‘சலார்’ குழுவினருக்கு பணம் கொடுத்த பிரபாஸ்.; தங்கம் கொடுத்த ஸ்ரேயா ரெட்டி

‘சலார்’ குழுவினருக்கு பணம் கொடுத்த பிரபாஸ்.; தங்கம் கொடுத்த ஸ்ரேயா ரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KGF புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சலார்’.

கே.ஜி.எப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது.

ஜூலை முதல் வாரம் இந்த படத்தின் டீசர் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

‘சலார்’ படக்குழுவினருக்கு நடிகர் பிரபாஸ் தலா ரூ. 10,000 அன்பளிப்பாக கொடுத்ததாக கூறப்பட்டது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார்.

சமீபத்தில் சலார் படத்தில் தான் நடித்த காட்சிகள் முடிவடைந்த நிலையில் இப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக அளித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி.

Salaar: Prabhas Gifts Rs 10K to team Shreya gifts gold to team

ரசிகர்களுக்கு ‘சந்திரமுகி 2’ பட சூட்டிங் அப்டேட் கொடுத்த படக்குழு

ரசிகர்களுக்கு ‘சந்திரமுகி 2’ பட சூட்டிங் அப்டேட் கொடுத்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2005-ல் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ‘சந்திரமுகி’.

இப்படம் 500 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார், ரவி மரியா, ஸ்ருஷ்டி டாங்கே, டி.எம்.கார்த்திக் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது.

இந்நிலையில், ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Raghava Lawrence’s chandramukhi 2 movie shooting wrapped

பானிபூரி-யை சோளாபூரியாக கொடுங்க.; இயக்குநர் பாலாஜி வேணுகோபால் வேண்டுகோள்

பானிபூரி-யை சோளாபூரியாக கொடுங்க.; இயக்குநர் பாலாஜி வேணுகோபால் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ வெப் சீரிஸின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் நடிகர்கள் லிங்கா, சாம்பிகா, குமரவேல், வினோத் சாகர், கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

இந்த சந்திப்பில் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசியதாவது…

“இருபது வருடங்களாக நானும் ரேடியோவில் இயங்கி வருகிறேன். அங்கிருந்து இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் நான் செய்த காரியங்கள் எல்லாவற்றையும் முடிந்தளவு சிறப்பாக செய்திருக்கிறேன். அதற்கு உங்களைப் போல நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் விமர்சனங்களும் தான் காரணம் என நினைக்கிறேன்.

நீங்கள் இலைகளை வெட்டலாம், கிளைகளை வெட்டலாம், ஏன் மரங்களை கூட வெட்டலாம் ஆனால், வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது என்ற பாப்லோவின் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.

நாம் என்னதான் கடினமாக உழைத்தாலும் நமக்கான இடம் இன்னும் சரியாக கிடைக்கவில்லையோ என்ற சந்தேகம் பலருக்கும் இருப்பது போல எனக்கும் இருந்தது. அப்போது எல்லாம் என்னை ஊக்கப்படுத்தும் ஒரு சரியான நபர் உத்ரா ஸ்ரீதரன்.

ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். ரேடியோவில் சேர்ந்த போது அவர் எனக்கு அறிமுகமானார். அவர் மூலமாக தான் இவர்கள் எனக்கு அறிமுகம் ஆகி இந்த மேடையில் நிற்கிறேன்.

‘பானிபூரி’ படம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிகவும் ஜாலியான ஒரு கதை என்று சொல்ல முடியாது. நிறைய உலகளாவிய விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறோம். முன்பு லிவ்வின் ரிலேஷன்ஷிப் பற்றிய கதைகள் வந்த பொழுது குடும்பத்தோடு பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது.

காதலை கண்ணியமாக காட்ட முடியாத என்ற பிடிப்பில ஆரம்பித்த ஒரு கதைதான் ’பானிபூரி’. இந்த கதையை 15 நாட்களில் படமாக்கினோம். அதற்கு முக்கிய காரணம் என்னுடைய அணி. தொழில்நுட்ப அணி, நடிகர்கள் என அனைவரும் அவ்வளவு அர்ப்பணிப்போடு சிறப்பாக பணி செய்து கொடுத்துள்ளனர்.

இந்தப் படத்தை நீங்கள் குடும்பமாக சேர்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இந்த பானிபூரியை சோளாபூரியாக மாற்றிக் கொடுங்கள்” என்றார்.

Make Paani Poori as great success says Balaji Venugopal

பாலாஜி உருவாக்கிய ‘பானிபூரி’யில் எனக்கான கேரக்டர்.. – லிங்கா

பாலாஜி உருவாக்கிய ‘பானிபூரி’யில் எனக்கான கேரக்டர்.. – லிங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ வெப் சீரிஸின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் நடிகர்கள் லிங்கா, சாம்பிகா, குமரவேல், வினோத் சாகர், கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

இந்த சந்திப்பில் நடிகை சாம்பிகா பேசியதாவது…

“ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட், ஷார்ட்ஃபிலிக்ஸ் மற்றும் பாலாஜி வேணுகோபால் சாருக்கு முதலில் எனது நன்றி. இது போன்ற கதாபாத்திரத்தை எனக்கு நம்பி கொடுத்துள்ளார். எனது சக நடிகர்களுக்கும் நன்றி. எங்களுக்குப் பிடித்தது போலவே உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”.

நடிகர் லிங்கா பேசியதாவது…

“’பானிபூரி’யில் என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்த பாலாஜி அண்ணனுக்கு நன்றி. என்னுடன் நடித்த சக நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம், வாங்க முன்வந்த ஷார்ட்ஃபிலிக்ஸ் இவர்களுக்கும் நன்றி. உங்கள் ஆதரவால்தான் நாங்களும் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

Actor Linga speech at Paani Poori press meet

மிர்ச்சியில் தொடங்கி ‘பானி பூரி’ வரை தொடரும் நட்பு… – வினோத் சாகர்

மிர்ச்சியில் தொடங்கி ‘பானி பூரி’ வரை தொடரும் நட்பு… – வினோத் சாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ வெப் சீரிஸின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் நடிகர்கள் லிங்கா, சாம்பிகா, குமரவேல், வினோத் சாகர், கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

இந்த சந்திப்பில் இசையமைப்பாளர் நவநீத் சுந்தர் பேசியதாவது…

“நடிகர்கள் வினோத், குமரவேல், சாம்பிகா என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். எனக்கு இசையமைக்கவும் மிகவும் ஆர்வமான ஒரு கதையாக இருந்தது.

பாலாஜியும் நானும் நண்பர்கள் என்பதால் வேலை செய்வது ஒரு பாசிட்டிவான சூழலாக அமைந்தது. அதுவே உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.

நான் இதற்கு முன்பு படங்கள் இசை அமைத்திருந்தாலும் வெப் சீரிஸ் ஆக எனக்கு முதல் கதை இதுதான். பாலாஜியின் வரிகளில் டைட்டில் பாடல் நான் பாடியிருப்பேன்.

இந்த எபிசோடுகளில் சில டியூன்கள் உங்களுக்கு வித்தியாசமாக இருந்திருக்கலாம். அது நான் ஐபேடில் உருவாக்கி இசையமைத்தது தான்'” என்றார்.

நடிகர் வினோத் சாகர் பேசியதாவது…

”பாலாஜியுடனான நட்பு எனக்கு மிர்ச்சியில் இருந்து ஆரம்பித்தது. இந்தப் படத்திற்கு பிறகு நிச்சயம் நல்ல விஷயங்கள் அவனுக்கு காத்திருக்கிறது. ‘பானிபூரி’ அதற்கு தொடக்கமாக அமையும். அனைவருடனும் வேலை பார்த்ததில் மகிழ்ச்சி”.

நடிகர் கோபால் பேசியதாவது…

“பாலாஜிக்கும் எனக்கும் உள்ள நட்பு மிகப் பெரியது. எந்த ஒரு காதல் கதையை எடுத்தாலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பார்ப்பது கடினம். அதற்குள் இந்த கதையை வெற்றிகரமாக அவர் செய்துள்ளார். அதனால், என்னை விட அவருக்குதான் இது முக்கியமான நாள். கதையில் ஒரு எமோஷனல் அட்டாச்மெண்ட் இருக்கும்” என்றார்.

Actor Vinoth Sagar speech at Paani Poori press meet

20 வருட வெற்றிப் பாதையில் ஜெயம் ரவி.; கைவசம் அசத்தலான 6 படங்கள்.!

20 வருட வெற்றிப் பாதையில் ஜெயம் ரவி.; கைவசம் அசத்தலான 6 படங்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக 2-3 தெலுங்கு படங்களில் நடித்தவர் ரவி.

2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் ரவி.

இப்படத்தை ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெறவே ‘ஜெயம்’ என்ற அடைமொழியை தன் பெயருடன் இணைத்துக் கொண்டார்.

அன்று முதல் இன்று வரை அந்த பெயருக்கு ஏற்ப ஜெயம் என்ற வெற்றியுடன் வலம் வருகிறார் ரவி.

தற்போது 2023ஆம் ஆண்டு வரை 20 வருடங்களை சினிமாவில் நிறைவு செய்துள்ள ஜெயம் ரவி இதுவரை 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இதில் காதல் நாயகனாகவும் ஆக்சன் நாயகனாகவும் பாசக்கார இளைஞனாகவும் சமூக போராளியாகவும் காவல்துறை அதிகாரியாகவும் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

இதில் எம் குமரன், பேராண்மை, தனி ஒருவன், நிமிர்ந்து நில், பொன்னியின் செல்வன், மிருதன், போகன், மழை, வனமகன், தீபாவளி, கோமாளி ஆகிய படங்கள் ஜெயம் ரவியின் நடிப்புக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்தன.

இவரது படங்கள் இந்த வயதினருக்கு மட்டும் தான் என்றில்லாமல் அனைத்து தரப்பு வயதினரும் ரவியின் படத்தை பார்க்கும் வகையில் கதைகளை தேர்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு 2023 ஜெயம் ரவி நடிப்பில் ‘அகிலன்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது்

ஆனால் தற்போது அவரது கைவசம் ஆறு படங்கள் உள்ளன. அதில் ‘இறைவன்’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

மேலும் ஜன கன மன என்ற படத்திலும் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.

இத்துடன் ‘தனி ஒருவன் 2’ மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

சினிமாவில் 20 வருடங்களில் நிறைவு செய்துள்ள ஜெயம் ரவியை ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்.

மேலும் இனிவரும் காலங்களில் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் ரவி நடித்து அனைத்து மாநில மக்களையும் கவர்வார் என எதிர்பார்க்கலாம்.

Jayam Ravi completed 20 years of Cinema journey

More Articles
Follows