புரோமோசன் பிச்சை எடுத்து நெகட்டிவ் விமர்சனமா?; கடுப்பில் விக்னேஷ்சிவன்

புரோமோசன் பிச்சை எடுத்து நெகட்டிவ் விமர்சனமா?; கடுப்பில் விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vignesh Shivan tweeted about Negative reviewers and Paid Promotersஇப்போது வரும் சினிமாக்கள் ஒரு மாதத்தை தொடுவதே குதிரை கொம்பாக இருக்கிறது.

ஒரு பக்கம் திருட்டு விசிடி, புதிய படங்களை ரிலீஸ் செய்யும் வெப்சைட் இப்படி பல்வேறு அச்சுறுத்தலாலும் சில படங்கள் மொக்கையாக இருப்பதாலும் இந்த குறைவான நாட்களே ஒரு சினிமாவின் வாழ் நாளாக மாறிவிட்டது.

இந்நிலையில் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் படத்தை புரோமோட் செய்ய சில நபர்களை நியமித்து அவர்களுக்கு பணம் கொடுத்து புகழ்ந்து எழுத சொல்கின்றனர்.

சில நிறுவனங்கள் நன்றாக எழுத சொல்லிவிட்டு பின்பு படம் தோல்வியடைந்தால் அந்த நபர்களுக்கு கல்தா கொடுப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒரு நபர் கடந்த ஜனவரி மாதம் ஒரு படம் கூட சரியாக இல்லை என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதில் விக்னேஷ்சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் கடந்த ஜனவரி மாதம்தான் வெளியானது.

எனவே இந்த ட்விட்டரை குறிப்பிட்டு அசிங்கமாக திட்டியுள்ளார்.

நாங்கள் கஷ்டப்பட்டு படம் எடுக்கிறோம். ஆபிஸ்க்கு வந்து புரோமோசன் கேட்டு பிச்சை எடுக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் இப்படி நெகட்டிவ்வாக பேசுகிறார்கள்.

இந்த மாதிரி ஆளுங்கள பாத்தா வெரட்டி வெரட்டி வெளுக்க தோனுது என அந்தப் பட பாடல் வரியை குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

உங்ககிட்ட காசு வாங்கினா மோசமான படத்தை நல்ல படம்னு சொல்லனுமா? என்று சிலர் சொல்லகின்றனர்.

வேறு சிலரோ, இந்த மாதிரி ஆளுங்கள வளர்த்துவிடுறதே நீங்கதானே என என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நீங்க நல்ல படம் கொடுத்தா? அப்படி ஏன் சொல்றாங்க? என நடுத்தரமானவர்களும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Vignesh Shivan tweeted about Negative reviewers and Paid Promoters

Vignesh ShivN‏Verified account @VigneshShivN 11m11 minutes ago
Vignesh ShivN Retweeted Kaushik LM
Soltaaruu *****!
Such negative people r a curse to our industry! How much ever we work hard! they jus keep discouragin us wit such senseless tweets!
(They come to office n beg for money n then do this too!)
Ivanaa maadhiri negative aanaa aallungalaa Paathaalae Verattii****

சொன்னாங்க ஆனா செய்யல; பிக்பாஸ் கலைஞர்கள் பற்றி வையாபுரி

சொன்னாங்க ஆனா செய்யல; பிக்பாஸ் கலைஞர்கள் பற்றி வையாபுரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vaiyapuriகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

தற்போதும் கூட அதன் ஹைலைட்ஸை அவர்கள் ஒளிபரப்பி வருவது வேறு கதை.

இந்த நிகழ்ச்சியில் ஆரவ், கஞ்சா கருப்பு, வையாபுரி, சிநேகன், நமீதா, ஓவியா, ஜீலி, பிந்தமாதவி, ரைசா, சக்தி, கணேஷ்வெங்கட்ராம், பரணி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில் தற்போது சுந்தர்.சியின் கலகலப்பு 2 படத்தில் நடித்திருக்கிறார் வையாபுரி.

இது தொடர்பான ஒரு பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது… இந்த பிக்பாஸ் ஷோ முடிஞ்சி நாம வெளியே போன பிறகு எல்லாரும் சேர்ந்து போகாத ஊருக்கெல்லாம் போய் வரும் என்றார்கள்.

ஆனால் இதுவரை யாரும் செய்யவில்லை. அப்படியே போன் செய்தாலும் யாரும் போனை எடுப்பது இல்லை” என மிக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் வையாபுரி.

விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது..? தந்தை எஸ்ஏசி. பேட்டி

விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது..? தந்தை எஸ்ஏசி. பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and SACரஜினி, கமல், விஷால் தங்கள் அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்து விட்டனர்.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கும் விஜய்யின் அரசியல் குறித்து இது வரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

அவர் நிச்சயம் வருவார் என்றே அவரது தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியதாவது…

ஒரு தந்தையாக என் மகனுக்கு அவர் ஓடுவதற்கான எல்லா விஷயங்களையும் தயார் செய்து கொடுத்து விட்டேன்.

ஆனால், அவர் ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் உள்ளது.” என கூறியுள்ளார்.

பார்த்திபன் மகள் கீர்த்தனாவை மணக்கும் பிரபல இயக்குனர்

பார்த்திபன் மகள் கீர்த்தனாவை மணக்கும் பிரபல இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akshay Akkineniநடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி நடைபெறவுள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்திருந்தோம்.

தற்போது அவர் யாரை திருமணம் செய்துக் கொள்ள போகிறார் என்ற தகவல்கள் வந்துள்ளன.

பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷய் அக்கினேனியை தான் திருமணம் செய்து கொள்ள போகிறாராம்.

தமிழில் சூப்பர் ஹிட்டான பீட்சா படத்தை அக்ஷய் ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபி சரவணன் நடிக்கும் திரு.வாக்காளர் பட பூஜை நடைபெற்றது

அபி சரவணன் நடிக்கும் திரு.வாக்காளர் பட பூஜை நடைபெற்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Abi Saravanan1986 law Batch Media Productions தயாரிக்கும் முதல் படமான திரு. வாக்காளர் பட பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது.

இப்படத்தின் இயக்குநர் தி.இரமேஷ் பிரபாகரன். இவர் வாசு, மகேந்திரன் ஆர்.வி.உதயகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

இவர் ஏற்கனவே கன்னடத்தில் கள்மஞ்சா என்ற வெற்றி படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அபி சரவணன் நடிக்கிறார். மேலும் 3 புதுமுகங்கள் நடிக்க உள்ளனர்.​

இப்படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், நாடார் சங்க தலைவர் த.பத்மநாபன், திருவள்ளுர் மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் திருவடி மற்றும் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், ராஜா ரவி, வி.சி.குகநாதன் ,லியாகத் அலிகான்,ஆர். சுந்தர்ராஜன், மனோஜ்குமார் ,E.ராம்தாஸ், நடிகர்கள் நட்டி எ நடராஜ், ஆரி,அபி சரவணன், வையாபுரி ,ராம்ஜி,

தயாரிப்பாளர்கள் m.m.தாஹா, P.T.செல்வ குமார்,பொன்னுமணி மஞ்சுநாத் ரவி,கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம், சண்டை பயிற்சியாளர்கள் தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில்…

சட்டத்தாலும் சத்தத்தாலும் மட்டுமே வருவதல்ல மாற்றம் அது வாக்கு வாங்கும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். வாக்களிக்கும் வாக்காளர்களுக்கும் பொருந்தும் ஒவ்வொரு வாக்காளரும் திரு. வாக்காளர் ஆகவேண்டும் என்பதற்கான முயற்சியே இப்படம் என கூறினார். இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் படத்திற்காக சிம்பு செம ஒர்க்அவுட்; வைரலாகும் வீடியோ

மணிரத்னம் படத்திற்காக சிம்பு செம ஒர்க்அவுட்; வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STRமணிரத்னம் இயக்கத்தில் லைக்கா தயாரிக்கும் புதிய படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பகத் பாசில் மற்றும் ஜோதிகா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு தன் உடல் எடையை சிம்பு குறைக்க பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் அதிகம் பகிர அது இணையங்களில் வைரலாகி வருகிறது.

More Articles
Follows