புதிய படங்கள் ரிலீஸ் இல்லை; விஜய்-அஜித்-சூர்யா ரசிகர்கள் ஹாப்பி

புதிய படங்கள் ரிலீஸ் இல்லை; விஜய்-அஜித்-சூர்யா ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajith Suriya fans were happy because of Producers Qube issue strikeதமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

இதற்காக சம்பந்தபட்ட அந்த நிறுவனங்கள் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலித்து வருகின்றன.

புதிய படங்களை திரையிடுவதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலித்து வருகின்றன.

இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இல்லையெனில் புதிய படங்களை திரையிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

அதன்படி மார்ச் 2 வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதனால் தியேட்டர்களில் பழைய படங்களையே திரையிடும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் அஜித், விஜய், சூர்யா ரசிகர்களை கவர தமிழகத்தில் உள்ள ஒரு சில தியேட்டர்கள் அந்த நடிகர்களின் படங்களை திரையிட உள்ளனர்.

அதன்படி மெர்சல், வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை திரையிடுவதால் அந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Vijay Ajith Suriya fans were happy because of Producers Qube issue strike

புதுச்சேரியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல்படை

புதுச்சேரியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல்படை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Puducherry Rajini fans created a team for Abroad Rajini fansவெளிநாட்டு ரசிகர்களை ஒருங்கிணைக்க புதுச்சேரியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல் படை தொடங்கப்பட்டுள்ளது.

இதனை பிரான்ஸ் நாட்டு ரஜினி ரசிகர் திறந்து வைத்தார்.

இவர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுச்சேரியில் முதல் 3 இடம் பெறுவோருக்கு ரஜினிகாந்த் கையால் சிறப்புப் பரிசு தரவும் திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் ரஜினி சங்கர் கூறியதாவது..

“புதுச்சேரி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பலர் பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அதில் பலரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

ரஜினி ரசிகர்களை ஒருங்கிணைக்க உள்ளனர். தற்போது வெளிநாட்டிலிருந்து வந்த ரசிகர் பிரகாஷ், புதுச்சேரிக்காரர்.

அவர் இந்த ஒருங்கிணைப்புப் பணியை செய்ய உள்ளார். அதற்காக தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் பிரான்ஸ் ரசிகர் பிரகாஷ் கூறுகையில்… “வெளிநாட்டில் ரஜினி ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை ஒருங்கிணைக்கவே இம்முயற்சி.

தன் கட்சி தொண்டர்கள் இனி காவலர்கள் போல் இருக்க வேண்டும் என்று ரஜினி கூறியதால் இப்பெயரை வைத்துள்ளோம்” என கூறினார்.

Puducherry Rajini fans created a team for Abroad Rajini fans

rajini kaval padai puducherry

தில்லுக்கு துட்டு பட 2ஆம் பாகத்தை தொடங்கினார் சந்தானம்

தில்லுக்கு துட்டு பட 2ஆம் பாகத்தை தொடங்கினார் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhanams Dhillukku Dhuttu part2 shooting startsHand Made Films சந்தானம் நடித்து, தயாரித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற “ தில்லுக்கு துட்டு “திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் நாயகன் சந்தானம், நாயகி தீப்தி ஷெட்டி, இயக்குநர் ராம்பாலா , ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி, இசையமைப்பாளர் ஷபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது.

Santhanams Dhillukku Dhuttu part2 shooting starts

 

 

Dhillukku Dhuttu

தமிழ் புத்தாண்டில் தடம் பதிக்க வரும் அருண்விஜய்

தமிழ் புத்தாண்டில் தடம் பதிக்க வரும் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay plans to release his Thadam movie on Tamil New Yearகுற்றம் 23 படத்தை தொடர்ந்த நடிகர் அருண்விஜய் மற்றும் தயாரிப்பாளர் இந்திரகுமார் இணைந்துள்ள திரைப்படம் தடம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் இப்படத்தில் அருண்விஜய்யுடன் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியில் உருவான “தடையறத் தாக்க” பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் “தடம்” படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது.

படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது “தடம்” படத்தின் டப்பிங் இன்று துவங்கியது.

இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் “தடம்” தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arun Vijay plans to release his Thadam movie on Tamil New Year

விஜய்யுடன் செல்ஃபி எடுக்க ஆசையா..? அப்படின்னா இதை படிங்க

விஜய்யுடன் செல்ஃபி எடுக்க ஆசையா..? அப்படின்னா இதை படிங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SMACAR Mobile App used to take Selfie with Actor Vijayநடிகர் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் தமிழகத்தில் உள்ளனர்.

இவர்களுக்கு விஜய்யை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் அவருடன் போட்டோ அல்லது செல்ஃபி எடுக்க வேண்டும் என்பதே மிகப்பெரிய ஆசையாக இருக்கும்.

இவர்களின் ஆசையை ஓரளவுக்கு நிறைவேற்றி வைக்க வந்துவிட்டது புது மொபைல் ஆப்.

ஒரு ஆன்ரைடு APP ஒன்று அவரது ரசிகர் விஷால் ராகவ் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்ரைடு APP “SMACAR” என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த APP ஆன்ரைடு மொபைல்களில் PLAYSTORE இல் DOWNLOAD செய்து பயன்படுத்தலாம் .

இந்த APP இல் போட்டோ எடுத்தால் தளபதி விஜயுடன் செஃல்பி எடுப்பதுபோல் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

SMACAR Mobile App used to take Selfie with Actor Vijay

அப்புறமென்ன… விஜய்யுடன் செல்ஃபி இனி உங்க வாட்ஸ் அப் டீபியாக இருக்க போகிறதுதானே…

காவலர்களை நேரடியாக சந்திக்க திட்டம்; ரஜினியின் அடுத்த அரசியல் மூவ்

காவலர்களை நேரடியாக சந்திக்க திட்டம்; ரஜினியின் அடுத்த அரசியல் மூவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini going to meet his TN fans district wise regarding Political eventசில மாதங்களுக்கு முன் தன் அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்தார் ரஜினிகாந்த்.

அப்போது தன் ரசிகர்களை இனி தொண்டர்கள் என அழைக்கமாட்டேன். அவர்கள் காவலர்கள் என்றார்.

இதன் முதற்கட்டமாக ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்.

எனவே தன் அரசியல் கட்சிக்கு மாவட்ட தோறும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை, குமரி என சுமார் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கான மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகிகள் கூடும் ஆலோசனை கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களையும் தன் அறிவுரைகளையும் வீடியோ மூலம் அனுப்பி வந்தார்.

இதனிடையில் திடீரென ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கும் வந்தார்.

இந்நிலையில் தற்போது மாவட்டம் தோறும் சென்று நிர்வாகிகளை நேரடியாக சந்திக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கான பயண திட்டம் விரைவில் மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajini going to meet his TN fans district wise regarding Political event

More Articles
Follows