’பார்த்தா’ சந்தானத்துக்காக உதயநிதி பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’

’பார்த்தா’ சந்தானத்துக்காக உதயநிதி பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது..

வரும் ஜூலை 29 படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வினில்..

லைகா புரொடக்ஷன் தமிழ்க்குமரன் கூறியதாவது…

சந்தானம் எங்களது திரைப்பயணத்தில் பெரிய உதவியாய் இருந்திருக்கிறார். இந்த படத்தை விநியோகம் செய்யவிருக்கும் ரெட்ஜெயண்ட்க்கு எனது வாழ்த்துகள். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் கூறியதாவது..

படத்தின் இசை சிறப்பாக உள்ளது. பாடல்களும், டீசரும் மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. சந்தோஷ் நாராயணனனுக்கு எனது வாழ்த்துகள். இயக்குனருக்கும், நடிகர் சந்தானத்துக்கும் எனது வாழ்த்துகள்.

படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும். உதயநிதி சார் திரைத்துறைக்கு பலமாக இருக்கிறார். அவரது விநியோகத்தில் படம் கண்டிப்பாக வெற்றியடையும்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியதாவது..

“ நான் வேலைபார்த்த படங்களில் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். இயக்குநரிடம் ஒரு புத்துணர்வான எழுத்து வடிவம் இருக்கிறது. என்னை இந்த படத்தில் சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தார். ரத்னகுமாருக்கு தமிழ் சினிமாவில் பெரிய இடம் இருக்கிறது.

இந்த படத்தை வெளியிட முடிவு செய்த உதயநிதி சாருக்கு நன்றி. சந்தானம் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் எனது இண்டிபெண்டண்ட் ஆல்பமாக இருக்கும். இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான படமாக இருக்கும். “

இயக்குனர் ரத்னகுமார் கூறியதாவது..

“ நான் படம் இயக்கி மூன்று வருடங்கள் கடந்து விட்டது. இந்த படம் நான் நினைத்தபடி உருவாக சந்தானம் சார் தான் காரணம். இந்த படத்தின் கதையை நம்பி அவர் உள்ளே வந்தார். அவருக்கு பலவிதமான லுக் டெஸ்ட்களை செய்தோம்.

சந்தானம் சார் அர்ப்பணிப்போடு பணிபுரிந்தார். படத்தின் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே போகாமல் இருப்பார். இந்த படத்திற்காக இயக்குனர் ரவிக்குமார், மடோனா அஸ்வின், லோகேஷ் கனகராஜ் என பல நண்பர்கள் உதவியுள்ளனர். அவர்களின் பங்கு இந்தப்படத்தில் இருக்கிறது. ஒரு முறை லோகேஷ் செட்டுக்கு வந்து பார்த்தபோது சந்தானம் சாரை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை.

அந்தளவு சந்தானம் சார் லுக் மாறியிருந்தது. இந்த படம் கொஞ்சம் வித்தியாசமான படம், கதாபாத்திரங்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அதை சரியான திரைப்படமாக மாற்றியது சந்தோஷ் நாராயணன் தான். இந்த படத்தில் ஏழு பாடல்கள் இருக்கிறது. எல்லா பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும்.

இந்த படத்தில் ரெட் ஜெயண்ட் வந்த பிறகு படத்தின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த படம் மேஜிக்காக மாற காரணம் கலை இயக்குனர் ஜாக்கி. படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் இந்த படத்திற்கு பெரும் உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தின் வெற்றிக்கு அனைவரும் காரணம். அனைவருக்கும் நன்றி.

நடிகர் சந்தானம் கூறியதாவது…

இந்த படத்தை பார்த்து உதயநிதி கொடுத்த பரிந்துரைகள் ஒரு இயக்குநருக்கான பார்வையில் இருந்தது. இந்த படத்தை வெளியிட பெரும் உதவியாய் இருந்தார். இந்த கதையை ரத்னகுமார் கூறும் போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இன்றைக்கு தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இந்த படத்தில் இருக்கும். சந்தோஷ் நாராயணன் எனக்கு செட்டாகும் இசையை ஹிட்டாகும்படி தந்திருக்கிறார். அவர் பாடல்கள் தான் எல்லா இடத்திலும் கேட்கிறது. இந்த படத்தில் ரத்னகுமார் கடின உழைப்பை போட்டுள்ளார்.

இவ்வளவு குறுகிய பட்ஜெட்டில், நிறையை இடங்களில் படம் எடுப்பது ரத்னகுமாரால் மட்டுமே முடியும். ரத்னா உடைய நட்பினால் ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் எல்லோரும் இந்த படத்தின் உள்ளே வந்தனர். ஒரு குழு முயற்சியாக இந்த படம் உருவாகப்பட்டுள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது…

நான் இங்கு வந்தது தயாரிப்பாளராக, நடிகராக அல்ல. எப்போதும் என் நண்பேண்டா பார்த்தா தான் சந்தானம். அவரால் தான் என்னை நடிகனாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த படம் நான் பார்த்துவிட்டேன். படம் சிறப்பாக வந்துள்ளது.

இந்த படத்தை இயக்குனர் ரத்னகுமார் எடுக்கிறார் என்பதால் படம் பார்க்காமலே, இந்த படம் சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்பினேன். இந்த படத்தில் சந்தானம் தாண்டி அனைவரும் ரசிக்க வைத்துள்ளனர். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். சந்தானம், ரத்னகுமார், தயாரிப்பாளரும் எனது வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக சந்தானத்துக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும்.

இந்த படத்தில் சந்தானத்துடன் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா‘ மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படம் ஜூலை 29 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Santhanam’s Gulu Gulu will be distributed by Udhayanidhi Stalin in Redgiant Movies

JUST IN 68வது தேசிய திரைப்பட விருதுகள் : சூர்யா அபர்ணா ஜிவி.பிரகாஷ் தமன் ஆகியோருக்கு விருது.; சிறந்த படம் நடிகர் நடிகை முழு விவரம் இதோ..

JUST IN 68வது தேசிய திரைப்பட விருதுகள் : சூர்யா அபர்ணா ஜிவி.பிரகாஷ் தமன் ஆகியோருக்கு விருது.; சிறந்த படம் நடிகர் நடிகை முழு விவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2020 ஆம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்டு வெளியான வெளியாகாத படங்களிக்கு 68வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன் விவரம் வருமாறு..:

68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது

2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அறிவித்து வருகிறது மத்திய அரசு.

‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு.

சிறந்த நடிகராக சூர்யா, நடிகையாக அபர்ணா பாலமுரளி தேர்வு. இவர்கள் இருவரும் ‘சூரரைப் போற்று’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர்.

68வது தேசிய திரைப்பட விருதுகள் – சிறந்த நடிகர் சூர்யா (சூரரைப் போற்று )

68வது தேசிய திரைப்பட விருதுகள் – சிறந்த நடிகை: அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று )

திரைப்படம் குறித்த சிறந்த புத்தகமாக மலையாள புத்தகத்திற்கு விருது

சிறந்த பின்னணி இசை, சூரரைப் போற்று படத்திற்காக ஜி.வி.பிரகாஷ்

சிறந்த திரைக்கதை படம் சூரரைப் போற்று

திரைப்படங்கள் எடுக்க உகந்த மாநிலமாக மத்தியப்பிரதேசம் தேர்வு

திரைப்படங்கள் தொடர்பான சிறந்த புத்தகமாக அனூப் ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகத்திற்கு தேசிய விருது

சிறந்த வர்ணனை விருது ஷோபா தரூர் சீனிவாசன்.

சிறந்த இசையமைப்பாளர் அலா வைகுந்தபுரம் படத்திற்காக தமன் தேர்வு.

சிறந்த கல்விசார் திரைப்படமாக ட்ரீமிங் ஆப் வேர்ட்ஸ் என்ற மலையாளப்படம் தேர்வு

சிறந்த சமூக விழிப்புணர்வு படமாக இந்தி மொழியில் ஜேடிஜேடி படமும், பெங்காலியில் த்ரீ சிஸ்டர்ஸ் படமும் தேர்வு

மலையாள மொழியில் வாங்கூ, மராத்தி மொழியில் அவன்சித் படங்களுக்கு சிறப்பு ஜுரி விருதுகள் அறிவிப்பு

சிறந்த ஒளிப்பதிவாளர் ஷப்டிகுன்ன காளப்பா

ஓ தட்ஸ் பானு திரைப்படத்திற்காக ஆர்.வி.ரமணி-க்கு சிறந்த இயக்குநர் விருது

சிறந்த புலனாய்வுப் பிரிவு படமாக சேவியர் பிரிகேடியர் ப்ரீதம் சிங் தேர்வு, இயக்குநர் பரம்ஜீத் சிங்

சிறந்த தெலுங்கு மொழிப்படமாக கலர் போட்டோ

சிறந்த சண்டைக்காட்சிகள் அமைப்பு படமாக மலையாளப் படமான அய்யப்பனும், கோஷியும் தேர்வு

சிறந்த இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ்.

68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு | #NationalAward | #68thNationalFlimAwards |

Suriya bags National Film Award for Best Actor for SooraraiPottru

டான்ஸ் மாஸ்டர்ஸ் ஷோபி – லலிதா தம்பதியருக்கு 2வது குழந்தை பிறந்தது

டான்ஸ் மாஸ்டர்ஸ் ஷோபி – லலிதா தம்பதியருக்கு 2வது குழந்தை பிறந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல முன்னணி பல படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர் மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது.

இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபி.

திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பிரம்மாண்ட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர்.

ஷோபி மாஸ்டர், லலிதா ஷோபி மாஸ்டர் இருவரும் இணைந்து ஒரு நடன பள்ளியை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தான் லலிதா ஷோபி மாஸ்டருக்கு கோலகலமாக வளைகாப்பு நடைபெற்றது.

இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஜூலை 21 ஒரு தனியார் மருத்துவமனையில் லலிதா மாஸ்டர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தற்போது தாய் சேய் இருவரும் பூரண நலத்துடன் உள்ளனர். அன்பும் பாரட்டுக்களும் தெரிவித்த ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஷோபி மாஸ்டர் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

dance masters Shobhi-Lalita couple in born in 2nd child

யோகிபாபு பிறந்தநாளில் இயக்குனர் ரஞ்சித் நிறுவனம் கொடுத்த மெகா கிஃப்ட்

யோகிபாபு பிறந்தநாளில் இயக்குனர் ரஞ்சித் நிறுவனம் கொடுத்த மெகா கிஃப்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்குகிறார்.

அதிசயராஜ் ஒளிப்பதிவில் , இப்படத்திற்கு இசையமைக்கிறார் சுந்தரமூர்த்தி.

யோகிபாபுவின் பிறந்த நாளையொட்டி பொம்மை நாயகி படத்தின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

தகப்பனுக்கும் மகளுக்குக்கும் இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை சொல்லும் படமாக , வெகுஜன மக்களை கவரும் விதத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகிபாபு.

சென்னை, கடலூரில் படப்பிடிப்பு முடிந்து , இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது ‘பொம்மை நாயகி’.

விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாக யாழி பிலிம்ஸ் விக்னேஸ் சுந்தரேசன் தயாரித்திருக்கிறார்.

கலை- ஜெயரகு,
எடிட்டிங் -செல்வாRK.
நடனம் – வினோத்குமார், சல்சாமணி.
சண்டைப்பயிற்சி- ஸ்டன்னர் சாம்.
பாடல்கள் -கபிலன், இளையகம்பன், அறிவு, சித்தன் ஜெயமூர்த்தி, லோகன்.
உடைகள் – ஏகாம்பரம்.
சவுண்ட் எபக்ட் – ஆண்டனி BJ ரூபன்.

இணை தயாரிப்பு-
விக்னேஷ் சுந்தரேசன்
வேலவன்
லெமுவேல்
PRO – குணா.
யோகிபாபு

Actor Yogi Babu’s Bommai Nayagi first look out

பட்டைய கிளப்பும் ‘காபி வித் காதல்’ பட பாடல்கள்.; யுவனின் ரம்பம்பம் – ஆரம்பம்.!

பட்டைய கிளப்பும் ‘காபி வித் காதல்’ பட பாடல்கள்.; யுவனின் ரம்பம்பம் – ஆரம்பம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல்’.

இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே… “ரம்பம்பம் ஆரம்பம்..” என்கிற ரீமிக்ஸ் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அடுத்ததாக.. “பேபி கேர்ள்..” என்கிற இன்னொரு பாடல் வெளியாகி உள்ளது.

நாயகன் நாயகி இருவருக்கும் இடையேயான நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது.

அந்த தருணத்தில் அந்த புதிய அன்பு கிடைப்பதன் மூலம் நாயகன் இதயத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது.

அதன்பின் அவன் பார்க்கும் பார்வையில் இதுவரை அவன் பார்த்த உலகம் எல்லாமே தற்போது புதிதாக வித்தியாசமாக தெரிகிறது. இந்த சூழலை மையப்படுத்தி

“என்ன இது
புதிதாய் புதிதாய் புதிதாய்
எனக்குள் ஏததா
புதிராய் புதிராய்
இரண்டாம் மூச்சுக் காற்று
உள்தே அடிக்குதே”

என நாயகன் பாடுவது போல இந்த பாடல் உருவாகி உள்ளது. பா.விஜய் எழுதியுள்ள இந்த பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

அதேசமயம் இதே பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி, ஒரு சிறப்பு வீடியோ ஆல்பமாக தற்போது யூட்யூப் தளத்தில் இந்த பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப்பாடலில் இடையே இடம்பெறும் ராப் பாடல் வரிகளை அசல் கோலார் என்பவர் பாடியுள்ளார். U1 ரெக்கார்ட்ஸ் சார்பாக இந்தப்பாடலை கே.குமரகுருபரன் ஒலிப்பதிவு செய்துள்ளார்.

நடிகர்கள் :
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி

தொழில்நுட்பக்குழு
எழுத்து ,இயக்கம் – சுந்தர் சி
தயாரிப்பு – அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்
மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர் C , ACS அருண் குமார்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு- E.கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு -ஃபென்னி ஆலிவர்
கலை -குருராஜ். B
நடனம் -ராஜு சுந்தரம், ராபர்ட், சாண்டி,தீனா
சண்டை பயிற்சி -தளபதி தினேஷ்
நிர்வாக தயாரிப்பு- பாலா கோபி.

‘Cafe with kadhal’ songs gets good response.

தடயவியல் நிபுணராக அமலா பால்.; அதுல்யா & ரித்விகாவுடன் கூட்டணி

தடயவியல் நிபுணராக அமலா பால்.; அதுல்யா & ரித்விகாவுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘கடாவர்’ எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது.

மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கடாவர்’.

இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.

கடாவர்- முதுகுத்தண்டை சில்லிடச் செய்து, ரத்தத்தை உறையச் செய்யும் க்ரைம் திரில்லர் திரைப்படம்.

கொலை வழக்கு ஒன்று போலீஸ் உயரதிகாரி விஷால் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.

இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்கிறார். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார்.

டிஸ்னி+ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளம்- தற்போது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக திகழ்கிறது. இந்த டிஜிட்டல் தளம், இந்தியர்கள் தங்களின் பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையிடும் முறையை மாற்றி அமைத்திருக்கிறது.

அவர்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை இந்தியா முழுவதும் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையிலான உள்ளடக்கத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இயங்கி வருகிறது.

இந்த டிஜிட்டல் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் என எட்டு மொழிகளில் 1,00,000 மணி நேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. இதனுடன் உலக அளவில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வினையும் பிரத்யேகமாக அளிக்கிறது.

Disney Hotstar to premiere Amala Paul starrer Cadaver

More Articles
Follows