கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு சிவாஜி நடித்த ‘பராசக்தி’ சிறப்பு காட்சி

கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு சிவாஜி நடித்த ‘பராசக்தி’ சிறப்பு காட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் திலகம் என போற்றப்படக்கூடிய சிவாஜி கணேசன் அறிமுகமான தமிழ் திரைப்படம் ‘பராசக்தி’.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வசனத்தில் உருவான இந்த திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. 1952 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது.

இந்த நிலையில் கலைஞர் கருணாநிதி நூறாண்டு நிறைவை கொண்டாடும் வகையில் நாளை 2023 ஜூன் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தை திரையிட உள்ளது திமுக மகளிர் அணி.

இதற்கான சிறப்பு காட்சி நாளை காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் படம் திரையிடப்பட உள்ளது.

இதில் திரைப்பிரபலங்கள் & சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

Karunanidhi 100 Years Parasakthi Special show

பராசக்தி பட தகவல்கள்…

நடிப்பு
சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி, கண்ணாம்பா, வி.கே.ராமசாமி, குமாரி கமலா

ஒளிப்பதிவு
எஸ்.மாருதி ராவ்

இசை
எஸ்.சுதர்சனம்

பாடல்கள்
சுப்ரமணிய பாரதி, பாரதிதாசன், மு.கருணாநிதி, உடுமலை நாராயண கவி,

கதை
எம்.எஸ்.பாலசுந்தரம்

திரைக்கதை, வசனம்
கலைஞர் மு.கருணாநிதி

இயக்கம்
ஆர்.கிருஷ்ணன், எஸ். பஞ்சு

தயாரிப்பு
ஏ.வி.மெய்யப்பன், பி.ஏ. பெருமாள் முதலியார்

மேடையில் பாடிக் கொண்டிருந்த நிஷாவை துப்பாக்கியால் சுட்ட நபர்.; போலீஸ் விசாரணை

மேடையில் பாடிக் கொண்டிருந்த நிஷாவை துப்பாக்கியால் சுட்ட நபர்.; போலீஸ் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பீகாரை மாநிலத்தைச் சேர்ந்த பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாய்.

சரண் மாவட்டத்தில் உள்ள கவுர் பசந்த் கிராமத்தைச் சேர்ந்தவர்.

அவர் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வருகிறார்.

சரண் மாவட்டத்தில் உள்ள செந்துவார் கிராமத்தில் உபநயன் விழாவில் பாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு பாடகி நிஷா உபாத்யாய் வந்தார். அதிகாலை வரை நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

வீரேந்திசிங் என்பவரது வீட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாடகி நிஷா பாடிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், அப்போது கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், திடீரென துப்பாக்கியால் சுட்டார்.

இதில், பாடகி நிஷாவின் இடதுதொடையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதனால் அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலம் தொடையில் இருந்த தோட்டாவை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது பாடகி நிஷா நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய தகவலின்படி, நிஷாவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவ குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் யார், நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு எப்படி நடந்தது என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

Bhojpuri singer Nisha Upadhyay shot at in firing during show

தி கேரளா ஸ்டோரி-யை தொடர்ந்து வரும் ‘சென்னை ஸ்டோரி’.; சமந்தாவின் அடுத்த அதிரடி!

தி கேரளா ஸ்டோரி-யை தொடர்ந்து வரும் ‘சென்னை ஸ்டோரி’.; சமந்தாவின் அடுத்த அதிரடி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு துருக்கியில் நடந்து வருகிறது.

அடுத்து, ராஜ் மற்றும் டீகே இயக்கும் ‘சிட்டாடெல்’ வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

இதையடுத்து அவர் ஆங்கிலப் படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை சமந்தா.

இந்தப் படத்துக்கு ‘சென்னை ஸ்டோரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் சமந்தா, தனியார் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார்.

சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் திமேரி என்.முராரி (Timeri N.Murari) எழுதிய ‘அரேஞ்மென்ட் ஆஃப் லவ்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது.

இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஹாலிவுட் நடிகர் விவேக் கல்ரா ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தை பாஃப்டா விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்குகிறார். தெலுங்கில் வெளியான ‘ஓ பேபி’ படத்தைத் தயாரித்த குரு பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாகும் இந்தப் படத்துக்காக, இயக்குநர் பிலிப் ஜான் சென்னை வந்துள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

Samantha to make her Hollywood debut with Chennai Story

SMS பட சிஸ்டர் சினேகாவை நினைவிருக்கா.? இப்போ அவங்க நிறைமாத கர்ப்பிணி.!

SMS பட சிஸ்டர் சினேகாவை நினைவிருக்கா.? இப்போ அவங்க நிறைமாத கர்ப்பிணி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவான படம் ’சிவா மனசுல சக்தி’.

’சிவா மனசுல சக்தி’ படம் கடந்த 2009 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

ராஜேஷ் இயக்கத்தில் வெளியான முதல் படமான இந்த படத்தில் தான் நடிகை அனுயா அறிமுகம் ஆனார்.

இப்படத்தில் ஜீவாவின் தங்கையாக நடித்தவர் சினேகா முரளி.

இந்த படத்தில் அவரது கேரக்டர் ஜாலியாக அமைக்கப்பட்டிருக்கும்.

சினேகா முரளி இந்த படத்தை அடுத்து அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இருப்பினும் இசையில் ஆர்வம் உள்ள அவர் ஒரு சில ஆல்பங்கள் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணமும் நடைபெற்று இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர் தனது திருமண நாளை கொண்டாடிஇருந்தார் சினேகா முரளி.

இந்த நிலையில் சினேகா முரளிக்கு தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

தான் கர்ப்பமாக இருக்கும் புகைபடத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இதனை தொடர்ந்து இவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

siva manasula sakthi actress Sneha Murali pregnant

கமல் பரப்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குனர்

கமல் பரப்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

சமீபத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து பேசிய கமல், “அந்த படம் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டது அல்ல என்று கூறினார். மேலும், டைட்டில் கார்டில் “உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்” என்று பாேடும் அளவிற்கு படத்தில் உண்மை இல்லை” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குனர் சுதிப்டோ சென், “இதுபோன்ற விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதை இப்போது நிறுத்திவிட்டேன். படத்தை பார்க்காமலேயே சிலர் விமர்சனம் செய்கிறார்கள். படம் பார்த்தவர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொள்கிறார்கள். நம் நாட்டில் நிறைய முட்டாள்தனமான முன் முடிவுகள் இருக்கின்றன.” எனக் கூறியுள்ளார்.

அப்படி போடுவதனால் மக்களை இதுதான் உண்மை கதை என ஏமாற்றிவிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

the kerala story director Sudipto Sen answer to kamalhaasan comment

‘இந்தியன் 2’ பட அனுபவம் குறித்து நடிகர் சித்தார்த்தின் உற்சாகமும் நன்றியும்

‘இந்தியன் 2’ பட அனுபவம் குறித்து நடிகர் சித்தார்த்தின் உற்சாகமும் நன்றியும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சித்தார்த் கமல்ஹாசனுடன் இணைந்து “இந்தியன் 2” இல் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இருவருடனும் பணிபுரிந்த பாக்கியத்தை வெளிப்படுத்தினார்.

2 தசாப்தங்களுக்குப் பிறகு வாய்ப்பை வழங்கிய இயக்குனருக்கு நன்றியை தெரிவித்தார்.

இந்த படத்திற்கான அழைப்பைப் பெறுவதற்கு, நான் மிகவும் பாக்கியவானாக கருதுகிறேன்.

மீண்டும் என்னை அழைத்ததற்காக ஷங்கர் சாருக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றார்.

Actor Siddharth’s Excitement and Gratitude about his experience in ‘Indian 2’

More Articles
Follows