ரஜினி பர்த்டே & 2019 பொங்கலை குறிவைக்கும் கார்த்திக் சுப்பராஜ்

ரஜினி பர்த்டே & 2019 பொங்கலை குறிவைக்கும் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik Subbaraj targeting Rajini Birthday and 2019 Pongalகடந்த ஜீன் மாதம் 7ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெளியானது.

இப்படம் வெளியாவதற்கு முதல் நாளே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க டார்ஜிலிங் சூட்டிங் சென்றுவிட்டார் ரஜினி.

அங்கு அவர் ஒரு மாதம் தங்கிவிட்ட நிலையில், வருகிற ஜீலை 10ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளாராம்.

சில நாட்கள் சென்னையில் ஓய்வு எடுத்துவிட்டு பின்பு ஒரு வாரம் கழித்து 2ஆம் கட்டப் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளாராம்.

மொத்த சூட்டிங்கையும் செப்டம்பருக்குள் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

ரஜினி பிறந்த நாளில் இப்படத்தின் இசையை வெளியிடவும் படத்தை 2019 பொங்கல் தினத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறதாம் படக்குழு.

Karthik Subbaraj targeting Rajini Birthday and 2019 Pongal

அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர் ஆரி

அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர் ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Aari participated in North America Tamil Sangam Peravai Maanaduஅமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளான ஃபெட்னா மற்றும் மெட்ரோப்ளக்ஸ் நடத்திய வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 31 வது தமிழர் விழாவின் மூன்றாம் நாளான ஜூலை 2 -ம் தேதி 2018 அன்று நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ஆரி கலந்து கொண்டு சிறப்பித்தார்,

இவ்விழா மேடையில் தமிழர்களின் ஆரோக்கிய வாழ்வு மேம்பட அக்கறை கொண்டு அயராது உழைக்கும் நடிகர் ஆரிக்கு, பாரம்பரிய உணவு மற்றும் இயற்கை விவசாய முறையை ஊக்குவித்து வருவதற்காகவும், சமீபத்தில் நமது நாட்டு விதைகளை பாதுகாக்க சீனாவின் கின்னஸ் உலக சாதனையை முறியடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் பதிவு செய்தார், இதுபோன்ற தமிழர்களின் சமூக நலனில் அக்கரை கொண்ட ஆரி அவர்களுக்கு ஃபெட்னா மற்றும் மெட்ரோப்ளக்ஸ் அமைப்புகளின் அமெரிக்கா வாழ் தமிழர்கள் நினைவுக் கேடயம் வழங்கி கௌரவித்தனர்,

கருத்தரங்கு ;

அமெரிக்க வாழ் தமிழர்கள் பலரும் கலந்து கொண்டு பல தலைப்புகளின் கீழ் உலக தமிழர்கள் ஒருங்கிணைந்து விவாதிக்கப்பட்ட கருத்தரங்கில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் நடிகர் ஆரி நிகழ்த்திய உரை,

இயற்கை வேளாண்மை ;

விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை என்கிற நம்மாழ்வாரின் கருத்துக்கு ஏற்றார்போல் நம் தமிழினத்தின் ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் அதற்கு இன்றைய உணவு கலாச்சார தீங்குகளில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்,

சமூகப் பார்வை;

இப்போதைய சமூக சூழலில் கூட்டுக் குடும்பமாக வாழ்வதே குறைந்து வரும் நிலையில் எதிர்கால இளைய தலைமுறைக்கு தனி மனித ஒழுக்கம் என்பது ஏட்டுக் கல்வியில் மட்டுமில்லாமல் வாழ்க்கை முறை சார்ந்த கல்வியாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்,

மரபணு விதைகள் ;

மரபு சார்ந்த விவசாயமானது இன்றைய நாகரீகத்தால் மறக்கடிக்கப்பட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்துகிறோம், இதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் இன்றைய இளைஞர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள், இந்நிலை மாற வேண்டுமென்றால் நமது பாரம்பரிய விவசாயத்தின் அடிப்படை அம்சங்கள் குறித்து தெரிந்து நாம் கொள்ள வேண்டும், மாற்றம் என்பது எங்கேயோ யாரால் நிகழ்த்தப்படுவதில்லை நம்மிலிருந்து துவங்குவதே அதனால் மாற்றத்தை உணவிலிருந்தும் பாரம்பரிய விவசாயத்தில் இருந்து துவங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்,

மாடித்தோட்டம் ;

இந்நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு நம் நாட்டு விதைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற தன் உயர்ந்த நோக்கத்தினை பதிவு செய்ததுடன், நஞ்சில்லாத உணவுப்பழக்கத்தை கடைபிடிக்க ஒவ்வொருவரும் எளிய முறையில் தங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய எளிய முறைகளையும் விளக்கினார் என்பது மிக சிறப்பு,

பாராட்டு ;

இந்த கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அமெரிக்க வாழ் தமிழர்கள் வெகுவாக நடிகர் ஆரி அவர்களை பாராட்டி நானும் ஒரு விவசாயியாக மாறுவோம் மாற்றுவோம் என உறுதிமொழி மேற்கொண்டனர்.

Actor Aari participated in North America Tamil Sangam Peravai Maanadu

சிவகார்த்திகேயன் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி

சிவகார்த்திகேயன் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor raghuசினிமாவில் வாய்ப்புத்தேடி எத்தனையோ பேர் நுழைந்தாலும் அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரசிகர்களின் மனதில் பதிவது என்பது கூட ஒருவகையில் அதிர்ஷ்டம் தான்.. அப்படி ‘தர்மதுரை ‘ படத்தில் விஜய்சேதுபதியின் தம்பியாக, அவரது சட்டையை பிடித்து இழுக்கும் வில்லன் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் தனது உருவத்தை பதியவைத்தவர் ரகு.

நடிப்பின் மீதான ஆசையால் ஜப்பானில் சாப்ட்வேர் இஞ்சினியராக ஐந்து வருடம், தான் பார்த்துவந்த வேலையை உதறிவிட்டு சென்னைக்கு வந்த ரகு பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் நடிப்பு பயிற்சிக்காக சேர்ந்தார்.

முதல் வாய்ப்பாக பூஜை படத்தில் விஷாலின் நண்பர்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், தர்மதுரை படத்தில் விஜய்சேதுபதியின் தம்பியாக நடித்தபின் தான் பலரும் இவரை அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக ஒரு வெளிச்சம் கிடைத்தது.

“அந்தப்படத்தில் என்னை தவிர மற்ற அனைவரும் மிகப்பெரிய ஜாம்பவான்கள்.. நான் மட்டும் தான் புது ஆள்.. அதிலும் முதல் காட்சியே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து சண்டைபோடும் காட்சி என்பதால் பதட்டமாக இருந்தது..

மேலும் ஆரம்பத்தில் அந்த காட்சி காமெடியாக இருந்தாலும் க்ளைமாக்சில் சேது அண்ணாவையே தாக்கும் அந்த வில்லத்தனம் தான் என்னை ரசிகர்களிடம் ஓரளவுக்கு அறிமுகம் செய்துவைத்தது.. சேது அண்ணா தான் “பயப்படாம அடி” என ஊக்கம் கொடுத்தார்.. இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சீனுராமசாமி சாருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.” என்கிறார் ரகு.

தற்போது பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரகு, சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா ‘ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தர்மதுரை படம் மூலமாகத்தான் பரியேறும் பெருமாள் வாய்ப்பு தேடிவந்ததாம்.

அதில் கிராமத்து கேரக்டருக்காக அழைத்தபோது மாடர்ன் லுக்கில் வந்து நின்ற ரகுவை பார்த்து ஷாக் ஆனாராம் இயக்குனர் மாரிசெல்வம். ஆனால் படப்பிடிப்பின்போது பக்காவான கிராமத்து கெட்டப்பில் ரகு வந்து நின்றதும் தான், இயக்குனருக்கு முழு நம்பிக்கை வந்ததாம்.

இந்தப்படத்தில் ஆனந்தியின் அண்ணனாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரகு.

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நாயகி பிரியா பவானி சங்கரின் ப்ரண்ட் ஆக நடித்துள்ளார் ரகு. இதற்குமுன் பாண்டிராஜின் ‘கதகளி’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ரகுவுக்கு 2டி தயாரிப்பாளர் ராஜசேகர் மூலமாக இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு உருவானது.

“கிட்டத்தட்ட 30 நட்சத்திர நடிகர்கள் கொண்ட கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வு அந்தப்படத்தில் நடித்தபோது ஏற்பட்டது. கார்த்தி அண்ணாவுடன் இணைந்து நடித்த காட்சிகள் கலகலப்பாக இருந்தது” என்கிறார்.

ரஜினி முருகன் படத்திலேயே இவர் நடிக்கவேண்டியது.. ஆனால் ரொம்ப சின்ன ரோல் என்பதால், உனக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என கூறினாராம் பொன்ராம் சொன்னபடி ‘சீமராஜா’ படத்திற்காக அழைத்தவர், “நீ ஒல்லியாக இருக்கிறாய் இந்த கேரக்டருக்கு நன்றாக உடம்பை ஏற்றவேண்டும். அப்படி வந்தால்தான் உனக்கு வாய்ப்பு” என கண்டிஷன் போட்டுவிட்டாராம்.

அதற்காக ஜிம், உடற்பயிற்சி என உடம்பை ஏற்றி, சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து ஆளே மாறியதை பார்த்து இயக்குனர் பொன்ராம் ரொம்பவே சந்தோஷப்பட்டாராம்.

ஆனால் சீமராஜா படத்தில் என்ன கேரக்டர் என்பதை சொன்னால், கதை கசிந்துவிடும் என்பதால் அதை பற்றி மனிதர் மூச்சுக்கூட காட்டவில்லை.

நடிப்பில் சிவாஜி, விஜய்சேதுபதி இவர்களை ரோல்மாடலாக எடுத்துக்கொண்டுள்ளாராம் ரகு.. “அவர்கள் சின்னவேடம் என்றாலும் தயங்காமல் நடித்தவர்கள்..

அதில் தங்களது நடிப்பு பேசப்படும்படியாக செய்தவர்கள்.. அதேபோல நானும், நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பிடிவாதம் காட்டாமல், எந்த கேரக்டராக இருந்தாலும் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறதா என பார்த்தே ஒப்புக்கொள்வேன்” என்கிறார்.

‘நெருப்புடா’ மற்றும் பாலாஜி சக்திவேலின் ‘யார் இவர்கள்’ படங்களை தயாரித்த சந்திரா ஆர்ட்ஸ் ரகுவின் சகோதரர் நிறுவனம் என்பதால் கூடியவிரைவில் அந்த நிறுவனத்தின் புதிய படத்தில் மெயின் ரோலில் நடிக்க இருக்கிறாராம் ரகு.

அதற்கான கதை தேடல் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது. அதில் நீங்கள் ஹீரோவா, வில்லனா என கேட்டால், எனக்கு செட்டாக கூடியது எதுவாக இருந்தாலும் அதில் நடிப்பேன்” என்கிறார் ரகு நம்பிக்கையாக.

விஜய்யுடன் இணையும் நயன்தாராவுக்கு மட்டும் சம்பளம் 5 கோடியாம்.!

விஜய்யுடன் இணையும் நயன்தாராவுக்கு மட்டும் சம்பளம் 5 கோடியாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress nayantharaவனமகன், தியா (கரு) படங்களைத் தொடர்ந்து ‘லஷ்மி’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் ஏ.எல்.விஜய்.

இப்படத்தையடுத்து, ஜி.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த 30 நாட்களாக இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. விரைவில் நிறைவடைய உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து, நயன்தாராவை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

இதில் நயன்தாராவுக்கு மட்டும் சம்பளமாக ரூ.5 கோடி வரை கொடுக்கப்பட உள்ளதாம்.

தோனி பிறந்தநாளில் *தோனி கபடி குழு* படத்தின் டைட்டில் லுக்

தோனி பிறந்தநாளில் *தோனி கபடி குழு* படத்தின் டைட்டில் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhoni Kabadi Kuzhu stillsதிரைப்படம் மற்றும் விளையாட்டு போட்டிகளை கண்டுகளிக்கும் போது தான் மக்கள் மிகப்பெரிய அளவில் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகிறார்கள்.பல திரைப்படங்கள் தமிழில் விளையாட்டை மையமாக வைத்து வந்துள்ளது.

அதில் தற்போது “தோனி கபடி குழு” இணைந்துள்ளது. “மைடியர் பூதம்” தொடரில் நடித்த “அபிலாஷ்” இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கனவே “நாகேஷ் திரையரங்கம்” படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

“தோனி கபடி குழு” என்ற தலைப்பே கதையை உணர்த்துகிறது.நல்ல கதை தான் எப்போதும் கதாநாயகன். அதன்படி இப்படத்தின் கதை கபடி மற்றும் கிரிக்கெட் என்று இரண்டு கதாநாயகர்களின் இடையே நடைபெறுகிறது என்றார் நாயகன் அபிலாஷ்.

என்னை தவிர்த்து படத்தில் 8-கதாபாத்திரங்கள் உள்ளன.இயக்குனர் A.வெங்கடேஷின் துனை இயக்குனரான P.ஐயப்பன் இப்படத்தை இயக்குகிறார்.

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது;

இக்கதை முழுவதும் கற்பனையானது.அதில் என்னுடைய வாழ்க்கையையும் நான் சேர்த்துள்ளேன்.நான் சிறு வயதிலிருந்து கபடி விளையாடி தான் வளர்ந்தேன்.நான் பள்ளியில் கபடி சாம்பியன்.

அப்போது என்னுடைய நண்பர்கள் கிரிகெட் விளையாடும் போது எனக்கு பிடிக்காது.அதன் பிறகு கிரிக்கெட் என்னை மிகவும் ஈர்த்தது.தோனி கபடி குழுவில் சமூக கருத்தும் உள்ளது என்றார் இயக்குனர்.

நடிகர்களை தாண்டி படத்தில் நிஜ வாழ்கை கபடி விளையாட்டு வீரர்கள் சிலர் நடிக்கிறார்கள். “பட்டம் போலே” படத்தில் துல்கருடன் நடித்த லீமா இப்படத்தில் நடிக்கிறார்.

மேலும் படத்தில் தெனாலி, சரண்யா, செந்தில், புகழ், விஜித், C.N.பிரபாகரன், ரிஷி, நவீன் சங்கர், சுஜின், பீட்டர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

கதை,திரைக்கதை மற்றும் வசனத்தை ஐயப்பன் எழுதியுள்ளார்.

இசை:- ரோஷன் ஜோசப்,பின்னனி இசை மகேந்திரன்,பாடல்கள்:- ராசா, ஒளிப்பதிவு:- வெங்கடேஷ் DF.Tech,படத்தொகுப்பு:- கார்த்திகேயன், கலை A.C சேகர்,உடைகள் K.மனோகரன்.இப்படத்தின் படபிடிப்பு விழுப்புரம்,கல்லகுறுச்சி ஆகிய பகுதிகளில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

படம் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2018 அன்று வெளியாகவுள்ளது.

நந்தகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். வருகிற 7ம் தேதி இந்தியன் கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்த நாளன்று இதன் டைட்டில் லோகோ வெளியீடுகிறார்கள்.

தென்னிந்திய சினிமாவில் தடம் பதிக்க வரும் வித்யாபாலன்

தென்னிந்திய சினிமாவில் தடம் பதிக்க வரும் வித்யாபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vidya balanஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்பவர் என்.டி.ராமராவ்.

தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது.

“என்.டி.ஆர் பயோபிக்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கின்றார்.

இந்த படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கின்றார்.

வித்யாபாலன் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பதால் ஏற்கனவே இருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் கூடியுள்ளது.

கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.

More Articles
Follows