KGF ஹீரோ யஷ் உடன் இணையும் ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்

KGF ஹீரோ யஷ் உடன் இணையும் ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. ஆனால் இந்த படம் தோல்வியை தழுவியதால் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் பூஜா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் பூஜாவுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கியது. ஆனால் தமிழில் அல்ல.. தெலுங்கு & கன்னட சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

பூஜா தற்போது ‘கேஜிஎப்’ பட நடிகர் யஷ் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் மூலம் முதன் முறையாக அவருக்கு ஜோடியாகி இருக்கிறார் பூஜா

இந்தப் படத்திற்கு யஷ் 19 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தை நார்தன் என்பவர் இயக்குகிறாராம். இவர் கன்னடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான முப்தி என்ற படத்தை இயக்கியவர்.

இப்படம் தான் தற்போது சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் பத்து தல என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகி வருகின்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Yash and Pooja Hegde joins for a new film

நடிகை மதுஷாலினி திடீர் திருமணம்.; கணவர் யார் தெரியுமா.?

நடிகை மதுஷாலினி திடீர் திருமணம்.; கணவர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

16 & அவன் இவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மது ஷாலினி. ஆர்யாவுக்கு ஜோடியாக மது நடித்திருந்தார்.

அதன் பிறகு பல வருடங்களாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

அண்மையில் வெளியான ‘விசித்திரன்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது சிபிராஜ் உடன் ரேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மதுவுக்கும் நடிகர் கோகுல் ஆனந்த் என்பவருக்கும் நேற்று (ஜூன் 16) ஐதராபாத்தில் திருமணம் நடந்துள்ளது.

இவர் கோகுல், ‛‛சென்னை 2 சிங்கப்பூர், திட்டம் ரெண்டு, நடுவன்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

Actress Madhushalini’s sudden marriage; Do you know who the husband is.?

கவர்ச்சி காட்டி கட்டணம் வசூலிக்கும் கமல் – விக்ரம் – பிரசாந்த் பட நடிகை

கவர்ச்சி காட்டி கட்டணம் வசூலிக்கும் கமல் – விக்ரம் – பிரசாந்த் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெமினி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண்.

இவர் பிரசாந்துடன் வின்னர் படத்தில் கமல்ஹாசனுடன் அன்பே சிவம் படத்தில் நடித்திருந்தார்.

இவர் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

எனவே கவர்ச்சியில் கலக்கி வருகிறார்

தற்போது திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.

இந்த நிலையில், அவர் தனது பெயரில் ஒரு செயலியை உருவாக்கி அதில் தனது கவர்ச்சி படங்களை நேரடியாக வாடிக்கையாளருக்கு அனுப்பி வைத்து கட்டணம் வசூலித்து வருகிறார்.

இந்தச் செயலியைப் பயன்படுத்தவே வாடிக்கையாளர்கள் ரூ.50 கட்டணம் கட்டவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal – Vikram – Prasanth film actress who charges a glamorous pose

‘சுழல் தி வோர்டெக்ஸ்’ வலைத்தொடருக்கு எஸ் ஜே சூர்யா ராணா ஹன்சிகா பாராட்டு

‘சுழல் தி வோர்டெக்ஸ்’ வலைத்தொடருக்கு எஸ் ஜே சூர்யா ராணா ஹன்சிகா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜுன் 17 ஆம் தேதியான இன்று வெளியாகியிருக்கும் அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரினை தென்னக நட்சத்திரமான ராணா டகுபதி, நடிகை ஹன்சிகா மோத்வானி, இயக்குநரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா ஆகியோர் கண்டு ரசித்து தங்களது விமர்சனத்தையும் எண்ணங்களையும் சமூக வலைதள பக்கத்தில் உற்சாகமான சுட்டுரைகளாக எழுதி ரசிகர்களுடனும், பார்வையாளர்களுடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக ‘பாகுபலி’ புகழ் நடிகர் ராணா டகுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், ” சுழல் தி வோர்டெக்ஸ் குழுவினருக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய அன்பான தோழி ஸ்ரேயா ரெட்டி அவர்களை திரையில் பார்க்கிறேன். அவருக்கும், சுழல் தி வோர்டெக்ஸ் தொடரை உருவாக்கிய புஷ்கர் & காயத்ரி மற்றும் அமேசான் பிரைம் வீடியோவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டிருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி தனது சமூக வலைதள பக்கத்தில்…

சுழல் தி வோர்டெக்ஸ் தொடர் சூப்பர். அசாதாரணமான முயற்சி. தனித்துவமானது. இந்த தொடரை பார்த்த பின் எமக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்க என்னிடம் போதுமான வார்த்தைகள் இல்லை. புஷ்கர் & காயத்ரியின் திரைக்கதை நேர்த்தியாக இருந்தது.

இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரன் எங்களை இருக்கையின் நுனிக்கு அழைத்துச் சென்றனர். இந்தத் தொடரில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன் உள்ளிட்ட குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

ரெஜினா என்ற வலிமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஸ்ரேயா ரெட்டியை நினைத்து பெருமைப்படுகிறேன். அவருடைய அற்புதமான நடிப்பை பாராட்ட போதுமான வார்த்தைகள் இல்லை. அவர் அந்த கதாபாத்திரத்தை யதார்த்தமாக சித்தரித்துள்ளார். கடினமாக உழைத்த குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், ” தமிழின் முதல் ஒரிஜினல் வலைதள தொடரான சுழல் தி வோர்டெக்ஸ் தொடரை உருவாக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த தொடரின் முதல் நான்கு அத்தியாயங்களை கண்டு ரசித்தேன்.

இதில் முதல் மற்றும் இரண்டாவது அத்தியாயம் அருமை. மூன்று மற்றும் நான்காவது அத்தியாயம் அற்புதம். மீதமுள்ள நான்கு அத்தியாயங்களையும் விரைவில் கண்டு ரசித்து, அதுதொடர்பான எமது எண்ணத்தை விரைவில் பகிர்ந்து கொள்வேன். நண்பர்களே! சர்வதேச அளவில் வெளியாகியிருக்கும் முதல் அசல் தொடரான சுழல் தி வோர்டெக்ஸ் எனும் இந்த வலைதள தொடரை காணத்தவறாதீர்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

படைப்பாளிகள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரின் உருவாக்கத்தில் தயாரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடர் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில், 240 க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இன்று முதல் வெளியாகிறது.

https://instagram.com/stories/ranadaggubati/2861882847877427701?utm_source=ig_story_item_share&igshid=YmMyMTA2M2Y=

https://instagram.com/ihansika?igshid=YmMyMTA2M2Y=

SJ Surya Rana Hansika praises ‘Suzhal The Vortex’ web series

கலைஞர் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு சீனு ராமசாமி மலர் மரியாதை.; ஏன் தெரியுமா?

கலைஞர் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு சீனு ராமசாமி மலர் மரியாதை.; ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி காயத்ரி குரு சோமசுந்தரம் நடித்து சீனு ராமசாமி எழுதி இயக்கியுள்ள படம் ‘மாமனிதன்’.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இதில் முதன் முறையாக இளையராஜா யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

‘மாமனிதன்’ திரைப்படம் வரும் ஜூன் 24 திரைக்கு வருகிறது.

இப்படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ நைன் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.

திமுக அமைச்சர் வந்திருந்தால் கரு பழனியப்பன் வந்திருப்பார்..; ‘கள்ளன்’ விழாவில் கடுப்பான சீனுராமசாமி

இந்த தருணத்தில் தமிழக திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் நினைக்கப்படும்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இயக்குனர் சீனுராமசாமி மலர் மரியாதை செய்தார்.

அவர் இதுபற்றி கூறும் போது…

“இந்த தமிழ் சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக்கு நன்றி கூறும் விதமாக என் அன்பை மலர்களாக சமர்ப்பித்தேன்”
என்றார்.

Seenuramasamy Tribute to Kalaignar MGR Shivaji; Do you know why?

JUST IN ரஜினியின் ‘தலைவர் 169’ டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.; வேற லெவல்

JUST IN ரஜினியின் ‘தலைவர் 169’ டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.; வேற லெவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அண்ணாத்த’ படத்திற்குப் பிறகு மீண்டும் சன்பிக்சர்ஸ் கூட்டணியில் இணைகிறார் ரஜினிகாந்த்.

இவர்கள் இணையும் கூட்டணிக்கு ‘தலைவர் 169’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இப்படம் பற்றிய நமக்கு கிடைத்த முக்கிய தகவல்களை பகிர்கிறோம்.

சன் பிக்சர்ஸ் – ரஜினியுடன் இணையும் ‘படையப்பா’ இயக்குனர்.; ‘பீஸ்ட்’ கொடுத்த ட்விஸ்ட்.?

ஜூலை மாதம் இறுதியில் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிகிறது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளார் என தகவல்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘எந்திரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினியின் மகளாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ரஜினி் பயன்படுத்தவுள்ள கார் என ஓரிரு தினங்களாக ஒரு படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தில் நடிகரும் ரஜினியின் தீவிர ரசிகருமான சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

அவர் இளவயது ரஜினியாக பிளாஷ்பேக் போஷனில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க உள்ளாராம்.

இப்படம் ஜெயிலர் மற்றும் சிறைக்கைதிகளை மையப்படுத்தி உருவாகிறதாம். எனவே அனைத்து இந்திய மற்றும் அந்நிய மொழிகளுக்கு ஏற்றவாறு JAILOR ஜெயிலர் என டைட்டில் வைக்க வைக்கப்படலாம் என்ற என்ற தகவலை நாம் தெரிவித்திருந்தோம்.

நாம் சொன்னபடியே இன்று சரியாக காலை 11 மணிக்கு ஜெயிலர் பட டைட்டில் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரில் ரத்தக்கறையுடன் ஒரு மிகப் பெரிய கத்தி ஒன்று உள்ளது. நிச்சயம் இந்த டைட்டில் ரஜினி ரசிகர்களை கவர்ந்து ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

இந்த படம் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்துக் கொள்ள எங்களுடன் என்றும் இணைந்திருங்கள்…

Thalaivar 169 title look poster released

More Articles
Follows