Breaking: காவிரிக்காக காலாவை தடுப்பது கர்நாடகாவுக்கு சரியல்ல…: ரஜினி

Breaking: காவிரிக்காக காலாவை தடுப்பது கர்நாடகாவுக்கு சரியல்ல…: ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karnataka is not fair in opposing Kaala release says Rajinikanthரஜினிகாந்த் தமிழர் இல்லை. அவர் தமிழகத்தை ஆள கூடாது என தமிழகத்தில் சிலர் போர்க்கொடி உயர்த்தினாலும் ரஜினி அவர்களை மற்ற மாநிலத்தவர் ஒரு தமிழராகவே பார்க்கிறார்கள்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் ஒவ்வொரு முறை பேசும் போது கர்நாடகாவில் இருந்து பலத்த எதிர்ப்பு உருவாகும்போது இந்த தமிழர் பிரச்சினை அங்கே பிரதிபலிக்கிறது.

இந்தமுறையும் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதை அடுத்து அவரது காலா படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும் திரைப்படங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபையே காலா படத்திற்கு தடை விதித்துள்ளது.

இந்த பிரச்சினையை நடிகர் தனுஷ் கோர்ட் வரை கொண்டு சென்றார்.

இதனையடுத்து கர்நாடகாவில் ‘காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் என்பவர், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் – விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று காலை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம்.

காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு.

காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை.

காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம்.

காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது’ என பேசினார்.

Karnataka is not fair in opposing Kaala release says Rajinikanth

உள்ளூர் தொலைக்காட்சிகளில் கலக்கும் காலா; மக்கள் உற்சாகம்!

உள்ளூர் தொலைக்காட்சிகளில் கலக்கும் காலா; மக்கள் உற்சாகம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடைசியாக வெளிவந்த படம் கபாலி.

இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பும் தாயாரிப்பாளருக்கு மிகுந்த லாபத்தையும் தந்தபடமாக அமைந்ததாக அப்படத்தின் தாயரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களே கபாலி படத்தின் வெற்றிவிழாவில் அறிவித்தார்.

அதன் பிறகு அதே கூட்டனியை வைத்து மீண்டும் படம் பன்ன ஆசைப்பட்டார் சூப்பர் ஸ்டார் .தயாரிப்பு நிறுவனம் நடிகர் தனுஷ் ன் வுண்டர் பார் நிறுவனம் இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஏற்றது.

.இப்படத்திற்கு காலா (எ) கரிகாலன் என பெயர் சூட்டப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது.

காலா பாடத்தின் ஷீட்டிங் முழுவதும் முடிந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் & இசை வெளியீடு என்று தன்னுடைய ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ரஜினிகாந்தை எதிர்பவர்களும் இப்படத்தை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள் ஜீன் மாதம் 7ம் தேதிக்காக .ஏன் என்றால் அன்று தான் காலா படம் உலகெங்கும் ரிலீஸ் செய்யபடுகிறது.

இந்த வேளையில் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் மற்றுமொரு சாதனை நிகழ்த்தியுள்ளது.உள்ளூர் (லோக்கல் சேனல்) தொலைக்காட்சிகள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி (பாண்டிச்சேரி) யில் உள்ள சுமார் 120 க்கும் மேற்பட் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ரஜினிகாந்தின் காலா படத்தின் விளம்பர ட்ரெய்லர் (Promo) சுமார் 15 நிமிடத்துக்கு ஒருமுறை டிவி யில் வந்து கலக்கிகொண்டிருக்கிறது.

இதைபார்க்கும் பொழுது படத்தின் எதிர்பார்ப்பு மேலும் மேலும் எகிறபோவது நிஜம்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் வாரத்தில் படம் ரிலீஸ் செய்ய யாருக்கு தைரியம் வரும். இதோ அந்த தைரியம் சூப்பர் ஸ்டார் & வுண்டர் பார் தனுஷ்.

IMG-20180605-WA0047

IMG-20180605-WA0144

IMG-20180605-WA0148

IMG-20180605-WA0322

#Breaking: காவிரியை போல் காலா தீர்ப்பையும் மதிக்காத கர்நாடக அரசு

#Breaking: காவிரியை போல் காலா தீர்ப்பையும் மதிக்காத கர்நாடக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala posterகாவிரி நீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

ஆனால் அந்த தீர்ப்பை கர்நாடக அரசு பெரும்பாலும் மதிப்பதே இல்லை.

இந்நிலையில் இன்று காலா ரிலீஸ் குறித்த தீர்ப்பு வெளியானது.

கர்நாடக மாநிலத்தில் காலா வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியதாவது…

கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பதே நல்லது

காலாவை வெளியிட்டால் அதன் விளைவுகளை படத்தின் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும்.

காலா படத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய உயர்நீதிமன்ற உத்தரவு நகல் வரவில்லை

காலாவுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ”

என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

சத்யா-மானசா நாயர் நடித்துள்ள •என்னோடு நீ இருந்தால்• ஜூன் 15ல் ரிலீஸ்

சத்யா-மானசா நாயர் நடித்துள்ள •என்னோடு நீ இருந்தால்• ஜூன் 15ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sathya Maanasa starrer Ennodu Nee Irundhal release on 15th June 2018சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்திற்கு “ என்னோடு நீ இருந்தால் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

படத்தின் இயக்குனர் மு.ரா.சத்யாவிடம் படம் பற்றி கேட்ட போது..

லவ் மற்றும் ரொமாண்டிக் திரில்லராக படம் உருவாகி உள்ளது.

யாரிடமும் உதவியாளராக பணி புரியவில்லை, படங்களை பார்த்தது, புத்தகங்கள் எழுதும் அனுபவத்தை வைத்தே இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.

இந்த படம் வெளிவந்த பிறகு பார்த்த அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அனைவரும் இந்த சமூதாயத்தால் ஒரு முக்கியமான விஷயத்தால் நமக்கு தெரியாமலே பாதிக்கப்பட்டு வருகிறோம்.

அந்த பாதிப்பு என்ன ? ஏன் அவ்வாறு நடக்கிறது என்பது இந்த படம் பார்த்த பிறகு அதை உணர்த்து அதிர்சியடையும் வண்ணம் படத்தின் திரைக்கதை இருக்கும்.

படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதாமாக ரசிக்கவைக்கும்.

சென்சாரில் படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது மகிழ்ச்சி படம் ஜூன் 15 ம் தேதி வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் மு.ரா.சத்யா.

ஒளிப்பதிவு – நாகசரவணன்
இசை – கே.கே
எடிட்டிங் – ராஜ்கீர்த்தி
கலை – எஸ்.சுப்பிரமணி
நடனம் – கேசவன்
ஸ்டன்ட் – ஸ்டன்ட் ஜி
தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.ஆனந்த்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் – மு.ரா.சத்யா
தயாரிப்பு – எஸ்.யசோதா

Sathya Maanasa starrer Ennodu Nee Irundhal release on 15th June 2018

கட்டிப்பிடி வைத்தியத்தால் காவிரி வந்துடுமா..? கமலுக்கு அமைச்சர் கேள்வி

கட்டிப்பிடி வைத்தியத்தால் காவிரி வந்துடுமா..? கமலுக்கு அமைச்சர் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Minister Jayakumar reaction to Kamal and Karnataka CM meet regarding Cauvery issueகாவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து பேசினார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

அப்போது காவிரி விவகாரத்தில் பேசி சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என்று கமல் தெரிவித்து இருந்தார். இந்தக் கருத்து தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது…

தண்ணீர் விட காவிரி மேலாண்மை வாரியம் உள்ளது. அந்த அடிப்படை விவரம் கூட தெரியாமல் கமல் கர்நாடக முதல்வரை சந்தித்து பேசயுள்ளார்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் சினிமா போல கமல் கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தால் காவிரியில் எப்படி தண்ணீர் வரும்?

கர்நாடக முதல்வர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்தது சரியான நடவடிக்கை அல்ல” என்றார்.

TN Minister Jayakumar reaction to Kamal and Karnataka CM meet regarding Cauvery issue

tn minister jayakumar

காலா படத்தை பார்க்க ஊழியர்களுக்கு லீவு கொடுத்த ஐடி நிறுவனம்

காலா படத்தை பார்க்க ஊழியர்களுக்கு லீவு கொடுத்த ஐடி நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IT company granted holiday for their company to watch Kaala on its release dateதனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை மறுநாள் ஜீன் 7ல் வெளியாகிறது.

இப்படத்திற்கு இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு சில தியேட்டர்களை தவிர பல இடங்களில் முதல் நான்கு நாட்களுக்கு தியேட்டர்கள் இப்போதே புக் ஆகிவிட்டது.

கேரளாவில் மட்டும் 300க்கும் மேற்ப்பட்ட தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் தினத்தன்று தன் கம்பெனி ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்துள்ளது கேரளாவை சேர்ந்த ஒரு ஐடி நிறுவனம்.

அந்த சர்குலரில் உங்கள் ஒவ்வொருவரின் கோரிக்கைக்காக காலா ரிலீஸ் அன்று கம்பெனிக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IT company granted holiday for their company to watch Kaala on its release date

அந்த நிறுவனத்தின் காலா ஹாலிடே சர்க்குலர் இதோ….

kaala leave in kerala

More Articles
Follows