சூர்யா ரசிகர்களுக்கு மார்ச் 5ல் செல்வராகவன் விருந்து

suriya 36தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

அண்மையில் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யாவுடன் சாய்பல்லவி, ரகுல் பிரீத் சிங் என இருவரும் நடித்து வருகின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மார்ச் 5 ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்தாண்டு 2018 தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட திட்டமிட்டு படக்குழு பணியாற்றி வருகிறது.

Overall Rating : Not available

Latest Post