KGF வில்லன் கருடா ராமை அழவைத்து அனுப்பிய AV33 Team

KGF வில்லன் கருடா ராமை அழவைத்து அனுப்பிய AV33 Team

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் “AV33” .

இப்படத்தில் வில்லனாக KGF படப்புகழ் கருடா ராம் நடிக்கிறார். அவரது காட்சிகள் அனைத்தும் முடிவடைந்தது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த KGF படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்தவர் கருடா ராம். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல மொழிகளிலும் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் வில்லனாக நடித்து வந்தார்.

கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் துவங்கி பழநி முதலான பகுதிகளில் நடைபெற்றது.

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. வில்லனாக நடிக்கும் நடிகர் KGF புகழ் கருடா ராம் உடைய காட்சிகள் இன்றுடன் முடிக்கப்பட்டது.அவரை வழியனுப்பும் பொருட்டு படக்குழு மிகப்பெரிய கொண்டாட்டத்துடன், அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் மற்றும் இணை தயாரிப்பாளர் G.அருண்குமார் ஆகியோர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இச்செயல்களால் அவர் ஆனந்த கண்ணீரில் மிதந்துள்ளார். KGF படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன் ஆனால் இது போல் எந்த ஒரு படக்குழுவும் என்னை கொண்டாடியதில்லை.

இப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இயக்குநர் ஹரி மற்றும் படக்குழுவினரை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அருண் விஜய்,நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்:
இசை: GV. பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: கோபிநாத்
எடிட்டிங்: ஆண்டனி
ஸ்டண்ட்: அனல் அரசு
கலை: மைக்கேல்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
இணை தயாரிப்பு: G.அருண்குமார்
தயாரிப்பு: டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் Drumstick Productions எஸ்.சக்திவேல் .

An overwhelming & an emotional last day on #AV33 sets fr actor @GarudaRam as he completes the shoot.The team Wl certainly miss having u on the sets sir.
#Hari @arunvijayno1 @DrumsticksProd @priya_Bshankar @gvprakash @thondankani @realradikaa @iYogiBabu @0014arun @johnsoncinepro

Garuda Ram completes his shooting portions for AV 33

வெண்பாவுக்காக காத்திருக்கும் சிவப்புக் கம்பளம்..; நந்தா பெரியசாமியின் பெரிய மனசு

வெண்பாவுக்காக காத்திருக்கும் சிவப்புக் கம்பளம்..; நந்தா பெரியசாமியின் பெரிய மனசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குடும்ப உறவுகளை மையமாக வைத்து, உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.

நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பாக தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இதில் கெளதம் கார்த்திக் ஜோடியாக ஷிவத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார்.

இவர்களுடன் சேரன், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா சூசன், பருத்திவீரன் புகழ் சுஜாதா, சிந்துஜா, ஸ்ரீபிரியங்கா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

சித்து குமார் இசையமைக்க போரா பரணி ஒளிப்பதிவு செய்ய பாடல்களை சினேகன் எழுதி உள்ளார்.

தற்போது இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் படத்தின் ட்ரெய்லர், இசை மற்றும் ரிலீஸ் குறித்த அறிவுப்புகள் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இன்று நடிகை வெண்பா பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குனர் நந்தா பெரியசாமி.

அவரின் ட்விட்டர் பதிவில்..

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் அஸ்திவாரமான வெண்பா நொடிக்கொரு முறை முக பாவனைகளை மாற்றி அபாரமாக நடிக்க கூடிய ஆற்றல் கொண்டவர். வரும் காலங்களில் தமிழ் சினிமா இவருக்கு மிகப்பெரிய சிவப்புக் கம்பளம் விரித்து கொண்டாட என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

https://t.co/a0uA1CApck

நடிகைக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை கண்டு பாராட்டு தெரிவிப்பதற்கும் ஒரு பெரிய மனசு வேண்டுமே.. நந்தா பெரியசாமிக்கு பெரிய மனசு தான்

Nandha Periyasamy wishes Venba on her birthday

போலீஸ் அனுமதியளித்தும் ஸ்ரீகாந்த் படத்திற்கு மக்கள் எதிர்ப்பு.; ‘வெத்து வேட்டு’ இயக்குனர் தவிப்பு

போலீஸ் அனுமதியளித்தும் ஸ்ரீகாந்த் படத்திற்கு மக்கள் எதிர்ப்பு.; ‘வெத்து வேட்டு’ இயக்குனர் தவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெத்து வேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் “தி ஜர்னி ஆஃப் பெட்” என்ற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.

மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் மணிபாரதி கூறும்போது,…

“இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி.

ஸ்ரீகாந்த் ஐடியில் பணிபுரியும் இளைஞராக நடித்துள்ளார்.

ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும் அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு விஷயத்தை குருட்டாம் போக்கில் அணுகினால் அது மேலும் நம்மை சிக்கலில் கொண்டுபோய் விடும் என்பதை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளோம்.

ஊட்டியைச் சுற்றி உள்ள வனப்பகுதியில் கிட்டத்தட்ட 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். சிருஷ்டி டாங்கே இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குறைந்த ஆடை அணிந்து கடுங்குளிரில் நடுங்கியபடியே சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.

குளிரும் மழையும் படப்பிடிப்பு சமயத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன. ஒவ்வொரு நாளும் வெறும் 4 அல்லது 5 மணிநேரங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிந்தது.

கொரோனா தாக்கத்திற்கு முன்பு பாதி படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டோம். ஆனால் முதல் அலை சற்று ஓய்ந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்போன சமயத்தில் முறையான காவல்துறை அனுமதி இருந்தாலும் கூட, அந்த பகுதியை சேர்ந்த மக்களிடமிருந்து எங்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது.

கொரோனா குறித்த அச்சத்தில் இருந்த அவர்களிடம், படப்பிடிப்பில் நாங்கள் கடைப்பிடிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விளக்கி, ஒருவழியாக படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்” என கூறினார்.

*நடிகர்கள்* ; ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில்

*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

இயக்குநர் ; எஸ்.மணிபாரதி

ஒளிப்பதிவு ; கே.கோகுல்

படத்தொகுப்பு ஜே.பி (கொடி, பட்டாஸ் படங்களில் பணியாற்றியவர்)

இசை ; தாஜ்நூர்

பாடல்கள் ; யுகபாரதி

கலை ; பழனிவேல்

நடனம் ; தீனா

சண்டை பயிற்சி ; ஆக்ஷன் பிரகாஷ்

ஸ்டில்ஸ் ; ராஜ் பிரபு

நிர்வாக தயாரிப்பாளர் ; A.V. பழனிச்சாமி

தயாரிப்பாளர் ; வி விஜயகுமார்

தயாரிப்பு நிறுவனம் ; ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ்

மக்கள் தொடர்பு ; A ஜான்

The Journey Of Bed shooting spot updates

#TheJourneyOfBed

@Act_Srikanth @srushtiDange
@actorblackpandi
Directed by #SManibharathi
Produced by #VVijayakumar

#TJOB #ShrinithiProductions

கங்கனா நாசர் மதுபாலா சமுத்திரகனி இவர்களுடன் நான் ஏதோ செஞ்சிருக்கேன்.. – அரவிந்த்சாமி

கங்கனா நாசர் மதுபாலா சமுத்திரகனி இவர்களுடன் நான் ஏதோ செஞ்சிருக்கேன்.. – அரவிந்த்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கங்கானா ரனாவத் நடிப்பில் பன்மொழி திரைப்படமாக அனைத்திந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் “தலைவி” திரைப்படம் 2021 செப்டம்பர் 10 முதல், தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு K.V.விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார்.

Vibri Motion pictures, சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரித்துள்ளார், சைலேஷ் R சிங், திருமால் ரெட்டி மற்றும் ஹிதேஷ் தக்கர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

கிரியேட்டிவ் புரடியூசர் பிருந்தா பணியாற்றியுள்ளார். மதன் கார்கி வசனம் எழுதியுள்ளார்.

ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்துள்ளார்

புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு “தலைவி” படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விஜய்.

இப்படவெளியீட்டையொட்டி ஒட்டி படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிரியேட்டிவ் புரடியூசர் பிருந்தா கூறியதாவது…

எங்கள் திரைப்படம் இறுதியாக திரைக்கு வருகிறது. 2017 லேயே இப்படத்தை எடுக்கும் ஐடியா எங்களுக்கு இருந்தது. ஜெயலலிதா அம்மா நிஜ வாழ்வில் நம்பமுடியாத பல தடைகளை கடந்து வந்தவர். அதனை திரையில் அவரது ஆசிர்வாதத்துடன் கொண்டுவந்துள்ளோம்.

இயக்குநர் விஜய், திரைக்கதை ஆசிரியர் இருவரும் மிக அற்புதமாக திரையில் ஜெயலலிதா அம்மா அவர்களின் வாழ்வை கொண்டு வந்துள்ளார்கள்.

மிகச்சிறந்த நடிகர்கள் குழு எங்கள் படத்தில் பணியாற்றியுள்ளது, அர்விந்தசாமி, சமுத்திரகனி, தம்பி ராமையா இவர்களுடன் இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் கங்கனா ரனாவத்தும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.

விஷ்ணு வர்தன் இந்தூரி, சைலேஷ் R சிங் படம் உருவாக மிகப்பெரிய ஒத்துழைப்பை தந்துள்ளார்கள். எங்களின் உழைப்பு இப்போது உங்களின் பார்வைக்கு வருகிறது உங்களின் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளோம் என்றார்.

ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல் பேசியதாவது…

புதியவனான எனக்கு இத்தனை பெரிய படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குநர் விஜய்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். தயாரிப்பாளர்கள் விஷ்ணு வர்தன் இந்தூரி, சைலேஷ் R சிங் அவர்களுக்கும் நன்றி. படம் அழகாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடன இயக்குநர் காயத்திரி ரகுராம் கூறியது…

12 வருடங்களாக இயக்குநர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். தலைவி படத்தில் பல தடைகளை உடைத்து நிஜவாழ்வில் சாதனை படைத்த ஜெயலலிதா அம்மாவை கங்கனா ரனாவத் அழகாக திரையில் கொண்டுவந்துள்ளார்.

கங்கனா பற்றி கேள்விப்படும் பல விசயங்கள் நிஜத்தில் பழகும்போது மாறிவிட்டது மிக இயல்பான மனிதர். அவரது கடின உழைப்பு தான் நான் அமைத்த பாடலில் தெரிகிறது.

ஜெயலலிதா அம்மாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நானும் பங்காற்றியது மகிழ்ச்சி. வாய்ப்பளித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி

நடிகை மதுபாலா பேசியதாவது

என் முதல் படம் அழகன் 1991 ல் வெளிவந்தது. அந்தப்படத்தின் போது புதுமுகமாக நான் எப்படி உணர்ந்தேனோ அதே உணர்வை, இப்போதும் உணர்கிறேன் அதே போல் மீண்டும் உங்களை திரையில் சந்திக்க வந்திருக்கிறேன்.

கங்கனா ரனாவத் முதன்மை நாயகியாக, ஜெயலலிதா அம்மாவாக அத்தனை தத்ரூபமாக மிக சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அரவிந்த்சாமி மிக அழகனாக எம்.ஜி.ஆராக கலக்கியுள்ளார். இந்தப்படத்தில் நானும் இருப்பது எனக்கு பெருமை என்றார்.

நடிகர் தம்பி ராமையா பேசியதாவது

கொரோனா முதல் அலைக்கு பிறகு தியேட்டருக்கு ‘மாஸ்டர்’ படம் மக்களை அழைத்து வந்தது. அதே போல் இரண்டாவது அலைக்கு பிறகு மக்களை அழைத்து வரும் படமாக “தலைவி” இருக்கும்.

ஆணாதிக்கம் மிகுந்த இந்த உலகில், பெண்களுக்கு முன்னுதாரணமாக வலம் வருகிறார் கங்கனா ரனாவத். அர்விந்த்சாமி எதிரிகளே இல்லாமல் அனைவரும் விரும்பும் நாயகன்.

அர்விந்தசாமி போல் அழகு எனக்கு இருந்தால் இந்நேரம் நான் ஜெயிலில் இருந்திருப்பேன் அல்லது இறந்திருப்பேன்.

ஆனால் தன்னடக்கத்துடன் இருக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்கள்,

சல்மானுக்கு ஜோடியாக நடித்த பாக்யஶ்ரீ மேடம் இப்படத்தில் சந்தியா அம்மாவாக நடித்துள்ளார். வெகுஜன மக்களை இணைக்கும் பாலமாக இருக்கும் திரையரங்குகளின் பிரச்சனைகளுக்கு, சிறப்பு கவனம் எடுத்து தமிழக அரசு கவனிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சமுத்திரகனி ஆர் எம் வீரப்பனாக மிக அற்புதமாக செய்துள்ளார். ஜெயலலிதா அம்மா வாழ்வில் யாரும் அறியாத மாதவன் பாத்திரத்தை எனக்கு இயக்குநர் தந்துள்ளார்.

உங்களுடன் இணைந்து படத்தை பார்க்க நாங்களும் ஆவலாக உள்ளோம் நன்றி.

எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது…

கடந்த மாதம் எனது அம்மாவை கோவிட் நோயில் இழந்தேன்.
இந்தப்படத்தில் வேலை செய்ததை என் அம்மாவிடம் தெரிவித்தபோது, எல்லாப்படத்தை காட்டிலும் இப்படம் அதிக புகழை பெற்று தரும் என்றார். அதை இப்போது உணர்கிறேன்.

இந்தப்படத்தை பற்றி முதன்முதலாக இயக்குநர் விஜய் என்னிடம் கூறியபோது இது அத்தனை எளிதானதல்ல, நிறைய பிரச்சனைகள் வரும் என்றேன். ஆனால் நாம் செய்வோம் என்றார். திரையில் மிக அற்புதமாக அதை எடுத்து வந்துள்ளார்.

எங்களை விட அதிகமாக ஜெயலலிதா பற்றி தயாரிப்பாளர்களுக்கு தெரியும் மிக ஆர்வத்துடன் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். நாசர் சாரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு பிடித்த நடிகராக அர்விந்த்சாமியை கூறினார். எனக்கு இப்படத்தில் அவரை பார்த்தபோது அதனை நானும் உணர்ந்தேன்.

கங்கனா ரனாவத் நடிப்பு திறமையை பல திரைப்படங்களில் கண்டிருக்கிறோம், இந்தப்படத்தில் ஜெயலலிதாவாக வாழ்ந்துள்ளார். இப்படத்தில் அனைவரும் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார்கள். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் அரவிந்த் சாமி பேசியதாவது….

இந்தப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கும் என் மீது நம்பைக்கை வைத்த இயக்குநருக்கும் நன்றி. இரண்டு நாட்களுக்கு முன் தான் படம் பார்த்தேன். ஒரு மாஸ்டர் க்ளாஸ் மாதிரி தான் இருந்தது.

கங்கனா, நாசர் மதுபாலா, சமுத்திரகனி இவர்களுடன் நான் ஏதோ செய்திருக்கிறேன் என்று தான் தோன்றியது.

ஏனெனில் அனைவரது நடிப்பும் மிக அற்புதமாக இருந்தது. இயக்குநர் விஜய்யுடைய டீடெயிலிங், திரையில் காட்சிகளில் அவரது நுணுக்கம், பிரமிப்பாக இருந்தது. இப்படம் தியேட்டரில் வரவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் காத்திருந்தார்கள்.

இத்திரைப்படம் ஒரு அற்புதம். இந்தியாவெங்கும் இப்படத்தை ரசிப்பார்கள். இப்படத்தில் அனைவருமே சிறப்பான பணியை தந்துள்ளார்கள்.

ஆனால் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது ஜீவியின் இசை தான். அந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறும், காட்சிக்கு ஏற்றவாறும் மிக பொருத்தமான, பிரமிப்பான இசையை வழங்கியுள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.

நடிகை கங்கனா ரனாவத் பேசியதாவது…

இப்படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த இரண்டு வருடங்களில் பலரும் பல ஏற்ற இறக்கங்களை கடந்து வந்துள்ளோம்.

இப்படத்தை பல தடைகளை கடந்து திரையரங்கிற்கு கொண்டு. வந்துள்ளோம். அர்விந்த்சாமி, மதுபாலா மேடம் போன்ற மிகப்பெரிய நடிகர்களுடன் நடித்தது பெருமை. மதுபாலா மேடம் என்மீது மிகுந்த அக்கறை காட்டினார்கள்.

அர்விந்த்சாமி மூலம் ஜெயலலிதா மேடம் பற்றி நிறைய கதைகளை கேட்டறிந்தேன். சமுத்திரகனி சார், தம்பி ராமையா சார் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளார்கள். இன்னும் நான் படம் பார்க்கவில்லை ஒரு சிறு குழந்தை போல் நானும் படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தயாரிப்பாளர்கள் எந்த நிலையிலும் எந்தவித சமரசமும் இல்லாமல் இப்படத்தை தயாரித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இப்படத்தை தன் இசையால் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.

இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம் இந்த வாய்ப்பை தந்த விஜய்க்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி பேசியதாவது..

நாங்கள் முதன்முதலில் சென்னையில் டிரெய்லரை வெளியிட்டபோது இந்தியாவே திரும்பி பார்த்தது. ஓடிடியில் இருந்து பலரும் மிகப்பரும் ஆஃபரில் படத்தை கேட்டபோதும் திரையில் இப்படத்தை கொண்டுவரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இயக்குநர் விஜய் தவிர வேறு எவரும் இத்தனை கச்சிதமாக இப்படத்தை இயக்கியிருக்க முடியாது. கங்கனா ரனாவத், அர்விந்த்சாமி, சமுத்திரகனி என அனைவரும் மிகபெரும் உழைப்பை தந்துள்ளார்கள். ஜிவி பிரகஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் இப்படம் இந்தியளவில் அனைவரும் பிடிக்கும்.

இயக்குநர் விஜய் பேசியதாவது

இப்படம் எனது கனவல்ல என்னுடைய குழுவினரின் கனவு. இந்த கனவு நனவாக உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. திரையரங்கில் படத்தை கொண்டு வருவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஜி வி இதில் அற்புதமான இசையை தந்துள்ளார் இந்தப்படத்தின் ஆத்மாவே அவர்தான். விட்டல் நம் வீட்டு பையன், மும்பையில் செட்டிலானவர். இப்படத்தில் அருமையான பணியை தந்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார்கள். அர்விந்த்சாமி வரலாற்று சிறப்பு மிக்க நடிப்பை தந்துள்ளார்.

இந்தப்படத்தில் நிறைய இயக்குநர்கள் நடித்துள்ளார்கள் அவர்களை இயக்கியது நல்ல அனுபவமாக இருந்தது. கங்கனாவிற்கு முழு திரைக்கதையும் தெரியும் ஒவ்வொரு காட்சிக்கு முன்னும் பின்னும் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியும் அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். மிகப்பெரிய படைப்பு கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம் நன்றி என்றார்.

“தலைவி” படம் செப்டம்பர் 10 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Aravind Swamy speech at Thalaivii Press meet at Chennai

சூர்யா தயாரிப்பில் மீண்டும் கார்த்தி-முத்தையா கூட்டணி.; டைட்டில் லுக் ரிலீஸ்

சூர்யா தயாரிப்பில் மீண்டும் கார்த்தி-முத்தையா கூட்டணி.; டைட்டில் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவின் 2D Entertainment தொடர்ந்து வித்தியாசமான களங்களில், சிறந்த கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

‘சூரரைப் போற்று’, ‘கடைக்குட்டிசிங்கம்’, ‘பொன்மகள்வந்தாள்’ போன்ற படங்களை விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும் ப்ளாக் பஸ்டர் வெற்றி படங்களாக தந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரும் அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.

இதையடுத்து
2D Entertainment நிறுவனம் பெருமை மிகு படைப்பாக “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட பிரமாண்ட புதிய படத்தை தயாரிக்கிறது.

இதில் அதிக வசூல் சாதனை படைத்த கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து
சூர்யா & ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி மீண்டும் இணைகிறார்.

நடிகர் கார்த்தி திரைவாழ்வில் ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக, அவரை தமிழகம் முழுக்க கொண்டாட வைத்த படம் ‘கொம்பன்’.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில், குடும்ப உறவுகளின் பெருமை சொல்லும் படமாக, சிறப்பான கிராமத்து பின்னணியில் உருவான அப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இப்படம் மூலம் இணைகிறது.

‘கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி (அறிமுகம்) மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது.

இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார்.

‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார். கலை: ஜாக்கி.

ஏற்கனவே நடிகர் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த ‘கடைக்குட்டிசிங்கம்’ பிரமாண்ட வெற்றி பெற்றது.

இப்போது அவரது தயாரிப்பில் ‘கொம்பன்’ கூட்டணி இணைவதை தொடர்ந்து, இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இணை தயாரிப்பு: ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்.

தயாரிப்பு:சூர்யா & ஜோதிகா.

இப்படத்தின் பூஜை நாளை ( திங்கள்கிழமை ) நடைபெறுகிறது.
செப்டம்பர் இம்மாதம் 18 ஆம் தேதி தேனியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

Karthi and Muthaiya teams up for Viruman Produced by Suriya

Viruman
Viruman
சூர்யா-கார்த்தி இணையும் படத்தில் ஹீரோயினார் டைரக்டர் ஷங்கர் மகள்

சூர்யா-கார்த்தி இணையும் படத்தில் ஹீரோயினார் டைரக்டர் ஷங்கர் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா நட்சத்திரங்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவில் களமிறக்குவது வாடிக்கையான ஒன்றுதான்.

இயக்குனர்களின் வாரிசுகள் பெரும்பாலும் இயக்குனராக ஆகாமல் நடிப்பிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

பாரதிராஜா மகன், பாக்யராஜ் மகன், எஸ்ஏசி மகன், பாண்டிராஜ் மகன் என பலரை உதாரணமாக சொல்லலாம்.

தற்போது இந்த வரிசையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி என்பவரும் ஹீரோயினி ஆகிறார்.

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தில் நாயகியாகிறார் அதிதி.

அதன் விவரம் வருமாறு..்

நடிகர் சூர்யாவின் 2D Entertainment தொடர்ந்து வித்தியாசமான களங்களில், சிறந்த கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

‘சூரரைப் போற்று’, ‘கடைக்குட்டிசிங்கம்’, ‘பொன்மகள்வந்தாள்’ போன்ற படங்களை விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும் ப்ளாக் பஸ்டர் வெற்றி படங்களாக தந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரும் அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.

இதையடுத்து
2D Entertainment நிறுவனம் பெருமை மிகு படைப்பாக “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட பிரமாண்ட புதிய படத்தை தயாரிக்கிறது.

இதில் அதிக வசூல் சாதனை படைத்த கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து
சூர்யா & ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி மீண்டும் இணைகிறார்.

நடிகர் கார்த்தி திரைவாழ்வில் ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக, அவரை தமிழகம் முழுக்க கொண்டாட வைத்த படம் ‘கொம்பன்’.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில், குடும்ப உறவுகளின் பெருமை சொல்லும் படமாக, சிறப்பான கிராமத்து பின்னணியில் உருவான அப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இப்படம் மூலம் இணைகிறது.

‘கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி ஷங்கர் (அறிமுகம்) மற்றும் பலர் நடிக்கின்றார்கள்.

இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது.

இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார்.

‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார். கலை: ஜாக்கி.

ஏற்கனவே நடிகர் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த ‘கடைக்குட்டிசிங்கம்’ பிரமாண்ட வெற்றி பெற்றது.

இப்போது அவரது தயாரிப்பில் ‘கொம்பன்’ கூட்டணி இணைவதை தொடர்ந்து, இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இணை தயாரிப்பு: ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்.

தயாரிப்பு:சூர்யா & ஜோதிகா.

இப்படத்தின் பூஜை இன்று ( திங்கள்கிழமை ) நடைபெறுகிறது.
செப்டம்பர் இம்மாதம் 18 ஆம் தேதி தேனியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

Aditi Shankar will be pair for Karthi in Viruman Produced by Suriya

Viruman
Viruman
More Articles
Follows