*பேட்ட* சீன்ஸ் லீக்; ஒளிப்பரப்பிய தந்தி டிவிக்கு டைரக்டர் கண்டனம்

*பேட்ட* சீன்ஸ் லீக்; ஒளிப்பரப்பிய தந்தி டிவிக்கு டைரக்டர் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

petta stillsசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் `பேட்ட’.

அனிருத் இசையமைக்க, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இப்படத்தில் ரஜினியுடன் சசிகுமார், விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மகேந்திரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தற்போது இதன் சூட்டிங் வாரணாசியில் நடந்து வருகிறது.

இப்படம் படமாக்கப்படும்போது சில விஷமிகள் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ” `பேட்ட’ குழுவினரிடமிருந்து ஒரு வேண்டுகோள். படத்தின் சூட்டிங் ஸ்பாட் ஸ்டில், வீடியோ போன்றவற்றை பகிராமல் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும் இந்த லீக் வீடியோவை ஒரு செய்தியாகவே தந்தி டிவி ஒளிப்பரப்பியது.

தந்தி டிவி தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த வீடியோவையே ஒளிப்பரப்புவது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

விட்டால் அடுத்து படத்தையே திருட்டுத்தனமாக ஒளிப்பரப்புவார்கள் போல.” என கார்த்திக் சுப்பராஜ் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கெட்டவளா நடிச்சிருக்கேன்; திட்டாம ஆண் தேவதை பாருங்க… சுஜாவருணி

கெட்டவளா நடிச்சிருக்கேன்; திட்டாம ஆண் தேவதை பாருங்க… சுஜாவருணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suja varuneeவருகிற அக்டோபர் 12ஆம் தேதி ரெட்டச்சுழி டைரக்டர் தாமிரா இயக்கியுள்ள ஆண் தேவதை படம் வெளியாகிறது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணி, பேபி மோனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் தன் அனுபவம் குறித்து சுஜா வருணி பேசும்போது…

“தாமிரா சார் போனில் இந்த கதையை சொன்னவுடனேயே இதில் நடிக்கவேண்டும் என எனக்கு தோன்றியது. அவரோட ரெட்டசுழி படமே எனக்கு ரொம்ப பிடிக்கும்..

அதில் அஞ்சலி கேரக்டரை பார்த்தபோது, ஏன் நமக்கு இப்படியெல்லாம் ஒரு கேரக்டர் வரமாட்டேங்குது என நினைப்பேன். அந்த ஏக்கம் இதில் பூர்த்தியாகி உள்ளது. இதில் திருமணமாகி ஐடி நிறுவனத்தில் வேலைக்குப்போகும் பெண்ணாக வருகிறேன்.

இன்றைய சமூகத்தில் எப்படி ஸ்டைலிஷா வாழலாம் என்பதற்கு ஒரு கெட்ட உதாரணமான பெண்ணாக நடிச்சிருக்கேன். என்னை திட்டாம படம் பாருங்க” என முன்கூட்டியே மன்னிப்பு கோரிக்கை விடுக்கிறார்.

*ஆண் தேவதை*க்குள் ஒளிந்திருக்கும் பெண் தேவதை ரம்யா பாண்டியன்

*ஆண் தேவதை*க்குள் ஒளிந்திருக்கும் பெண் தேவதை ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ramya pandianஇயக்குனர் தாமிரா டைரக்சனில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. ரம்யா பாண்டியன், சுஜா வாருணி, ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், ஹரீஷ் பெராடி, அபிஷேக், மாஸ்டர் கவின் பூபதி, பேபி மோனிகா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை தனது ‘சிகரம் சினிமாஸ்’ நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா.

விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் அக்-12ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாகவுள்ள நிலையில் படம் குறித்த தங்களது அனுபவங்களை படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்..

நாயகி ரம்யா பாண்டியன் பேசும்போது…

“ஜோக்கர் படத்தில் இருந்து அப்படியே முற்றிலும் மாறான ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன். ஜோக்கரை பார்த்துவிட்டு சமுத்திரக்கனி சார் தான் இந்தப்படத்தில் நடிக்க அழைத்தார்.

ஜோக்கர் படத்திற்குப்பின் எனது படமாக இந்தப்படம் வந்தால் நன்றாக இருக்கும் நினைத்தே நானும் ஒப்புக்கொண்டேன்.. படப்பிடிப்பில் சமுத்திரக்கனி சாருடன் நடிக்கிறோம் என்கிற பயமெல்லாம் எனக்கு ஏற்படவேயில்லை..

மேலும் தாமிரா, விஜய் மில்டன், சமுத்திரக்கனி என மூன்று பேருமே டைரக்டர்கள் என்பதால், அவர்களிடம் பாராட்டு வாங்கி நடித்தது மறக்க முடியாதது.

ஆண் தேவதை டைட்டில் காரணமாக சமுத்திரக்கனி சாருக்கான படமாக தெரிந்தாலும், படம் முழுதும் அவருக்கு சமமான காட்சிகளில் நடித்துள்ளேன்.

அதனால் ஆண் தேவதைக்குள் உள்ள பெண் தேவதை என்றுகூட என்னை சொல்லலாம்.

ஜோக்கர் படத்தில் மல்லிகா தான் வெளியே தெரிஞ்சாங்க.. ஆனா ஆண் தேவதையில ரம்யா பாண்டியனும் வெளியே தெரிவாங்க” என்கிறார் நம்பிக்கையுடன்.

விஜய் ரசிகர்கள் மோதல்; கடுப்பான கருணாகரன் போலீசில் புகார்

விஜய் ரசிகர்கள் மோதல்; கடுப்பான கருணாகரன் போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and karunakaranபல படங்களில் காமெடியனாகவும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் கருணாகரன்.

சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது. அது எப்படியோ ஒரு முடிவுக்கு வந்தது.

தற்போது மற்றொரு பிரச்சினை உருவாகியுள்ளது. ஓரிரு தினங்களாகவே இந்த மோதல் சமூக வலைத்தளத்தில் நீடித்து வருகிறது.

கடந்த வாரம் ‘சர்கார்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பேசும்போது அரசியல் பற்றி பேசினார். மேலும் ஓர் அரசன் பற்றிய கதையும் கூறினார்.

அதை சுட்டிக்காட்டிஅரசியல்வாதிகளுக்காக சொல்லப்பட்ட அந்தக்கதை, அரசியல்வாதிகளுக்கு மட்டுமானதா இல்லை நடிகர்களுக்கும் பொருந்துமா? என்றும், தகாத வார்த்தைகளில் பேச வேண்டாம் என ரசிகர்களிடமும் சொல்லிப் பாருங்கள். கேட்கிறார்களா பார்ப்போம்’ என்று ஒரு பதிவை போட்டிருந்தார்.

இதற்கு விஜய் வழக்கம்போல் மௌனமாக இருந்தார். ஆனால் அவரது ரசிகர்கள் கடுமையான வார்த்தைகளால் கருணாகரனை விமர்சனம் செய்தனர்.

மேலும் விக்கிபீடியாவில் கருணாகரன் தமிழர் என்று இருந்தது. ஆனால் அந்த பதிவை மாற்றி ‘ஆந்திராக்காரர்’ என அடையாளப்படுத்த முயன்று ஸ்கீரின் ஷாட் எடுத்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

உடனே கருணாகரன் ‘நான் பிறந்தது ரெட்ஹில்ஸ் அருகிலுள்ள பாடியநல்லூர்’ என்று குறிப்பிட்டார்.

அது மட்டுமில்லாமல் ‘நான் தமிழகத்தை சேர்ந்தவனா என்று முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம். ‘சர்கார்’ தமிழ் தலைப்பா என்று நான் எப்பொழுதாவது கேட்டேனா?’ என்றும் பதிவிட்டுள்ளார்.

அடுத்த கேள்வி என் தாய் மொழி பற்றி இருக்கும். நீங்கள் ரெடியா சர்கார் அடிமை என்றும் மற்றொரு பதிவையும் போட்டுள்ளார்.

இந்த பதிவுகளால் கோபத்தின் உச்சத்துக்கே விஜய் ரசிகர்கள் சென்று அவரை மோசமான வார்த்தைகளால் கிழித்துவிட்டனர்.

‘நீங்கள் என்னை மிரட்டுவது பதில் அளிக்க முடியாத உங்களின் இயலாமையை காட்டுகிறது. அது எனக்கு பிடித்துள்ளது’ என்றும் அதற்கு பதில் போட்டுள்ளார்.

மேலும் அவரின் குடும்பர் வரை அசிங்கமாக பேச, வேறுவழியில்லாமல் இன்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

அதில் தனக்கு வந்த மேசேஜ்களையும் ஆதாராகமாக காட்டியிருக்கிறாராம்.

கருணாகரன் பதிவிட்ட சில ட்வீட்கள் இதோ…

Karunakaran‏Verified account @actorkaruna

Is Kutty Kadhai only for leaders or also for actors ask your fans to not be abusive nanba Nanby and check if they listen .Plz ask them not to be abusive and hateful #Peace bro

Thamby i will post the certificates of what my dad did for this country as RAW officer also please be informed only reason I started Hating Vijay sir is his abusive fake troll IDS like you and nothing else @actorvijay

Don’t ask stupid questions kids like am I from@Tamil Nadu .Did i ever ask if sarkar is Tamil title

Next question will be on my mother language are you guys ready #Sarkar adimai

Chill more you threaten me it shows your disability to reply me and I am loving it will be back with next #Gammunu

Tag this Id if you guys really had guts @actorvijay try it might work

ஆட்டோகிராப் வேற கம்பேர் பண்ணாதீங்க; *96* படத்தை பாராட்டும் சேரன்

ஆட்டோகிராப் வேற கம்பேர் பண்ணாதீங்க; *96* படத்தை பாராட்டும் சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Autograph Director Cheran praises 96 movie and its makingமெட்ராஸ் எண்டர் பிரைசஸ் நந்தகோபால் தயாரிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 4ல் வெளியான படம் 96.

இதில் விஜய்சேதுபதி – திரிஷா உள்ளிட்டோர் நிஜ காதலர்களைப் போல் நடித்து அருமையான நடிப்பை வெளிப்படுத்திருந்தனர்.

அனைத்து தரப்பினரும் இப்படத்தை பாராட்டி வருவது தமிழ் சினிமாவே காணாத ஒன்றாக கூறலாம்.

தற்போது காதல் படங்களில் கலக்கிய இயக்குநரும், நடிகருமான சேரனும் 96 படத்தை பாராட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

`தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் 96, ஆட்டோகிராப்பையும், 96யும் சம்பந்தப்படுத்த வேண்டாம்.

அது கடந்து வந்த காதல்களின் நினைவுகள். இது காதலை தொலைத்த இருவரும் வாழ்க்கையை கடந்த நிலையில் சந்திக்கும்போது பரிமாறிக்கொள்ளும் உணர்வுகள்.

விஜய் சேதுபதியும், திரிஷாவும் மெல்லிய உணர்வுகளை அழகாக பதிவுசெய்து இவ்வருடத்தின் முக்கிய விருதுகளுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள்.

இருவரை மட்டுமே வைத்து காட்சிகளை அழகாக கோர்த்த இயக்குனர் மிகச்சிறந்த இயக்குனராக மிளிர்வார். இதுபோல சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும்.” என பாராட்டியுள்ளார்.

Autograph Director Cheran praises 96 movie and its making

கமல்-சூர்யா வழியில் பிரசன்னா-விஷால்-வரலட்சுமி..

கமல்-சூர்யா வழியில் பிரசன்னா-விஷால்-வரலட்சுமி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal varalaxmiடிவி நிகழ்ச்சிகளில் கலக்கிய சந்தானம், சிவகார்த்திகேயன், மாகாபா.ஆனந்த், ரோபோ சங்கர், லொள்ளு சபா சாமி நாதன், லொள்ளு சபா மனோகர் இவர்கள் எல்லாம் தற்போது சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சினிமாவில் மட்டுமே இதுவரை தலை காட்டிய நட்சத்திரங்கள் சில நட்சத்திங்கள் தற்போது டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் சரத்குமார், சூர்யா உள்ளிட்டவர்கள் கோடீஸ்வர நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

தற்போது முன்னணி நடிகரான கமல்ஹாசனும் பிக்பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

அவர் வழியில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் நாம் ஒருவர் நிகழ்ச்சியை விஷால் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர்கள் வரிசையில் நடிகை வரலட்சுமியும் இணைந்துள்ளார். ஜெயா டிவி.யில் ஒளிப்பரப்பாகும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

அதுபோல் சன் லைப் சேனலில் நடிகர் பிரசன்னாவும் தொகுப்பாளராக மாறி இருக்கிறார்.

More Articles
Follows