கருணாநிதி வாழ்க்கை படத்தை உருவாக்க பிரபல இயக்குனரை அனுகும் உதயநிதி.!?

கருணாநிதி வாழ்க்கை படத்தை உருவாக்க பிரபல இயக்குனரை அனுகும் உதயநிதி.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையை திரைப்படமாக்க திமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனையடுத்து கருணாநிதி குடும்பத்தினர் இந்த படத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி பிரபல இயக்குனர் வெற்றிமாறனை உதயநிதி அணுகி பேச உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

வெற்றிமாறன் கைவசம் தற்போது சூரி நடிக்கும் ‘விடுதலை பார்ட்-1 பார்ட் 2’ மற்றும் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ ஆகிய படங்கள் உள்ளன. எனவே அவர் ஒப்புக் கொள்வாரா ? என்பது தெரியவில்லை.

ஆனாலும் தமிழின தலைவர் கலைஞரின் வாழ்க்கை படமாக்க அவர் ஒப்புக் கொள்வார் எனவும் மற்றொரு புறம் பேசப்படுகிறது.

இந்த படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்க உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Udhayanidhi wants famous director to make Karunanidhi biopic?

NTR30: அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இதோ !

NTR30: அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இதோ !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூனியர் என்டிஆரின் 30வது படம் பிப்ரவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறது . அனைத்து முக்கிய தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் வெளியிடப்படும் இந்த பான்-இந்தியன் படம் ஏப்ரல் 5, 2024 அன்று திரைக்கு வரஉள்ளது .

படத்தின் நாயகி ஜான்வி கபூர் என்று கூறப்படுகிறது. ஆனால் பெயரை தயாரிப்பாளர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை.படத்திற்கு அனிருத் இசை . ரத்ன வேலு ஒளிப்பதிவு

NTR30: Release date made official!

தளபதி விஜய்யின் வாரிசு ட்ரெய்லர் ரிலீஸ் தேதி இதுவா ?

தளபதி விஜய்யின் வாரிசு ட்ரெய்லர் ரிலீஸ் தேதி இதுவா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்படக் குழு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு டிரெய்லரை ஜனவரி 2, 2023 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளது. படத்தின் நட்சத்திரக் குழுவைச் சேர்ந்த நடிகை நந்தினி ராய், தெலுங்கு பதிப்பிற்கான பிரமாண்டமான முன் வெளியீட்டு விழாவை சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தினார். ‘வரசுடு’ ஜனவரி முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்வில் நடிகர்கள் மற்றும் குழுவினருடன் தளபதி விஜய் சேரலாம் என்று நடிகை மேலும் கூறினார். இதற்கிடையில், டோலிவுட் நடிகர் பவன் கல்யாண் பிரீ ரிலீஸ் விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Is the Varisu trailer release date confirmed?

இந்தியாவின் பிரபலமான இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்?

இந்தியாவின் பிரபலமான இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் எஸ்எஸ் ராஜமௌலி முதல் முறையாக ஒரு படத்தில் இணைய உள்ளனர் .

தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அனைத்தும் நல்லபடியாக நடந்தால் திட்டம் இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் ஜங்கிள் அட்வென்ச்சர் படத்தை முடித்த பிறகு யுனிவர்சல் ஹீரோவுடன் இணைய எஸ்எஸ் ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Kamal Haasan to team up with Indias most popular director?

என்னை மாதிரி அயோக்கிய பய மேல கை வைக்கலாமா? துணிச்சலான அஜித்தின் ‘துணிவு’ டிரைலர்

என்னை மாதிரி அயோக்கிய பய மேல கை வைக்கலாமா? துணிச்சலான அஜித்தின் ‘துணிவு’ டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘துணிவு’.

ஜிப்ரான் இசையமைக்க இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இன்று டிசம்பர் 31ஆம் தேதி மாலை 7 மணிக்கு ‘துணிவு’ ட்ரைலர் வெளியானது.

இந்த ட்ரெய்லர் இரண்டு நிமிடங்களுக்கு குறைவாக அதாவது 1.50 நிமிடங்களே உள்ளன.

இந்த ட்ரெய்லரில் அஜித்தை பார்த்து பிரேம் கேட்கிறார்.. “மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க உனக்கு வெட்கமா இல்லையா?

“இல்லை என்று கூறிவிட்டு தனது முகமூடியை அவிழ்க்கிறார் அஜித்.

இதனைத் தொடர்ந்து அதிரடியான துப்பாக்கி சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

முக்கியமாக அஜித் தன்னுடைய இமேஜை பற்றி கவலை கொள்ளாமல் துணிச்சலாக நெகட்டிவான வசனங்களை பேசியுள்ளார்.

பேங்கில் அஜித்துக்கு கொள்ளை அடிக்கப் போகும்போது… உங்களுக்கு என்ன வேணும்? என்று ஒருவர் கேட்கிறார்..

பேங்க்ல பீர் பிராந்தி கேப்பாங்க? என்று பேசுகிறார் அஜித்.

அதனை அடுத்து ..*என்னை மாதிரி அயோக்கிய பையன் மேல கைய வைக்கலாமா.? என்று கூறிவிட்டு அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இறங்கி ஆட்டம் போடுகிறார் அஜித்.

இந்த ட்ரெய்லர் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Much awaited Thunivu trailer released

Here’s much awaited Thunivu Official Trailer l filmistreet #Ajithkumar ?? https://www.filmistreet.com/video/thunivu-official-trailer/

சிலம்பரசனுக்கு கழுத்தை நீட்டிய ‘பிக் பாஸ்’ பிரபலம்.? சொல்லவே இல்ல.??!!

சிலம்பரசனுக்கு கழுத்தை நீட்டிய ‘பிக் பாஸ்’ பிரபலம்.? சொல்லவே இல்ல.??!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் வித்தியாசமான தலைப்பில் ஒளிபரப்பாகும் என்பது நம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது ‘உ சொல்றியா.? ஊஹூம் சொல்றியா.? என்ற ஒரு நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக ஐஸ்வர்யா தத்தா, சாக்ஷி அகர்வால் மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது..” உங்கள் வாழ்வில் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு நகைச்சுவையான செய்தி என்ன? என்று தொகுப்பாளர்கள் கேட்டனர்.

அதற்கு ஐஸ்வர்யா தத்தா பேசும்போது.. ” எனக்கும் சிம்புவுக்கும் திருமணம் என்ற செய்தி எனக்கே வந்தது என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

அதுபோல விராட் கோலி முதல் கேர்ள் பிரண்டு நான் தான் என்று அது வதந்தி கிளம்பியது என சாக்ஷி அகர்வால் கூறினார்.

இது தொடர்பான புரோமோ வீடியோ தற்போது இணையங்களில் வைரல் ஆகி வருகிறது.

2018-இல் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg boss celebrity talks about marriage with simbu

More Articles
Follows