தல-தளபதி பற்றி ஒரே வரியில் சொன்ன கார்த்தி

தல-தளபதி பற்றி ஒரே வரியில் சொன்ன கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi talks about Ajith and Vijayஒரு சில நடிகர்களுக்கு மட்டும்தான் அறிமுக படமே வெற்றிப்படமாக அமையும்.

சிவாஜி கணேசனுக்கு பராசக்தி போல கார்த்திக்கு பருத்தி வீரன் அமைந்தது.

அதன்பின்னர் ஒரு சில படங்கள் கார்த்திக்கு சரியாக அமையவில்லை என்ற போதிலும், அண்மையில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று அவரது சினிமா கேரியரில் மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தன் ரசிகர்களுடன் ட்விட்டரில் இவர் கலந்துரையாடியுள்ளார்.

அப்போது வழக்கம்போல ரசிகர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய் பற்றி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது…

‘அஜித் சார் ஒரு ஜெண்டில் மேன், அவரை சந்தித்த பிறகு மேலும் அவரை பிடிக்க ஆரம்பித்துவிட்டது’ எனவும் ‘விஜய் சாரை அண்ணனுடன் கல்லூரியில் சந்தித்துள்ளேன், மிகவும் எளிமையானவர். அதே சமயம் தன்னம்பிக்கை உடையவர்’ என பதிலளித்துள்ளார்.

Karthi talks about Ajith and Vijay

Ajith sir is very warm and a thorough gentleman. You will like him more after you meet him
— Actor Karthi (@Karthi_Offl) November 27, 2017

I’ve known vijay sir since he was in Loyola college with anna. Extremely simple man but very confident.
— Actor Karthi (@Karthi_Offl) November 27, 2017

சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்

சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Rajesh honoured as Best Actress in multi languagesதமிழ் தெரிந்த பெண், அழகு மற்றும் திறமை நிறைந்த நடிகைகள் ஒரு சிலரே தமிழ் சினிமாவில் உள்ளனர்.

அதில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தற்போது தனுஷ் உடன் வட சென்னை, விக்ரம் உடன் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து இயக்குனர் விஜய் இயக்கத்தில் லட்சுமி என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் தவிர மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழில் கட்டப்பாவ காணோம், மலையாளத்தில் ஜோமெண்டே சுவிசேஷங்கள், சகாவு, ஹிந்தியில் டாடி ஆகிய படங்களில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான Asia Vision Movie Awards 2017 விருதை இவர் பெற்றுள்ளார்.

Aishwarya Rajesh honoured as Best Actress in multi languages

2018 காதலர் தினத்தை குறிவைக்கும் தனுஷ் படம்?

2018 காதலர் தினத்தை குறிவைக்கும் தனுஷ் படம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Enai Noki Paayum Thota release updatesகௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும்போதே விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தையும் இயக்க ஆரம்பித்துவிட்டார் கவுதம்மேனன்.

தற்போது விக்ரம் அவர்கள் சாமி ஸ்கொயர் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டதால், தனுஷ் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம் கவுதம்மேனன்.

இப்படத்தின் சூட்டிங்கை 2017 டிசம்பருக்குள் முடித்துவிட்டு ஜனவரியில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

எனவே `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை காதலர் தினத்தை குறி வைத்து பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை கவுதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயாரித்துள்ளனர்.

தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்தில் ராணா, சுனைனா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush Enai Noki Paayum Thota release updates

சங்கு சக்கரம் ரிலீஸ்; கிறிஸ்துமஸ் வாரத்தில் தீபாவளி விருந்து

சங்கு சக்கரம் ரிலீஸ்; கிறிஸ்துமஸ் வாரத்தில் தீபாவளி விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sangu chakkaram stillsபல கதைகள், பல நகர்வுகள், பல காட்சிகள் என பல விதமான விதங்களில் தமிழ் சினிமாவை உயிர் வாழ வைத்தாலும், குழந்தைகளை கவரும் திரைப்படங்கள் என்னவோ சற்று குறைவு தான்.

விரல் விட்டும் எண்ணும் வகையிலே இந்த மாதிரியான படங்கள் வெளிவருகிறது. அந்த வகையில் குழந்தைகளை மட்டுமே முன்னிறுத்தி அவர்களின் குறும்புத்தனங்களை வைத்தும் சில சஸ்பென்ஸ், திரில்லிங் வைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது தான் ‘சங்குச்சக்கரம்’.

அந்த வகையில் குடும்பத்தோடு வந்து பார்த்து, பொங்கி சிரித்து பூரித்து ரசித்து மகிழும் படமாக வருகிறது ‘சங்கு சக்கரம்’.

லியோ விஷன்ஸ் சார்பில் வி.எஸ்.ராஜ்குமாரும், சினிமா வாலா பிக்சர்ஸ் சார்பில் கே.சதீஷும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தை மாரீசன் இயக்கியுள்ளார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற நகைச்சுவையும் கிண்டல் கேலியும் நிறைந்த படங்களை தயாரித்தவர்கள் இவர்கள்தான்.

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், கீதா, ‘பசங்க’ படப் புகழ் நிஷேஷ் ஆகியோருடன் எட்டு சிறுவர் சிறுமியர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த கூட்டணிகள் செய்யும் சில வீர, தீர செயல்கள், சந்திக்கும் சிக்கல்கள், ஆகியவற்றை திரில்லாகவும் நகைச்சுவையாகவும் கூற வருவதுதான் இந்த ‘சங்கு சக்கரம்’.

‘ஜில் ஜங் ஜக்’ படத்தை படத்திற்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர்தான் இந்தப் படத்துக்கும் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு ஜி.ரவி கண்ணன், கலை இயக்கம் ஜெய்.

“படத்துக்கு சங்க சக்கரம் என்று பெயர் வைத்தது ஏன்..?” என்று இயக்குநர் மாரிசனிடம் கேட்டதற்கு அவர் சொன்னதாவது…

“சஸ்பென்ஸ், திரில், சுவாரஸ்யம், கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி, எள்ளல், ஏகடியம் எல்லாம் கலந்த ஒரு சுழலில், படம் பார்க்கும் ரசிகர்கள் சிக்கிச் சுழன்று சந்தோஷத்தில் திளைப்பார்கள்.

அதாவது தீபாவளிக்கு சங்கு சக்கரம் விடுகிற மாதிரியான சந்தோஷத்தில்.. அதனால்தான் ‘சங்கு சக்கரம்’ என்கிற டைட்டிலை வைத்தோம்.

மேலும் கதை முழுவதும் குழந்தைகளை சுற்றியே நிகழ்வதால் குழந்தைகளின் கொஞ்சல்கள் முதல் திகில் வரை அனைத்தையும் காணலாம்.”என்றார்.

இப்படத்தை டிசம்பர் 2 அல்லது 3வது வாரத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அப்படியென்றால் கிறிஸ்மஸ் வாரத்தில் குழந்தைகள் தீபாவளி விருந்து இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

நாளை மாலை 6 மணிக்கு ஒரு நல்ல நாள் பாத்து சொல்லும் விஜய்சேதுபதி

நாளை மாலை 6 மணிக்கு ஒரு நல்ல நாள் பாத்து சொல்லும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiவிஜய்சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ஆறுமுககுமார் என்ற இளைஞர் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி 10 விதமான கெட் அப்புகளில் நடித்திருக்கிறார்.

இவருடன் காயத்ரி, நிகாரிகா, ரமேஷ்திலக், விஜி சந்திசேகர் உள்ளிட்டோரும் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

நிஹாரிகா அவர்கள் நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியானது முதலே இப்படம் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இப்படத்தின் தலைப்பே முக்கிய வசனமாக பல இடங்களில் வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதன் டீஸரை நாளை நவம்பர் 29ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.

சிம்பு உடன் கைகோர்க்கும் தனுஷ்

சிம்பு உடன் கைகோர்க்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sakka podu podu rajaசந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா.

இதில் விவேக், ரோபோ சங்கர், மயில்சாமி ஆகியோரும் நடித்துள்ளனர்.

விடிவி கணேஷ் இப்படத்தை தயாரிக்க சிம்பு இசையமைத்துள்ளார்.

இப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசையை டிசம்பர் 6ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

இதை நடிகர் தனுஷ் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows