ஆன்லைன் ரிலீஸ்..: தயாரிப்பாளருக்காக ரசிகர்களை ஏமாற்றும் தனுஷ்.?.. விஜய்-சூர்யா போல இவர் இல்லையே..

dhanush jagame thanthiram photosகொரோனா வைரஸ் ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

சினிமா சூட்டிங்கும் 4 மாதங்களாக நடைபெறவில்லை.

எனவே ரீலீசுக்கு தயாரான திரைப்படங்களை ஆன்லைனில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் Y Not Studios தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’.

கொரோனா காரணமாக இப்படத்தின் ரீலீஸ் தள்ளிப்போய் வுள்ளது.

இதனால் இப்பட குழுவினரிடம் பிரபல OTT தளமான நெட்பிளிக்ஸ் அணுகி இப்படத்தை ஒரு பெரிய தொகைக்கு கேட்டு உள்ளனர்.

தயாரிப்பாளர்களுக்கு OTT யில் லாபம் வருகிறது என்றால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை எனக்கு தயாரிப்பாளர்களின் லாபம் தான் முக்கியம், என தனுஷ் சொல்லி விட்டாராம்.

எனவே விரைவில் ஆன்லைனில் வெளியீடு குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

தனுஷ் பட ரிலீசை தியேட்டரில் கொண்டாடலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளிக்கும் என தெரிகிறது.

இதுபோல் விஜய்யின் மாஸ்டர்… சூர்யாவின் சூர்ரைப் போற்று படங்களையும் ஆன்லைனில் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் நடிகர்கள் விஜய் & சூர்யா தங்கள் ரசிகர்களின் தியேட்டர் கொண்டாடத்திற்காக சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

பேட்ட படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ்…
...Read More
தீபாவளி, பொங்கலை போன்று கோடை விடுமுறையும்…
...Read More

Latest Post