ஜெயலலிதாவின் படத்தில் எம்ஜிஆர் & கருணாநிதி யார்.?

jayalalithaமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பல இயக்குனர்கள் படமாக எடுத்து வருகின்றனர்.

தலைவா பட இயக்குனர் விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கி வருகிறார்.

இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்க உள்ளார். அவர் இதற்கான கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராமிடம் நடன பயின்று வருகிறார்.

எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கவுள்ளாராம்.

கருணாநிதி கேரக்டரில் நடிக்க பிரகாஷ்ராஜிடம் பேசி வருகிறார்களாம். அவரின் பதிலுக்காக படக்குழு காத்திருக்கிறது.

ஏற்கெனவே மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் மோகன்லால் மற்றும் கருணாநிதி கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post