மொபைல் டேட்டா அவலத்தை தோலுரிக்கும் அமலாபாலின் *ஆடை*

மொபைல் டேட்டா அவலத்தை தோலுரிக்கும் அமலாபாலின் *ஆடை*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amala Paul talks about her movie Aadai and movie based on Mobile Net dataதிரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்ன குமார்.

தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்பெடுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார்.

இதில்; அமலா பால் நடிக்கிறார் .உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலா பால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம்.

இப்படத்தை பற்றி இயக்குனர் ரத்னகுமார் கூறியதாவது…

“இப்படத்தில் நடிக்க அதீத உடல் பலமும் மன பலமும் வேண்டும். அதனை புரிந்துக்கொண்டு நடிக்க முன் வந்தார் நடிகை அமலா பால்.

போன தலைமுறையை இலவசங்கள் நாசம் செய்தது போல இன்றைய தலைமுறையை இலவச அலைபேசி தரவுகள் (மொபைல் டேட்டா)/ அலைபேசி தகவல்கள் சீரழித்து வருகிறது.

இதனை சுட்டிக்காட்டி தோலுரிக்கும் கேளிக்கை படம் இந்த ஆடை.

பொதுவாகவே இது மாதிரியான , கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட், பெண்கள் முன்னேற்றத்திற்க்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள்.

ஆனால் இந்த படம் மேற் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம் “என்று கூறினார்

“ஆடை” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதா பாத்திரங்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது.

விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இப்படத்தை V-ஸ்டுடியோஸ் விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார்

இந்த ஆடை படம் பற்றி அமலா பால் கூறியதாவது…

“ஆடை” படத்தின் கதை ஒரு சாதாரண கதையல்ல. “ஆடை” சாதாரண படமும் அல்ல. இது மாதிரியான உணர்ச்சிகரமான கதைகளும் படங்களும் நடிகைகளுக்கு அவர்களின் திறமை மேம்படுத்த ஊக்கம் அளிக்கிறது.

இதில் நான் ஏற்று நடிக்கும் காமினி என்ற சிக்கலான கதாபாத்திரம் என்னையும் என்னை சுற்றியுள்ளவர்களதும் ஆதங்கத்தையும் நடுக்கங்களையும் வெளிப்படுத்துவதாகும்.

இயக்குனர் ரத்னகுமரின் மேயாத மான் பாரத்த பிறகு அவர் மீதும் அவரது திறமை மீதும் தன்னம்பிக்கை ஏற்பட்டது. மேலும் அவர் ஆடையின் கதை சொன்ன போது அந்த கதையும் கதை சொன்ன விதமும் என்னை பெரிதும் கவர்ந்தது.

கதை என்னை மிகவும் பாதித்தது.அவ்வளவு உணர்ச்சிகரமான கதை ” என்றார் அமலா பால்.

Amala Paul talks about her movie Aadai and movie based on Mobile Net data

Breaking சூப்பர்ஸ்டார் ரஜினியின் *பேட்ட* படைத்த முதல் சாதனை

Breaking சூப்பர்ஸ்டார் ரஜினியின் *பேட்ட* படைத்த முதல் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Petta motion poster made record in Youtubeசன் பிக்சர்ஸ் நிறுவனம், ரஜினிகாந்த், அனிருத் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது பிரம்மாண்டமான கூட்டணியில் உருவாகி வரும் படம் பேட்ட.

சற்றுமுன் இப்படத்தின் மோசன் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியானது.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

யூடியூப்பில் வெளியிட்ட அரை மணி நேரத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்தும், 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்தும் உள்ளனர்.

மேலும் ட்விட்டரில் சென்னை, இந்தியா, உலகளவில் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, குருசோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தற்போது இதன் 2ஆம் கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.

Rajinis Petta motion poster made record in Youtube

விஜய்சேதுபதியுடன் இணையும் விக்ரம்-சிம்பு பட இயக்குனர்

விஜய்சேதுபதியுடன் இணையும் விக்ரம்-சிம்பு பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiசிம்பு நடித்த ‘வாலு’ மற்றும் விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ ஆகிய இரு படங்களை இயக்கியவர் விஜய் சந்தர்.

தற்போது தனது 3வது படமாக விஜய்சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்க இருக்கிறாராம்.

இந்த படத்தை அஜித்தின் வீரம், விஜய்யின் பைரவா ஆகிய படங்களை தயாரித்த விஜயா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது ‘96’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ஒரு தெலுங்கு படம் ஆகியவை உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Exclusive ரஜினியின் *பேட்ட* மோசன் போஸ்டர் சொல்லும் சீக்ரெட்ஸ்

Exclusive ரஜினியின் *பேட்ட* மோசன் போஸ்டர் சொல்லும் சீக்ரெட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petta motion poster reveals Rajinikanth character in that movieஉலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த இரண்டு நிகழ்வுகள் இன்று நடந்துள்ளன.

ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் டீசர் ரிலீஸ் செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து சில மணி நேரங்களில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் மோசன் போஸ்டர் வெளியானது.

இந்த மோசன் போஸ்டரில் சில சீக்ரெட்ஸ் வெளியாகியுள்ளதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

அதாவது ஒரு சர்ச் ஒன்றில் பியானோ உள்ளது போலவும், மியூசிக் நோட்ஸ் பேப்பர்கள் பறப்பது போலவும் உள்ளது.

மேலும் மாணவர்கள் பயன்படுத்தும் ஜாமண்ட்ரி பாக்ஸ் பறக்கின்றது, அதில் பென்சில், பேனாக்கள், காம்பஸ் சிதறுகிறது.

அதற்கு அடுத்து அனிருத்தின் பின்னணி இசையில் மாஸ் என்ட்ரி கொடுத்து ரஜினி உள்ளே நுழைகிறார்.
கபாலி,காலா படங்களை போல் இல்லாமல கொஞ்சம் இளமையாக வருகிறார் ரஜினி.

ஒரு அமைதியான புன்னகை அதே சமயம் அதிரடியாக ஒரு மிகப்பெரிய டான் போல தோன்றுகிறார்.

Petta motion poster reveals Rajinikanth character in that movie

ஒரே மேடையில் *பேட்ட-சர்கார்* இரண்டையும் இணைக்க சன் டிவி திட்டம்

ஒரே மேடையில் *பேட்ட-சர்கார்* இரண்டையும் இணைக்க சன் டிவி திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sun Pictures plans to conduct Petta and Sarkar function on single stageகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட பட மோசன் போஸ்டர் சற்றுமுன் வெளியானது.

ரஜினிகாந்த் நடித்து வரும் பேட்ட மற்றும் விஜய் நடித்து வரும் சர்கார் ஆகிய இரு மெகா படங்களை ஒரே நேரத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அக்டோபர் 2-ஆம் தேதி நடத்தவுள்ளனர்.

அதே நாளில் ரஜினியின் பேட்ட படத்தின் டீசரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒன்றாக நடத்த தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளதாம்.

இது நடைபெறும் பட்சத்தில் தென்னிந்தியாவின் அனைத்து சினிமா பிரபலங்களும் இதில் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

Sun Pictures plans to conduct Petta and Sarkar function on single stage

Big Breaking : ரஜினி 165 படத்தலைப்பை அறிவித்தது சன் பிக்சர்ஸ்

Big Breaking : ரஜினி 165 படத்தலைப்பை அறிவித்தது சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Stars Rajinikanths 165 movie titled Pettaகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இதுவரை தற்காலிகமாக தலைவர் 165 என பெயரிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது படத்தின் தலைப்பை மோசன் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.

பேட்ட என பெயரிட்டுள்ளனர்.

Petta official motion poster

இப்படத்திற்கு அனிருத் இசையைமக்க, ரஜினியுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

Super Stars Rajinikanths 165 movie titled Petta

 

More Articles
Follows