96 படத்தை ரீமேக் செய்து பல கோடி நஷ்டமடைந்த தில் ராஜு

96 படத்தை ரீமேக் செய்து பல கோடி நஷ்டமடைந்த தில் ராஜு

96 jaanuகடந்த 2018 ஆண்டில் வெளியாகி தமிழக ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்ற படம் 96.

தெலுங்கில் சர்வானந்த், சமந்தா நடிக்க ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்து காதலர் தின விருந்தாக வெளியிட்டனர்.

முதலில் ஒரு எதிர்பார்ப்பில் பெரிதாக பேசப்பட்டாலும் படத்தை தமிழ் சினிமாவுடன் ஒப்பிட ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.

அதன் விளைவாக தற்போது பெரும் தோல்வியை கொடுத்துள்ளதாம்.

இந்த படத்தால் கிட்டதட்ட 15 கோடிக்கும் மேல் நஷ்டத்தை சந்தித்துள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு.

சர்ச்சை கிளப்பிய ‘திரௌபதி’ படத்தை பார்க்க விரும்பும் ராமதாஸ் & திருமாவளவன்

சர்ச்சை கிளப்பிய ‘திரௌபதி’ படத்தை பார்க்க விரும்பும் ராமதாஸ் & திருமாவளவன்

Draupathiபழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி.

இதில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடிச்சிருக்காய்ங்க.

இந்த படமானது சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் காண வரப் போகுது திரௌபதி.

இந்தப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3 இல் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஐந்து மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சிறுமுதலீட்டு படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது இதுவே முதல் முறை.

இந்நிலையில், இந்த திரௌபதி திரைப்படத்திற்கு U\A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஆனாலும் இந்த திரைப்படம் வெளிவந்தால் சாதி மோதல்கள் ஏற்படும் என பல தரப்பினரும் இன்னிக்கும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இப்படி சலசலைப்பைக் கிளப்பினாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்கள் திரௌபதி திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.பல இடங்களில் திருமணம், காதணி போன்ற குடும்ப நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் திரௌபதி படத்திற்கு விளம்பரம் செய்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் தாங்களாகவே முன்வந்து சுவர் எழுத்து, பெயிண்டிங் போன்ற விளம்பரங்களையும் திரௌபதி படத்திற்காக செய்துள்ளனர்.

இப்போ வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகப் போறப் படத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் & வி.சி. தலைவர் திருமா இருவரும் பார்க்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மன்னிப்பு கேட்கும் வரை சீமானை விட மாட்டேன்.. :- விஜயலட்சுமி

மன்னிப்பு கேட்கும் வரை சீமானை விட மாட்டேன்.. :- விஜயலட்சுமி

Vijayalakshmi seemanப்ரெண்ட்ஸ், பாஸ் என்ற பாஸ்கரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி.

இவர் சில மாதங்களாகவே சீமானை வறுத்தெடுத்து வருகிறார். பல வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

மேடைக்கு மேடை அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் முதல் முக்கியமாக ரஜினிகாந்த் வரை அனைவரையும் ஒருமையில் பேசி வருவார் சீமான்.

ஆனால் இதுவரை விஜயலெட்சுமி முன் வைத்த எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் நேரடியாக பதில் சொல்லாமல் நழுவி வருகிறார் சீமான்.

இந்த நிலையில், தனக்கு போதையில் தீராத தொல்லை கொடுத்ததாக விஜயலெட்சுமி புதிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து தன்னை மிரட்டிய நாம் தமிழர் கட்சி தம்பி ஒருவரையும் கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்த விஜயலெட்சுமி, சீமான் தன்னை ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை, விட மாட்டேன்..

தனது கேள்வி கேட்கும் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி.

சேட்டிலைட்ல இருந்து விஷால் குதிக்கனும்; 400 கோடி கேட்டேன்.. தூக்கிட்டாங்க.. : மிஷ்கின்

சேட்டிலைட்ல இருந்து விஷால் குதிக்கனும்; 400 கோடி கேட்டேன்.. தூக்கிட்டாங்க.. : மிஷ்கின்

Vishal mysskinமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் பட இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறறது.

தனது விஷால் பிலிம்பேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரிக்கிறார்.

ஹீரோயினாக ஆஷ்யா நடிக்க பிரசன்னா, ரகுமான், கவுதமி, நாசர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

இதன் ஷூட்டிங்கிற்கு மிஷ்கின் முறையாக திட்டமிடாததால், அதிக நஷ்டத்தை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஷெட்யூலுக்கு இன்னும் ரூ.40 கோடி வேண்டும் என்று மிஷ்கின் கேட்டதாகக் கூறப்பட்டது.

இதனால் மிஷ்கினை நீக்கி விட்டு விஷாலே படம் இயக்கவுள்ளதாக வந்த தகவலை பார்த்தோம்.

இது குறித்து மிஷ்கின் கிண்டலாக கூறியதாவது…

“நான் 40 கோடி கேட்கலை. 400 கோடி கேட்டேன்.

கிளைமாக்ஸுக்கு மட்டும் 100 கோடி கேட்டிருக்கேன்.

ஏன்னா, விஷால் சேட்டிலைட்ல இருந்து குதிக்கிற மாதிரி காட்சி.” என்று தெரிவித்துள்ளார்..

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி & சிம்பு.; இயக்குனர் இவரா.?

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி & சிம்பு.; இயக்குனர் இவரா.?

Director Cheranமணிரத்னத்தின் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு & அருண் விஜய் இணைந்து நடித்த படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

தற்போது இதில் விஜய சேதுபதி & சிம்பு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கீழே நிக்கிறவன்தான்டா சூப்பர் ஸ்டாரு..; கல்லூரி விழாவில் சிம்பு மாஸ்

தேசிய விருது பெற்ற இயக்குனர் சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சிம்பு இணைந்து நடிக்க வுள்ளதாக கூறப்படுகிறது.

மிக விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.

“கபடதாரி” படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி !

“கபடதாரி” படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி !

Kabadadaari stillsசிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் “கபடதாரி” ஆச்சர்ய அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. திறமை மிக்க நடிகர்கள், வல்லமை நிறைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என இப்படம் முதல் அறிவிப்பிலிருந்தே ஆச்சர்யமூட்டி வருகிறது. இப்படக்குழுவின் அடுத்த அதிரடி அறிவிப்பாக “சத்யா” பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகாராக அறிமுகவாதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Creative Entertainers and Distributors சார்பில் G.தனஞ்செயன் இது குறித்து கூறியதாவது…

“கபடதாரி” எங்கள் அனைவரின் மனதிற்கும் மிக நெருக்கமான படைப்பு. இப்படத்தின் கதை பற்றி அறிந்த கணத்திலிருந்தே படத்தின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப்படத்தில் நாங்கள் பங்கு கொண்ட கணத்திலிருந்தே இப்படைப்பு அனைவரிடத்திலும் மிகப்பெரும் உற்சாகத்தை அள்ளித்தெளித்துள்ளது. படத்தில் நடித்து வரும் அனைவருமே தங்கள் முழுத்திறமையையும் கொட்டி தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளார்கள். இக்கதையில் ஒரு குறிப்பிட்ட கதாப்பாத்திரத்திற்கு நல்ல உடல்கட்டுடன், ஸ்டைலீஷ் லுக்கில் இருக்கக்கூடிய நடிகர் தேவைப்பட்டார். படக்குழுவுடன் இணைந்து பலரை மனதில் கொண்டு, யாரை நடிக்க வைக்கலாம் என விவாதித்தோம். இறுதியாக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தக்கதாப்பாத்திரத்தை அருமையாக கையாள்வார் என எனக்கு தோன்றியது. ஆனால் அவர் அரிதாரம் பூச சம்மதிக்கவில்லை. பெரும் வற்புறுத்தலுக்கு பின் எங்கள் மீதான அன்பில் அவர் ஒத்துக்கொண்டார். அவருடைய கதாப்பாத்திரம் கதையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் மிக முக்கிய பாத்திரம் ஆகும். படத்தில் மிக அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அந்த கதாப்பாத்திரம் இருக்கும். இப்படத்திற்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வருவார் என எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது என்றார்.

Creative Entertainers & Distributors சார்பில் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார். நாசர், ஜெயப்பிரகாஷ்,J சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சைமன் K கிங் இசையமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் K L படத்தொகுப்பு செய்கிறார். விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். M.ஹேமந்த் ராவ் கதையில் தழுவல் திரைக்கதை, வசனத்தை ஜான் மகேந்திரன் மற்றும் தனஞ்செயன் எழுதியுள்ளனர்.

இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில் வரும் 2020 கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

More Articles
Follows