இன்வெஸ்டிகேஷன் த்ரில்லரில் பிருத்திராஜீடன் இணையும் அதிதி பாலன்

இன்வெஸ்டிகேஷன் த்ரில்லரில் பிருத்திராஜீடன் இணையும் அதிதி பாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aditibalan prithvirajமுதல் படத்திலேயே எல்லாருக்கும் பெரிய அடையாளம் கிடைப்பதில்லை.

ஆனால் பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன், பருத்தி வீரன் படத்தில் கார்த்தி உள்ளிட்ட ஒரு சில நடிகர்களை நாம் இந்த கணக்கில் சேர்க்க முடியாது.

அதுபோல அறிமுகமான அருவி படத்திலேயே பெரிய அங்கீகாரத்தை பெற்றவர் அதிதிபாலன்.

அதன் பின்னர் கடந்த வருடம் நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘படவேட்டு’ படத்தில் நடித்தார் அதிதி பாலன்.

அந்த படத்தின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது-

இந்த நிலையில் தற்போது மற்றொரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதிதி.

பிரித்விராஜ்க்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம் அதிதி.

‘கோல்ட் கேஸ்’ (Gold Case) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகவள்ளதாம்.

விரைவில் இப்பட சூட்டிங் தொடங்கப்படவுள்ளது.

Aditi Balan to romance Prithviraj

தந்தை வழியில் இயக்குனராகும் மனோஜ் பாரதிராஜா..; கை கொடுக்கும் லிப்ரா புரொடக்‌ஷன்

தந்தை வழியில் இயக்குனராகும் மனோஜ் பாரதிராஜா..; கை கொடுக்கும் லிப்ரா புரொடக்‌ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Libra producer Ravindranதன் மகன் மனோஜை ‘தாஜ்மஹால்’என்ற படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

இப்படத்தின் பூஜை ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்றது.

அதன் பிறகு வருசமெல்லாம் வசந்தம், சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் நல்ல இடத்தை அடைய முடியவில்லை.

எனவே ஒரு கட்டத்திற்கு பிறகு அவர் தந்தையைப் போல இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டார் மனோஜ்.

‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் அது தொடர்பாக அறிவிப்போம் என்ற தகவலை மட்டும் அவ்வப்போது தெரிவித்து வந்தார் மனோஜ்.

இந்நிலையில் லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிக்கும் புதிய படத்தை மனோஜ இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பில் 7வது படைப்பாகும்.

இந்த படத்தின் தலைப்பு மற்றும் நடிகர் நடிகையர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Actor Manoj Bharathiraja turns director

‘பிக்பாஸ்’ வீட்டிலிருந்து பாடகர் வேல்முருகன் வெளியேற்றம்

‘பிக்பாஸ்’ வீட்டிலிருந்து பாடகர் வேல்முருகன் வெளியேற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bigg boss velmuruganவிஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி தொடங்கி கிட்டதட்ட ஒரு மாதமாகிவிட்டது.

முதல் வார எவிக்‌ஷனில் நடிகை ரேகா வெளியேறினார்.

கடந்த வாரம் தன் கையிலிருந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் மூலம் தப்பித்தார் பாடகர் ஆஜித்.

எனவே கடந்த வாரம் எவரும் ஷோவிலிருந்து வெளியேறவில்லை.

இந்நிலையில் ஷோ தொடங்கிய நான்காவது வாரத்துக்கான எவிக்‌ஷன் நடைமுறை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.

சம்யுக்தா, கேபி, ஆரி, அர்ச்சனா, ஷிவானி ஆகிய ஐந்து பேரைத் தவிர மற்ற அனைவருமே நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றார்கள்.

அதாவது மொத்தம் 11 பேர்.

இந்த 11 பேரில் பாடகர் வேல்முருகனே குறைவான வாக்குகள் பெற்றுள்ளார்.

எனவே எவிக்‌ஷன்படி அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டாராம்.

நாளை (நவம்பர் 1) ஒளிபரப்பாகும் எபிசோடில் வேல்முருகனின் எவிக்சனைக் காணலாம்.

வேல்முருகன் வெளியேறிய தகவல் லீக்கானதால் மீம்ஸ்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Singer Vel Murugan got evicted this week ?

அர்ஜுன் தாஸ் நடித்த ‘அந்தகாரம்’ படத்தை ஆன்லைனில் வெளியிடும் அட்லி

அர்ஜுன் தாஸ் நடித்த ‘அந்தகாரம்’ படத்தை ஆன்லைனில் வெளியிடும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

andhaghaaramராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக 4 ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ.

அவ்வப்போது திரைப்பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஜீவா & ஸ்ரீதிவ்யா நடித்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை கடந்த 2017ல் தயாரித்து வெளியிட்டார்.

தற்போது ‘அந்தகாரம்’ என்ற படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார் அட்லீ.

விக்னராஜன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை வருகிற நவம்பர் 24-ந் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

Andhagaram gets a direct OTT release

சென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6வது கிளையை திறந்து வைத்த உதயநிதி

சென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6வது கிளையை திறந்து வைத்த உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalinகடந்த வருடம் சென்னை அண்ணாநகரில் முதன் முதலில் துவங்கப்பட்ட அண்ணாநகர் சைக்கிள்ஸ் மல்டி பிராண்டு ஷோ ரூமை தற்போது வெள்ளூர் , சோளிங்கர் , ஆற்காடு , கீழ்ப்பாக்கம் ஆகிய முக்கிய பகுதிகளில் துவங்கப்பட்டு இன்று ஆழ்வார்பேட்டை TTK சாலையில் , நாரதகானா சபா எதிரில் 6 வது கிளையாக புதிய ஷோ ரூம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரி சுதாகர் அவர்களின் தலைமையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு ஷோ ரூமை துவங்கி வைத்தார்.

Udhayanidhi Stalin opens Anna Nagar cycle shop

சூடாகும் தேர்தல் களம்..: விஷாலை குறை சொல்லிட்டு அதே தவறை செய்கிறார் டிஆர்.. – ‘நலம் காக்கும் அணி’யில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் பேட்டி

சூடாகும் தேர்தல் களம்..: விஷாலை குறை சொல்லிட்டு அதே தவறை செய்கிறார் டிஆர்.. – ‘நலம் காக்கும் அணி’யில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radha Krishnanதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன.

இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர்.

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி என்கிற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.

ஏற்கனவே சங்கத்தின் செயலாளர், மற்றும் பொருளாளர் பதவி வகித்தவர் ராதாகிருஷ்ணன்.

கடந்த 20 வருடங்களாக குறைந்தபட்ஜெட் படத்தயாரிப்பாளர்களின் குரலாக செயல்பட்டு வருபவர் இவர்.

கடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்.

நடைபெறவுள்ள தேர்தலில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும்அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு பேட்டி…

1.என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.?

தமிழ்த்திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பது VPF கட்டணம். அதைக்கட்ட மாட்டோம் என்றும் அதற்குரிய வழிமுறைகளைச் செய்வோம்.

நவீன தொழில் நுட்பங்கள் காரணமாக தமிழ்த் திரையுலகம் சந்திக்கும் சிக்கல்களைச் சரி செய்து அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கச் செய்வோம்.

ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த விரும்பும் தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம்.

சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயற்சி எடுப்பது. சிறு படங்களுக்கும் போதிய திரையரங்குகள் ஒதுக்கீடு உறுதி செய்தல் உட்பட பல வாக்குறுதிகளை முன் வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

2.தொழில்நுட்பச் சிக்கல் என்று OTTயைகுறிப்பிடுகிறீர்கள். அதேசமயம் சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயல்வோம் என்று சொல்கிறீர்களே?

திரையரங்குகள் ஒதுக்கீடு போல OTTயிலும் பெரிய படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதனால் சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயல்வோம் என்று சொல்கிறோம்.

3. சிறிய படங்களுக்குப் போதிய திரையரங்குகள் என்னும் வாக்குறுதி பல தேர்தல்களில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறதே? செயலுக்கு வந்தபாடில்லையே?

கடந்த முறைவிஷால் தேர்தலில் வென்றபோதும் இப்படிச் சொன்னார்.

ஆனால் நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என இரண்டு பதவிகளில் இருந்து கொண்டு ஒன்றும் செய்யமுடியவில்லை.

4.சிறு படங்களுக்கு போதிய திரையரங்குகள் என்பது விஷாலுக்கு முன்பும் தேர்தல்களில் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் விசயமாக இருக்கிறதே?

ஆமாம், ஒவ்வொரு முறை தலைவராக வருகிறவர்களும் அதற்காக உரிய முயற்சிகள் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

சிறு படங்களை மட்டுமே தயாரித்துப் பெரிய வெற்றிகளைப் பெற்ற தேனாண்டாள் நிறுவனத்தின் முரளிக்கு அதன் வலி முழுமையாகத் தெரியும். அவர் கண்டிப்பாக செயல்படுத்துவார்.

5.எதிரணியில் போட்டியிடும் டி.ராஜேந்தர் மற்றும் மன்னன் ஆகியோர் விநியோகஸ்தர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்களே?

டி.ராஜேந்தர் போட்டியிடுவது வருந்தத் தக்கது. ஏற்கெனவே விஷால் தலைவரான போது இவரே இதே காரணத்தைச் சொல்லி விஷாலை விமர்சனம் செய்தார்.

இப்போது அவரே அப்படிச் செய்கிறார்.
அவருடைய மகன் சிம்புவால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டி.ராஜேந்தர் பொறுப்புக்கு வந்தால் என்ன செய்வார்? அதுமட்டுமின்றி விநியோகஸ்தர் சங்கப் பொறுப்பிலிருப்பவர்கள் வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கக்கூடாது என்கிற சட்டத்தைத் திருத்தி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமலேயே இங்கே போட்டியிடுகிறார்கள்.

இது அவருக்குப் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும்

6.தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ஆட்சியிலிருப்பவர்களைச் சந்தித்து அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது சரியா?

எங்கள் சங்கத்தைப் பொறுத்தவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களோடு இணக்கமாக நடந்துகொள்வது எப்போதும் இருக்கும் வழக்கம்தான்.

எங்கள் அணியில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகிறார்கள். அரசியல் என்பது வெளியில்தான் இங்கே எல்லோரும் தயாரிப்பாளர்கள்தான்.

7.இம்முறை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்றொன்று அமைந்திருக்கிறதே?

அப்படி ஒரு சங்கம் அமைவதற்குக் காரணம் இருந்தது. அரசாங்கம் சங்கத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு நிர்வாகக் கமிட்டி அமைத்தது. அதனால் பல சிக்கல்களில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதனாலேயே அந்தச் சங்கம் உருவானது.
நாங்கள் வென்ற பிறகு அவர்களுடன் பேசி தாய்ச்சங்கத்தில் இணைய வைப்போம்.

8.இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?

கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்தோம். ஆனால் இப்போது எங்கள் அணி சார்பாக வாக்குக்காகயாருக்கும் பணம் கொடுக்கப்படவில்லை

9.உங்களிடம் குறிப்பிட்ட அளவு ஓட்டுகள் இருக்கின்றன. நீங்கள் சொல்லும் அணிக்கு அவர்கள் ஓட்டுப்போடுவார்கள் என்று சொல்லப்படுவது பற்றி..?

நான் எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகுகிறவன். கடந்த 20 வருடங்களாக குறைந்தபட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நலனுக்காக போராடி வருகின்றேன்யாருக்கு சிக்கல் என்றாலும் முதல் நபராக அங்கு இருப்பேன்என்னாலான உதவிகளைசெய்வேன்.

அதனால் எல்லோரும் என்னிடம் பாசமாக இருப்பார்கள். இதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.

10. சங்கப் பொறுப்புக்குப் போட்டியிடும் தகுதி இல்லாத நீங்கள் அவசரகதியில் ஒரு படத்தை ஓரிரு திரையரங்குகளில் வெளியிட்டுவிட்டு தேர்தலில் போட்டியிடுவதாகப் புகார் எழுந்துள்ளதே

படத்தை முதல்பிரதி அடிப்படையில் ஒருவர் தயாரிப்பதும் அதை இன்னொருவர் வாங்கி வெளியிடுவதும் எப்போதும் உள்ள நடைமுறைதான்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் கொழும்பு, புதுச்சேரி ஆகிய இடங்களில் திரையிட்டோம்.

தமிழகத்தில் திரையரங்குகள் திறந்திருந்தால் அதிக திரைகளில் வெளியிட்டிருப்போம்.

எனவே இந்தப் புகார் அர்த்தமற்றது. தேர்தல் அதிகாரி நாங்கள் விதிமுறைப்படி நடந்துகொண்டதை ஒப்புக்கொண்டு எங்கள் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டார்.

Radha Krishnan condemns TR for his nomination in TFPC

More Articles
Follows