கைதி ரீமேக்..பாலிவுட் செல்லும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்

கைதி ரீமேக்..பாலிவுட் செல்லும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karthi in Kaithiதீபாவளி விருந்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் கடந்த அக். 25ல் ரிலீசானது.

இந்த படத்துடன் மற்றொரு படம் வந்தாலும் கைதி தான் நிஜமான தீபாவளி ட்ரீட் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

சாம் சிஎஸ் இசையமைத்திருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்ஆர். பிரபு தயாரித்திருந்தார். இவருடன் திருப்பூர் விவேக் என்பவரும் இணைந்து தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பிரபல நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்க, கார்த்தி வேடத்தில் சாகித் கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கன்னடத்திலும் இப்படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்

விஜய்ஸ்ரீ உங்கிட்ட மணிரத்னம் டச் இருக்குய்யா.. : சாருஹாசன்

விஜய்ஸ்ரீ உங்கிட்ட மணிரத்னம் டச் இருக்குய்யா.. : சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I can see Manirathnam style with Vijay Sri says Charuhassanதமிழ் சினிமா தந்த சிறந்த கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் சாருஹாசன்.

இவருக்கு தற்போது 90 வயதாகிவிட்டது. இருந்தபோதிலும் இவரை ஹீரோவாக தாதா 87 படத்தில் நடிக்க வைத்தார் டைரக்டர் விஜய் ஸ்ரீ.

படத்தின் மேக்கிங்காக இப்படத்தை பலரும் பாராட்டியிருந்தனர்.

இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா தத்தா, அர்ஜுமன், பிக் பாஸ் ஜுலி நடிக்க ‘பப்ஜி’ என்ற படத்தினை இயக்கி வருகிறார் விஜய் ஸ்ரீ.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய்ஸ்ரீ அவர்களுக்கு, சாருஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அப்போது, ‘ உங்களுடைய இயக்கத்தை பார்க்கும் போது எனக்கு இயக்குனர் மணிரத்னத்தை பார்ப்பது போல் உள்ளது. உங்களுடைய வெற்றிப் பயணம் தொடர வேண்டும்.

இந்த கலையுலகில் நிச்சயம் நீங்கள் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்துவீர்கள். வாழ்த்துகள்’ என்று கூறி வாழ்த்தினாராம் சாருஹாசன்.

’சாருஹாசன் ஐயா வாழ்த்தியதே என் வாழ்வின் மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

என் பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் கூறிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி.’ என தெரிவித்துள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

நாமும் அவரை வாழ்த்தி சாதனை படைக்க வரவேற்போம்.

I can see Manirathnam style with Vijay Sri says Charuhassan

அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகிய சமுத்திரக்கனி

அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகிய சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samuthirakani to play a villain in Allu Arjuns Telugu movieபல படங்களில் நாயகனாக நடித்தாலும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் சமுத்திரகனி.

தற்போது தெலுங்கு சினிமாவிலும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.

திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ஆமு வைகுந்தபுரமுலோவி என்ற படத்தில் தான் இந்த வில்லன் வேடத்தை ஏற்றுள்ளார்.

தமன் இசையமைத்து வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் நாயகிகளாக நடிக்கின்றனர்.

அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு (பொங்கல்) இப்படம் திரைக்கு வருகிறது.

Samuthirakani to play a villain in Allu Arjuns Telugu movie

பிகில் டைரக்டர் அட்லிக்கு பிடித்த அஜித் படங்கள் இதோ…

பிகில் டைரக்டர் அட்லிக்கு பிடித்த அஜித் படங்கள் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Atlee talks about Ajith and his favorite moviesபிகில் பட டைரக்டர் அட்லி சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுட்ன் கலந்துரையாடினர்.

அப்போது பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் கேட்டனர்.

அப்போது அட்லியின் மனைவி பிரியாவும் ஒரு கேள்வி கேட்டார்.

ஏய் பாப்பா… நீ படம் முடிச்சிட்டு என்கூட நேரம் செலவழிக்காம இன்டர்வியூ கொடுத்துக்கிட்டு இருக்க?

அட்லீ: இதோ வந்துட்டேன் பாப்பா… 5 நிமிடங்கள். இதோ… இதோ… என பதிலளித்துள்ளார்.

ஒரு ரசிகர் அஜித்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்க என கேட்டுள்ளார்.

அஜித் சார் மீது பெரிய மரியாதை உள்ளது. அவர் நடித்த படத்தில் என்னுடைய சமீபத்திய விருப்பங்கள் ‘விஸ்வாசம்’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’ படங்கள் என தெரிவித்துள்ளார்.

Director Atlee talks about Ajith and his favorite movies

கனவுப் படத்தை கைவிடும் கமல்; மருதநாயகமாக மாறும் விக்ரம்.?

கனவுப் படத்தை கைவிடும் கமல்; மருதநாயகமாக மாறும் விக்ரம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram replaces Kamal in mega dream project Marudhanayagamஉலகநாயகன் கமல்ஹாசன் தன் கனவு படமான மருதநாயகம் படவேலைகளை 1997-ல் தொடங்கினார்.

இந்த படத்தை இங்கிலாந்து ராணி தொடங்கி வைக்க, கலைஞர் கருணாநிதி, ரஜினிகாந்த உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அப்போதே படத்தின் 30 நிமிட காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கியிருந்தார்.

ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகரிக்கவே படத்தை கைவிட்டனர்.

வருடங்கள் செல்ல செல்ல இந்த படம் குறித்து கமலிடம் கேட்கப்பட்டது. அவரும் நிச்சயம் படத்தை முடிப்பேன் என தெரிவித்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் பணிகள் இருப்பதால் மருதநாயகத்தை படத்திலிருந்து கமல் விலகுவதாக தகவல்கள் வருகின்றன.

கமலுக்கு பதில் விக்ரம் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் எந்த தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Vikram replaces Kamal in mega dream project Marudhanayagam

 

அசுரன் தெலுங்கு ரீமேக்; தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ்

அசுரன் தெலுங்கு ரீமேக்; தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Venkatesh roped in for Asuran Telugu remakeகலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படம் கடந்த அக்டோபர் 4ந்தேதி வெளியானது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தைப் பார்த்த தமிழ், தெலுங்கு திரை பிரபலங்கள் பலரும் பாராட்டினர்.

இந்த நிலையில் ‘அசுரன்’ பட தெலுங்கு ரீமேக்கில் தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

தாணு மற்றும் சுரேஷ் பாபு இணைந்து தயாரிக்கின்றனர்.

அசுரன் இயக்குநர் யார்? என்பது தான் இன்னும் தெரியவில்லை.

Actor Venkatesh roped in for Asuran Telugu remake

More Articles
Follows