தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மே மாதம் 1ஆம் காலை 11 மணியளவில் கபாலி டீசர் வெளியானது.
இதுநாள் வரை இதை டியூடிப் தளத்தில் 22 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இன்று வரை 22,084,018 பேர் பார்வையிட்டுள்ளனர்.
ஒரு தமிழ் படத்திற்கு இப்படியொரு பெருமை கிடைத்துள்ளதை திரையுலகினர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் ட்விட்டரில் தன் கணக்கை தொடங்கினார் ரஜினி.
தற்போது இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 3 மில்லியனை தொட்டுள்ளது.
எனவே, இவை இரண்டையும் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.