கடந்த நவம்பர் 14-ம் தேதி அன்று…
...Read More
இறைவி படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் என்ற அறிவிப்பு வெளியானது.
ஆனால் அதன்பின்னர் தனுஷ் ஒரு சில படங்களில் நடித்து இயக்கியும் தயாரித்தும் வந்தார்.
எனவே பிரபுதேவா நடிக்கும் படத்தை இயக்க சென்றுவிட்டார் கார்த்திக் சுப்புராஜ்.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தன் சொந்த ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பாக ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.
ரத்னகுமார் என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு ‘மேயாத மான்’ என்ற டைட்டில் வைத்துள்ளனர்.
வைபவ் நாயகனாக நடிக்க, பிரியா என்ற புதுமுகம் நாயகியாக நடித்து வருகிறார்.
இதன் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் மற்ற விபரங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் ரம்ஜான் தினத்த்தில் 23ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.