தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காஷ்மோரா படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாக இருக்கும் கார்த்தி விரைவில் மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதன் சூட்டிங் வருகிற ஜீலை 8ஆம் தேதி ஊட்டியில் தொடங்குகிறது.
இதில் நாயகியாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்க, முக்கிய வேடத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கிறார்.
வைரமுத்து வரிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பாக மணிரத்னமே இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்திற்கு ‘காற்று வெளியிடை’ என்ற பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அழகான வரி பாரதியாரின் புகழ்பெற்ற காதல் பாடல்களில் ஒன்றான ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ என்ற பாடலில் இடம் பெற்றுள்ளதாம்.