விக்னேஷ்சிவனை பிரதர் பிரதர் என அழுத்தமாக அழைத்த கீர்த்திசுரேஷ்

vignesh shivan and keerthy sureshஸ்டுடியோ கீரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

அனிருத் இசையைமத்துள்ள இப்படத்தை பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பட நாயகன் சூர்யா, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பட நாயகி கீர்த்தி சுரேஷ் பேசும்போது… நான் சூர்யாவின் ரசிகை. இன்று அவருடன் நடித்துவிட்டேன். என்றார்.

மேலும் பட வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை பலமுறை பிரதர் பிரதர் என்று அழுத்தமாக அழைத்தே பேசினார்.

அதன்பின்னர் பேசிய விக்னேஷ்சிவன் பயப்படாதீங்க சிஸ்டர், நீங்க பாதுகாப்பத்தான் இருக்கீங்க” என்றார்.

என்ன ரகசியமோ? என்ன நடந்துச்சோ..?

Overall Rating : Not available

Latest Post