தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமா பெருமைப்படும் வகையில் தன் நடிப்பாற்றாலை கொடுத்தவர் சிவாஜி கணேசன்.
இவர் அறிமுகமான முதல் படமான ‘பராசக்தி’ படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க திரைக்கதை வசனம் எழுதியிருந்தார் கலைஞர் கருணாநிதி.
தற்போது கருணாநிதி நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் நேற்று ஜூன் 4ம் தேதி சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் பராசக்தி திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
இதற்கான நிகழ்வில் திரை பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கனிமொழி எம்பி பராசக்தி குறித்தும் தன் தந்தையின் வசனம் குறித்து பேசினார். அவர் பேசுகையில்…
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் ரசிகர் கருணாநிதி என்று சொல்லலாம்.
எப்படி நடிக்கிறான் பாரு எனப் படம் ஓடிக் கொண்டிருக்கும்போது எழுந்து சென்று தொலைக்காட்சியில் முத்தம் கொடுப்பார் கலைஞர். அம்மா கூட கிண்டலடிப்பார்கள்.
ஆனாலும், அவரால் கட்டுப்படுத்த முடியாது. நாயகனுக்குப் பகுத்தறிவு சொல்லிக் கொடுத்து, நாயகனுக்கு வழிகாட்டிய படமாகப் பராசக்தி திரைப்படம் அமைந்தது.
இப்போது வரை தமிழ் சினிமா ஹீரோயின்கள் பைத்தியக்காரத்தனமாக கேள்விகள் கேட்பது போல தான் கதாபாத்திரங்கள் உள்ளன. ஆனால், அன்றே கதாநாயகியைச் சிந்திக்கத் தெரிந்த, சமூகக் கருத்துகள் பேசும் கதாநாயகியாக உருவாக்கியிருந்தார் கலைஞர்.” என்று பேசினார் கனிமொழி கருணாநிதி.
Kanimozhi MP speech about Parasakthi movie