கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்தார்.; ஸ்டாலின் – ரஜினி பங்கேற்பு

கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்தார்.; ஸ்டாலின் – ரஜினி பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் தோட்டத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சராக ஐந்து முறையும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக ஐம்பது வருடங்களாக பொறுப்பு வகித்தவர் கலைஞர்.

அரசியல் மட்டுமின்றி, திரைப்பட வசனகர்த்தா, கதை, கவிதை நாடகம் என கால் பதித்த அனைத்துத் துறைகளிலும் தனி முத்திரை பதித்தவர்.

70 ஆண்டுகளாக “உடன்பிறப்பே” எனும் தன் காந்தக் குரலால், தமிழக மக்களை கட்டிப்போட்டவர்.

எனவே மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 16 அடி உயரத்திலான முழு உருவ வெண்கலச் சிலை, 12 அடி உயரத்திலான பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையை போன்றே தத்ரூபமாக சிலையை வடித்துள்ளார் மீஞ்சூர் சிற்பி தீனதயாளன்.

முழுவதும் வெண்கலத்தால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது. சிலை வைக்கும் இடத்தை சுற்றி சுமார் 5,250 சதுர அடியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அழகிய பூங்கா, வண்ண விளக்குகள் போன்ற வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், சினிமா உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். கவிஞர் வைரமுத்துவும் பங்கேற்றார். இருவரும் மேடை கீழே முதல் வரிசையில் அருகருகே அமர்ந்து இருந்தனர். இவர்களுடன் அரசியல் கட்சி தலைவர் ப. சிதம்பரம், வைகோ உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக எம். பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ரஜினி பங்கேற்ற படத்தை அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

கருணாநிதி சிலை

The statue of Karunanidhi was unveiled by the Vice President of India

ஐபிஎல் பைனல் மேட்ச்.; நரேந்திர மோடி மைதானத்தில் ஏஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி

ஐபிஎல் பைனல் மேட்ச்.; நரேந்திர மோடி மைதானத்தில் ஏஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2008ல் ஆரம்பமானது.

கடந்த 15 வருடங்களாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இந்த வருட ஐபிஎல் போட்டி, கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது.

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் நாளை (29-05-22) நடக்கவிருக்கிறது.

இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் பைனல் மேட்ச் நடக்கிறது.

இந்த ஆண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட இரண்டு அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் ஆண்டிலேயே இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

நாளை இறுதி ஆட்டத்திற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகள் வழக்கம்போல நடைபெற உள்ளன.

இதில் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்றை ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

கடந்த 75 வருடங்களாக பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

எனவே அதனைப் பெருமைப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி அமைய உள்ளது என ஏஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரலையிலும் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

IPL Final Match; AR Rahman Music Concert at Narendra Modi stadium

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண இடம் மாற்றம்.; ஒளிப்பரப்பு ஓடிடி-க்கு விற்பனை

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண இடம் மாற்றம்.; ஒளிப்பரப்பு ஓடிடி-க்கு விற்பனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

2015ல் வெளியான இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க அனிருத் இசையமைத்து இருந்தார்.

இந்த பட சூட்டிங் சமயத்தின் போதே நயன் & விக்கி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர்.

இருவரும் எங்கும் சென்றாலும் இணைந்தே சென்றனர். சமூக வலைத்தளங்களில் ஜோடியாக போட்டோ போட்டு அசத்துவார்கள்.

இருவரும் அடிக்கடி அனைத்து மத வழிப்பாட்டு தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

அண்மைக்காலமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி பல படங்களை தயாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.

கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு மேலாக இவர்கள் காதலித்துக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு எப்போது திருமணமாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறும் என தகவல் வெளியானது.

ஆனால் அவர்கள் இருவரும் இது குறித்து இதுவரை பேசவில்லை.

இதனிடையில் விக்னேஷ் சிவனின் குலத்தெய்வ கோயிலில் நயன்தாரா வழிபாடு செய்துள்ளார்.

கணவன் மனைவியா ஒற்றுமையா வாழனும்.; விக்னேஷ் சிவன் குலதெய்வ கோயிலில் நயன்தாரா வேண்டுதல்

தஞ்சாவூர்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள மேலவழுத்தூர் கிராமத்தில், ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோயில் உள்ளது.

இந்த கோயில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலத்தெய்வக் கோயில் எனச் சொல்லப்படுகிறது.

இந்த கோயிலில் இருவரும் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

கணவன், மனைவி ஒற்றுமையாக வாழ வழிப்பாடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ள இடம் மட்டும் மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமண வைபவத்திற்கு 150 விருந்தினர்கள் வரை மட்டுமே கலந்து கொள்ள அனுமதியாம்.

எனவே நயன் – விக்கி உறவினர்களுக்கு இந்த நிபந்தனையில் திருப்தி இல்லையாம்.

அதனால் சென்னை ஈசிஆர் மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு பெரிய ரிசார்ட் ஒன்றில் அதே ஜூன் 9-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

மேலும் இந்த காதல் திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாம்.

Nayanthara – Vignesh Shivan Wedding Venue Changed

Wanted VIK-RAM..; ‘விக்ரம்’ படத்துடன் இணைந்த ‘பஞ்சதந்திரம்’ டீம்.; சூப்பர் கிரியேட்டிவ்

Wanted VIK-RAM..; ‘விக்ரம்’ படத்துடன் இணைந்த ‘பஞ்சதந்திரம்’ டீம்.; சூப்பர் கிரியேட்டிவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’.

இதில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதெல்லாம் கமல் லிஸ்ட்ல இல்லையே.; லோகேஷுக்கு அடித்த அதிர்ஷ்டம்

இந்த படத்திற்கு ‘ஜல்லிக்கட்டு’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனமும் தமிழக உரிமையை உதயநிதியும் வாங்கி உள்ளனர்..

படத்தின் தெலுங்கு பதிப்புக்கு “விக்ரம் ஹிட் லிஸ்ட்” என பெயரிடப்பட்டுள்ளனர்.

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா கொடுக்கும் செம ட்விஸ்ட்

இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் ஜூன் 3ல் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படம் தொடர்பான வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் கமலுடன் நடித்த ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யூகி சேது ஆகியோர் பேசிய ‘கான்பிரன்ஸ் கால்’ போலவே ஒருவருக்கொருவர் பேசுவதாக உள்ளது.

அந்த 2 நிமிட வீடியோவில்…

‘Panchatantram’ team up with ‘Vikram’ film; Super Creative

வட இந்தியா & தென் இந்தியா குறித்த கேள்விக்கு கமலின் நெத்தியடி பதில்

வட இந்தியா & தென் இந்தியா குறித்த கேள்விக்கு கமலின் நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’.

இதில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதில் படத்திற்கு ‘ஜல்லிக்கட்டு’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

அனிருத் இசையமைத்துள்ளார்.

சர்ப்ரைஸ் விசிட் : கமல்ஹாசனை கட்டியணைத்து கண்ணீர் விட்ட ரசிகர்கள்

விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனமும் தமிழக உரிமையை உதயநிதியும் வாங்கி உள்ளனர்..

விக்ரம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு “விக்ரம் ஹிட் லிஸ்ட்” என பெயரிடப்பட்டுள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் ஜூன் 3ல் ரிலீசாகவுள்ளது.

இதனையடுத்து கமல் சுற்றுப் பயணம் செய்து படத்தின் புரோமோசன் செய்து வருகிறார்.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் விஜய்…; இயக்குநர் இவரா.?

அப்போது வட மாநிலங்கள், தென் மாநிலங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கமல் பதிலளித்தாவது…

‘முதலில் நான் ஒரு இந்தியன். என்னைப் பொறுத்தவரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உங்களுடையது. தாஜ்மஹால் எங்களுடையது.

கன்னியாகுமரி எந்த அளவுக்கு உங்களுக்கு சொந்தமோ, அதே அளவுக்கு காஷ்மீர் எனக்கு சொந்தம்’ என்று நெத்தியடியாக பதில் கொடுத்தார் கமல்.

Kamal Haasan answers the question about North India & South India

பான் இந்திய நடிகைகள் பங்கேற்பு.; சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ பட இசை விழா

பான் இந்திய நடிகைகள் பங்கேற்பு.; சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ பட இசை விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர்.

‘தி லெஜன்ட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

‘தி லெஜண்ட்’ படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இளமை ததும்பும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளார்.

இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் ’மொசலோ மொசலு’-வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்ட நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் பாராட்டுகளை பாடல் கடந்து மாநகரம் முதல் கிராமம் வரை ஹிட் அடித்துள்ளது. பா விஜய் பாடல் வரிகளை இயற்ற, அர்மான் மாலிக் பாடியுள்ளார்.

ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள ‘மொசலோ மொசலு’ பாடலில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோருடன் தோன்றும் லெஜண்ட் சரவணனன், தனது நடன அசைவுகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாடலான பென்னி தயாள் மற்றும் ஜொனிதா காந்தி பாடி கவிஞர் சினேகன் எழுதிய ‘வாடி வாசல்’ சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ஒரு கோடி பார்வைகளை கடந்து வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு பாடல்களின் வெற்றிக்கு மகுடம் சூட்டும் வகையில், ‘தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை ஞாயிறு (மே 29) அன்று நடைபெறவுள்ளது.

படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்களோடு பிரபல நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன, ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி அகில இந்திய நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.

தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜன்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

லெஜண்ட் சரவணன் பட நடிகை ஊர்வசி ரெளடாலாவின் சேறு குளியல்

தங்கள் தனி திறமையால் முத்திரை பதித்து அனைத்து மொழியிலும் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் ‘தி லெஜண்ட்’ படத்தில் லெஜெண்ட் சரவணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது தி லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’.

ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரும் ரசித்து மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் அனைவரின் மனதிலும் ஒரு மிக பெரிய பாசிட்டிவ் எண்ணத்தை உணரும் வகையில் திரைக்கதையும் வசனமும் எழுதப்பட்டிருக்கிறது.

வில்லன் நடிகரை தெறிக்க விடும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன்..; பாத்தா நீங்களே அசந்துடுவீங்க

சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன.

ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் மட்டுமன்றி, இப்படம் தனக்கு ஒரு முக்கியமான படம் என பல நேரங்களில் லெஜண்ட் சரவணன் மற்றும் படக்குழுவினருடன் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய முன்னணி நகைச்சுவை நாயகன் யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் பயணிக்கிறார்.

படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் லெஜண்ட் சரவணனுடன் இணைந்துள்ளனர்.

விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார், ரூபன் எடிட் செய்கிறார், கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்கிறார், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார்,

சண்டைப்பயிற்சியை அனல் அரசு கையாள்கிறார், ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொள்கிறார்கள், வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர்

ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற உள்ள விழாவில் பான்-இந்தியா நட்சத்திரங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

***

Legend Saravanan’s ‘The Legend’ trailer & audio launch to take place in a grand manner

More Articles
Follows