விசித்திரனை கண்டு வியந்த இயக்குனர்கள் சங்கம்.; ஆர்கே. சுரேஷ் நடிப்பை பார்த்து 2 நாட்களாக உறங்காத உதயகுமார்.

விசித்திரனை கண்டு வியந்த இயக்குனர்கள் சங்கம்.; ஆர்கே. சுரேஷ் நடிப்பை பார்த்து 2 நாட்களாக உறங்காத உதயகுமார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்மகுமார் இயக்கத்தில் ஆர் கே சுரேஷ் நடிக்க உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் “விசித்திரன்”.

இப்படம் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு
ப்ரத்யேகமாக திரையிடப்பட்டது.

அதன் பிறகு பேசிய இயக்குனர் சீனு ராமசாமி…

வழக்கமாக, ஒரு படம் ரிலீஸானால் 15 நாட்களுக்கு பிறகு தான் இயக்குனர் சங்க நிர்வாகி நம்பி அவர்கள் அழைப்பார், அதற்குள் பலர் அந்த திரைப்படத்தை பார்த்திருப்பார்கள். அதன் பின்னர் தான் குறிப்பிட்ட படத்தை இயக்குனர் சங்கத்திற்கு திரையிடுவர்.

ஆனால், விசித்திரன் படத்தை முதலில் இயக்குனர் சங்கத்தினற்கு திரையிடலாம் என்று ஆர் கே சுரேஷ் சொன்னபோது நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.

எப்போதும், படைப்பாளிகளிடம் திரையிடும் படத்தை பற்றி அவர்கள் முதலில் முன் வைப்பது விமர்சனத்தையும், கேள்வியையும் தான். அதன் பிறகு தான் பாராட்டு என்பது கூட. அதனால் நான் எப்போதுமே என் படத்தின் பர்ஸ்ட் காபியை எனது துணை இயக்குனர்களிடம் காண்பிக்க மாட்டேன். அவர்கள் பல கேள்விகளை முன்னவைப்பார்கள் என்பதே காரணம். அவர்களுக்கு எப்போதுமே இறுதியில் தான் திரையிடுவேன்.

விசித்திரன் விமர்சனம் 3.75/5 ; மெடிக்கல் மாஃபியாக்களுக்கு மரண அடி

இந்த செயல் ஆர் கே சுரேஷ் அவரின் நடிப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. அவரின் நம்பிக்கையை கண்டு நான் பெருமைப்பட்டேன். எனக்கு தெரிந்து ஒரு நடிகன் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு இத்தனை படைப்பாளிகளுக்கு மத்தியில் தைரியமாக நிற்பது இதுவே முதல் முறை. அந்த தைரியம் எனக்கு பிடித்திருக்கிறது.

இது போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுத்து, இயக்குனருடன் இணைந்து கடினமாக உழைத்து தன்னுடைய மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்த நடிகர் ஆர் கே சுரேஷுக்கு தமிழ் சினிமாவில் ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்பதை என்னால் ஆழமாக உணர முடிகிறது.

இது மெதுவாக சூடு பிடிக்கும் ஒரு கதைக்களத்தை கொண்ட ஒரு திரைப்படம். இது போன்ற படங்களை நம் தமிழ் ரசிகர்கள் பார்த்து பழக்கப்பட்டதில்லை.

ஆர் கே சுரேஷ் போன்ற இளைஞர்கள் அவர்களின் நடிப்பை வெளிப்படுத்த இது போன்ற படைப்புகளை கையில் எடுத்தால் மட்டுமே அது சாத்தியம்.

உண்மையை சொன்னால் எனக்கு மலையாள படம் “ஜோசப்” ஏற்படுத்திய தாக்கத்தை விட இந்த படம் மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது. இந்த படைப்பின் மூலம் ஆர் கே சுரேஷ் என்னும் ஒரு உன்னதமான நடிகன் நம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்து விட்டான் என்ற நம்பிக்கையை நான் அவருக்கு கொடுத்தேன்.

இந்த தாக்கத்தின் காரணமாக நான் அண்ணன் ஆர் வி உதயகுமாரிடம் இப்படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறினேன்.

இன்றைக்கு ஒரு படம்முதல் மூன்று நாட்கள் திரையரங்குகள் நிரம்ப ஓடினால் அது தான் அந்த படத்திற்கான வெற்றி. பூ, பிஞ்சி,கனி, போன்ற படங்களுக்கு இப்போது இடமில்லாமல் போனது.

அன்னக்கிளி 7 நாட்கள் கழித்து ஓடியது, 16 வயதினிலே பத்து நாட்கள் கழுத்து ஓடியது என்பதெல்லாம் இப்போது கிடையாது. ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது முதல் மூன்று நாட்கள் மட்டுமே.

இது போன்ற சூழலில் ஒரு மசாலா படத்தையோ, கமர்சியல் படத்தையோ தேர்வு செய்து நடிக்காமல் கலை நயமான ஒரு படத்தை தேர்வு செய்து. நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் மிக பெரிய ஊழலை தன் சொந்த பணத்தின் மூலம் எதிர்த்து குரல் கொடுத்ததற்காக ஆர் கே சுரேஷுக்கு என் பாராட்டுக்கள்.

இந்த படம் குறித்து நான் இரண்டு விமர்சனங்களை மட்டுமே ஆர் கே சுரேஷிடம் கூறினேன்.மேலும், இந்த படத்தை பார்த்த அனைத்து படைப்பாளிகளும் இந்த படத்தை பற்றியான விமர்சனத்தை நல்ல முறையிலோ, அல்லது குறைகளை சுட்டி காட்டியோ தங்களின் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓரிரு வார்த்தைகள் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தின் வெற்றியில் தான் தமிழ் சினிமாவின் நாகரிகம் அடங்கியுள்ளது என நம்புகிறேன், என்றார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி பேசுகையில்…

தன்னையே விதையாக்கி ஒரு மரமாக முளைக்க செய்யும் முதல் முயற்சிதான் இந்த சினிமா. அதில் தன்னை முழுமையாக ஒப்படைத்து இவ்வளவு சிறப்பாக அனைவரும் வியக்கும்படி நடித்த ஆர்.கே.சுரேஷ் ஒரு சிறந்த நடிகராக தன்னை பதிவு செய்து இருக்கிறார்.

இந்தப் படத்துக்கு மரணம் இல்லை. காலத்துக்கும் பெயர் சொல்லும் படைப்பு இது. இந்தப் படத்தை பார்க்காதவர்கள் துரதிருஷ்டசாலி. ஆகவே, அனைவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். ஆர்.கே.சுரேஷூக்கு என் தனிப்பட்ட பாராட்டுகள், என்றார்.

இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளரான இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில்,

“விசித்திரன்” என்ற இந்த படத்தை பார்த்து இரண்டு நாளாக நான் தூங்கவில்லை எனத் தலைவரிடம் சொன்னேன். உடனேயே மற்றைய உறுப்பினர்களுக்காக சிறப்புக் காட்சியை தயார் செய்ய சொன்னார்.

அந்த ஏற்பாட்டின்படி இன்று நாம் அனைவருமே படத்தைப் பார்த்துவிட்டோம். என்னைப் போலவே உங்களுக்குள்ளும் இந்தப் படம் பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்று நினைக்கிறேன். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள் என்றார்.

இயக்குனர் சரவண சக்தி பேசியபோது,

“விசித்திரன்” படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் முதலே ஆர் கே சுரேஷ் எவ்வளவு சிரமப்பட்டார் என்பது எனக்கு தெரியும்.

நாள் ஒன்றிற்கு தண்ணீர், பழங்கள், பழைய சோறு என அனைத்தையும் உண்டு உடம்பை ஏற்றினார். அப்போது நான் உடலை குறைப்பது எவ்வளவு கடினம் தெரியும் எதற்க்கு இவ்வளவு கஷ்டப்படுகிறாய் என்றேன்.

அதற்கு அவர் இல்லை நான் என் முழு நடிப்பை இந்த படத்தின் மூலம் வெளிப்படுத்துவேன் என்றார்.

அதற்கு முன் “ஜோசப்” படத்தை பார்த்துவிட்டு இந்த படம் சிறிது மெதுவான கதைக்களத்துடன் நகர்கிறதே எப்படி சமாளிக்க போகிறாய் என்றபோது இல்லை இந்த படம் என் நடிப்பிற்கு மிக பெரும் வெற்றியையும் பெருமையையும் சேர்க்கும் என்று ஆர் கே சுரேஷ் அவர் நடிப்பின் மீது வைத்த வீண் போகவில்லை என்பதை படத்தை பார்த்தபோது புரிந்துகொண்டேன்.

எப்போதுமே சமூக பிரச்சனையை பேசும் படம் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்று தருமா என அச்சம் இருக்கும் ஆனால் அதை கடந்து இன்று சாதித்திருக்கும் என் நண்பன் ஆர் கே சுரேஷுக்கு பாராட்டுக்கள் என்றார்.

Tamil director association appreciates RK Suresh in Visithiran movie

ட்ரீம் வாரியர் தயாரிப்பில் 8 வயது மகனின் தாயாக நடித்த நயன்தாரா

ட்ரீம் வாரியர் தயாரிப்பில் 8 வயது மகனின் தாயாக நடித்த நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள “O2” திரைப்படத்தினை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது.

இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் விக்னேஷ் GS இயக்கியுள்ளார்.

உலகளவில் முன்னணி ஓடிடி தளமாக விளங்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி களத்தில், மிகப்பெரும் வளர்ச்சியடைந்து வருகிறது.

உலகளாவிய கதைகளுடன், மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் தனக்கென தனி முத்திரையைப் பொறித்துள்ளது.

தமிழில் தொடர் பிளாக்பஸ்டர் படைப்புகளைத் தந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், சமீபத்தில் வெளியான, இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த “டாணாக்காரன்” படம், விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த அதிரடி வெளியீடாக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் “O2” திரைப்படத்தை, ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திரையிடவுள்ளது.

தமிழின் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் த்ரில்லர் டிராமா திரைப்படம் “O2”.

இந்த படத்தைக் காண்போரின் இதயத்துடிப்பை எகிறவைக்கும் பரபரப்பான த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள்.

நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “O2”.

தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார்.

இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், பரபரப்பான பொழுதுபோக்கு த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம், விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகவுள்ளது.

Nayanthara’s next with Dream Warrior pictures is titled O2

மேடையிலே 8000 கொடுத்து உதவிய கே.ராஜன்.: தமிழை எப்படி பாதுகாக்கப் போகிறோம்? – பேரரசு.; ‘போலாமா ஊர்கோலம்’ விழா ஹைலைட்ஸ்

மேடையிலே 8000 கொடுத்து உதவிய கே.ராஜன்.: தமிழை எப்படி பாதுகாக்கப் போகிறோம்? – பேரரசு.; ‘போலாமா ஊர்கோலம்’ விழா ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிளாசிக்கல் கமர்சியல் படைப்பாக உருவாகியிருக்கும் ‘போலாமா ஊர்கோலம்’.

இசை அமைப்பாளர் ஷமந்த் நாக் இசையில் உருவான ‘போலாமா ஊர்கோலம்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ போலாமா ஊர்கோலம்’.

அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபுஜித் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சக்தி மகேந்திரா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மதுசூதன், ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, ரபீக் ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். வைசாலி சுப்பிரமணியன், டேவிட் பாஸ்கர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷமந்த் நாக் இசையமைத்திருக்கிறார்.

பின்னணி இசையை கே. எம். ரயான் மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தின் இசை ட்ரெய்லர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

படத்தின் இசையை சிறப்பு விருந்தினர்கள் கே ராஜன், பேரரசு ஆகியோர் வெளியிட, மூத்த கால்பந்து வீரர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் படத்தின் தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான பிரபுஜித் பேசுகையில்,

” நானும் என்னுடன் படித்தவர்களும், பணியாற்றியவர்களும் என 31 நண்பர்கள் முதலீடு செய்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். என் மீதும், என்னுடைய திரைத்துறை மீதான ஈடுபாட்டிலும் நம்பிக்கை வைத்து முதலீடு செய்த இவர்களுக்கு மனமார்ந்த நன்றியை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும் இயக்குநரும் ஐந்து ஆண்டு கால நண்பர்கள். இருவரும் சினிமா மீதான காதலை உணர்வுபூர்வமாகக் கொண்டவர்கள். அவருடைய திறமை மீது எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. தரமான படைப்பை வழங்கியிருக்கிறார் என உறுதியாகச் சொல்வேன்.

இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருக்கும் நடிகை சக்தி மகேந்திரா, எதிர்காலத்தில் நிச்சயமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெறுவார். இந்தப் படத்தில் பணியாற்றிய 20க்கும் மேற்பட்ட முன்னாள் கால்பந்து வீரர்களுக்கும், அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பிற்கும் நன்றி. படப்பிடிப்புத் தளத்தில் அவர்களுடன் பணியாற்றிய நாட்களில் நிறைய விசயங்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். முன்னாள் வீரர்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை உருவாக்கி வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.

இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் பேசுகையில்,

” திரைத் துறையில் உதவி இயக்குநராக 15 ஆண்டுகாலம் பணியாற்றிய அனுபவம் உண்டு. ஒரு காலகட்டத்தில் சினிமா வேண்டாம் என்று தீர்மானித்து, வேறு துறையில் பணியாற்ற நேர்காணலுக்குச் சென்றேன்.

அந்தத் தருணத்தில் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் தயாரிப்பாளரும், நடிகருமான பிரபுஜித் அவர்களைச் சந்தித்தேன்.

அந்தச் சந்திப்பில் தான் இந்த திரைப்படத்தின் முதல் புள்ளி தொடங்கியது. ஐந்தாண்டுகளுக்கு முன் அவரிடம் சொன்ன கதையை தற்போது படமாக உருவாக்கப் போகிறோம் என்றார்.

எனக்கும், தயாரிப்பாளர் பிரபுஜித்துக்கும் இடையே பல தருணங்களில் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டதுண்டு. அந்தச் சமயங்களில் படத்தில் நடித்த நடிகர் மதுசூதன் எங்களைச் சமாதானப்படுத்தி படத் தயாரிப்பை முன்னெடுத்துச் செல்வார்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மதுசூதன், கால்பந்து விளையாடும் காட்சிகளில் நிஜ விளையாட்டு வீரர்களைப் போல் சாகசம் செய்து நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்த 20 மூத்த முன்னாள் விளையாட்டு வீரர்களும், படப்பிடிப்பின்போது சோர்வடையாமல் எங்களுடைய படக்குழுவின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஒத்துழைப்பு அளித்தனர்.

‘போலாமா ஊர்கோலம்’ என் நண்பனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை தழுவி திரைக்கதையாக எழுதி உருவாக்கி இருக்கிறேன். இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு எந்த இடத்திலும் சோர்வு தராது.

இரண்டு மணி நேரம் ஓடும் கிளாசிக்கல் வித் கமர்சியல் படைப்பாக உருவாகி இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியேறும்போது ஃபீல் குட் மூவியாக இருக்கும். ” என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில்,

”அண்மைக்காலமாக இணைய தளங்களில் நேர்காணல் வழங்குவதற்காகக் கட்டணம் வசூலிக்கிறேன். இந்தத் தொகையை ஏழை எளிய மக்களின் கல்விக்காக நன்கொடையாக வழங்கி வருகிறேன். (மேடையிலேயே 2 ஏழைப் பெண்களுக்கு ரூ 8,000/- வரை வழங்கினார் கே. ராஜன்.)

நான் பால்ய காலங்களில் பிறருடைய உதவியால் கல்வியைப் பயின்றேன். தற்போது மற்றவர்கள் கல்வி பயில உதவுகிறேன்.

‘போலாமா ஊர்கோலம்’ என்ற தலைப்பு தமிழில் இருப்பதால் வரவேற்கிறேன். இந்தப்படத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 20 கால்பந்து விளையாட்டு வீரர்கள் நடித்திருக்கிறார்கள். வயது என்பது வெறும் எண் மட்டும் தான். இவர்கள் அனைவரும் வயதாகாத இளைஞர்கள்.

கால்பந்து விளையாட வேண்டும் என்றால் மனதில் ஒழுக்கம் இருக்க வேண்டும் உடலில் உறுதி இருக்க வேண்டும்.

இங்கு முன்னாள் விளையாட்டு வீரர் முகமது சம்ஷத் பேசுகையில்….

‘கால்பந்து விளையாட்டை வாழ்க்கையின் பல்வேறு நிலைகளுடன் ஒப்பிட்டுப் பேசினார். அற்புதமான பேச்சு.’ கால்பந்தாட்டம் அல்ல. கால் போராட்டம் என்று குறிப்பிடலாம். வாழ்க்கையின் போராட்டம்.

படத்தின் முன்னோட்டம் நேர்த்தியாக இருந்தது. இதனை உருவாக்கிய இயக்குநருக்கும், படக்குழுவினரும் நன்றி. படத்தில் நடித்த நடிகர்கள் வடசென்னைத் தமிழில் பேசி நடித்திருப்பது வரவேற்பைப் பெறும். மனம் விரும்பி ஒரு மொழியை யார் வேண்டுமானாலும் கற்கலாம்.

புரட்சிக்கவி மகாகவி பாரதியார் ஒன்பது மொழிகளைக் கற்றார். அதன் பிறகுதான் அவர் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்றார்.

இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் மற்றும் பின்னணி இசை அமைப்பாளர் இருவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில்…

” கறுப்பான ஆண்களைத் தேர்ந்தெடுத்து நாயகனாக்கி சூப்பர்ஸ்டாராக்குவது மறைந்த இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரின் பாணி.

கருப்பான பெண்களை தேர்ந்தெடுத்து நாயகியாக்கி சிறந்த நடிகைக்கான விருதுகளை வாங்கச் செய்வது மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் பாணி.

அந்த வகையில் பாலுமகேந்திராவின் பயிற்சிப் பட்டறையில் உருவான இப்படத்தின் நாயகி சக்தி மகேந்திரா இந்த படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு சிறந்த நடிகையாக வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இப்படத்தின் இயக்குநருக்கு முன்கோபம் அதிகம் என படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மதுசூதனன் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு இயக்குநருக்கும் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குவதற்கு முன், கோபம் இருப்பதுதான் சரியானது. பொருத்தமானது. ஏனெனில் திரை உலகில் இயக்குநர் கோபப்பட்டால் தான் இங்கு காரியம் நடக்கும்.

இயக்குநர் நாகராஜ் பேசும்போது…

‘சினிமாவை நிஜமாக காதலித்தால், அது கைவிடாது’ என பேசினார். அது உண்மைதான். சினிமாவை உண்மையாக நேசித்தால் அது நம்மை ஒருபோதும் கைவிடாது.

பத்திரிகையாளர் சுபாஷ் பேசும்போது….

“இன்றைய சூழலில் பள்ளிக்கூடங்களில் விளையாட்டுப் பாடவேளையை வேறு பிரிவு ஆசிரியர்கள் கைப்பற்றி விடுகிறார்கள். மைதானம் கூட இருப்பதில்லை எனக் குறிப்பிட்டார்.

ஆனால் இனி பள்ளிக் கூடங்களில் தமிழ் இருக்குமா ..! என்பதே சந்தேகம்தான். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தமிழ் மொழி விருப்பப் பாடமாக இருக்கிறது. தமிழகத்தில் தாய்மொழியான தமிழ் மொழி, விருப்ப பாடமாக இருக்கிறது.

இந்த அநியாயத்தை எதிர்த்து யார் கேள்வி கேட்பது? இந்தியை எதிர்க்கிறோம் என்பதெல்லாம் வேறு.

தமிழை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வி. இன்றைக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களை சிலரை அழைத்து தமிழில் எழுதச் சொல்லுங்கள்.

தமிழில் எழுதியதை வாசித்து படிக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் தமிழ்மொழி எவ்வளவு ஆபத்தான சூழலில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் புரியும்.

தற்போதைய சூழலில் பள்ளிக்கூடங்களிலிருந்து மைதானங்கள் மறைந்து போயிருக்கும் நிலையை போல், எதிர்காலத்தில் மாணவர்கள் தமிழை எழுதவும், தமிழை எழுதியதை வாசிக்கவும் மறந்து போன தலைமுறை உருவாகிவிடும்.

இப்பொழுது தேசப்பற்று, நாட்டுப்பற்று என பேசுபவர்களை ‘சங்கி’ எனக் குறிப்பிடுகிறார்கள்.

கால்பந்து விளையாட்டு தான் இந்தியாவில் சிறந்த விளையாட்டு. அந்த விளையாட்டு தான், இரண்டு அணிகளும் சம பலத்துடன் மோதும் விளையாட்டு.

அதுதான் சுறுசுறுப்பான விளையாட்டு. ஆனால் சோம்பேறி விளையாட்டு என குறிப்பிடப்படும் கிரிக்கெட் இங்கு பிரபலமாகிவிட்டது.

வழுக்கு மர விளையாட்டு போன்றதுதான் சினிமா. போராடி போராடி போராடி வழுக்கி வழுக்கி வெற்றி இலக்கைத் தொடும் வரை யாரும் நம்மை ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் வெற்றி பெற்ற பின்பு நம்மைச் சூழ்ந்து கொள்வார்கள்.

பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றும் அனைவரும் வசதி வாய்ப்புள்ளவர்கள். ஆனால் ‘போலாமா ஊர்கோலம்’ போன்ற சிறிய பட்ஜெட் படங்களில் தான் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் உணர்வுபூர்வமாகப் பணியாற்றுகிறார்கள்.

சிறிய பட்ஜெட் படங்கள் தான் அடையாளத்திற்காகப் போராடும் அறிமுக கலைஞர்களுக்கும், வளரும் கலைஞர்களுக்கும் ஆதரவளிக்கின்றன. ‘போலாமா ஊர்கோலம்’ படம் வெளியான பிறகு, வெற்றி ஊர்வலமாக மாறும்” என்றார்.

இறுதியாக படத்தின் இசையை சிறப்பு விருந்தினர்கள் கே ராஜன், பேரரசு ஆகியோர் வெளியிட, மூத்த கால்பந்து வீரர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இவ விழாவில் இந்தியாவிற்காக விளையாடிய சர்வதேச கால்பந்து வீரர் அப்துல் ஷம்சத் , கேரம் அசோசியேசன் தலைவர் கே எம் மார்ட்டின், நடிகர் மேஜர் கௌதம் , படத்தின் நாயகி சக்தி மகேந்திரா, நடிகர்கள் மதுசூதன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

POLAMA OORGOLAM trailer and audio launch highlights

‘நோ பேச்சு.. ஒன்லி பஞ்ச்சு’.; வித்தியாசமான முறையில் ‘குத்து’விட்டு விளம்பரம் செய்யும் படக்குழு

‘நோ பேச்சு.. ஒன்லி பஞ்ச்சு’.; வித்தியாசமான முறையில் ‘குத்து’விட்டு விளம்பரம் செய்யும் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்குப் பத்து’ வலைத்தளத் தொடருக்காக வித்தியாசமான முறையில் ‘குத்து’விட்டு விளம்பரப்படுத்தும் படக்குழுவினர்.

‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற இணையதள குழுவினர் உருவாகியிருக்கும் ‘குத்துக்கு பத்து’ என்ற புதிய வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த தொடரைப் பிரபலப்படுத்துவதற்காக குழுவினர், ‘நோ பேச்சு.. ஒன்லி பஞ்ச்சு ’ என்ற வித்தியாசமான உத்தியை கையாண்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்கள்.

திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய வலைத்தளத் தொடர் ‘குத்துக்கு பத்து’. இந்த தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன் ‘ஆடுகளம்’ நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, ‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, ‘நவம்பர் ஸ்டோரீஸ்’ புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் செந்தில் படத்தொகுப்பை கவனிக்க, மதன் குமார் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

டார்க் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த தொடரை டி கம்பெனி என்ற பட நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் ஏ. கே. வி. துரை தயாரித்திருக்கிறார்.

‘குத்துக்குப் பத்து’ குறித்து இயக்குநர் பேசுகையில்,” காதல் விவகாரம் ஒன்றில் மத்தியஸ்தம் செய்ய விரும்பி காதலர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தும் போது நண்பன் மீது அடி விழுகிறது.

இதன்பிறகு நடைபெறும் களேபரங்களும், சம்பவங்களும் தான் இதன் திரைக்கதை. ஒரே நாளில் நடைபெறும் வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வலைத்தளத் தொடர் ‘ஆஹா’ ஒரிஜினல் படைப்பாக வெளியாவதில் எங்கள் குழுவினருக்கு மிக்க மகிழ்ச்சி.” என்றார்.

ஆஹா ஒரிஜினல் படைப்பாக வெளியாகவிருக்கும் ‘குத்துக்கு பத்து’ தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருப்பதால் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தத் தொடரை பிரபலப்படுத்துவதற்காக படக்குழுவினர் ‘நோ பேச்சு.. ஒன்லி பஞ்ச்சு..’ என்ற வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மக்களுக்கு அறிமுகமான கூரியர் பாய், டெலிவரி பாய்.. போன்ற தோற்றத்தில் படக்குழுவினர் பயணித்து, பிரபலங்களைச் சந்தித்து, அவர்களின் முகத்தில் செல்லமாகவும், அன்பாகவும் குத்து விடுகிறார்கள்.

எதிர்பாராத தருணத்தில் நிகழும் இது குறித்து அவர்கள் வினா எழுப்பும் போது, ‘குத்துக்கு பத்து’ என்று முத்தாய்ப்பாக பேசி, தொடர் குறித்து ஆர்வத்தை தூண்டுகிறார்கள்.

டெம்பிள் மங்கீஸின் இந்த விளம்பர உத்திக்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆஹா ஒரிஜினல்ஸ் வணிகப்பிரிவு தலைவர் சிதம்பரம் பேசுகையில்…

,“டெம்பிள் மங்கீஸ் போன்ற உள்ளுர் திறமையாளர்களுடன், ஆஹா இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இவர்களைப் போலவே நக்கலாட்டீஸ் என்ற குழுவினருடனும் இணைந்து ‘அம்முச்சி 2’ என்ற வலைத்தளத் தொடரை தயாரித்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

மேலும் தொடர்ந்து தமிழின் பிரத்யேக இளந்திறமையாளர்களுடன்  இணைந்து பணியாற்றவும் திட்டமிட்டிருக்கிறோம்.

அத்துடன் பார்வையாளர்களின் இதயங்களை வருடும் கதைகளை வழங்குவதற்கான எங்களின் தேடலும் தொடர்கிறது.” என்றார்.

தமிழ் பார்வையாளர்களை அசத்தி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘செல்ஃபி’, ‘மன்மத லீலை’ மற்றும் ஆஹா ஒரிஜினல்ஸ் ‘பயணிகள் கவனிக்கவும்’ போன்ற படைப்புகள் வெளியானது.

பார்வையாளர்களிடையே பெருகி வரும் வரவேற்பால், விரைவில் ‘ஐங்கரன்’ என்ற புதிய திரைப்படத்தையும் ஆஹா வெளியிடவிருக்கிறது.

Watch Kuthukku Pathu exclusively on Aaha Tamil from May 13

விஜய்ஆண்டனி சத்யராஜ் பாரதிராஜா இணையும் படத்தில் ‘ஜதிரத்னலு’ & ‘புஷ்பா’ பட பிரபலங்கள்

விஜய்ஆண்டனி சத்யராஜ் பாரதிராஜா இணையும் படத்தில் ‘ஜதிரத்னலு’ & ‘புஷ்பா’ பட பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கத்தில், இமான் இசையில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் படம் ‘வள்ளி மயில்’ .

நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஹிட் ‘ஜாதி ரத்னலு’ திரைப்படத்தில் நடித்த ஃபரியா அப்துல்லா ( Faria Abdullah ) வள்ளி மயிலாக நடிக்கிறார்.

மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, மனிஷா யாதவ், அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு மே16 அன்று திண்டுக்கல்லில் தொடங்கி கொடைக்கானல், தேனி, காரைக்குடி, கோபிசெட்டிபாளையம், பழநி ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது..

தயாரிப்பு : தாய் சரவணன்
எழுத்து, இயக்கம் : சுசீந்திரன்
இசை : D.இமான்
ஒளிப்பதிவு : விஜய் k. சக்கரவர்த்தி
எடிட்டர் : ஆண்டனி
ஆர்ட் டைரக்டர் : K.உதய குமார்
பாடல்கள் : யுகபாரதி
நடனம் : ஷோபி
ஸ்டண்ட் : ஸ்டன் சிவா
காஸ்ட்யூம் டிசைனர் : ராதிகா சிவா
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
டிசைன்ஸ் : ட்யூனி ஜான்
இணை தயாரிப்பு : கார்த்திக்.

Vijay Antony Sathyaraj Bharathiraja joins for a new film

‘காலத்துக்கும் நீ வேணும்…’ சிம்பு ரசிகர்களுக்கு ‘வெந்து தணிந்தது காடு’ சிங்கிள் ட்ரீட்

‘காலத்துக்கும் நீ வேணும்…’ சிம்பு ரசிகர்களுக்கு ‘வெந்து தணிந்தது காடு’ சிங்கிள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ & ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு சிலம்பரசன் & கெளதம் மேனன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு‘.

3வது முறையாக சிம்பு – கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

வருண் நடிப்பில் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி முடித்துள்ளார் கெளதம் மேனன்,

தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் சித்தி இதானி நாயகியாக நடித்துள்ளார். ராதிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

எழுத்தாளர் ‘ஜெயமோகன்’ எழுதிய ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று அண்மையில் வெளியானது.

அதன்படி இப்படத்தின் முதல் பாடல் நாளை மே 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் ஏற்கெனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கவிஞர் தாமரை எழுதிய அந்த பாடலின் முதல் வரியை தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த வரிகள் இதோ…

‘காலத்துக்கும் நீ வேணும்…’ என காதலர்கள் சொல்வதாக அது அமைந்துள்ளது.

Kaalathukkum Nee Venum 3rd single from VTK will be out tomorrow

More Articles
Follows