‘லியோ’ படத்தில் ‘கைதி’ & ‘விக்ரம்’ பட லீட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

‘லியோ’ படத்தில் ‘கைதி’ & ‘விக்ரம்’ பட லீட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் – லோகேஷ் இணையும் புதிய படத்திற்கு லியோ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த் சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

‘லியோ’ பட பூஜை வீடியோவில் நடிகர் மரியம் ஜார்ஜ் இடம்பெற்றிருந்தார்.

இவர் லோகேஷ் இயக்கிய ‘கைதி’ படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்து கலக்கியிருந்தார்.

மேலும் கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தல் ஏஜென்ட் டீனாவாக அதிரடி காட்டிய வசந்தியும் நடிக்கிறார்.

சமீபத்தில் காஷ்மீர் சென்ற ‘லியோ’ படக்குழுவில் இடம்பிடித்திருந்தார் வசந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanagaraj gives the lead of ‘Kaithi’ & ‘Vikram’ in ‘Leo’

மீண்டும் விஜய்யுடன் கூட்டணி.; ‘வாரிசு’ தயாரிப்பாளர்கள் அதிரடி அறிவிப்பு

மீண்டும் விஜய்யுடன் கூட்டணி.; ‘வாரிசு’ தயாரிப்பாளர்கள் அதிரடி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பரசுராம், தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா இணைகிறார்.

‘கீத கோவிந்தம்’ படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் பரசுராமுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒருமுறை இணைகிறார்.

இது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிளாக் பஸ்டர் வெற்றியான ‘கீத கோவிந்தம்’ படத்திற்கு பிறகு விஜய் மற்றும் பரசுராம் இரண்டாவது முறையாக இணைகின்றனர். இந்த புராஜெக்ட் புதிய மற்றும் தனித்துவமான கதையாக இருக்கும்.

ஸ்டார் தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இந்த புதிய படத்தைத் தயாரிக்க உள்ளனர். விஜய்யுடன் இணையும் இந்த படம் எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட இருக்கிறது.

நடிகர்கள், படக்குழுவினர் விவரங்கள் மற்றும் படம் குறித்தான அடுத்தடுத்த புரோமோஷனல் விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை தெலுங்கில் பிரபலமான தில் ராஜூ மற்றும் ஷிரிஷ் இணைந்து தயாரித்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.

Sri Venkateswara creations @SVC_Official announces their upcoming project with THE #VijayDeverakonda @TheDeverakonda & @ParasuramPetla. ???

More details soon. https://t.co/jhHO8nG7KU

Team up with Vijay again.; ‘Varisu’ makers announced

ஷாக்கிங் புகைப்படங்களை வெளியிட்ட தெய்வ திருமகள் சாரா அர்ஜூன்

ஷாக்கிங் புகைப்படங்களை வெளியிட்ட தெய்வ திருமகள் சாரா அர்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் ‘தெய்வ திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா. ‘சைவம்’ மற்றும் ‘சில்லு கருப்பட்டி’ படத்திற்காக விருதுகளை வென்றார்.

சாராவுக்கு இப்போது 17 வயதாகிறது, இதற்கிடையில், நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

படத்தில் சாரா சிகரெட் புகைக்கிறார் அவரது தோற்றமும் மோசமான வழிகளில் விழுந்துவிட்டதைக் குறிக்கிறது. இருப்பினும் ரசிகர்கள் விரக்தியடையத் தேவையில்லை, ஒரு புதிய தமிழ் திரைப்படமான ‘Quotation Gang’ படத்தில் நடிக்கிறார். அதிலிருந்து இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘Deiva Thirumagal’ actress Sara Arjun shocks fans with latest photos

சமந்தாவின் ‘சாகுந்தலம்’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்..?

சமந்தாவின் ‘சாகுந்தலம்’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பான்-இந்தியத் திரைப்படமாக 3டியில் தயாரிக்கப்பட்ட சாகுந்தலம் திரைப்படம், அதே பெயரில் புகழ்பெற்ற நாடக ஆசிரியரான காளிதாசனின் நாடகத்தின் தழுவலாகும்

தேவ் மோகன் துஷ்யந்தாவாக நடிக்கிறார், அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் முதலில் நவம்பர் 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டது, 3D வேலைகள் காரணமாக பிப்ரவரி 17, 2023 க்கு தாமதமானது.

இந்நிலையில் “சாகுந்தலத்தை பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிட முடியவில்லை என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samantha’s Shaakuntalam release date rescheduled again!

வசூலில் ராஜமௌலியின் RRR படத்தை மிஞ்சிய ஷாருக் கானின் பதான்

வசூலில் ராஜமௌலியின் RRR படத்தை மிஞ்சிய ஷாருக் கானின் பதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எதிர்பார்த்தபடி, ‘RRR’ இன் வாழ்நாள் வசூலை ஷாருக் கானின் ‘பதான்’ அமெரிக்கா மற்றும் கனடாவில் $14.3 மில்லியன் வசூலித்து முறியடித்துள்ளது. இப்படம் இரண்டே வாரங்களில் இச்சாதனை படைத்துள்ளது.

வெளிநாடுகளில் மட்டும் ரூ.300 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. UAE மற்றும் GCC நாடுகளில், அதிரடி திரில்லர் திரைப்படம் $11.41 மில்லியன் வசூலித்தது, UK மற்றும் அயர்லாந்தில் $4.15 மில்லியன் வசூலித்தது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்து, சித்தார்த் ஆனந்த் இயக்கிய இப்படம், மொத்தமாக ரூ 900 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘Pathaan’ beats ‘RRR’ hands down!

காந்தாரா படத்தின் முந்தைய பாகம் ரெடியாகிறதா ?

காந்தாரா படத்தின் முந்தைய பாகம் ரெடியாகிறதா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காந்தாரா படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என இருதரப்பிலும் பரவலாகப் பாராட்டப்பட்டது. இந்நிலையில், ரிஷப் ஷெட்டி தனது ரசிகர்களுடன் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் பெங்களூரில் நடந்த காந்தாரா படத்தின் 100 நாள் வெற்றி விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவில் நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி காந்தாரத்தின் தொடர்ச்சி பற்றி பேசுவதைக் காண முடிந்தது.

நீங்கள் பார்த்தது உண்மையில் பகுதி 2, காந்தாரத்தின் முன்னுரை பகுதி 1 அடுத்த ஆண்டு வரும்” என்று ஷெட்டி கூறினார்.

Rishab Shetty shares a huge update on Kantara Prequel

More Articles
Follows