*காலா* மருமகள் சுகன்யாவுக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி!

Kaala fame Singapore Suganya got posting in Rajini Makkal Mandramநடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்து தனது ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த பின்னர் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றினார் ரஜினிகாந்த்.

விரைவில் கட்சி பெயர், கட்சி கொடி அனைத்தையும் அவர் அறிவிப்பார் என உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஒரு பக்கம் சினிமா சூட்டிங் என பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது வெளிநாடுகளில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அதில் சிங்கப்பூர் நாட்டுக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியானது.

சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக நடிகை சுகன்யா ராஜாவை நியமித்து உத்தரவிட்டுள்ளார் ரஜினி.

இவர் குழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகையாம்.

அண்மையில் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக இவர் நடித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இதுகுறித்து நடிகை சுகன்யா பேசியதாவது… “சிங்கப்பூரில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டுக்கு இணையாக ரசிகர் மன்றங்கள் அங்கேயும் உள்ளது-

ஆனால் தனித்தனியாக இயங்குகிறார்கள். அப்படி தனித்தனியாக இயங்குபவர்களை ஒன்றிணைப்பதே எங்கள் முதல் நோக்கம்.

ரஜினிகாந்த் முக்கியமான ஒரு பொறுப்பை என்னை நம்பித் தந்திருக்கார். அந்த நம்பிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன்.” என தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட சுகன்யாவின் குடும்பம், குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறது. எனவே இவரை சிங்கப்பூர் சுகன்யா என்றே அழைக்கின்றனர்.

Kaala fame Singapore Suganya got posting in Rajini Makkal Mandram

Overall Rating : Not available

Related News

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து…
...Read More
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில்…
...Read More
கும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கபாலி,…
...Read More

Latest Post