ஹாலிவுட் படத்திற்கு குரல் கொடுத்த ரஜினி-விஜய் பட வில்லன்..!

ஹாலிவுட் படத்திற்கு குரல் கொடுத்த ரஜினி-விஜய் பட வில்லன்..!

எத்தனை வருடம் ஆனாலும் நாம் வியந்து பார்க்கும் படங்களில் ஒன்று ‘ஜூராஸிக் பார்க்’.

இப்படத்தை இயக்கியவர் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.

இவர் அண்மையில் இயக்கியுள்ள ‘The BFG’ என்ற ஜூலை 15ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

இதிலும் வழக்கம்போல் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறாராம் இயக்குனர்.

இந்தியாவிலும் மட்டும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் வரும் முக்கிய குரல் கொடுத்துள்ளார் பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபு.

இவர் ரஜினிக்கு வில்லனாக ‘லிங்கா’ படத்தில் நடித்தவர்.

தற்போது ‘விஜய் 60’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை ரஜினி வருகை… வரவேற்க தயாராகும் ரசிகர்கள்..!

நாளை ரஜினி வருகை… வரவேற்க தயாராகும் ரசிகர்கள்..!

kabali movie stillsகபாலிடா, நெருப்புடா என தமிழகமே பரபரத்து கொண்டிக்கும் வேளையில், ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். எனவே அவரது உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் மீடியாக்களை ஆக்ரமித்தன.

அமெரிக்கா சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டதால், ரஜினியின் வருகைக்காக கபாலி படக்குழுவும் ஷங்கரின் 2.0 படக்குழுவும் காத்திருக்க தொடங்கின.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து ரஜினிகாந்த் நாளை (3-ம் தேதி) சென்னை திரும்புகிறார் என தகவல்கள் வந்துள்ளன.

எனவே விமான நிலையத்தில் ரஜினியை வரவேற்க ரசிகர்களும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

மறுநாளே 4ஆம் தேதி தயாராக உள்ள கபாலி பர்ஸ்ட் காப்பியை பார்க்க இருக்கிறாராம்.

அதன்பின்னர் 7ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பப்படுகிறது.

சென்சார் சான்றிதழ் கிடைத்த உடன் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதுவரை வந்துள்ள தகவல்களின் படி கபாலி 22ஆம் தேதி ரிலீசாகும் என்பதே உறுதியாக தெரிகிறது.

சுந்தர் சி.யின் ‘சங்கமித்ரா’வில் விஜய்..? மகேஷ்பாபு..?

சுந்தர் சி.யின் ‘சங்கமித்ரா’வில் விஜய்..? மகேஷ்பாபு..?

vijay and mahesh babuசுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமான ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறது.

இதன் படப்பிடிப்பை செம்டம்பரில் தொடங்கவுள்ளதால், படத்தின் கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகவிருப்பதால் சங்கமித்ரா என பெயரிடவுள்ளதாக கூறப்படுகிறது.

இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், கலைக்கு சாபு சிரில், கிராபிக்ஸ் பணிகளுக்கு ஆர்.சி. கமலக்கண்ணன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவரிடமும் பேசி இருக்கிறார்களாம்.

ஆனால் இருவரில் தரப்பில் இருந்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.

இருந்தாலும் டாப் ஹீரோ ஒருவரைத்தான் இப்படத்தில் நடிக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் சுந்தர் சி.

‘அஜித்துக்காக சென்றவர்தான் கௌதம்..’ சிம்பு ரசிகர்கள் பதிலடி..!

‘அஜித்துக்காக சென்றவர்தான் கௌதம்..’ சிம்பு ரசிகர்கள் பதிலடி..!

ajith and simbuகௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம் பெற்ற தள்ளிப் போகாதே பாடல் சமூக வலைத்தளங்களில் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.

இதனால் ரசிகர்கள் இப்பாடலை பெரிதும் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

ஆனால் அப்பாடல் இதுவரை படமாக்கவில்லை என்றும் அதற்கு சிம்பு ஒத்துழைக்க இல்லை எனவும் கௌதம் தெரிவித்திருந்தார்.

சிம்புவுக்கு சம்பள பாக்கி உள்ளது எனவேதான் அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை என சிம்பு தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

எனவே சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் விவாதப் பொருளாகி விட்டது.

இதற்கு சிம்பு ரசிகர்கள் தெரிவித்துள்ளதாவது..

‘கௌதம் மேனன் நிதி நெருக்கடியில் இருந்த போது முதல் ஆளாக கால்ஷீட் கொடுத்தவர் சிம்புதான்.

ஆனால், அஜித்தின் என்னை அறிந்தால் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்றார் கௌதம்.

அதற்கும் சிம்பு விட்டுக் கொடுத்தார். ஆனால் அவர் தற்போது சிம்புவை பற்றி பேசியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது’ என தெரிவித்துள்ளனர்.

குற்றங்களை தடுக்க இளைஞர் படை அமைக்கும் சரத்குமார்..!

குற்றங்களை தடுக்க இளைஞர் படை அமைக்கும் சரத்குமார்..!

sarath kumarநாளுக்கு நாள், இந்தியாவில் கொலை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஸ்வாதி என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டார்.

தப்பித்து சென்ற அந்தக் கொலைக்காரன் ராம்குமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற குற்றங்களை தடுக்க நடிகர் சரத்குமார் ஒரு புதிய இளைஞர் படையை அமைக்க இருக்கிறாராம்.

அதுகுறித்து தன் முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது…

“மரம் வெட்டுபவன் குலம் நாசம் என்பார்கள், ஆனால் சக மனிதனை வெட்டுவதை வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மனித குலம் குரூரமானதாக ஆகிவிட்டதா?

மனித இனத்தை நல் வழியில் எடுத்து செல்ல மீண்டும் ஒரு கண்ணனோ, ஏசுவோ, புத்தரோ, காந்தியோ பிறக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறோமா?

ஒரு சம்பவத்தை பற்றி பேசி தாம் நல்லவர் என்று பறை சாற்றிக்கொள்ளும் வகையில் சிலர் சில கருத்துக்களை உதிர்த்து வருகின்றனர்.

பலருக்கும் இது பொழுது போக்கு போல் ஆகிவிட்டது. பேசுபவர்கள் அனைவரும் இப்படிப்பட்டவர் என சொல்ல முடியாது.

இது போன்ற குற்றங்களுக்கு வாய் வார்த்தைகளால் தீர்வு சொல்வதை விட செயலில் இறங்கினால்தான் கொடுமைகளை தடுக்க முடியும்

ஸ்வாதியை கொலை செய்த கொலையாளி உருவாகுவற்கு அது போன்ற எண்ணங்கள் உருவாகுவது இந்த சமுதாயத்தில் இருந்துதான்.

இந்த சமுதாயத்தை உருவாக்குவதில் நமக்கும் பங்கு இருக்கிறது.

இதற்கு விடை காணும் முயற்சியாக 100 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறேன்.

அவர்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், தன்னை பாதுகாத்து கொள்பவர்களாகவும் உருவாக்குவேன்.

பின்னர் இது போன்ற கொடுமைகளை கண் எதிரே நிகழாமல் தடுப்பவர்களாகவும் உருவாக்குவேன்.

என்னுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்பவர்களும், இது போன்ற பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்களும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

அரசியல் சாயம் இல்லாத மக்கள் பணியாற்றிட விரும்பும் மக்களை வேண்டி அழைக்கிறேன்.”

என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சண்டக்கோழியில் விஷாலுடன் டூயட் பாடும் மஞ்சிமா..!

சண்டக்கோழியில் விஷாலுடன் டூயட் பாடும் மஞ்சிமா..!

vishal and manjimaசண்டக்கோழி படம் பெரிய வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, மீண்டும் அந்த கூட்டணி இணைகிறது.

இரண்டாம் பாகமாக உருவாகவுள்ள இப்படத்தில் மீண்டும் விஷாலே நாயகனாக நடிக்கிறார்.

விஷாலின் தந்தையாக நடித்த ராஜ்கிரணே இதிலும் அந்த கேரக்டரில் நடிக்கிறார்.

லிங்குசாமி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இந்நிலையில் நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.

இவர் சிம்புவுடன் அச்சம் என்பது மடமைடயா மற்றும் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவுடன் ஒரு படம் என வாய்ப்புக்களை தொடர்ந்து பெற்று வருகிறார்.

More Articles
Follows