தளபதி 63 படத்தில் விஜய்யுடன் இணையும் மேயாத மான் நடிகை

தளபதி 63 படத்தில் விஜய்யுடன் இணையும் மேயாத மான் நடிகை

actress indhujaகடந்த நவம்பர் 14-ம் தேதி அன்று விஜய் நடிக்கவுள்ள தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அட்லீ இப்படத்தை இயக்குகிறார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க விஷ்னு ஒளிப்பதிவு செய்கிறார்.

அடுத்த 2019 ஜனவரியில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ள நிலையில் தற்போது ப்ரீ புரடக்ஷன்ஸ் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் அட்லி.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இதில் விளையாட்டுப் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் முக்கிய கேரக்டரில் மேயாத மான் தங்கச்சி நடிகை இந்துஜாவும் இணைந்திருக்கிறாராம்.

கஜா பாதித்த பகுதிகளில் 2.0 கட்-அவுட்க்கு தடை; மக்களுக்கு உதவ ரஜினி உத்தரவு

கஜா பாதித்த பகுதிகளில் 2.0 கட்-அவுட்க்கு தடை; மக்களுக்கு உதவ ரஜினி உத்தரவு

Rajini request his fans to avoid 2pointO cut outs in Gaja cyclone affected areasஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை (நவ., 29) உலகமெங்கும் வெளியாகிறது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 10,000க்குமே மேற்பட்ட தியேட்டகளில் ரிலீஸாகிறது.

ரூ. 543 கோடியில் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களிலும் இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் புயல்பாதித்த பகுதிகளில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி நடத்த வேண்டாம் என ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பேனர், கட்அவுட் வைக்கவும் ரஜினி தடை விதித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் சார்பில் ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

2.0 பட சிறப்பு காட்சி கஜா புயல் பாதித்த பகுதிகளில் திரையிடக்கூடாது, தியேட்டருக்குள் மட்டும் ஒரு பேனர் வைத்துக் கொள்ளலாம்.

மற்ற இடங்களில் கட்அவுட், பேனர்கள் வைக்ககூடாது. பேனர், கட்அவுட் வைக்க ஆகும் செலவை மன்ற நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பயன்படுத்த வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.

Rajini request his fans to avoid 2pointO cut outs in Gaja cyclone affected areas

விஷ்ணு-அமலாபால்: விவாகரத்தான இரு வேறு ஜோடிகள் மறுமணமா.?

விஷ்ணு-அமலாபால்: விவாகரத்தான இரு வேறு ஜோடிகள் மறுமணமா.?

vishnu amala paulதனது மனைவி ரஜினியை நடிகர் விஷ்ணு விஷால் அண்மையில் விவாகரத்து செய்தார். இதை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்க நாம் நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

இந்நிலையில், ராட்சசன் படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலை அவர் காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் பரவியது. (நம் இணைய தளத்தில் அதுபோன்ற செய்திகள் பதிவிடவில்லை)

இதை நடிகர் விஷ்ணு விஷால் மறுத்து, அவர் கோபத்துடன் பதிவிட்டுள்ளதாவது… என்ன ஒரு முட்டாள்தனமான செய்தி, பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்.

நாங்களும் மனிதர்கள் தான், குடும்பத்துடன் வசிக்கிறோம். எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இயக்குனர் விஜய்யை அமலாபால் விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VISHNUU VISHAL – VV‏Verified account @vishnuuvishal

VISHNUU VISHAL – VV Retweeted

Wat a stupid news..plz b responsible ..we r humans too n v hav lives n family..just dnt write anything for d sake of it..

மெட்ராஸ் மீட்டரில் *லூசுப் பெண்* இந்துஜாவுடன் இணையும் சம்பத்

மெட்ராஸ் மீட்டரில் *லூசுப் பெண்* இந்துஜாவுடன் இணையும் சம்பத்

Sambath and Indhuja starring Loosu Ponnuமெட்ராஸ் மீட்டர் சமீபத்திய யூடியூப் வீடியோவான ‘லூசு பொண்ணு’க்கு அடிப்படை. ஒரு திரைப்பட இயக்குனர் கலை கண்ணன் (சம்பத்), நீலா (இந்துஜா) மற்றும் தீபக் (வைத்தியா) ஆகிய மூன்று கதாபாத்திரத்திரங்களை கொண்டு, 7 நிமிட வீடியோவை நாம் ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் இங்க்மர் பெர்க்மனை நடிகை இங்க்ரிட் பெர்க்மென் என தவறாக புரிந்து கொள்ளும் இயக்குனர் கலை கண்ணன், லூசுப் பெண்ணாக இந்துஜாவின் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு ஆகியவை நம்மை ரசிக்க வைக்கிறது.

ராஜா ராமமூர்த்தி இந்த வீடியோவின் கருவை எழுதியிருக்கிறார். குருராஜ் எடிட்டிங் உடன் சேர்த்து இந்த வீடியோவை இயக்கியிருக்கிறார்.

“லூசு பொண்ணு’ என்பது ‘மானிக் பிக்ஸி ட்ரீம் கேர்ள்’ இணையான ஒரு இந்தியன் வீடியோ ஆகும். ‘லூசு பொண்ணு’ என்ற பெயர் குறிப்பிடுவது போலவே ‘2 வயது குழந்தை மனநிலையில்’ இருக்கும் நாயகியை, நாயகன் மீட்டெடுக்க வேண்டும்.

தமிழ் சினிமாவின் எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பெண்களின் யதார்த்தமான வாழ்க்கையையும், வலுவான பெண் கதாபாத்திரங்களையும் எழுதி வருகிறார்கள்.

சம்பத் மற்றும் இந்துஜா இந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, மிகச்சிறப்பாக நடித்துக் கொடுத்ததற்கு நன்றி.

குரு மற்றும் மெட்ராஸ் மீட்டர் குழுவினர் மிகவும் அற்புதமான வேலையை செய்துள்ளனர் என்றார் ராஜா ராமமூர்த்தி.

மெட்ராஸ் மீட்டர் யூடியூப் சேனல் ஒப்பீட்டளவில் அதிக சந்தாதாரர்களை கொண்ட, அன்லிமிடெட் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் மிகப்பெரிய சேனலாக உருவாகியுள்ளது.

ட்ரெண்ட்லௌட் சிஇஓ எம்.சிதம்பரம் கூறும்போது, “மெட்ராஸ் மீட்டர் முற்றிலும் சீரமைக்கப்பட்ட ஒரு சேனல். இந்த மெட்ராஸ் மீட்டர்ஸ் வெற்றிக்கு முதுகெலும்பாக உள்ள விசுவாசமான பார்வையாளர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பயணத்தை மெட்ராஸ் மீட்டர் 2.0 என்று சொல்லலாம்.

இந்த சேனலில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களை பார்க்கும், நிறைய ஆச்சரியப்பட வைக்கும் வீடியோக்களை இனி வழங்க இருக்கிறோம். மொத்தத்தில் மெட்ராஸ் மீட்டர் இஸ் பேக்.

ருசியான உணவுகள் சமைக்கும் சமையல் நிகழ்ச்சிகள், சமகால பிரச்சினைகளை பிரதிபலிக்கும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை என அனைத்தும் கிடைக்கும் தளமாக மாற இருக்கிறது மெட்ராஸ் மீட்டர்.

Sambath and Indhuja starring Loosu Ponnu

பிக்பாஸ் புகழ் மஹத் ராகவேந்திரா – ஐஸ்வர்யா தத்தா இணையும் புதிய படம்

பிக்பாஸ் புகழ் மஹத் ராகவேந்திரா – ஐஸ்வர்யா தத்தா இணையும் புதிய படம்

Mahat Raghavendra And Aishwarya Dutta Team Up For A Rom Comஹாலிவுட் இயக்குனர் ராண்டி கென்ட்டிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த பிரபு ராம்.சி இயக்கும் ரோம்-காம் திரைப்படத்தில், மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.

இயக்குனர் பிரபு ராம் படத்தை பற்றி கூறும்போது…

“ரோம்-காம் படங்களின் தீவிரமான ரசிகன் நான். அது எந்த மொழி, எந்த நாட்டு படமாக இருந்தாலும் தவறாமல் பார்த்து விடுவேன். சேட்டிலைட் சேனலில் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்த காலம் முதல் எனக்கு ரொமாண்டிக் காமெடி படங்கள் இயக்கும் இயக்குனராக வேண்டும் என்பது ஆசை” என்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஃபேவரைட்டான, மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரையும் இந்த படத்துக்குள் கொண்டு வருவதற்கு பின் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்களையும் இயக்குனர் பகிர்ந்து கொள்கிறார்.

அவர் கூறும்போது, “இந்த திரைப்படம் வட சென்னை பையன் மற்றும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணை சுற்றி நிகழும் கதை. அவர்கள் தங்கள் இயல்பு மற்றும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்டவர்கள். பக்கத்து வீட்டு பையன் போன்ற இயல்பான கதாபாத்திரத்தில் நடிக்க ஒருவரை நான் தேடிக் கொண்டிருந்தேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்தபோது, மஹத்தின் இயல்பை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் இந்த கதாபாத்திரத்திற்கு அவர் நியாயம் செய்வார் என்று உடனடியாக உணர்ந்தேன். அதேபோலவே ஐஸ்வர்யா தத்தா, அவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இருப்பார் என்று நம்புகிறேன் என்றார்.

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் தேர்வு முழுவீச்சில் நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த ரோம்-காம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

Mahat Raghavendra And Aishwarya Dutta Team Up For A Rom Com

மலேசியாவில் மாட்டிக் கொண்ட 49 தமிழர்களை மீட்ட கருணாஸ் MLA

மலேசியாவில் மாட்டிக் கொண்ட 49 தமிழர்களை மீட்ட கருணாஸ் MLA

Karunas MLA helped 49 Tamil peoples who were into trouble at Malaysiaதிருநெல்வேலி மாவட்டம் தலைவன் கோட்டை, மளடிக்குறிச்சி, அரியூர்,பாரப்பட்டி,சங்கரன் கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 49 க்கும் மேற்ப்பட்டவர்கள் (பெரும்பாலானோர் முக்குலத்தோர்) மலேசியாவில் உள்ள தனியார் டவர் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றனர்.

அங்கு நிர்வாகத்திற்கும் பணியாற்றும் தமிழர்களுக்கும் இடையே ஏற்ப்பட்ட பிரச்சனையின் காரணமாக இவர்களுக்கு சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டது. சம்பள நிலுவையின் காரணமாக தகராறு ஏற்பட இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அங்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் தலைமறைவானார்கள். கிட்டதட்ட பலநாட்கள் உண்ண உணவும் உறைவிடமும் இல்லாமல் காட்டிலேயே தங்கினர்.

இந்த தகவல் முக்குலத்தோர் புலிப்படையின் நெல்லை மாவட்ட செயலாளர் திரு.ராஜகுணசேகர பாண்டியன் மூலமாக

மனிதநேயர் சேது கருணாஸ் தேவர் எம்.எல்.ஏ அவர்களுக்கு தெரியவந்தது. இந்த தகவலை மலேசியாவில் உள்ள மரியாதைக்குரிய குமார் மூலமாக சம்மந்தபட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட *கருணாஸ் தேவர் எம்.எல்.ஏ* அவர்கள் மலேசியாவில் உள்ள பாத்தி கேம்ப் முருகன் கோவிலுக்கு பாதிக்க பட்டவர்களை அழைத்து வந்து அதிகாரிகள் மூலமாக பேச்சு வார்த்தை நடத்தினார்.

இது சம்மந்தமாக பாராளுமன்ற அதிகாரிகளை சந்தித்தது மட்டுமல்லாமல் மலேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு.குலசேகரன் அவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் திரு காமாட்சி அவர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் நேரில் சந்த்தித்து முறையிட்டார்.

மக்கள் பிரதிநிதிகள் உதவியுடன் மலாக்கா அதிகாரிகள் ஜக்கி,கண்ணன்,குணா ஆகியோர் மூலமாக 49 தமிழர்களுக்கும் திரும்பவும் பணியாற்றும் வாய்ப்பையும் தங்குவதற்கு ஒரு ஹோம் கேம்ப் ஏற்படுத்தி கொடுத்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்பு சம்மந்தபட்ட மலேசிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நேரில் சந்தித்து நன்றி கூறி தாயகம் திரும்பினார் தமிழின பற்றாளர் *சேது கருணாஸ் தேவர் எம்.எல்.ஏ.*

கருணாஸ் எம்.எல்.ஏ வின் முயற்சிக்கு பலதரப்பினரும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Karunas MLA helped 49 Tamil peoples who were into trouble at Malaysia

Karunas MLA helped 49 Tamil peoples who were into trouble at Malaysia

More Articles
Follows