நடுக்கடலில் சந்தானத்திற்கு பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்

நடுக்கடலில் சந்தானத்திற்கு பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மேயாத மான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார்.

இந்த இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இவர் இயக்க தயாராகிக் கொண்டிருந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உருவானது.

இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ‘குலு குலு’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார்.

இப்படம் நாளை (ஜூலை 29-ம்) தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனிடையில் ‘குலு குலு’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்தப் படத்தின் தமிழக வெளியீடு உரிமையை சந்தானத்தின் நெருங்கிய நண்பரான உதயநிதி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘குலு குலு’ படத்தை கொண்டாடும் வகையில் சந்தானம் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்துள்ளனர். அந்த வீடியோ காட்சி இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Santhanam fans made Milk Abishegam for Gulugulu movie at Sea

தங்கர் பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா யோகிபாபு கௌதம் ஆகியோருடன் மம்தா

தங்கர் பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா யோகிபாபு கௌதம் ஆகியோருடன் மம்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் கருமேகங்கள் கலைகின்றன.

இதில் பாரதிராஜா,யோகிபாபு, கௌதம் மேனனன் இவர்களுடன் நான்காவது முக்கிய கேரக்டரில் மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார்.

படம், “கருமேகங்கள் கலைகின்றன.”

( “கருமேகங்கள் ஏன் கலைகின்றன ?” என்பது
“கருமேகங்கள் கலைகின்றன“
என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. )

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 25 முதல் கும்பகோணத்தில் தொடங்கிநடைபெற்று வருகிறது.

மேலும் சென்னை, ராமேஸ்வரம் போன்ற ஊர்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில்திரைப்படத்தின் அனைத்து நடிகர்களும் பங்கேற்கிறார்கள்.

முந்தைய திரைப்படங்கள்
போலவே இத்திரைப்படமும் தங்கர் பச்சானின் சிறுகதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

சிறிதும் சமரசம் செய்துகொள்ளாததனது பாணியிலான வெகு இயல்பான வாழ்வியல் கொண்ட திரைப்படமாக இது இருக்கும் என தங்கர்பச்சான்தெரிவித்தார்.

கண்மணி எனும் கதைப் பாத்திரத்திற்காக இந்தியாவிலுள்ளபல நடிகைகளிடம் நடிப்புத் தேர்வு நடத்திய பின் மம்தா மோகன்தாஸ் தேர்வாகியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின்மையமான பாத்திரத்தில் தான் நடிப்பதைப் பெருமையாக கருதுவதாக மம்தா மோகன்தாஸ் கூறுகிறார்.

மேலும் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் போன்றோர் நடிக்கிறார்கள்.

The shooting of Director ThankarBachan’s “Karumegangal Kalaiginrana” Starring BharathiRaja,yogibabu,Gautham Vasudev Menon,Mamta Mohandas,S.A.Chandrasekar,R.V.Udhayakumar Started with a pooja on july 25th at kumbakonam.

“Karumegangal Kalaiginrana..”

*Cast* :-
Bharathi Raja
Gowtham Menon
Mamtha Mohandoss
Yogi Babu
Mahana sanjeevi
SA Chandra Sekhar
RV Udhya Kumar
Prymid Natrajan
Delhi Ganeshan

*Technicans :-*
Director: Thangar Bachan
Cinematographer: N.K.Ekhambaram
Art director:Michael
Set Design: Muthuraj
Executive Producer: Varagan
PRO : Johnson
Produced By D.Veerasakthi.

Mamta Mohandas plays female lead in Thangar Bachan’s next

600 படங்களுக்கு மேல் நடித்த சரண்ராஜ் தன் மகனுக்காக டைரக்டர் ஆனார்.

600 படங்களுக்கு மேல் நடித்த சரண்ராஜ் தன் மகனுக்காக டைரக்டர் ஆனார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குப்பன்’ உலகத்திலேயே நீங்க பார்க்காத கதைன்னு கிடையாது. ஒரு மீனவ பையனுக்கும், மார்வாடி பொண்ணுக்கும் இடையிலான கதை. அதனால் ஏற்படுகிற பிரச்சனைகள், அவர்கள் காதல் நிறைவேறியதா என்பதுதான் கதைக்கரு

மீனவர்கள் மிகவும் நட்புணர்வோடு வாழ்பவர்கள். இவங்களை பற்றி நிறைய சொல்லலாம். நான் அதில் ஒரு சின்ன கதையை மட்டும் எடுத்து, அழகான காதல் கதையா பிரிச்சு சொல்லியிருக்கேன்.

என் பையன் தேவ் சரண்ராஜ் தான் ஹீரோ. பைலட்டுக்கு படிச்சு தேர்வாகி இருந்தான். கொரோனாவில் விமான சர்வீஸ் எல்லாம் குறைஞ்சு பிரச்சனையாகி விட்டது. அப்புறம் நான் நடிக்கிறேன்னு வந்தவனை இன்ஸ்டியூட் அனுப்பி தயார் பண்ணி இப்ப ஹீரோவாக்கிட்டேன்.

சுஷ்மிதா, பிரியதர்ஷினி என இரண்டு ஹீரோயின்ஸ் அறிமுகமாகிறார்கள். ஆதின்னு இன்னொரு ஹீரோவையும், கார்த்திங்கிற வில்லனையும் அறிமுகப்படுத்துறேன்.

இவங்க எல்லோருக்கும் சிறந்த எதிர்காலம் நிச்சயம் இருக்கு. இப்படம் மூலம் ஒரு நல்ல கடற்கரை காதலுக்கு உங்களை அழைச்சிட்டு போவேன்.

Soni Sri Production ‘KUPPAN”

ஒளிப்பதிவு : ஜனார்தன்,
இணை இயக்கம், பாடல்கள் : K.சுரேஷ் குமார்

இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பாலவாக்கத்தில் ஆரம்பமாகி விசாகப்பட்டினம், ஐதராபாத் போன்ற இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.

விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும்.

Dev charanraj (hero)
Adhi (2 nd hero)
Sushmitha (heroine)
Priya (2nd heroine)
And Charanraj

Story, Screenplay, Dialogue & Direction : Charanraj.NY
Camera : Janarthan
Editor : S P.Ahammed
Music : S.G.Elai
Stunt : Ohmkar
Dance : Dayana
Production exquitive : Thangaraj
PRO : Johnson
Lyrics & Co.direction :
K.Sureshkumar

Produced By Soni Sri Production

Actor Charanraj turns director for his son

‘சிட்டிசன்’ பட காட்சியை நிஜத்தில் கொண்டு வந்த அஜித்.; திருச்சியை திணறடித்த ரசிகர்கள்

‘சிட்டிசன்’ பட காட்சியை நிஜத்தில் கொண்டு வந்த அஜித்.; திருச்சியை திணறடித்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 25-ம் தேதி திருச்சியில் உள்ள ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது.

இதில் 1,300-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

பிஸ்டல் துப்பாக்கிச் சுடுவதற்கான போட்டிகள் 28-ம் தேதி வரையும், 29, 30, 31-ம் தேதி வரை ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளும் நடைபெறும்.

துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் அஜித்.

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை திருச்சி வந்தார்.

இதனால், போட்டி நடைபெறும் இடத்தில் அஜித்தைக் காண ரசிகர்கள் அதிக அளவில் ரசிகர்கள் திரண்டனர்.

ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

இந்த நிலையில், மாடியிலிருந்து ரசிகர்களை நோக்கி நடிகர் அஜித் கைகாட்டி வணக்கம் வைத்தார். ப்ளையிங் கிஸ் கொடுத்தார். இந்த போட்டோ & வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் நடித்த ‘சிட்டிசன்’ படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் இதுபோன்று மக்கள் முன் அஜித் தோன்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith recreates citizen movie climax scene in real

குடும்ப கடமையை நிறைவேற்றிய பின் தன் கனவை தேடி வந்த ‘செஞ்சி’ பட டைரக்டர்

குடும்ப கடமையை நிறைவேற்றிய பின் தன் கனவை தேடி வந்த ‘செஞ்சி’ பட டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘செஞ்சி’ திரைப்படம்: ஒரு இயக்குநரின் கனவு நனவான கதை!

சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் ‘செஞ்சி’.

தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்றுக் குடும்பம், பிள்ளைகள் என்று பொருளாதார அமைதிக்கான அனைத்தையும் முடித்துவிட்டுத் தனது இளமைக் காலத்துக் கனவான சினிமா முயற்சியில் இறங்கிய கணேஷ் சந்திரசேகர் என்பவர் ஜி.சி என்கிற பெயரில் இயக்கி, நடித்து ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் தான் ‘செஞ்சி’.

இதை வழக்கமான வணிக சினிமா சூத்திரங்களுக்கு உட்படாத வகையில் தனது விருப்பத்துக் கற்பனையைக் காட்சிகளாக்கி ஒரு கனவுப் படமாக ‘செஞ்சி’ என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர்.

இப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகிய திரையுலகப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்கள்.

இந்த விழாவில் இயக்குநரும் தயாரிப்பாளருமான கணேஷ் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார். அவர் பேசும்போது,

”எனது மனதில் சினிமா கனவு இருந்தது. அந்தக் கனவை நிறைவேற்ற நான் எனது வாழ்க்கைக் கடமைகளை நிறைவேற்றிய பின் குடும்பத்தின், பிள்ளைகளின் ஆதரவோடும் ஊக்கத்தோடும் இதில் இறங்கினேன்.

அப்படித்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்கு இரண்டு வருடம் நாங்கள் தேடி அலைந்தோம். அந்த அளவிற்கு ஒரு தேடலுடன் இதில் ஈடுபட்டோம். இதுவரை கேமரா போகாத பல இடங்களில் இந்தப் படத்திற்காக நாங்கள் பயணப்பட்டு படப் பதிவு செய்துள்ளோம். காலை 6 மணிக்கு கிளம்பி 2 மணி நேரம் மலையில் காடுகளில் என்று நடந்து 8 மணிக்குச் சென்றடைந்து, வனத்துறை அனுமதி கொடுத்த நேரமான காலை 11 மணி முதல் 3 மணி வரை படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். நாங்கள் போன சில நிமிடங்களில் யானை போன்ற வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் சூழலில்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். எங்களுக்கு வனத்துறை மிகவும் பாதுகாப்பாக உதவியாகவும் இருந்தது.
காட்டில் மட்டுமல்ல கேரளாவில் சித்ராஞ்சலி ஸ்டுடியோவிலும் எடுத்திருக்கிறோம் . பாண்டிச்சேரி, மலேசியா என்றும் பயணம் செய்து எடுத்துள்ளோம்

சினிமா நாடு, மொழி ஆகியவற்றுக்காக மட்டும் போராட வேண்டும் என்பதில்லை. இந்தப் பூமிக்காகவும் போராட வேண்டும் என்கிற கருத்து இதில் சொல்லப்பட்டுள்ளது. சினிமா என்பதை இரண்டாவது கல்வி என்று நான் நினைக்கிறேன்.

சினிமாவில் ஒரு சிறு விஷயம் வெளிப்படுத்தினாலும் கூட அது மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடும்
சினிமா மூலம் சொல்லப்படும் கருத்துகள் மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக இதை எடுத்திருக்கிறேன். .

இதில் யார் நடிப்பது என்று பார்த்த போது பிரபல கதாநாயகர்கள் என்றால் நிபந்தனைகள் போடுவார்கள். அது சரிப்பட்டு வராது என்று நினைத்தேன். தயாரிக்கும் தயாரிப்பாளர் யார் என்றால் அதுவும் அப்படித்தான்,கட்டுப்பாடுகள் இருக்கும் என்று நானே நடித்து இயக்கித் தயாரித்தேன்.
நான் சினிமா எடுக்கும் விஷயத்தை அப்படியே குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லிவிட்டு அவர்கள் ஆதரவுடன் இந்தக் களத்தில் இறங்கினேன். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. இதில் நடித்திருக்கும் ரஷ்ய நடிகை கெசன்யா இரண்டு மாதம் வந்து தங்கியிருந்து அழகாக நடித்துக் கொடுத்தார்

இது வழக்கமான சினிமா போலிருக்காது. ஆக்சன் , சென்டிமென்ட், போன்ற வியாபார நோக்கத்தில் இருக்காது .இவற்றையும் தாண்டி சினிமாவில் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒன்றை எடுத்துக்கொண்டு படமாக்கி இருக்கிறேன்.அதே சமயம் மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதையை வித்தியாசமான களத்தில் உருவாக்கி இருக்கிறோம். ஊடகங்கள் ஆதரித்து ஊக்கப்படுத்தி விட வேண்டும். ஏனென்றால் ஊடகங்கள் தான் விடியலுக்கான சூரியக் கதிர்கள் என்று நான் நம்புகிறேன். ஆதரவு தர வேண்டும்” என்று கூறினார்.

இயக்குநர் பேரரசு கூறும்போது,

” சினிமா எத்தனையோ பேரைப் பார்த்து இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு புத்திசாலியை, கெட்டிக்காரத்தனம் உள்ளவரைப் பார்த்ததில்லை.

சினிமாக் கனவோடு வந்து திருமணமாகாமல் சிரமப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கும் பலரையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் சிரமப்பட்டு சம்பாதித்துக் குடும்பத்தின் கடமைகளை நிறைவேற்றிவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார். இது புதிதாக இருக்கிறது. இப்படியும் சினிமாத்துறைக்கு வரலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

செஞ்சி என்பது என்னுடைய தலைப்பு .அதைப் புதுப்பிக்காததால் இவர் எடுத்துக் கொண்டு விட்டார்.ஒரு படம் எப்படி இருக்கும் என்பதை அதன் தலைப்பைப் பார்த்தாலே அதில் உள்ள வடிவமைப்பைப் பார்த்தாலே தெரிந்து விடும். இவர் செஞ்சி என்பதைச் சாதாரணமாக அந்தப் பெயரைப் போடாமல் அதில் மெனக்கட்டு செய்துள்ளார். நானும் ஊர்ப் பெயர்களில் படங்கள் எடுத்துள்ளேன்.

திருப்பாச்சியில் பழுக்கக் காய்ச்சிய அரிவாளை அந்தத் தலைப்பில் வைத்திருப்பேன். சிவகாசியில் பட்டாசை வைத்து வடிவமைத்திருப்பேன். திருண்ணாமலையில் லிங்கங்களாகக் காட்டி இருப்பேன். இவர் தலைப்பில் செஞ்சிக் கோட்டையை நினைவூட்டும்படி வடிவமைத்துள்ளார்.

செஞ்சி என்றவுடன் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று ஞாபகங்கள் தான். செஞ்சியின் அரசன் தேசிங்கு ராஜா கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். அவரை வீழ்த்த முடியாத போது அவர் சவாரி செய்த குதிரையை வீழ்த்தினால் அவரைக் கொன்று விடலாம் என்று எதிரிகள் நினைத்தார்கள். எனவே அவரது குதிரை நீலவேணியை வெட்டிச் சாயத்தார்கள் .பிறகு ராஜாவைக் கொன்றார்கள்.செஞ்சியில் மன்னருக்குச் சமாதி இருப்பது போலவே அவரது நண்பன் அகமத்கானுக்கும் அவர் சவாரி செய்த குதிரையான நிலவேணிக்கும் சமாதி உள்ளது .இதன்மூலம் விலங்குகளுக்கு வரலாற்றில் உள்ள இடத்தை நம்மால் அறிய முடியும்.

இந்தப் படத்தை அங்கே எடுத்துள்ளார்கள் .அந்தக் காட்சிகள் நன்றாக உள்ளன. இந்தப் படம் வெற்றிபெற்று செஞ்சியில் வெற்றிக் கொடியும் பறக்க வேண்டும்” என்று வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது,

“நான் ஒவ்வொரு மேடையிலும் ஏதாவது பரபரப்பாக பேசுவதாகச் சொல்வதுண்டு. இப்போதெல்லாம் நான் பேசிவிட்டு வீடு செல்வதற்குள் யூடியூப் சேனல்களில் அது வந்து விடுகிறது.

நான் வாழ்த்தவும் செய்வேன். நல்ல காரியங்கள் செய்யும்போது வாழ்த்துவேன். தவறுகள் நடக்கும் போது சுட்டிக்காட்டுவேன். தவறுகளை சுட்டிக்காட்டி காட்டுவது தானே ஆண்மை? நல்லது நடக்கும் போது பாராட்டுவது தர்மம்.

தவறான வழியில் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பவர்கள் என்று நான் நடிகர்களை மட்டும் சொல்லவில்லை. லஞ்சம், ஊழல், மோசடிகள் செய்து தவறான வழிகளில் கோடிக்கணக்கில் சம்பாதித்து அதை அனுபவிக்க முடியாமல் வெறும் காகிதக் குப்பைகளாக போட்டுவிட்டு செல்லும் பலருக்கும் நான் சொல்கிறேன். நீங்கள் கடவுளைத் தேடி கோவில் கோவிலாக அலைய வேண்டாம். அன்றாடம் சிரமப்படும் ஏழைகளைக் கண்டு அவர்களுக்கு உதவுங்கள் .அவர்கள் உங்களைக் கடவுளாக நினைப்பார்கள். தர்மம் செய்யுங்கள்.அலெக்சாண்டர் இறந்தபோது சவப்பெட்டியில் இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு வெறுங்கையோடு தான் சென்றான். தர்மம் செய்யுங்கள்.

ரோட்டரி சங்கத்திலிருந்து நன்றாகச் சேவை செய்துவிட்டுத் தயாரிப்பாளர் கணேஷ் சந்திரசேகர் இப்போது சினிமாவுக்கு வந்திருக்கிறார். ஆனால் இங்கே பல தயாரிப்பாளர்கள் படம் எடுத்துவிட்டு ரோட்டோரத்திற்கு சென்றிருக்கிறார்கள். நடு ரோட்டுக்குச் சென்று இருக்கிறார்கள்.

நான் மாநகராட்சி பள்ளி ஆசிரியராக இருந்தவன். என்னை ஒருத்தர் ஏமாற்றி சினிமாவுக்கு இழுத்து விட்டார். 1983ல் பிரம்மச்சாரிகள் என்ற படம் எடுத்தேன். 7 லட்சம் செலவானது 5 லட்சம் இழப்பு, 2 லட்சம் கடன் .மொத்தமும் காலி. 1990-ல் நம்ம ஊரு மாரியம்மா என்ற படம் எடுத்தேன். சரத்குமாரை வில்லனாக நடிக்க வைத்தேன். அந்தப் படத்தில் லாபம் கிடைத்தது. பிறகு தங்கமான தங்கச்சி என்று சரத்குமாரை நாயகன் ஆக்கி படம் எடுத்தேன்.10 லட்சம் லாபம் கிடைத்தது.

பிரபுதேவா மீனாவை வைத்து டபுள்ஸ் படம் எடுத்து,75 லட்சம் இழப்பு வந்தது. பார்த்திபன், தேவயானியை வைத்து நினைக்காத நாளில்லை படம் எடுத்தேன்.ஒன்றே கால் கோடி இழப்பு.
இப்படி ஒன்பது படங்களை எடுத்தேன். நாலரைக் கோடி காலி.

சினிமா உலகம் நாணயம் இல்லாமல் இருக்கிறது .நான் இப்போது பைனான்ஸ் செய்து வருகிறேன். கொடுத்த பணத்தை வாங்குவதற்கு இழுத்தடிக்கிறார்கள்.

தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டிய சங்கத்தில் யார் இருக்கிறார்கள்?முதல் திருடனே தயாரிப்பாளர் சங்கத்தில்தான் இருக்கிறார். இதெல்லாம் சரியானால்தான் தான் சினிமா வளரும்.

தமிழ்ப் படங்கள் எல்லாம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கின்றன. இப்படி நடக்கும் தவறுகளை எல்லாம் நான் சுட்டிக்காட்டினால் என்னை விமர்சிக்கிறார்கள்.

நான் விஷாலை பல முறை விமர்சித்து இருக்கிறேன். லத்தி படத்தின் விழாவுக்காக விநியோகஸ்தர் சங்கத் தலைவர் என்கிற முறையில் என்னை அழைத்தார்கள். போனேன், அப்போது விஷாலை நான் பாராட்டிப் பேசினேன். அப்போது அவ்விழாவில் ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகைகளை விஷால் வழங்கினார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படிச் சமூகத்திற்கு நல்லது செய்யும் போது அவர்களை பாராட்டத் தானே வேண்டும்? விஷாலின் இப்போதைய போக்கு சரியாக உள்ளதாக நான் நம்புகிறேன் .அதனால் நான் அவரைப் பாராட்டினேன் அவர்கள் பெற்றோர்களுக்கெல்லாம் இத்தனை நாள் விமர்சனம் செய்து கொண்டிருந்தவர் பாராட்டுகிறார் என்று மகிழ்ந்தார்கள். தவறுகளை சுட்டிக்காட்டவும் நல்லது நடக்கும்போது பாராட்டவும் தயங்க மாட்டேன் .

தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுதானே ஆண்மை? நல்லது நடக்கும் போது பாராட்டுவதுதானே தர்மம்?

இந்தப் படம் வெற்றிகரமான படமாக அமைய வேண்டும். கணேஷ் சந்திரசேகர் இந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும்” என்று வாழ்த்தினார்.

படத்தில் நடித்துள்ள ரஷ்ய நடிகை கெசன்யா பேசும்போது,

“இந்தப் படத்தின் கதை எனக்குப் பிடித்து இருந்தது.நான் இந்தப் படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும்போது,

“இப்பதெல்லாம் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது நகைச்சுவையாக இருக்கிறது.

வெற்றிகரமான மூன்றாவது நாள்,
வெற்றிகரமான ஐந்தாவது நாள் என்று போடுகிறார்கள். ஒரு காலத்தில் வெற்றிகரமான 25வது நாள், 100வது நாள் ,125 வது நாள் 175 வது நாள் என்று விளம்பரம் செய்வார்கள். இப்போது படம் வெளிவருவதே பெரிய சாதனையாக இருக்கும் போலிருக்கிறது. இந்த நிலையில் சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா என்று ஒன்றும் புரியவில்லை. அதே நேரம் தமிழ் சினிமா உலகின் பல நாடுகளில் ஜப்பான், கொரியா என்றெல்லாம் போய் வெளியாகிப் பேசப்படுகிறது. அங்கு இப்போது தமிழ் சினிமா என்று பேசுகிறார்கள். இப்படி ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி.
அப்படிப்பட்ட சூழலில் தான் இவர் இந்த செஞ்சி படத்தை உருவாக்கி இருக்கிறார் .நான் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும்போது, அந்தப் படத்தைப் பற்றி, தயாரிப்பாளர் பற்றி, இயக்குநர் பற்றி விசாரிப்பேன். இவரைப் பற்றி விசாரித்தபோது இவர் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லை என்றார்கள் .இவர் ஒரு சுயம்புவாக வந்திருக்கிறார்.அதே நேரத்தில் குடும்பத்தின் தொந்தரவுகள் இல்லாமல் எல்லாம் செட்டில் செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறார்.

இப்படிக் குடும்பத்தில் செட்டில் செய்துவிட்டுத்தான் சினிமாவுக்கு வர முடியும் என்று நினைத்தால் இங்கு யாருமே வரவே முடியாது. இவரது விடாமுயற்சி பாராட்டுக்குரியது.
ராஜன் சார் தன் வாழ்க்கைக் கதை முழுவதையும் கூறினார்.
இவ்வளவு இழப்பு என்று ஆன போதும் அதே நேரம் அவர் சினிமாவில் வட்டிக்கு விட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இது எப்படி நடந்தது என்பது எனக்குப் புரியவில்லை.
இதிலிருந்து சினிமாவில் விழுந்தாலும் , முடிந்தால் எழவும் முடியும் என்று புரிந்து கொள்ள முடியும். அதற்கு ராஜன் தான் உதாரணம்.

இங்கே தயாரிப்பாளர் கணேஷ் சந்திரசேகர் சினிமாவில் நுழைவது என்று முடிவெடுத்தபோது அவர் மைத்துனர் கவலைப்பட்டதாக இங்கு பேசும்போது கூறினார். தனது தங்கையின் கணவர் இப்படி சினிமா என்று போவதில் பதற்றப்பட்டதாகச் சொன்னார். ஆயிரம் இருந்தாலும் தனது தங்கையின் வாழ்க்கை மீது அண்ணனுக்கு ஒரு அக்கறை இருக்கும் தானே? மலையேறப் போனாலும் மச்சான் துணை வேணும் என்பார்கள். அந்த வகையில் கவலைப்பட்டு இருக்கிறார். இனி அவர்கள் தைரியமாக இருக்கலாம்.

படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும்போது எனக்கு ஏதோ ஒரு புதைக்கப்பட்ட புதையலை, பொக்கிஷத்தைத் தேடிப் பயணம் செல்வது போல் உள்ளது. இது பார்ப்பதற்குப் புதிதாக உள்ளது .இப்போது கூட கேரளாவில் பல கோயில்கள் திறக்கப்படாமல் உள்ளது. ஏனென்றால் அவ்வளவு பொக்கிஷங்கள் அங்கே இருப்பதாகப் பேசப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கும் முத்து கணேஷ், எல். வைத்தியநாதன் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.எல்.வி என்பவர் இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதன் போன்றவர்களால் மதிக்கப்பட்டவர். அந்தக் குடும்பத்தில் இருந்து வந்தவருக்கு வாழ்த்துகள். படத்திற்கான முக்கிய பாத்திரத்தில் இயக்குநரே நடித்துள்ளார் .தமிழ் சினிமாவில் பெரிய ஆள் சின்ன ஆள் என்று யாரும் பார்ப்பதில்லை .படம் நன்றாக இருந்தால் வரவேற்பார்கள். புதிய முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் வரவேற்பார்கள். இந்த செஞ்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

இந்த விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஷிண்டே, இசையமைப்பாளர்கள் முத்து- கணேஷ் ,பாண்டிச்சேரி ரோட்டரி சங்கத் தலைவர் வைத்தியநாதன், மலேசியாவில் இருந்து வந்திருந்த தயாரிப்பாளரின் மைத்துனர் டத்தோ டாக்டர் கமலநாதன் , தயாரிப்பு நிர்வாகி தில்லை நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இயக்குநர் தினேஷ் சந்திரசேகரின் மகன் அஸ்வின் சந்திரசேகர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

After fulfilling his family duty, ‘Senchi’ film director came in search of his dream

பாரதம் கண்ட சதுரங்கம் ஒரு பார்வை : மோடி – ஸ்டாலின் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட்.; ரஜினி வாழ்த்து

பாரதம் கண்ட சதுரங்கம் ஒரு பார்வை : மோடி – ஸ்டாலின் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட்.; ரஜினி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை – மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கவுள்ளது.

இந்த போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

1927-ம் ஆண்டு முதல் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.

இந்தியாவில் முதல் முறையாகவும் அதுவும் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன.

உலகின் அதிவேக சதுரங்க வீரர் என்றால் தனது 15 ஆவது வயதில் “INTERNATIONAL MASTER” என்ற பட்டத்தை வென்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தான் நியாபகத்திற்கு வருவார்.

இவ்வளவு பெரிய GRAND MASTER 2013 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் ஒருவருடன் விளையாடி தோல்வியுற்றார் என்றால் அவர்தான் நார்வே நாட்டைச் சேர்ந்த “மேக்னஸ் கார்ல்சன்”.

பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த இவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்.

உலக சதுரங்க மாஸ்டர்களில் மிகப்பிரபலமான இவர் ஐந்து முறை உலகச் சதுரங்க வீரர் என்ற பட்டத்தையும், மூன்றுமுறை அதிவேக சதுரங்க வீரர் என்ற பட்டத்தையும் ஐந்துமுறை உலக பிளிட் சதுரங்க வீரராகவும் வலம் வந்தவர்.!

இவ்வளவு பெரிய GRAND MASTER, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு “தமிழ்” மாணவனால் தோற்கடிக்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டோம்.

அவ்வளவு ஏன் “மேக்னஸ் கார்ல்சன்” கூட அந்த போட்டிக்கு முன்புவரை நினைத்திருக்கமாட்டார். அதுவும் 2022 பிப்ரவரி 22, 2022 மே 20 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற போட்டியில் இரண்டுமுறை மேக்னஸ் கார்ல்சனை வென்ற முதல் இளம் வயதுகொண்ட வீரன் என்ற பெருமையைப் பெற்றான் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்யானந்தா.

இவனது இந்த வெற்றி உலக நாடுகளையே இந்தியாவை நோக்கித் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது என்பதை மறுக்கவே முடியாது.!

சதுரங்கத்தை உலகிற்கே கற்றுத் தந்தவர்கள் நாங்கள்தான் என்று கர்வத்தோடு மார்தட்டிச் சொல்வதற்குக் காரணமாகியுள்ளான் பிரக்யானந்தா. இது எளிதாகக் கடந்து செல்லும் அளவுக்கு அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதை எழுதும்போதே “உடலெல்லாம் சிலிர்க்கிறது”. ஏனெனில் அத்தகு மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரன் பிரக்யானந்தா.

இவனை நமது மத்திய, மாநில அரசுகள் எப்படி கையாள்கின்றன, எந்த அளவுக்கு நிதி உதவிகள், பாராட்டுகள் செய்துள்ளன என்பதை அறியேன். எனினும் இவன் கொண்டாடப் படவேண்டியவன் என்பதில் யாதொரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.!

(என்ன? சதுரங்கத்தை உலகிற்கு நாம் கற்றுத் தந்தோமா? என்று சிலரின் மன எண்ணம் ஓட ஆரம்பித்திருக்கலாம்.! இதற்கு பதில் ஆம் என்பதே ஆகும்! தொடர்ந்து படியுங்கள்.!)

சதுர் + அங்கம் = சதுரங்கம் நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு பலகையில் விளையாடப்படும் இந்த விளையாட்டானது போரை அடிப்படையாகக்கொண்ட ஒரு போர் விளையாட்டாகும்.!

தென் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் “வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே” என்ற தொல்காப்பிய வரிகளில் வரும் “வல்” என்ற சொல்லானது இன்றைய சதுரங்கத்தின் சங்ககாலப் பெயராகும். மேலும் “கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய” என்ற அகநானூற்றின் வரிகள் சங்ககாலத்தில் இவ்விளையாட்டு நிலைபெற்றிருந்ததைத் தெளிவாக உணர்த்துகிறது.

மேலும் “வல்லுப் பலகை” என்ற பெயர் கலித்தொகையில் வருவதால் பலகை போன்ற அமைப்பு செய்யப்பட்டு அதன்மீது இவ்விளையாட்டை விளையாடியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது..!

SPAIN நாட்டைச் சேர்ந்த “லூயிஸ் ராமிரேஸ்” என்பவர் (CHESS) சதுரங்கம் எப்படி விளையாட வேண்டும் என்று “Repetition of Love and the Art of Playing Chess” என்ற நூலை எழுதியபோது இந்த விளையாட்டு ஆரம்பித்த இடம் பாரததேசம் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை 2019 ஆம் ஆண்டு “குஜராத்தின் லோதல்” பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சதுரங்கப்பலகை சிந்துசமவெளி நாகரிக காலத்தை சேர்ந்தது என்று அறிஞர்கள் குறிப்பிடுவதையும், கீழடியில் கிடைத்த சதுரங்க காய்களைக் கொண்டும் இந்த விளையாட்டு குறைந்தபட்சம் இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாரத தேசத்தில் விளையாடப்பட்டது என்பதை உறுதி செய்யலாம்.!

சங்கப்புலவன் குன்றம்பூதனார் எழுதிய “வல்லுப்போர் வல்லாய்” என்ற பரிபாடல் வரிகள் முருகனை வல்லாட்டத்தில் சிறந்தவனே என்று புகழ்கிறது. “வல்லு” என்பது போரை மையமாகக்கொண்டு சங்ககாலத்தில் விளையாடப்பட்ட ஒரு விளையாட்டு என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

இந்த வல்லு விளையாட்டுதான் இன்று சதுரங்கம் என்ற பெயரில் உலகம் முழுவதும் விளையாடப்படுகிறது. இதுவே கீழடியிலும், சிந்துசமவெளி நாகரிக காலங்களிலும் விளையாடப்பட்டு இவ்விளையாட்டின் பிறப்பிடமாக “பாரதமே” முன் நிற்கிறது.

உலகமே உற்றுநோக்கும் விதமாக 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று நேரு மைதானத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் அரசியல் பிரபலங்களும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களும் பங்கேற்றனர்.

இந்த நன்னாளில் உலகம் போற்றும் இவ்விளையாட்டை உலகிற்கு அறிமுகம் செய்தது “பாரதவாசிகளாகிய” நாம்தான் என்பதில் பெருமைகொள்வோம்.!

நன்றி : இந்துவன் பதிவு

செஸ் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என நடிகர் ரஜினிகாந்த் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு பிடித்த INDOOR GAME CHESS என பதிவிட்டு தான் விளையாடும் ஒரு செஸ் படத்தையும் பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.

Super Star Rajinikanth wishes to Chess Olympiad 2022 event

More Articles
Follows