நடிகையை தன் 2வது மனைவியாக்கிய சுசீத்ராவின் முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக்

நடிகையை தன் 2வது மனைவியாக்கிய சுசீத்ராவின் முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அலைபாயுதே, தெய்வ திருமகள், வெப்பம், யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கார்த்திக் குமார்.

யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் முறைப் பையனாக நடித்திருப்பார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறையவே சினிமாவை விட்டு விலகினார்.

தற்போது மேடைகளில் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி கை நிறைய பணம் சம்பாதித்து வருகிறார்.

இவர் பாடகி சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த 2017ல் சுசித்ராவை விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் நடிகை அமிர்தா சீனிவாசன் என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார் கார்த்திக் குமார்.

மேயாத மான், தேவ் உள்ளிட்ட சில படங்களில் அமிர்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Karthik Kumar and Amrutha Srinivasan tie the knot

மகாத்மா சொன்னார்.. அஜித் செய்தார்.; மிரட்டலான ‘வலிமை’ மேக்கிங் வீடியோ.!

மகாத்மா சொன்னார்.. அஜித் செய்தார்.; மிரட்டலான ‘வலிமை’ மேக்கிங் வீடியோ.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் – வினோத் – போனி கபூர் கூட்டணியில் உருவாகி உள்ள படம் வலிமை.

நாயகியாக ஹூமா குரேஷி, வில்லனாக கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அடுத்தாண்டு 2022 பொங்கல் வெளியீட்டிற்கு படம் தயாராகி வருகிறது.

ஏற்கனவே இப்பட டீசர், நாங்க வேற மாறி, அம்மா… ஆகிய பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டது.. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது ஆகியவையும் இதில் குறிப்பிடப்பட்டது.

மேலும் பைக் வீலீங்.. ஆக்ஷன் காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டன என்பதை விளக்கமாக இதில் அமைந்துள்ளது.

வீலீங் செய்யும்போது அஜித் தடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னர் எழுந்து நிற்கிறார்.

வீழ்ந்தாலும் திரும்ப எழுவோம் என்பதை மகாத்மா காந்தி வரிகளுடன் காட்டியுள்ளனர்.

இந்த மேக்கிங் வீடிநோவை அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Valimai making..

Here comes the action-packed #ValimaiMakingVideo

அனைத்து துறைகளையும் அறிந்தவர் அல்லு அர்ஜூன்..; அசந்து நின்ற ‘அண்ணாத்த’ சிவா

அனைத்து துறைகளையும் அறிந்தவர் அல்லு அர்ஜூன்..; அசந்து நின்ற ‘அண்ணாத்த’ சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டின் எதிர்பார்ப்புமிக்க படங்களில் ஒன்றாக, ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படைப்பாக வெளிவரும் படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. ஸ்டைலிஷ் ஸ்டார்
அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து ‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 தயாரித்துள்ளனர்.

லைகா புரொடக்சன்ஸ் இப்படத்தை இணைந்து வழங்குகிறது. இத்திரைப்படத்தின் பெரும் பகுதி தமிழகத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த அகில இந்திய திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.

டிசம்பர் 17- ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்பதிப்பின் முன்வெளியீட்டுக்காக தமிழ் சினிமா பிரபலங்களுடன், நடிகர் அல்லு அர்ஜீன், உட்பட படக்குழுவினர் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

*ஸ்ரீ லட்சுமி மூவிஸ் திருப்பதி பிரசாத் பேசியதாவது…*

அல்லு அர்ஜூன், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், இயக்குநர் சுகுமார் அனைவருக்கும் வாழ்த்துகள். அல்லு அர்ஜூன் இங்கு சென்னையில் தி நகரில் தான் வளர்ந்தார்.

சின்னக் குழந்தையிலேயே ஒழுக்கத்தில் சிறந்தவராக இருந்தார். இந்தப்படம் காட்டுக்குள் அதிகம் படமாக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பா வெற்றிப்படமாக இப்படம் இருக்கும். தமிழ் ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும். எல்லோருக்கும் வாழ்த்துகள்.

*லைகா புரொடக்சன்ஸ் சார்பாக தமிழ்க்குமரன் பேசியதாவது…*

பிரமாண்ட படங்களை வழங்குவதில் லைகா புரடக்சன்ஸ் பெருமை கொள்கிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமான புஷ்பா படத்தை நாங்கள் வெளியிடுவது பெருமை. இது வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. படக்குழுவினருக்கு லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பாக வாழ்த்துகள்.

*பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியதாவது….*

புஷ்பா படத்தில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் ஆரம்பிக்கும்போது நான் நிறைய படங்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அதனால் மறுத்தேன், ஆனால் மறுநாள் அல்லு அர்ஜூனே ஆள் அனுப்பி நான் தான் வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரின் அன்பால் தான் வேலை செய்ய ஆரம்பித்தேன்.

காட்டுக்குள் அவர்கள் இப்படத்தை எடுத்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது. ஆக்சன் காட்சிகள் எல்லாம் அத்தனை அற்புதமாக வந்திருக்கிறது. அல்லு ஆர்ஜுன் முழுப்படத்திலும் அவருக்கென பிரத்யேகமான உடல்மொழியை பின்பற்றியிருக்கிறார் அது பார்க்க நன்றாக இருக்கிறது. ஒரு நேரடி தமிழ் படம் பார்க்கும் உணர்வை இப்படம் கொண்டுவரும்படி உழைத்திருக்கிறோம்.

தமிழில் நாயகனுக்கு ‘ரா’ வராமல் இருந்தால் எப்படி இருக்கும் என புதிதாக முயற்சித்தோம். சேகர் அதை அட்டகாசமாக பேசியுள்ளார். சுகுமார் மிக அழகாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

எல்லோருக்கும் வாழ்த்துகள். கண்டிப்பாக இப்படம் பெரிய வெற்றியை பெறும். ராஷ்மிகா சின்ன சின்ன முகபாவனைகளிலும் அசத்தியிருக்கிறார். பகத் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும். படம் வெற்றி பெற வாழ்த்துகள் நன்றி.

*இயக்குநர் சிறுத்தை சிவா பேசியதாவது….*

சினிமா பற்றி அனைத்து துறையும் தெரிந்து வைத்திருக்கிறார் அல்லு அர்ஜூன், அவரை சந்தித்தது மிக சிறந்த அனுபவமாக இருந்தது. அவரோடு பேச பேச சினிமா பற்றி அவர் சொன்னது பிரமிப்பாக இருந்தது. பாடல்கள் எல்லாம் மிக அற்புதமாக வந்திருக்கிறது. தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் அசத்தியிருக்கிறார்.

பாடல் கேட்க அவ்வளவு நன்றாக இருந்தது. டிரெய்லர் எல்லாம் சூப்பராக இருந்தது. படக் காட்சிகள் பார்க்கும் போதே வெற்றி உறுதியாக தெரிகிறது. அல்லு அர்ஜூனுக்கு தமிழில் இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் வாழ்த்துகள்.

*தயாரிப்பாளர் RB சௌத்திரி பேசியதாவது…*

அல்லு அர்ஜூனை முதலில் பார்த்த போது என்னடா உயரம் இல்லையே எப்படி இந்தப் பையன் ஜெயிப்பான் என நினைத்தேன். ஆனால் இப்போது அவரது வளர்ச்சியை பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. தெலுங்கை தாண்டி, வடக்கிலும், மலையாளத்திலும் மிகப்பெரும் பிஸினஸ் வைத்திருக்கிறார். படம் டிரெய்லர் பார்க்கவே பிரமாண்டமாக இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். வாழ்த்துகள்

*தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது…*

டீசர் பார்க்கிறேன், பாடல் பார்க்கிறேன் இப்படிப்பட்ட படத்தை நான் தயாரிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான் தோன்றியது. அப்படி பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள். அல்லு அர்ஜூன் தெலுங்கு ஹீரோ என்றாலும் தமிழ் பையன், தமிழால் வளர்ந்த பையன். பாடலில் தேவிஶ்ரீபிரசாத் இசை, குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும். அல்லு அர்ஜூனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் தமிழில் இருக்கிறது. தமிழுக்கு வாருங்கள் என் வரவேற்று வாழ்த்துகிறேன் நன்றி

*இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் பேசியதாவது…*

எல்லோரையும் விட எனக்கு சந்தோஷம் என்னவென்றால் அல்லு அர்ஜூன் தமிழில் வருவது தான். நாங்க சென்னையில் வளர்ந்த பசங்க, எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கு, அல்லுக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்று தெரியும். அவர் தமிழில் இந்தப்படம் செய்வது எனக்கு தான் அதிக சந்தோஷம்.

இந்தப்படம் தெலுங்கில் எடுத்து தமிழில் டப் செய்வதாக நினைப்பீர்கள், ஆனால் கதை கேட்ட அன்றே, நான் இது தமிழ் படம் நீங்கள் தெலுங்கில் எடுக்கிறீர்கள் என்று சொன்னேன். படத்தின் கதையின் உயிர் எல்லாம் தமிழில் பொருந்தி போகும். அல்லு அர்ஜூன் மிகச்சிறந்த உழைப்பாளி. இயக்குநர் சுகுமாருக்கு வாழ்த்துகள். வேலை பார்த்த நாங்களே ஆச்சர்யப்படும்படி படத்தை செய்துள்ளார்கள். படத்தில் ஒரு ஃபைட் செய்துள்ளார்கள் அதை எப்படி சொல்வது என தெரியவில்லை, அதை ஃபைட் என்றே சொல்ல முடியாது சினிமாவில் மிகச்சிறந்த ஆக்சன் காட்சியாக அது இருக்கும்.

இந்தப்படம் அல்லு அர்ஜூனை இந்திய நட்சத்திரமாக மாற்றும், இந்தப்படத்தில் அல்லு அர்ஜூன் தேசிய விருதை வெல்வார். சுகுமாரும் வெல்வார் இருவருக்கும் வாழ்த்துகள். பாடர்கள், பாடலாசிரியர்கள் அனைனவருக்கும் நன்றி. ஆண்ட்ரியாவுக்கு ஸ்பெஷல் நன்றி. புஷ்பா உங்கள் எல்லோரையும் கவரும் நன்றி.

*நடிகர் அல்லு அர்ஜுன் பேசியதாவது…*

மன்னிக்கனும் நான் தமிழ் பேசும்போது தமிழ்ல தப்பு இருக்கும் நிறைய வருஷம் ஆச்சு. தமிழ்ல பேசி, ஆனாலும் தமிழில் தான் பேச
போறேன். முதலில் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
நன்றி. மதன் கார்கிக்கு முதலில் மிகப்பெரிய நன்றி. தேவி இந்தப்படத்தை கேட்டு இந்தப்படம் தமிழ் மாதிரியே இருக்கே என்றார் நானே தமிழ் தானே என்றேன். சௌத்திரி சார் வட இந்தியாவில் என்னை பற்றி பேசினார்கள் என்றார், ஆனால் நம்ம ஊரில் நம்மை பேசவில்லையே என ஏக்கம் இருந்தது. அதை இப்படம் போக்கும். இது தமிழில் அப்படியே பொருந்தும். இப்படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி தந்ததில் மிக முக்கிய பங்காற்றிய மதன் கார்க்கி சாருக்கு நன்றி. சுகுமார் சாருக்கு நன்றி.

நான் ஹீரோவா மாறினது ஆர்யா படத்தில் தான். அப்போதிருந்தே அவரிடம் கேட்டேன், நாம் எப்போது படம் செய்யலாம் என்று, ஆனால் நாம் சேர்ந்தால் நல்ல படமாக இருக்கனும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இந்தப்படம் அந்தளவு ஈஸி இல்லை. புஷ்பா படம் செய்வது, நாலு படத்தை செய்வது போன்றது. ஆனால் சுகுமார் மிக கடுமையாக உழைத்திருக்கிறார்.

மொத்த குழுவுமே காட்டுக்குள் மிகக்கடினமாக உழைத்திருக்கிறார்கள். தமிழில் ஜெயிக்க வேண்டும் என்பது எனது கனவு. இங்கு பாட்டு ஹிட் ஆனவுடன் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். தமிழில் ஜெயித்தால் தான் வாழ்வு முழுமையாகும், இங்கிருந்து என்னை பாராட்டினால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். புஷ்பா அதை செய்யும். ஐகான் ஸ்டார் சுகுமார் சார் தான் தந்தார். ஸ்டைலீஷ் ஸ்டார் அவர் தான் தந்தார் நான் வேலை செய்யும் போது யோசிக்கமாட்டேன் அது ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன் அவ்வளவு தான்.

தமிழில் படம் செய்ய வேண்டும், தமிழ் இயக்குநர்களிடம் கேளுங்கள் நான் நடிக்க ரெடி. இந்தப்படம் சந்தன மரக்கடத்தலின் பின்னணியில் நடக்கும் புஷ்பாவின் கதை, அவ்வளவு தான்.

இதில் அரசியல் எல்லாம் இல்லை. படம் நல்லா வரணும் என்று நினைத்து தான் நான் டப்பிங் பேசவில்லை. இந்தப்பட கேரக்டருக்கு மாறியது சவாலாக இருந்தது.

லுக் செட் பண்ணவே எங்களுக்கு 4 மாதம் ஆனது. படம் வெளியான பிறகு இன்னும் நிறைய பேசலாம். இந்தப்படத்தில் அத்தனை விசயம் இருக்கிறது. ஷீட்டிங் ஸ்பாட் போகவே 2 மணி நேரம் ஆகும், அங்கு லைட் இருக்காது காட்டுக்குள் நிறைய கஷ்டங்கள் இருக்கும்.

எல்லாவற்றையும் கடந்து தான் படமாக்கியுள்ளோம். ராஷ்மிகா வித்தியாசமா பண்ணிருக்காங்க, பெரிய பெரிய நட்சத்திரங்கள் வித்தியாசமான லுக்கில் அட்டகாசமா பண்ணிருக்காங்க. முக்கியமா பகத் பாசில் அவர் நடிப்பதை பார்த்து ரசித்தேன். தமிழில் படம் ஓடினா என் வாழ்க்கை கம்ப்ளீட் ஆகும், நீங்கள் அனைவரும் கொண்டாடும் படமாக இது இருக்கும் நன்றி.

அல்லு அர்ஜுனின் நடிப்பில் முதல் அகில இந்திய திரைப்படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Director Siva praises Allu Arjun at Pushpa press meet

சமந்தாவின் ஐட்டம் சாங்.. தேசிய கீதமா.? ரஜினி-விஜய்-தனுஷ் பட தயாரிப்பாளரின் சர்ச்சை பேச்சு

சமந்தாவின் ஐட்டம் சாங்.. தேசிய கீதமா.? ரஜினி-விஜய்-தனுஷ் பட தயாரிப்பாளரின் சர்ச்சை பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடி இருக்கிறார்.

இந்த புஷ்பா படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

ஏற்கெனவே இப்படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி, சாமி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் சமந்தா நடனமாடிய பாடல் கடந்த வாரத்தில் வெளியானது.

தமிழ் பதிப்பில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாட விவேகா எழுதியிருக்கிறார்.

இதுவரை இந்த பாடல் 21 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஒரு மில்லியன் லைக்குகளை யூடியுப்பில் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு ஆந்திராவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காரணம் இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என ஆந்திர நீதிமன்றத்தில் ஆண்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 14ல் சென்னையில் ‘புஷ்பா’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் சுகுமார் பங்கேற்கவில்லை.

இந்த பாடல் குறித்து அல்லு அர்ஜூன் பேசுகையில்… அது உண்மை தான் என்றார். (அதாவது ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து)

அதற்கு முன்பு ‘புஷ்பா’ படக்குழுவினரை பாராட்டி பேச வந்திருந்தார் பிரபல தயாரிப்பாளர் தாணு.

அவர் பேசுகையில்… சாமி.. சாமி… பாடல் நன்றாக வந்துள்ளது.

அதுபோல் ஓ… சொல்றியா மாமா.. பாடல் இளைஞர்களின் தேசிய கீதமாக மாறியுள்ளது.

இந்த பேச்சு சர்ச்சையாக மாறியுள்ளது.

ரஜினி நடித்த கபாலி, விஜய் நடித்த துப்பாக்கி, தனுஷ் நடித்த அசுரன் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

Producer Thanu’s controversy speech at pushpa event

சர்வைவர் நிகழ்ச்சி முடித்து திரும்பிய நடிகர் அர்ஜூனக்கு கொரோனா தொற்று

சர்வைவர் நிகழ்ச்சி முடித்து திரும்பிய நடிகர் அர்ஜூனக்கு கொரோனா தொற்று

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமா படங்களில் பிரபல நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன்.

இவர் நடிகர் இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர்.

தற்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூன் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

சான்சிபார் என்ற தீவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

கடந்த ஞாயிறு அன்று நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியை முடித்து திரும்பினார் நடிகர் அர்ஜூன்.

அதன்பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுப்பற்றி அர்ஜூன் கூறுகையில்,..

‛‛கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது.

என் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வருகிறேன்.

என்னுடன்தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நான் நலமாக உள்ளேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

Actor Arjun tests positive for COVID-19

இளையராஜா இசையமைத்து சிலம்பரசன் வெளியிட்ட ‘மாயோன்’ பட பாடல் சாதனை

இளையராஜா இசையமைத்து சிலம்பரசன் வெளியிட்ட ‘மாயோன்’ பட பாடல் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜா எழுதி, இசை அமைத்த ‘மாயோன்’ பட பாடல் இணையத்தில் வெளியான 48 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிலம்பரசன் வெளியிட்ட பாடலொன்று மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கவர்ந்து, இணையத்தையும், இசை உலகையும் அதிரச் செய்திருக்கிறது.

கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களாக ஒப்பில்லா புகழுடன் வலம் வரும் ரஞ்சனி & காயத்திரி ஆகிய இருவரும் இணைந்து, முதன் முதலாக இசை ஞானி இளையராஜாவின் இசையில் ‘மாயோனே மணிவண்ணா..’ எனத்தொடங்கும் ‘மாயோன்’ பட பாடலுக்கு பின்னணி பாடியிருக்கிறார்கள்.

அண்மையில் வெளியான இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் பலரும், இசைஞானி இளையராஜாவின் குரலில் இதற்கு முன்னர் வெளியான ‘ஜனனி ஜனனி..’ என தொடங்கும் பாடலுக்கு பிறகு, இசைஞானி எழுதி இசை அமைத்த ‘மாயோனே மணிவண்ணா..’ என்ற பாடலைப் போல் அனைவரது கவனத்தையும் கவர்ந்து இருக்கிறது என பின்னூட்டமிட்டு வருகிறார்கள்.

‘மாயோனே மணிவண்ணா..’ எனத் தொடங்கும் பாடலில் இசைஞானியின் இனிய மெட்டும், பக்தி உணர்வு ததும்பும் சொற்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து செவிக்கு இனிய அமுது படைத்திருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இசை ரசிகர்கள், இசை ஆர்வலர்கள், இசை விமர்சகர்கள், பாமரர்கள், இணைய தலைமுறையினர், இளைய தலைமுறையினர் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று ‘மாயோனே மணிவண்ணா..’ என்ற பாடல் இணையத்தில் புதிய சாதனையை படைத்து வருகிறது.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் ‘மாயோன்’ படத்தை அறிமுக இயக்குநர் என். கிஷோர் கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில் சிபிராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

சிம்பொனி இசைத்த இசைமேதை இளையராஜாவின் மயக்கும் மெட்டில் உருவாகி, காலை நேர பூபாளத் தென்றலாக ‘மாயோனே மணிவண்ணா..’ என்ற பாடல், இனி தமிழகத்தின் அனைத்து இல்லங்களிலும் ஒலிக்கும். வரவிருக்கும் மார்கழி மாதங்களில் அதிகாலையில் ஒவ்வொரு இல்லங்களிலும் ஒலிக்கும் பக்தி பாடலின் பட்டியலில் ரஞ்சனி, காயத்ரியின் இனிய குரலில் ஒலிக்கும் ‘மாயோன்’ பட பாடலும் இணையும் என்பது உறுதி.

இதனிடையே ரசிகர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மற்றும் கீதா ஜெயந்தி தின வாழ்த்துக்களையும் தெரிவிக்கும், ‘மாயோன்’ படக்குழுவினர், இசை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கும் இசைஞானியின் இந்த பாடலை தெலுங்கிலும் வெளியிட்டிருக்கிறது. என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறது.

தெலுங்கில் இந்தப் பாடலை பாடலாசிரியர் பாஸ்கரபாட்லா எழுத, பின்னணி பாடகிகளான சைந்தவி மற்றும் வினயா கார்த்திக் ராஜன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

அங்கும் இந்த பாடலுக்கு பெரிய வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ilayaraja’s Maayone Manivanna crossed one million lights on YouTube

More Articles
Follows