சீக்கிரம் முடிக்க காரணம் இயக்குனர் ஹரி சார் தான். அவருடைய வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. அவருடைய உழைப்பை கணக்கிடவே முடியாது. அருண் சாருக்கு நன்றி. ஹரி சார் உடைய வேகத்திற்கு, ஒளிப்பதிவாளர் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றியுள்ளார். ராதிகா மேடம், ஐஸ்வர்யா மேடம் போன்ற மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது பெரிய மகிழ்ச்சி.

சமுத்திரகனி, தலைவாசல் விஜய் போன்ற கலைஞர்களின் நடிப்பை பார்த்தது பெரிய அனுபவமாக இருந்தது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் பெரிய ரசிகை நான். இந்தப் படம் ஹரி சார் பாணி படமாக இருக்காது. மிக நல்ல உணர்வுபூர்வமான படம், படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் கூறியதாவது..

இயக்குனர் ஹரியுடன் பணியாற்றுவது எனது பல நாள் கனவு, இந்த படம் அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்தது. அவர் தயாரிப்பாளரின் இயக்குனர். இந்த படத்தை எந்த தடையுமில்லாமல் எடுக்க உதவிய படக்குழுவுக்கு நன்றி.

கேமராமேன் கோபிநாத் பேசியதாவது…

ஹரி சார் உடன் இணைவது இது தான் முதல் முறை. பல நாள் கனவு இது, அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது. இப்போது நிறைவேறி உள்ளது, அதற்கு உறுதுணையாக இருந்தது தயாரிப்பாளர் அவருக்கு நன்றி. படம் மிக நல்ல அனுபவமாக இருந்தது. இந்த படத்துக்கு ஆதரவு தாருங்கள். நன்றி.

நடிகர் ராஜேஷ் பேசியதாவது….

ஹரி உடைய படங்கள் எப்பொழுதும் செண்டிமெண்ட் நிறைந்து இருக்கும். படத்தில் அருண் விஜய், சமுத்திரகனியுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. எல்லா வயதினரும் ரசித்து பார்க்கும் படமாக, இப்படம் இருக்கும்.

நடிகர் தலைவாசல் விஜய் பேசியதாவது….

இந்த படம் எனக்கு வேறு ஒரு பரிமாணமாக இருக்கும். அருண் விஜய்க்கு இந்த படம் மைல் கல்லாக இருக்கும். கொரோனாவுக்கு பிறகு மிகப்பெரிய படமாக யானை இருக்கும் என நான் நம்புகிறேன். படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

நடிகர் KGF ராமசந்திர ராஜு பேசியதாவது….

இந்த படத்தில் ஹரி சார் உடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அவர் நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். நிறைய கற்றுக்கொண்டேன். அருண் விஜய் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி, அவர் பல சிக்கல்களை கடந்து இந்த படத்தில் நடித்தார். ஆக்சன் காட்சியில் அடிபட்ட போதும், மறுநாள் சூட்டிங் வந்தார். அவருக்கு இந்த படம் பெரிய வெற்றி கொடுக்கும். படக்குழுவுக்கு நன்றி.

நடிகர் சஞ்சய் பேசியதாவது….

கண்டிப்பாக இந்த படம் அருண் விஜய்க்கு பெரிய மைல்கல்லாக இருக்கும். நான் பார்த்து ஆச்சர்யப்பட்ட விஷயம், இந்த படத்தில் அருண் விஜய் சிங்கிள் ஷாட்டில், 3.30 நிமிட சண்டை காட்சி ஒன்றில் நடித்துள்ளார். அது மிகப்பெரிய அளவில் பேசப்படும், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த அருண் விஜய் மற்றும் இயக்குனருக்கு நன்றி

நடிகை அம்மு அபிராமி பேசியதாவது….

இந்த படத்தில் நடிக்கும் போது உடன் நடித்த அனைவரும் பெரிய கலைஞர்கள். அவர்களுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஹரி சாருடனும், அருண் விஜய் சாருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. நன்றி.

யானை படத்தின் நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்

Starring – Arun Vijay, Priya Bhavani Shankar, Samuthirakani, Yogi Babu, Ammu Abirami, KGF Ramachandra Raju, Radhika Sarathkumar, Aadukalam Jayapalan, Imman Annachi, Rajesh, Aishwarya, Bose Venkat, Sanjeev, Pugazh

Story, Screenplay, Dialogue & Direction : Hari
Production House : Drumsticks Productions
Producers : Vedikkaranpatti S. Sakthivel
Music – G.V. Prakash Kumar
DOP – Gopinath
Art Director – Micheal B.F.A
Editor – Anthony
Lyrics – Snehan, Ekadasi, Arivu
Stunts – Anl Arasu
Co Director : N. John Albert
Choreography – Baba Baskar, Dhina
Production Executive – Chinna R. Rajendran
Cashier – N.G.Arjun
DI, VFX & Sound Design – Knack Studios
Sound Mix – T. Udhaya Kumar
Chief Make-Up Artist – Muniyaraj
Costumer – Rangasamy
Stills – Saravanan
Costume Designer – Nivetha Joseph, Geetu
PRO – Sathish Aim
Publicity Design – Reddot Pawan

Arun Vijay speech at Yaanai trailer launch

More Articles
Follows