மீண்டும் மீண்டும் ரசிகர்களை ஏமாற்றும் சூப்பர் ஸ்டார்..!

மீண்டும் மீண்டும் ரசிகர்களை ஏமாற்றும் சூப்பர் ஸ்டார்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Release not on July 1stபெரும் எதிர்பார்க்குள்ளான கபாலி படத்தின் பாடல்கள் ஜூன் 12ஆம் தேதி வெளியாகிறது.

ஆனால் இதற்கான இசை விழாவை ரத்து செய்து விட்டு ஆன்லைனில் வெளியிடவுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது மீண்டும் ஒரு ஏமாற்றமளிக்கும் செய்தி கிடைத்துள்ளது.

கபாலி படமும் ஜூலை 1ஆம் தேதி வெளியாகாது என கூறப்படுகிறது.

படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாலும், இதன் இறுதிக்கட்ட பணிகள் தாமதமாகி வருவதாலும் படம் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகலாம் எனத் தெரிகிறது.

‘பாகுபலி’ க்ளைமாக்ஸீக்கு மட்டும் 10 வாரங்கள்..!

‘பாகுபலி’ க்ளைமாக்ஸீக்கு மட்டும் 10 வாரங்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bahubali Climax Shot in 10 Weeksகடந்த வருடம் வெளியாகி ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்த படம் ‘பாகுபலி’.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற 13ஆம் தேதி முதல் இதன் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்க இருக்கிறார்களாம்.

இத்தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் Shobu Yaralagada உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் 10 வாரங்கள் படமாக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

க்ளைமாக்ஸ் சூட்டிங்கே இப்படி என்றால் திரையில் இதன் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

விஜய்சேதுபதியுடன் இணையும் கபாலி ரஞ்சித், கலையரசன்..!

விஜய்சேதுபதியுடன் இணையும் கபாலி ரஞ்சித், கலையரசன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Ranjith Actor Kalaiarasn Raise Voiceவருகிற ஜூன் 11ஆம் தேதி பேரறிவாளவன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் பேரணி நடைபெற்றவுள்ளது.

இப்பேரணி வேலூர் சிறையில் இருந்து சென்னை கோட்டை வரை நடைபெறவுள்ளது.

இதில் அரசியல் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இதில் நடிகர் விஜய்சேதுபதியும் இணையவுள்ளார்.

இவரைத் தொடர்ந்து தற்போது கபாலி இயக்குனர் பா. ரஞ்சித், நடிகர் கலையரசன் மற்றும் மூடர் கூடம் நவீன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இதுதொடர்பாக இவர்கள் தெரிவித்துள்ளதாவது…

“பேரறிவாளனின் 25 ஆண்டு கால சிறை தண்டனை என்பது மிகக் கொடுமையானது.

அவரது தாய் அற்புதம் அம்மாள் இதற்காக கடுமையாக போராடி வருகிறார்.

எனவே பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தி நடைபெறவுள்ள மோட்டார் வாகனப் பேரணியில் கலந்துக் கொள்கிறோம்.

இதை அரசியலாக பார்க்காமல் மனிதநேயமாக பார்க்க வேண்டும்.” என்றனர்.

மீண்டும் விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் மடோனா..!

மீண்டும் விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் மடோனா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After 'Ka Ka Po', Madonna Sebastian, Vijay Sethupathi Reuniteஅனேகன் படத்தை தொடர்ந்து ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் கேவி ஆனந்த் மீண்டும் புதிய படத்திற்காக இணைகின்றனர்.

இப்படத்தில் எவரும் எதிர்பாரா விதமாக டி.ராஜேந்தர் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க அபிநந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை கிரண்.

சுபா மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோர் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதுகின்றனர்.

தற்போது இதில் நாயகியாக நடிக்க மடோனா செபஸ்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காதலும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதியுடன் மடோனா இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் படப்பிடிப்பை ஜூலையில் தொடங்கவிருக்கின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இருந்து தனுஷ் விலகல்…?

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இருந்து தனுஷ் விலகல்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Withdrawn From Karthik Subbaraj's Filmகார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தாலும் எதிர்பாரா விதமாக தயாரிப்பாளர்களிடையே எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

சினிமா தயாரிப்பாளர்களை அவமானப்படுத்தியதாக கூறி, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு ரெட் கார்டு விதித்துள்ளனர்.

எனவே, இனி கார்த்திக் சுப்புராஜால் படங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருந்த படம் கைவிடப்படும் எனத் தெரிகிறது.

ரெட் கார்டு தடையின் காரணமாக தனுஷ் விலகிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விஜயகாந்த் பாணியில் யூ டேர்ன் போட்ட ‘மாவீரன்’ நெப்போலியன்..!

விஜயகாந்த் பாணியில் யூ டேர்ன் போட்ட ‘மாவீரன்’ நெப்போலியன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Napoleon Back in Tamil Cinemaசினிமாவில் மார்கெட் போனால் அரசியலுக்கு செல்வதும், அரசியலில் செல்வாக்கு போனால் மறுபடியும் சினிமாவுக்கே திரும்புவதும் வாடிக்கைதான்.
இதற்கு பல நடிகர்களை நாம் உதாரணமாக கூறலாம்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் விஜயகாந்த் டெபாசிட் தொகை கூட கிடைக்காமல் படுதோல்வி அடைந்தார்.

எனவே முடிவு தெரிந்த மறுநாளே தமிழன் என்ற சொல் என்ற படப்பிடிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து நடிகர் நெப்போலியனும் நீண்ட இடைவேளைக்கு பின், சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

தி.மு.க.வில் இருந்து விலகிய நெப்போலியன் சமீபத்தில்தான் பா.ஜ.கட்சியில் சேர்ந்தார்.

கௌதம் கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows