பித்தலாட்ட பிரபு.. ராங்கான ராம்குமார்.; நடிகர் சிவாஜி மகள்கள் சகோதரன்கள் மீது வழக்கு

பித்தலாட்ட பிரபு.. ராங்கான ராம்குமார்.; நடிகர் சிவாஜி மகள்கள் சகோதரன்கள் மீது வழக்கு

தமிழ் சினிமாவில் நடிப்புக்கென்று பெயர் பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

‘பராசக்தி’ என்ற படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பு முத்திரையை பதித்தவர்.

வாழ்ந்த காலம் வரை நடிப்பு பல்கலைக்கழகம் என்ற பெயரை பெற்றவர் சிவாஜி.

ரஜினியுடன் படிக்காதவன் & படையப்பா கமலுடன் தேவர் மகன் விஜய்யுடன் ஒன்ஸ்மோர் என இன்றைய முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் அரசியலில் இறங்கினார் சிவாஜி. ஆனால் சினிமா கை கொடுத்தது போல அவருக்கு அரசியல் கை கொடுக்கவில்லை.

மேலும் காங்கிரஸ் கட்சியிலும் பொறுப்பு வகித்தார் சிவாஜி கணேசன்.

இவரின் மகன் பிரபுவும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். மற்றொரு மகன் ராம்குமார் சில படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசனின் பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் உள்ளிட்டோரும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

சிவாஜி மறைவுக்கு முன்னரும் மறைவுக்கு பின்னரும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் பல படங்களை ராம்குமார் மற்றும் பிரபு இணைந்து தயாரித்துள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

அவர் முன்னணி நட்சத்திரமாக இருந்தபோது தமிழகத்தின் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்தார்.

இந்த சொத்துக்களின் மதிப்பு மட்டும் சுமார் 300க்கு கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

அவரது வாரிசுகள் மகன்கள் ராம்குமார் பிரபு மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகிய 4 பேரும் சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தங்களுக்கு தெரியாமல் பிரபு & ராம்குமார் இருவரும் தங்களது தந்தையின் சில சொத்துக்களை விற்றுவிட்டதாகவும், சில சொத்துக்களை அவர்களின் மகன்களில் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,…

” தங்களது தந்தை தனது சொத்துக்கள் குறித்து எவ்வித உயிலும் எழுதி வைக்காத நிலையில், ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் பொய்யான உயிலை தயாரித்து எங்களை ஏமாற்றிவிட்டனர்.

மேலும் எங்களில் தாய் வழி சொத்துக்களிலும் எங்களுக்கு பங்கு தரவில்லை.

அப்பா சேர்த்து வைத்த 10 கோடி மதிப்புள்ள சுமார் 1000 சவரன் தஙகம் வெள்ளி மற்றும் வைரம் உள்ளிட்ட பொருட்களை கூட தராமல் ஏமாற்றிவிட்டனர்.

அதேபோல் கோபலபுரத்தில் உள்ள வீட்டை 5 கோடிக்கு விற்றுவிட்டனர். ராயப்பேட்டையில் உள்ள 4 வீடுகளில் இருந்து வரும் வாடகை பணத்தில் கூட எங்களுக்கு பங்கு தருவதில்லை.

கடந்த 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து வாரிசு உரிமை சட்டத்தின் படி தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு உரிமை இருப்பதால், நீதிமன்றம் இந்த பிரச்சினையில் தலையிட்டு பாகபிரிவினை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sivaji Ganesan daughters filed a petition against Prabhu and Ram Kumar

இளையராஜா பெயரில் விருதும் பல்கலைக்கழகமும் வேண்டும்.. – மோடிக்கு ஆதிராஜன் கோரிக்கை

இளையராஜா பெயரில் விருதும் பல்கலைக்கழகமும் வேண்டும்.. – மோடிக்கு ஆதிராஜன் கோரிக்கை

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1417வது படமான “நினைவெல்லாம் நீயடா ” படத்தை இயக்கி வரும் ஆதிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இசைஞானி இளையராஜா இந்திய திரையுலகின் பெருமை மிகு அடையாளம். இதுவரை பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் சுமார் 1400 திரைப்படங்களுக்கு மேலாக இசை அமைத்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

சுமார் 8000 பாடல்களை உருவாக்கி இருக்கிறார். உலகம் முழுவதும் சுமார் 20000 இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.

தற்போது 80 வயதிலும் 15க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களாக பட்டியலிடப்பட்ட 25 பேரில் ஒன்பதாவது இடத்தில் இளையராஜா உள்ளார் என்பதும் இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் அவர் மட்டுமே என்பதும் தமிழர்கள் கர்வம் கொள்ள வேண்டிய விஷயம்.

பத்மபூஷன், பத்மவிபூஷன் பல தேசிய விருதுகள் பெற்ற இசைஞானிக்கு அவருடைய மகுடத்தில் மற்றும் ஒரு மாணிக்கமாக, ராஜ்யசபை எம்.பி. பதவி வழங்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம்.

இதற்காக மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்ற இடமெல்லாம் திருவள்ளுவரையும் பாரதியையும் தூக்கி பிடிக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழர்களின் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாகவே இந்த நியமனம் அமைந்திருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் வாழும் சகாப்தமான இளையராஜாவை மென்மேலும் கௌரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

அது மட்டும் அல்லாமல் தேசிய திரைப்பட விருதுகளுடன் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவது போல மத்திய அரசு இசைஞானி இளையராஜா பெயரில் ஒரு விருதை உருவாக்கி வருடம் தோறும் இசைத்துறை சாதனையாளர் ஒருவருக்கு அந்த விருதை வழங்க வேண்டும்.

அத்துடன் சென்னையில் உள்ள மிக முக்கியமான சாலைக்கு இளையராஜாவின் பெயரை சூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் இசைஞானியின் பெயரால் ஓர் இசைப் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும்.

இவையெல்லாம் இளையராஜாவை பெருமை படுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழர்களை பெருமைப்படுத்தும் செயலாகவும் அமையும். எனவே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குநர் ஆதிராஜன் தெரிவித்துள்ளார்.

We want an award and a university in the name of Ilayaraja.. – Adirajan’s request to Modi

JUST IN இசைஞானிக்கு மோடி கமல் ரஜினி வாழ்த்து : MP பதவிக்கு இளையராஜா – PT உஷா தேர்வானது எப்படி.?

JUST IN இசைஞானிக்கு மோடி கமல் ரஜினி வாழ்த்து : MP பதவிக்கு இளையராஜா – PT உஷா தேர்வானது எப்படி.?

‘அன்னக்கிளி’ என்ற தமிழ் படம் மூலம் திரை உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா.

1000-க்கும் மேற்பட்ட திரைப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.

ஐந்து முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

இந்த நிலையில் இசைஞானி இளையராஜா, ஓட்டப்பந்தய முன்னாள் வீராங்கனை பி.டி. உஷா ஆகியோர் நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளளார் பிரதமர் நரேந்திர மோடி.

“சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார்.

மனித உணர்வுகளை இசையின் வாயிலாக அழகாக பிரதிபலித்தவர் இளையராஜா.

அவரை நாடாளுமன்ற எம்.பி.யாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா எம்பி ஆனது எப்படி..?

நாடாளுமன்றம் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் உள்ளன.

இதில், ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 250 எம்பி-களில் 12 பேரை குடியரசுத் தலைவர் நியமிக்கும் அதிகாரம் உண்டு.

இந்திய நாட்டில் “அறிவியல், விளையாட்டு, கலை, இலக்கியம்” உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை பிரதமர், அமைச்சர்கள் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் நியமிப்பார்.

அதன்படி, தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்கவையில் எம்.பி ஆக உள்ளார்.

இளையராஜாவுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்…

மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் @ilaiyaraaja

கமல் வாழ்த்து…

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத @ilaiyaraaja அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.

கூடுதல் தகவல்…

இளையராஜாவை இந்திய அரசு 2010-ம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. அதன் பின் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

அண்மையில், இசைஞானி இளையராஜா பிரதமர் மோடியைப் பற்றிய (‘அம்பேத்கர் அன்ட் மோதி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்ட நூல்) ஆங்கில நூலுக்கு அளித்த முன்னுரையில்.. அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு பாராட்டி இருந்தார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

PM Modi and Actor Rajini wishes Ilaiyaraaja for MP post

இளையராஜாவுக்கு MP பதவி பெரிய விஷயமில்ல.; ஆல்ரெடி அவர் எம்பி. தான் – பார்த்திபன்

இளையராஜாவுக்கு MP பதவி பெரிய விஷயமில்ல.; ஆல்ரெடி அவர் எம்பி. தான் – பார்த்திபன்

பிரபல தெலுங்கு நடிகர் ராம் போதினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம் ‘தி வாரியர்.

பிரபல தமிழ் இயக்குனர் லிங்குசாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற புல்லட் சாங் என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார். இந்தப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

தி வாரியார் படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் இன்று சென்னையில் மிக பிரம்மாண்டமான ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் மணிரத்னம் பார்த்திபன் ஷங்கர் ஆர்யா விஷால் சிறுத்தை சிவா வசந்த பாலன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழா நடைபெறும் போது.. “மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் இளையராஜா என வாழ்த்தி இருந்தார் பிரதமர் மோடி.

எனவே இதனைக் குறிப்பிட்டு நடிகர் பார்த்திபன் பேசினார்.

அவர் பேசியதாவது…

இளையராஜாவுக்கு MP பதவி பெரிய விஷயமில்ல.. ஆல்ரெடி அவர் எம்பி. தான் MUSIC OF PARADISE என்று வாழ்த்தி பேசினார்.

Parthiban open talks about ilaiyaraaja and his MP post

விக்ரம் கார்த்தி ஐஸ்வர்யாவின் கேரக்டர்ஸ்.: இணையத்தில் ஜொலிக்கும் ‘பொன்னியின் செல்வன்’

விக்ரம் கார்த்தி ஐஸ்வர்யாவின் கேரக்டர்ஸ்.: இணையத்தில் ஜொலிக்கும் ‘பொன்னியின் செல்வன்’

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாகத்தை செப்டம்பர் 30ல் வெளியிட உள்ளனர்.

எனவே இந்த திரைப்படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக படத்தில் இடம் பெறும் நடிகர் நடிகைகளின் தோற்றங்களை ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஆதித்ய கரிகால சோழனாக நடித்திருக்கும் விக்ரமின் தோற்றத்தை வெளியிட்டனர்.

நேற்று வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தியின் கதாபாத்திரத்தை வெளியிட்டனர்.

இந்த நிலையில் இன்று பொன்னியின் செல்வன் நாவலின் முக்கியமான ஒன்றான நந்தினி தோற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

விரைவில் குந்தவையாக நடித்துள்ள திரிஷா மற்றும் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி ஆகியோரது கேரக்டர் போஸ்டர்களை படக்குழு வெளியிட உள்ளனர்.

Vikram Karthi Aishwarya’s Characters: ‘Ponni’s Selvan’ shines on the Internet

காளிதாஸ் – துஷாரா ஜோடியுடன் அரசியல் இல்லாத காதலை சொல்லும் ரஞ்சித்

காளிதாஸ் – துஷாரா ஜோடியுடன் அரசியல் இல்லாத காதலை சொல்லும் ரஞ்சித்

இயக்குனர் பா.இரஞ்சித் ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது’ எனும் படத்தை இயக்கியிருந்தார்.

யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட படம்

படப்பிடிப்பு முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஷபீர், ஹரி, தாமு, வின்சு, வினோத், சுபத்ரா, உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு -கிஷோர்,
இசை -டென்மா,
படத்தொகுப்பு- செல்வா RK,
கலை ரகு,
நடனம் -சாண்டி,
சண்டை- ஸ்டன்னர் சாம்,
உடைகள் – அனிதா ரஞ்சித், ஏகாம்பரம்
பாடல்கள் உமாதேவி, அறிவு.

முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம்.

காதலை இங்கு அரசியலாக பார்க்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசி வாழும் மனிதர்கள் மத்தியில் காதலை கொண்டாடும் விதமாக எதற்குள்ளும் அடைபடாத அதன் பரிப்பூரணத்தை சொல்லுகிற படமாக இருக்கும்.

விரைவில் வெளியாகவிருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

Neelam Productions new film announcement is here

More Articles
Follows