மீண்டும் இயக்குனராகும் சுரேஷ்மேனன்; புதியமுகம் 2 படத்தை இயக்குகிறார்

மீண்டும் இயக்குனராகும் சுரேஷ்மேனன்; புதியமுகம் 2 படத்தை இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pudhiya-Mugamசினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பல அவதாரங்களை எடுத்து சாதித்திருக்கும் சுரேஷ் மேனன், சினிமா மீது அளவு கடந்த காதலை வைத்திருப்பவர்.

இருபது ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களின் மூலம் மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார்.

இது குறித்து சுரேஷ் மேனன் கூறும்போது…

“சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு. நான் நடிக்காமல் இருந்த காலகட்டங்களில் பல படங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள், ஆனால் என்னை எதுவும் அவ்வளவாக ஈர்க்கவில்லை.

பின்னர் எனக்கு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களில் நடிக்க நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன.

அதில் நடித்ததற்கு நேர்மறை விமர்சனங்களும், பாராட்டுக்களும் கிடைத்தன.

தற்போது வரும் இளம் இயக்குனர்கள் சிறப்பான, துணிச்சலான கதாபாத்திரங்களை எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ் சினிமா துணிச்சலான கதைகள் வரும் ஒரு சிறப்பான கட்டத்தில் இயங்கி வருகிறது.

எதிர்காலத்தில் இது போல சிறப்பான, அர்த்தமுள்ள அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் இயக்குவதற்காக புதிய முகம் படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி வைத்திருக்கிறேன்.

அதற்காக நான் அவசரப்படவில்லை. சென்னை காவல்துறைக்காக போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் என்னுடைய பயனுள்ள நேரத்தை செல்வழித்து வருகிறேன்.

கழிவறைகள் வடிவமைப்பது கட்டுவது என சமூக செயல்பாடுகளிலும் பங்கு ஈடுபட்டு வருகிறேன். சமூக வாழ்க்கையின் அனுபவங்கள் எனக்குள் இருக்கும் இயக்குனருக்கும், நடிகருக்கும் சிறப்பான விஷயங்களை கொடுத்து வருகிறது” என்றார்.

Actor Suresh Menon going to direct Pudhiya Mugam 2

காதலனை ஹீரோவாக்கும் தயாரிப்பாளர் நயன்தாரா; யாருக்கு போட்டி.?

காதலனை ஹீரோவாக்கும் தயாரிப்பாளர் நயன்தாரா; யாருக்கு போட்டி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara going to produce movie Vignesh Shivan as heroஅழகான திறமையான நடிகை என பெயரெடுத்தவர் நடிகை நயன்தாரா. இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 12 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் இன்று வரை நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.

ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

தன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளிலே இவர் கலந்துக் கொள்ளாதபோதும் இவரது கால்ஷீட்டுக்காக டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் காத்திருக்கின்றனர்.

இப்படியாக சினிமாவில் இவர் ஜொலித்துக் கொண்டிருந்தாலும் இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல காதல் தோல்விகளை கடந்து வந்திருக்கிறார்.

நடிகர் சிம்பு உடன் காதல் கொண்டிருந்தார். ஆனால் அந்த உறவு முறிந்தது.

அதன்பின்னர் நடிகர் பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருந்த இவர் திருமணம் வரை சென்ற பின், கருத்து வேறுபாடுகளால் அவரை விட்டு பிரிந்தார்.

அவருக்காக மதம் மாறி, பிரபுதேவாவின் பெயரை தன் கைகளில் கூட பச்சை குத்திக் கொண்டிருந்தார்.

அதன்பின்னர் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்துக் கொண்டிருந்தபோது நானும் ரௌடிதான் பட இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கம் கொள்ள ஆரம்பித்தார்.

இவர்களின் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர்.

நிஜ காதலர்களை மிஞ்சும் அளவில் நெருக்கமான புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்காக சிவகார்த்திகேயன் படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

ஆனால் சில பிரச்சினைகளால் அந்த படத்தை ராஜேஷ் இயக்கவுள்ளார்.

இதனையறிந்த நயன்தாரா, இனி நீங்களே படத்தை இயக்கி ஹீரோவாக நடியுங்கள். படத்தை நான் தயாரிக்கிறேன் என்ற கூறிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இனி விக்னேஷ் சிவனை நாம் ஹீரோவாக பார்க்கலாம். நயன்தாரா நாயகியாக நடிப்பாரா? என்ற தகவல்கள் இல்லை.

அதெல்லாம் சரிதான். இந்த புதிய ஹீரோ வேடம் யாருக்கு போட்டி..?

Nayanthara going to produce movie Vignesh Shivan as hero

கட்சி தொடங்கியபின் மீண்டும் வருகிறார் பிக்பாஸ் கமல்ஹாசன்

கட்சி தொடங்கியபின் மீண்டும் வருகிறார் பிக்பாஸ் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalகடந்த ஆண்டு 2017ல் தமிழகத்தில் எத்தனையோ நிகழ்வுகள் நடைபெற்றாலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி.

விஜய் டிவி நடத்திய அது எல்லாம் ஒரு நிகழ்ச்சியா? என்று கேட்டவர்கள் கூட அதை ஒரு முறையாவது பார்த்தார்கள் என்பதே உண்மை.

கமல் தொகுத்து வழங்கிய பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இறுதியாக பிக்பாஸ் வின்னராக ஆரவ் செலக்ட் ஆனார்.

100 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை 200 நாட்களுக்கு மேலாக விஜய் டிவி மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பியது எல்லாம் தனிக்கதை.

இதில் பங்குபெற்ற ஓவியா தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னி ஆனார். ஜீலி தமிழக மக்களின் வில்லி போல சித்தரிக்கப்பட்டார்.

மற்ற கலைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சியே சினிமா வாய்ப்புகளை அதிகளவில் பெற்றுத் தர தொடங்கியது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 தொடங்கவுள்ளதாகவும் அதனை கமல் அல்லாத வேறொரு நடிகர் தொகுத்து வழங்குவார் என்றனர்.

தற்போது கமலே தொகுத்து வழங்கவுள்ளதாக தெரிகிறது.

முதல் சீசனில் கமல் சினிமா துறைச் சார்ந்தவராக இருந்தார். தற்போது மக்கள் நீதி மய்யத்தின் என்ற கட்சியின் தலைவராகிவிட்டார்.

எனவே இந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி அரசியல் பரபரப்போடு காணப்படும் என்றே கூறலாம்.

இதற்கும் சிலர் போர்க்கொடி பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை….

கமலின் அரசியல் முடிவில் உடன்பாடு இல்லை; கௌதம்மேனன் ஓபன் டாக்

கமலின் அரசியல் முடிவில் உடன்பாடு இல்லை; கௌதம்மேனன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan and gautham menonதமிழ் சினிமாவில் கிளாசிக் டைரக்டர் என்றால் அது கௌதம்மேனன் தான்.

இவர் கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை இயக்கியிருந்தார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது கமல் அரசியல் களம் கண்டுள்ளார். இதுகுறித்து கவுதம் கூறியதாவது..

கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. அது அவருடைய உரிமை.

ஆனால் நான் அவரிடம் இருந்து நல்ல திரைப்படங்களை இன்னும் எதிர்பார்க்கிறேன்.

அவர் சினிமாவில் இருந்து வெளியேறுவதை என்னால் பார்க்க முடியாது. ஒரு ரசிகனாக அவருடன் பணிபுரிந்தவனாக இதனை தெரிவிக்கிறேன்” என கூறியுள்ளார்.

நல்ல குடும்பத்த நாசம் பண்ணாதீங்க; யாருக்கு வார்னிங் கொடுக்கிறார் ஞானவேல்ராஜா மனைவி?

நல்ல குடும்பத்த நாசம் பண்ணாதீங்க; யாருக்கு வார்னிங் கொடுக்கிறார் ஞானவேல்ராஜா மனைவி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gnanavelraja Wife Nehas contraversy tweetசூர்யா மற்றும் கார்த்தி நடித்த பல படங்களை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக தயாரித்தவர் ஞானவேல்ராஜா.

இவரது மனைவி நேஹா ஞானவேல்ராஜா ஒரு சர்ச்சைக்குரிய பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்…

‘திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்கும் பெண்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள் என்றும் அவர்கள் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருப்பதாகவும், இம்மாதிரியான நடிகைகளின் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்றும் பதிவு செய்திருந்தார்.

பின்னர் இந்த டுவீட்டை நீக்கிவிட்டு இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இன்னொரு கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் கூறிய அந்த கருத்து எனது குடும்ப பிரச்சனை குறித்து அல்ல. எனக்கும் என் கணவருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை.

ஆனால் என்னை சுற்றி நடக்கும் ஒருசில விஷயங்கள் என்னை பாதித்துள்ளது. ஒருசில நடிகைகள் திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் விளையாடி அந்த குடும்பத்தின் அமைதியை குலைத்து விடுகின்றனர்.

ஒரு பெண் இதுகுறித்து தைரியமாக பேச முன்வந்தால் பொதுமக்கள் இதனை லீக் என்று கூறுகின்றனர். நான் யாருடைய கவனத்தை ஈர்க்கவும், டிராமா செய்யவும் முயலவில்லை.

என்னுடைய டுவீட் காரணமாக என்னுடைய கணவர் குறித்து வந்து சில கமெண்ட்டுக்கள் காரணமாகவும் இதுவொரு சென்சிட்டிவ் பிரச்சனை என்பதை புரிந்து கொண்டதாலும் அந்த டுவீட்டை நான் நீக்கினேன்.

அதே நேரத்தில் இதுமாதிரியான பெண்களுக்கு அந்த டுவீட் ஒரு வார்னிங்காக இருக்கும்.

சோஷியல் மீடியா எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று நேஹா ஞானவேல்ராஜா பதிவிட்டுள்ளார்.

யாருக்கு வார்னிங் கொடுக்கிறார் ஞானவேல்ராஜா மனைவி?

Gnanavelraja Wife Nehas contraversy tweet

neha-gnanavelraja tweet 21st march 2018

சூர்யாவின் ஜோடி பிரியா வாரியர்..? கேவி ஆனந்த் விளக்கம்

சூர்யாவின் ஜோடி பிரியா வாரியர்..? கேவி ஆனந்த் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KV Anand clarifies who will be heroine in Suriya 37th movieசெல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.’, படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இதன் பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை லைக்கா தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இதில் சூர்யா ஜோடியாக சமூக வலைதளங்களில் டிரெண்டாகிய ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து இயக்குநர் கே.வி.ஆனந்தி கூறியதாவது..

இதில் நாயகியாக நடிக்க ப்ரியா வாரியரை நாங்கள் அணுகவில்லை. எந்த நடிகையுடனும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.

படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் மட்டுமே துவங்கி நடைபெற்று வருகிறது” என்றார்.

டாப் ஹீரோயினை தேடி வருவதாகவும் கூறியிருக்கிறார்.

KV Anand clarifies who will be heroine in Suriya 37th movie

More Articles
Follows