என் அரசியல் ஆசான் கருணாநிதி..; கமலுக்கு என் மீது எல்லாம் உரிமையும் உண்டு

என் அரசியல் ஆசான் கருணாநிதி..; கமலுக்கு என் மீது எல்லாம் உரிமையும் உண்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khushbooமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் 96–வது பிறந்தநாளை பா.ஜ.க. இன்று கொண்டாடி வருகின்றனர்.

தமிழக பாஜக மீனவரணி சார்பில் சென்னை மெரினா நடுக்குப்பம் மீன்மார்க்கெட் அருகில் மீனவ பெண்களுக்கு அலுமினிய மீன்கூடை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதில் பாஜக சார்பாக நடிகை குஷ்பு கலந்து கொண்டார். பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். குஷ்புடன் ‘செல்பி’ எடுத்தனர் மக்கள்.

பின்னர் குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதிக்கு என்னை பொறுப்பாளராக நியமித்துள்ளனர். எனவே எனது பணியை செய்து கொண்டிருக்கிறேன்.

கேள்வி : வேளாண் சட்டங்கள் குறித்து குஷ்புக்கு ஒன்றுமே தெரியாது என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளாரே?

கமல்ஹாசன் நல்ல நண்பர். அவருக்கு எல்லா உரிமையும் உள்ளது.

அரசியல் களத்தில் நெருங்கிய நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை என அரசியல் ஆசான் கருணாநிதி எனக்கு சொல்லி கொடுத்துள்ளார்.

கருணாநிதி மாதிரி ஒரு தலைவர் இல்லை. இப்போதுள்ள தி.மு.க.வுக்கு, கருணாநிதி காலத்தில் இருந்த தி.மு.க.வுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

கமல்ஹாசன் எனது நண்பர். என்னை திட்டலாம், என்னை அணைத்து கொள்ளலாம். கமல் அந்த உரிமை உள்ளது.

இவ்வாறு குஷ்பு பதிலளித்தார்.

Khushboo responds Kamal Haasan’s speech against her

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் ‘டைம் அப்’

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் ‘டைம் அப்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Time Upகுடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான, குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாலியான அனுபவத்தை தரக்கூடிய படமாக உருவாகியிருக்கிறது ‘டைம் அப்.’

எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் மனு பார்த்திபன். நடிகராகவும் இயக்குநராகவும் இவருக்கு இது முதல் படம்!

கதாநாயகியாக மோனிகா சின்ன கொட்லா நடிக்க, மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மனோகர், சூப்பர் குட் சுப்ரமணி, ‘ஆதித்யா’ கதிர், ‘பிஜிலி’ ரமேஷ் என காமெடிக்கு கேரண்டி தரக்கூடிய பலரும் நடித்திருக்கிறார்கள்.

படம் குறித்து மனு பார்த்திபன் கூறுகையில், ”பேண்டஸி காமெடி ஜானர்ல ரசிகர்கள் ஜாலியா சிரிச்சு ரசிக்கிற மாதிரியான படமா உருவாக்கியிருக்கோம். படத்தோட ஹீரோ தீவிர கமல் ரசிகன். அவன் ஒரு சாமியாரை பகைச்சுக்கிறான். அது தெய்வகுத்தமாகி 30 நாள்ல அவன் இறந்துடுவான்ங்கிற சூழ்நிலை. அந்த சூழ்நிலையிலேருந்து, அதாவது எமன்கிட்டேயிருந்து எப்படி தப்பிக்கிறான்கிறதுதான் கதை.

முதன்முறையா ‘மொட்டை’ ராஜேந்திரன் டபுள் ஆக்ஷன்ல நடிச்சிருக்கார். ஹீரோ மாதிரியும், வில்லன் மாதிரியும் வருவார். அவரு மாடர்ன் எமனா வந்து பண்ற கலாட்டாவெல்லாம் ரகளையா இருக்கும். இன்னொரு கெட்டப்புலயும் மனுஷன் அட்ராசிடி பண்ணிருக்கார். குழந்தைகள் செமையா ரசிப்பாங்க” என்றார்.

படம் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது.

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
எழுத்து, இயக்கம் – மனு பார்த்தீபன்
பின்னணி இசை – தீபன் சக்ரவர்த்தி
பாடல்கள் இசை – எல்.ஜி. பாலா
ஒளிப்பதிவு – கனிராஜன்
எடிட்டிங் – ஸ்ரீவத்ஸன், நிரஞ்சன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Fantasy entertainer Time Up from December 25th in theatres

முதலில் சினிமா தொழிலாளர்கள் குடும்பத்தோடு படத்தை பாருங்க, அப்போ தான் சினிமாவை காப்பாற்றலாம் – தயாரிப்பாளர் கரிகாலன் வேண்டுகோள்.

முதலில் சினிமா தொழிலாளர்கள் குடும்பத்தோடு படத்தை பாருங்க, அப்போ தான் சினிமாவை காப்பாற்றலாம் – தயாரிப்பாளர் கரிகாலன் வேண்டுகோள்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chiyaangal Karikalanசினிமாவை காப்பாற்ற இப்போதைக்கு இதுதான் ஒரே வழி என சியான்கள் படத்தயாரிப்பாளர் கரிகாலன் கோரிக்கை ஒன்றை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Actor Karikalan Request Video : தமிழ் சினிமாவில் வயதான 5 முதியோர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் *சியான்கள்.*

நாளை முதல் தமிழகம் முழுவதும் வெளியாக உள்ள இந்தத் திரைப்படத்தை கே எல் கரிகாலன் என்பவர் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார். வைகர பாலன் என்பவர் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

நாளை படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான கரிகாலன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அரசாங்கம் நாம கொரானாவில் இருந்து மீண்டு வந்து விட்டோம் என சொல்லும் வகையில் தான் பஸ், ட்ரெயின், ஒயின் ஷாப் உள்ளிட்டவைகளை ஒவ்வொன்றாக திறந்து வருகிறார்கள். அரசாங்கத்தை நடத்த இதெல்லாம் தேவை என்பதால் தற்போது திறந்து உள்ளார்கள்.

அதைப்போல் ஒரு நகை கடைக்காரர் இருக்கிறார் என்றால் அவர் தன்னுடைய தொழிலை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கடைக்கு வர வைக்கிறார்.

இப்படியான நிலையில் தற்போது கரிகாலன் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் சினிமாவை காப்பாற்றிக்கொள்ள தற்போது சினிமாக்காரர்கள் தான் முடியும். நம்மோட சினிமாவை காப்பாற்றிக்கொள்ள நாம என்ன செய்துள்ளோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

முதலில் சினிமாவில் உள்ள லைட்மேன் உட்பட அனைவரும் அவர்கள் குடும்பத்தில் அழைத்துக்கொண்டு தியேட்டரில் படம் பாருங்கள். அப்போதுதான் மக்கள் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்படும். மக்களும் அப்போதுதான் திரையரங்குகளுக்கு வருவார்கள் என பேசியுள்ளார்.

Chiyaangal producer Karikalan requests cine industry technicians

பிரசாத் ஸ்டூடியோ நிபந்தனைகளை ஒப்புக் கொண்டார் இளையராஜா.; போலீஸ் பாதுகாப்புடன் தியானம் செய்ய கோர்ட் அனுமதி

பிரசாத் ஸ்டூடியோ நிபந்தனைகளை ஒப்புக் கொண்டார் இளையராஜா.; போலீஸ் பாதுகாப்புடன் தியானம் செய்ய கோர்ட் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayarajaகடந்த 35 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் தன் இசை பணிகளை செய்து வந்தார் இசைஞானி இளையராஜா.

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜாவை வெளியேற நிர்வாகம் கூறியது.

இதனை எதிர்த்து 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு இளையராஜா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் திரைப்படங்களுக்காக கைப்பட எழுதிய இசைக் கோப்புகள், இசைக் கருவிகள், எனக்கு கிடைத்த விருதுகள் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்ளவும், தியானம் செய்யவும் அனுமதி வழங்க ஸ்டுடியோ உரிமையாளா்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இளையராஜாவை ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க முடியாது என பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும், காவல் துறையிடம் அளித்த புகாரையும் வாபஸ் பெறுவதாக உத்தரவாத மனு தாக்கல் செய்தால் அவரை ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்கலாம் என ஸ்டூடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பதிலளித்திருந்த இளையராஜா தரப்பு.. பிரசாத் ஸ்டுடியோ’வுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற முன் வந்தார்.

தற்போது சிட்டி சிவில் நீதிமன்றம் முழுமையாக இயங்காததால், வழக்கை திரும்ப பெற உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை என விளக்கமளித்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இளையராஜா தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, பிரசாத் ஸ்டூடியோவுக்குள் நுழையவும், இசையமைத்த அறையில் தியானம் செய்யவும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

தியானம் மேற்கொள்ளும் போது, இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம், தனது சொந்த செலவில் எடுத்துச் சென்று ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, பொருட்களின் பட்டியலை சரி பார்க்க வழக்கறிஞர் லட்சுமி நாராயணனை வழக்கறிஞர் ஆணையராக நியமித்தும் உத்தரவிட்டார்.

எந்த தேதியில் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்வது குறித்து இரு தரப்பினரும் முடிவு செய்து கொள்ளலாம் எனவும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜா ஸ்டூடியோவுக்குள் இருக்கலாம் எனவும், ஸ்டூடியோவுக்குள் செல்லும் இளையராஜாவுடன், அவரது உதவியாளர்கள் மூன்று பேரை மட்டும் அனுமதிக்கலாம் எனவும் இரு தரப்பு வழக்கறிஞர்கள் உடன் செல்லலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க போதுமான போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இளையராஜாவின் வழக்கை முடித்து வைத்தார்.

Maestro Ilaiyaraja agrees to collect his belongings without claiming ownership of studio space

தனுஷுக்காக 8வது முறையாக இணையும் செல்வராகவன் & யுவன்.; பிரம்மாண்ட தயாரிப்பாளருடன் கூட்டணி

தனுஷுக்காக 8வது முறையாக இணையும் செல்வராகவன் & யுவன்.; பிரம்மாண்ட தயாரிப்பாளருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Selva Yuvan2002 ஆம் ஆண்டுல் ரிலீசான ’துள்ளுவதோ இளமை’ படத்தில் செல்வராகவன் இயக்குநராகவும் , தனுஷ் நடிகராகவும் அறிமுகமாகினர்.

மேலும் ’காதல் கொண்டேன்’, ’புதுப்பேட்டை’ படங்களிலும் இணைந்து பணி புரிந்தனர்.

தற்போது நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்ப்பார்த்த கூட்டணியான செல்வராகவன் – தனுஷ் இணைவது உறுதியாகியுள்ளது.

இப்படத்திற்கு யுவன் இசையமைப்பது உறுதியாகியுள்ளது.

இதை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில்… “8வது முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவதில் மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் தான் (செல்வா) இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

Blockbuster duo Selva and Yuvan join hands again for Dhanush project

கொரோனா 2 அலர்ட்..: ஜனவரி 2 வரை இரவில் மட்டும் ஊரடங்கு அமல்..!

கொரோனா 2 அலர்ட்..: ஜனவரி 2 வரை இரவில் மட்டும் ஊரடங்கு அமல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

night curfew in karnatakaஇன்று டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை கர்நாடகா முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

உருமாற்றம் கொண்ட கொரோனா (2) வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மருந்துகள், கொண்டு செல்லக்கூடிய வாகனங்களுக்கு கெடுபிடிகள் கிடையாது.

டூ வீலர், கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களுக்கு இரவில் அனுமதியில்லை.

மருந்தகங்கள், மருத்துவமனைகள் போன்ற அவசரகால பணிகளுக்கு அனுமதி உண்டு.

Fresh covid-19 lockdown in karnataka

More Articles
Follows