இந்த வருடம் போல அடுத்த வருடமும் சூர்யா பொங்கல்தான்.

TSK suriyaசூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் இந்தாண்டு 2018 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.

இப்படத்திற்கு எதிர்பார்த்த லாபம் இல்லை என தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை வெளியிட்ட பிரபல நிறுவனம் 10 கோடி நஷ்டஈடு கேட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இந்த படம் 2018 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனையடுத்து கே.வி. ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

ஜீன் மாதம் இப்பட சூட்டிங்கை ஆரம்பித்து அடுத்த ஆண்டு 2019 பொங்கல் தினத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.

எனவே இந்தாண்டை போல அடுத்த ஆண்டும் சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் விருந்துதான்.

Overall Rating : Not available

Latest Post